Wednesday, January 14, 2015


நம்ம ரேவ்ஸ் குமார் மேடம்
குடும்ப நாவல்கள் / காதல் நாவல்கள்
எல்லாம் சிறப்பா எழுதுவாங்க..
ஆனா.. அவங்களுக்கு கிரைம் நாவல்
எழுதணும்னு ரொம்ப நாளா ஆசை..
எங்கிட்ட டிப்ஸ் கேட்டாங்க..
" வெங்கட்.. கிரைம் நாவல் எப்படி எழுதறது.? "
" அது ரொம்ப சிம்பிள் மேட்டர்.. நீங்க
எழுதின எதாவது ஒரு கதையை குடுங்க
அதைக் கூட கிரைம் நாவலா மாத்திக்கலாம். "
" அது எல்லாமே பேமலி , லவ் சப்ஜெக்ட்.. "
" நல்லா யோசிச்சி பாருங்க.. எந்த கதையிலயாவது
கொலை எதாவது நடக்குதா..? "
யோசிக்கிறாங்க..
" ம்ம்.. ஒரு கதையில.. 10-வது அத்தியாயத்துல
நிருபமானு ஒரு நடிகையை அவளோட
லவ்வர் அருண் கொலை பண்ணிடறான்.. "
" குட்.. அப்ப அதை முதல் அத்தியாயமா
போட்டுடலாம்.. ஆனா கொலை பண்ணினது
ராஜீவ்னு கடைசி அத்தியாயத்துல சொல்லலாம்.. "
" ராஜீவா..? அது யாரு..? "
" அவளோட லவ்வர்.. "
" அவன் பேரு அருண்ங்க.. "
" நாமதான் 12-வது அத்தியாயத்துல
அவன் பேரை ராஜீவ்னு மாத்த போறோமே..!! "
" எதுக்கு மாத்தறோம்..?!! "
" கொலை பண்ணினது அருண்ன்னு
மக்கள் நினைச்சிட்டு இருக்கும் போது..
நாம ராஜீவ்னு சொன்னா.. செம ட்விஸ்டா
இருக்கும்ல.. "
" ஓஹோ.. அப்புறம்.. "
" கிரைம் நாவலுக்கு முக்கியமே கதையை
மக்கள் யூகிக்கவே கூடாது.. "
" சரி.. அதுக்கு என்ன பண்ணலாம்..??! "
" 3வது அத்தியாயத்தை தூக்கி 16-ல போடுங்க,
10-ஐ தூக்கி முதல்ல போடுங்க, 4-ஐ தூக்கி
13-ல்ல போடுங்க... 8-ஐ தூக்கி 19-ல.. "
" அப்படியே அந்த அம்மி கல்ல தூக்கி
என் தலைல போடுங்க... "
" ஹா., ஹா., ஹா.. "
( ஹப்பா எங்கே போட்டிக்கு வந்துடுவாங்களோனு
பயந்தே போயிட்டேன்...
நீ கலக்கு வெங்கி.. இனிமே மர்ம நாவல்ல
நீதான்டா தனிக்காட்டு ராஜா..!! )

No comments:

Post a Comment