Friday, February 6, 2015


காலைல அலாரம் வச்சி எந்திருச்சு மணிரத்னம், ஷங்கர்,
முருகதாஸ், கௌதம் மேனன்னு ஒவ்வொருத்தர் வீட்டு
வாசல்ல போயி நின்னு.. யார்கிட்டயாவது அசிஸ்டெண்ட்
வேலைக்கு போயி சேர்ந்து.. திட்டு வாங்கி, குட்டு வாங்கி..
அதுல வாங்குற சம்பளம் பத்தாம தனியா ஒரு படம் 
பண்ணலாம்னு ரெண்டு மாசம் உக்காந்து ராப்பகலா
கஷ்டப்பட்டு ஒரு கதையை எழுதி, டீயும், தம்மும் பத்த
வெச்சிட்டே அதுக்கு யோசிச்சி யோச்சிச்சு சீன் புடிச்சு..
அதை தூக்கிட்டு A.V.M ஸ்டுடியோ, ஷங்கர் சார் ஆபீஸ்,
ஆஸ்கார் பிலிம்ஸ் ஆபீஸ், லிங்குசாமி சார் ஆபீஸ் ,
உதயநிதி சார் ஆபீஸ்னு ரோடு ரோடா அலைஞ்சு..
அதுல ஒரு புண்ணியவான் கதை நல்லா இருக்கே..
டெவலப் பண்ணுங்கனு சொல்லி ஒரு க்ரூப் செட் ஆகி..
அவங்க கூட நைட் எல்லாம் flask-ல டீ வச்சி, கதையை
டிஸ்கஸ் பண்ணி, கதையை மெருகேத்தி.. அதை தூக்கிட்டு
ஹீரோகிட்ட போனா..
அவரு கதையில அது சரியில்ல, இதை மாத்து,
பஞ்ச் டயலாக் வை., அங்கே பைட் வை , ஃபாரின்ல
ரெண்டு சாங் வை., ஹீரோயினா அவங்கள புக் பண்ணுனு
நம்மள கொலையா கொன்னு.. எல்லாத்துக்கும் சரி சரினு
தலையாட்டிட்டு... திருப்பி பாத்தா.. இது நம்ம கதைதானானு
சந்தேகம் நமக்கே வரும்.. அப்புறம் புரோடியூசர் கையில
கால்ல விழுந்து சம்மதம் வாங்கி சூட்டிங் போயி...
பைட் சீன்ல ஹீரோக்கு கால்ல அடி.. சூட்டிங் கேன்சல்...
ஹீரோயினுக்கு தலைவலி.. சூட்டிங் கேன்சல்னு எப்படியோ
தட்டு தடுமாறி ஒரு வழியா படத்தை எடுத்து முடிச்சி
ரிலீஸ் பண்ண தியேட்டர் கிடைக்காம முழிக்கும் போது..
சேரன் சார் போன் பண்ணி C2H-ல ரிலீஸ் பண்ணலாமானு
கேப்பாரு.. வேணாம்னு சொல்லிட்டு உக்காந்து இருக்கும்
போது.. கடவுள் புண்ணியத்துல ரிலிஸ் பண்றதுக்கு
வழி பொறந்து.. படத்தை ரிலீஸ் பண்ணினா...
கதை என்னுதுனு ஒருத்தன் கேஸ் போடுறான்... அதை
சமாளிச்சு இந்தாண்ட திரும்பினா...
பர்ஸ்ட் ஷோ முடிச்ச உடனே " மொக்கை"-னு ஸ்டேடஸ்
போட்டுடறாங்க... படமே பார்க்காம...
# போதும்பா.... மிடில..

No comments:

Post a Comment