Thursday, June 23, 2016



நான் போனப்ப குமார் போன்ல ரொம்ப பவ்யமா பேசிட்டு இருந்தான்..
பக்கத்துல செந்தில்கிட்ட கேட்டேன்..
"யார்ரா லைன்ல..?"
"பேங்க்ல இருந்து மச்சி.. இன்னும் இந்த மாச
ஜூவல் லோன் வட்டி கட்டலையாம்.. அதான் கேக்கறாங்க."
"வட்டி தானே கட்டல.. அதுக்கு ஏன்டா இப்டி நடுங்கறான்...?"
அதுக்குள்ள லைன் கட் ஆகிடுச்சி.. ரெண்டு நிமிஷத்துல மறுபடியும் ரிங்....
"டேய் குமார், போனை இப்டி குடு.. நான் பேசறேன்..!"
"வெங்கி.. வேணாம்டா.."
"அட குடுடா.. எப்டி கொக்கி பிடி போடறேன்னு மட்டும் பாரு..!"
போன் கைமாறிச்சு..!!
"நான் குமாரோட ப்ரெண்ட் பேசறேன்.. சொல்லுங்க.. "
"இன்னிக்கு ஈவினிங்குள்ள உங்க ப்ரெண்டை இன்ட்ரஸ்ட் கட்ட சொல்லுங்க.."
"இதே மாதிரி விஜய் மல்லயாவை எல்லாம் பணம் கட்ட சொல்லி கேட்டீங்களா..? இவனை மட்டும் கேக்கறீங்க..?!"
"நாங்க ஏன் சார் அவரை பணம் கட்ட சொல்லணும்..? நகை உங்க ப்ரெண்டுது.."
"ஹி., ஹி.. ஹி... சோக்கு... உங்களுக்கு Jewel Loans act 46 clause C தெரியுமா? "
" தெரியாது...! "
( தெரியாதா..!! அப்ப அடிச்சி விட்றா வெங்கி... )
" அந்த 46 Clause C படி கிரிஸிஸ் டைம்ல பணம் கட்ட சொல்லி கம்பெல் பண்ண முடியாது தெரியுமா? "
"ஸாரி சார்.. இருங்க மேனேஜர்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடறேன்.."
"ம்ம்.."
2 நிமிஷம் கழிச்சு...
"மேனேஜர்கிட்ட சொல்லிட்டேன் சார்.. அவரு ஓகே, பணம் கட்ட வேண்டாம்ன்னு சொல்லிட்டார்"
( அப்டி வாங்க வழிக்கு..!! யாருகிட்ட.. )
"ம்ம் அப்புறம் என்னா சொன்னாரு..?"
"நகைய ஏலத்துல விடுங்கனு சொல்லிட்டாரு.."
(ஏலமா...?!!! ஓ மை காட்..!! )
‪#‎மாப்பு‬..வெச்சிட்டான்டா ஆப்பு...

No comments:

Post a Comment