Thursday, January 29, 2015


என் பையன் ஸ்கூல்ல ராமாயணம் நாடகம்
போடணுமாம்..
தசரதன், கைகேயி, ராமன், சீதா, லட்சுமணன்,
பரதன்னு 6 கேரக்டர்ஸ் வரணுமாம்.. 
எழுதி குடுக்க சொன்னான்..
சரினு எழுதி குடுத்தேன்...
ஸ்கூலுக்கு போயிட்டு வந்து..
" அப்பா.. டைலாக்ஸ் எல்லாம் தூய தமிழ்ல
இருக்கணுமாம்..!! "
( எடிட்டிங்.. # அம்மா ==> அன்னையே )
அடுத்த நாள்..
" ரொம்ப பெருசா இருக்காம்பா.. கம்மி
பண்ண சொல்லி மிஸ் சொன்னாங்க.. "
( எடிட்டிங்... # 8 பக்கம் ==> 4 பக்கம் )
அடுத்த நாள்...
" என்னப்பா இதுல கைகேயி, பரதனே
வரலியாமே.. நான் தான் 6 கேரக்டர்ஸ்
வரணும்னு சொல்லியிருக்கேன்ல..!!! "
" உஸ்ஸப்பா... சரி அந்த பேப்பரை இங்கே குடு.. "
பேப்பரை வாங்கி... மேலே எழுதினேன்..
.
.
.
.
.
.
" அரண்மையில் தசரதன், கைகேயி, ராமன்,
சீதா, லட்சுமணன், பரதன் அனைவரும்
அமர்ந்து இருந்தனர்... "
# ஆறு என்ன அறுநூறு கேரக்டர்ஸ் ஒரே சீன்ல
கொண்டு வருவோமாக்கும்..

No comments:

Post a Comment