Wednesday, January 13, 2016


துபாய்ல எலக்ட்ரானிக்ஸ் வாங்கினா 
ரொம்ப சீப்பா இருக்கும்னு யாராவது 
நெனச்சிட்டு இருந்தீங்கன்னா..

அந்த எண்ணத்தை இன்னியோட குழிதோண்டி 
புதைச்சிடுங்க..

நான் துபாய்ல போயி NIKON D3300 கேமரா
வாங்கலாம்னு மொதல்ல நெனச்சிட்டு இருந்தேன்..

ஆனா அக்டோபர்ல நடந்த துபாய் எலக்ட்ரானிக்ஸ்
பெஸ்டிவல் ( GITEX Festival ) சமயத்துல அங்கே
என்ன ரேட்னு நெட்ல தேடி பாக்கும் போது
விலை எல்லாம் கொஞ்சம் ஜாஸ்தியா தெரிஞ்சது..

நார்மலா 25000 - 27000 விக்கிற அந்த
கேமரா... தீபாவளி சமயத்துல SNAPDEAL-ல
ரூ23,500-க்கு வந்தது.. வாங்கிட்டேன்..

என் கேமரா Made in Thailand..

தாய்லாந்து மேக்.. அதான் சீப்பா குடுத்துட்டான்
போல.. துபாய்ல எல்லாம் ஜப்பான் மேக்
கெடைக்குமாக்கும்னு நெனச்சிக்கிட்டேன்..

இப்ப துபாய் போனப்ப... இதே மாடல்
என்ன வெலைனு போயி பாத்தேன்..

ஜாஸ்தி எல்லாம் ஒன்னுமில்ல 2399 திர்ஹாம் தான்..
அதாவது... 44380 ரூபா.. ( 2399 x 18.5 )

சரி.. என்ன மேக்னு எடுத்து பார்த்தேன்...

Made in Thailand..!!!

மொத்தத்துல இங்கே விட்டுட்டு துபாய்ல
போயி எலக்ட்ரானிக்ஸ் வாங்கினா...

அதுக்கு பேருதான்..

" பெருமைக்கு எருமை மேய்க்கறது..!! "

டிஸ்கி : நான் பாத்த வரைக்கும் LED Tv மட்டும்
இந்தியாவ விட துபாய்ல விலை கம்மி..!!

# துபாய் அலப்பரைஸ் - 10

No comments:

Post a Comment