Tuesday, January 12, 2016

துபாய்ல தங்கம் வாங்கினா கம்மினு சொன்னாங்க...
சரி பாத்துட்டு வரலாம்னு போனோம்...
ப்ளீஸ் நோட்... பாக்க மட்டும் தான் போனோம்....
2 நாள் முன்னாடி..
துபாய்ல 22K கிராம்.. ரூ 2190
இந்தியால 22K கிராம்.. ரூ 2370
So.. கிராம்க்கு 180 ரூபா கம்மி...
ஆஹா... கம்மினு நெனச்சிடாதீங்க...
இனிமே தான் இருக்கு உள்குத்து..
இந்தியால சேதாரம்னு சொல்லி வாங்கறத..
இவங்க மேக்கிங் சார்ஜ்னு தீட்டிடறாங்க..
25% - 30% மேக்கிங் சார்ஜ்.... கேட்டா..
இது Italian Design., இது Germany Design-னு 
சொல்றானுங்க..
நானும் ஒரு சேல்மேன்கிட்ட கேட்டேன்...
" இந்த மாதிரி நகை போட்டுட்டு சுத்தற
ஒரு இத்தாலி பொண்ணையாவது காட்டுயானு "
அதுக்கு சிரிக்கறான்..
இப்ப... நகை வாங்கினா சீப்பானு கணக்கு பாத்தோம்னா...
மொதல்லயே நாம இந்திய ரூபாயை திராம்ஸா
மாத்த 3.5% கமிஷன் குடுத்து இருக்கோம்..
அப்ப 25% மேக்கிங் சார்ஜ் உள்ள நகை வாங்கினா...
நமக்கு 25%+3.5% = 28.5% வருது...
கிராம்க்கு 180 ரூபா கம்மி... So.. அதுல நமக்கு
7.5% மிச்சமாகுது...
அப்ப Net 21% வருது...
ம்ம்ம்... நாங்க ரெகுலரா வாங்கற கடையில
இதுவரைக்கும் 13% க்கு மேல குடுத்ததே கெடையாது...
துபாய்ல நகை வாங்கணும்னு நெனச்சிட்டு இருந்த
என் Wife-ஐ கூட இந்த கணக்கு எல்லாம் சொல்லி
குழப்பி.. நகை எதுவும் வாங்காம நைசா கூட்டிட்டு
வந்துட்டேன்...
எப்பூடி...?!!
# பல ராசதந்திரங்களை கரைத்து குடித்திருக்கிறாயடா 
வெங்கி....
## துபாய் அலப்பரைஸ் - 8

No comments:

Post a Comment