Sunday, May 29, 2016

MCA 3rd Year...
மைக்ரோபிராசசர் பிராக்டிகல்ஸ்...
மைக்ரோபிராசசரை பொருத்த வரை எல்லா 
Coding-ம் எனக்கு தலைகீழா தெரியும்..
( அப்ப நேரா தெரியாதானு அபத்தமா
கேக்க கூடாது...!! அப்புறம் நான் உண்மைய
உளறிடுவேன்... )
அன்னிக்கு பிராக்டிகல்ஸ் ஒரு சின்ன மோட்டாரை
Clockwise-ல சுத்த வெக்கணும்.
முதல்ல பேப்பர்ல Coding-ஐ எழுதணும்.
அப்புறம் அதை அந்த Micro Processor Kid-ல
இன்புட் பண்ணினா.. மோட்டர் சுத்தும்..
நானும் கோடிங் எழுதி., Input பண்ணி பார்க்குறேன்..
அந்த கருமாந்திரம் புடிச்ச மோட்டர் கடைசி வரை சுத்தவே இல்ல..
பக்கத்துல பாத்தா... என் பிரண்டு விமல்
மோட்டர் சுத்திட்டு இருந்தது...
எனக்கு தலை சுத்த ஆரம்பிச்சிடுச்சு..
( " ஓ.. மை காட்..! இவன் பாஸ் ஆகிடுவான்
போல இருக்கே..?! " )
" டேய்.. விமல்.. என் மோட்டர் சுத்தலைடா..
Coding-ல எதாவது மிஸ்டேக் இருக்கான்னு
செக் பண்றானு.. " என் பேப்பரை லைட்டா
அவனுக்கு காட்டினேன்..
அவனும் பாத்துட்டு...
" 17வது லைனும்., 18வது லைனும் இடம் மாறி
இருக்கு.. மாத்தி எழுதி, Input பண்ணுனு.." சொன்னான்...
ஓஹோ.. டக்னு மாத்தி Input செஞ்சேன்..
வாவ்.. மோட்டர் சுத்திடிச்சி...!!
உடனே அத HOD-கிட்ட காட்டி.. ஓ.கே வாங்கிட்டேன்..
இப்ப பேப்பர்ல Coding-ஐ திருத்தி எழுதணும்..
ஒரு அடித்தல் திருத்தல் இல்லாம எழுதி
இருக்கோம்.. இதை., திருத்தி பேப்பர் அழகை
கெடுக்கணுமானு யோசிச்சேன்..
அப்ப தான் எனக்கு கனநேரத்தில் உதிச்சது
ஒரு சிந்தனை ...
( இந்த கோடிங்கை எழுதறதே இவ்ளோ
கஷ்டமா இருக்கே..
அப்ப இது கரெக்ட்டானு செக் பண்றது
எவ்ளோ கஷ்டமா இருக்கும்..?!! )
பேப்பரை அப்படியே கட்டி குடுத்துட்டு வந்துட்டேன்..
ரிசல்ட வந்தது...
எங்க க்ளாஸ்லயே நான் மட்டும் தான் சென்டம்..
ஹி., ஹி., ஹி...!!!
இதை கேட்டதும் விமல் ஷாக் ஆகிட்டான்...
" டேய்... எங்க எல்லோர் மோட்டரும் தானே
சுத்திச்சு.. நீ மட்டும் எப்டிடா சென்டம்..? "
" ஹி., ஹி., ஹி... நீங்கல்லாம் மோட்டரை மட்டும்
தான்டா சுத்துனீங்க.. நான் எக்ஸ்ட்ராவா HOD காதுல 
பூவும்ல சுத்தினேன்..!! "

டிஸ்கி : எல்லா பக்கிங்களும் பேப்பர்ல கோடிங்க் 
அடிச்சி, திருத்தி எழுதி இருந்தானுங்களாம்..!!

No comments:

Post a Comment