Showing posts with label Actress. Show all posts
Showing posts with label Actress. Show all posts

Sunday, October 22, 2017


காலைல தம்பி அசோக் போன் பண்ணியிருந்தான்...
" அண்ணே... நேத்து தம்மு சேலம் வந்துட்டு போயிருக்கு.. நீங்க மீட் பண்ணலையா.? "
" நேத்து தம்முவ கார்ல டிராப் பண்ணிட்டு போனது யார்னு நீ பாத்தியா..?! "
" இல்லியே...!!! "
" ம்ம்.. அப்ப அது நான் தான்..!! "
#ஙே..!!

Wednesday, June 21, 2017


" பெரிய ஸ்ரேயா கோஷல் ஃபேனு சொல்றீங்களே.. எங்க அவங்க பாடுன ஒரு பாட்டு சொல்லுங்க பாக்கலாம்... "
" ஊரு சனம் தூங்கிடுச்சு.. ஊத காத்தும் அடிச்சிடுச்சு... "
" அய்யே... இது ஜானகி பாடுனது... "
" ஹேய்... நான் பாத்தப்ப.. அந்த புள்ள மேடையில இந்த பாட்டு தான் பாடிட்டு இருந்துச்சு... "

Sunday, June 18, 2017


ஒரு தடவை நானும் ஆனந்தும் சங்கீதாவ பத்தி.. சே... சங்கீதத்தை பத்தி பேசிட்டு இருந்தோம்... அப்ப ஆனந்த் கேட்டான்...
" வெங்கி... உனக்கு பிடிச்ச சிங்கர் யாரு..?! "
" ஸ்ரேயா கோஷல்... "
" ஸ்ரேயா கோஷலா..?! என்ன காரணம்..?! "
" ஹேய்... ஸ்ரேயா பாட்டு பாடி நீ பாத்ததில்லையா..?! "
" எரும... ஸ்ரேயா பாட்டு பாடி கேட்டதில்லையானு கேக்கணும்...?! "
" நான் கரெக்டா தான் சொன்னேன்.. உனக்கு புரியல... ஹி., ஹி., ஹி..!!! "

Sunday, April 9, 2017


இத வேற காசு போட்டு வாங்கிட்டியா தம்மு..?!
என்கிட்ட கேட்டிருந்தா ஃப்ரீயாவே குடுத்திருப்பேனே...
எங்க வீட்ல நாலு ஜன்னல்க்கு இதே டிசைன்ல தான் விண்டோ கர்டெய்ன் மாட்டியிருக்கேன்...!!

Friday, March 17, 2017


சோகமா இருக்கறப்ப Flower-ஐ பாத்தா... மனசு ஹேப்பியாகும்னு எங்க குருநாதர் சொல்லியிருக்காரு...
#குருவே நமஹ..!!



Tuesday, January 31, 2017

( பார்த்தேன் ரசித்தேன் பாடல்... )

சார்.... லைலா சார்.....

அப்டேட் :

இந்த போஸ்ட் பாத்துட்டு என் Wife...

" இப்ப எதுக்கு இந்த பாட்டு..?! "

" ஹி., ஹி., இந்த பாட்ல லைலாவ பாத்தா உன்ன மாதிரியே இல்ல... "

" ம்க்கும்..!! "

( இப்ப எதுக்கு மொறைக்கறாப்ல..?! நாம இல்லனு தானே சொன்னோம்..?! )

Saturday, December 31, 2016




கண்டுபிடிச்சிட்டேன்... இந்த பரதேசி தான் இப்ப தமன்னாவுக்கு காஸ்டியூம் டிசைனரா இருக்கான் போல..
;) :P

தமன்னா பர்த்டேவுக்கு விஷ் பண்ணலியானு கேக்கறாங்க...
நான் வேணா பக்கத்துல தமன்னாகிட்டயே போனை குடுக்கறேன்... பர்ஸ்ட் விஷ் பண்ணினது யாருனு கேட்டு தெரிஞ்சிக்கோங்க....
# தம்ஸ் பர்த்டே பார்ட்டியில் இருந்து வெங்ஸ்...

Friday, October 28, 2016

இன்னிக்கு " தேவி " படம் பாத்தாச்சு...

நல்லவேளை " படம் பாத்துட்டீங்களா வெங்கட்"-னு தமன்னா கால் பண்றதுக்குள்ள பாத்துடணும்னு நெனச்சிட்டு இருந்தேன்....

ஏன்.. ஏன்... அப்டி டவுட்டா பாக்கறீங்க?

அட சத்தியமா தான்.. நம்புங்க...

தமன்னாகிட்ட இருந்து கால் இன்னும் வரல.. ஹி.,ஹி.,ஹி..!!





Saturday, October 22, 2016


ஓ காட்...
சொர்ணமால்யா போட்டோவுக்கு ஒரு லைக் போட முடியல... இதுக்கு மேல நாம ஃபேஸ்புக்ல கன்டினியூ பண்ணனுமா...
ஜிந்திச்சேன்.....
ஜிந்திச்சேன்....
ஜிந்திச்சேன்....
அப்ப கனநேரத்தில் உதிச்சது ஒரு சிந்தனை...
.
.
.
" அதான் தமன்னா போட்டோவுக்கு லைக் போட முடியுதுல்ல... "
அட ஆமால்ல....
மனசை மாத்திக்கிட்டேன்... ஹி., ஹி., ஹி..!!!

Friday, October 7, 2016


ஆக்சுவலி அந்த கிப்ட் பாக்ஸ்குள்ள என்ன இருந்துச்சுன்னா....
.
.
.
.
.
.
.
.
.
ம்ம்க்கும்... சொன்னாலும் நீங்கல்லாம் நம்பவா போறீங்க..?!!!
:P :P

Saturday, August 20, 2016


" இன்னிக்கு சேலத்துக்கு தமன்னா வந்தா... நீ என்னை பாக்க வருவியா..? இல்ல தமன்னாவ பாக்க போவியா..?! "
" உன்னை தான் பாக்க வருவேன் மச்சி... "
" நிஜமாவா..?!! இந்த மூஞ்சை பாத்தா நம்ப முடியலியே... "
" ஹி., ஹி., ஹி.. என் வண்டி சர்வீஸ் போயி இருக்கு.. உன் வண்டி வாங்கிட்டு போலாமேனு... "

Sunday, July 31, 2016



என்னாது... தமன்னா OPPO F1S தான் வெச்சி இருக்காப்டியா...?!! ரைட்டு....!!

கன நேரத்தில எனக்கு உதிச்சது ஒரு சிந்தனை...

என் Wife எங்கேனு தேடினேன்... கிச்சன்ல இருந்தாங்க...

நான் பொதுவா கிச்சன்ல எந்த டிஷ்கஸனும் வெச்சிக்கறதில்ல... அது சிங்கத்தை தன் குகையில சந்திச்சதுக்கு சமம்..

சரி... துணிஞ்சவனுக்கு பூரிக்கட்டையும் குல்பி ஐஸ் மாதிரி...

" நிர்மலா.. உன் போனு அடிக்கடி ஹேங் ஆகுதுனு சொன்னேல்ல... "

" அத தான் நான் ரெண்டு மாசமா சொல்லிட்டு இருக்கேனே... "

" நான் வேணா நாளைக்கு புதுசா OPPO F1S வாங்கி...... "

" வாங்கி....??! "

" நான் அத வெச்சிகிட்டு உனக்கு என் போனை குடுத்துடட்டுமா..?!! "

என் Wife அப்படியே என்னை டெரர் லுக் விட்டாங்க..

ஹேய்... ஹேய்... இப்ப எதுக்கு அந்த கரண்டி எடுக்கற...?! வை.. வை..

ஓ... தோசை சுடவா.... நான் என்னமோ நெனச்சிட்டேன்.... ஹி., ஹி., ஹி..!!!

Friday, June 10, 2016



என் Wife தங்கமயில் போகணும்னு சொன்னாங்க...
நான் அங்க வேணா.. Khazana போலாம்னு சொன்னேன்..
அப்புறம் என்ன நடந்திருக்கும்னு தான் உங்களுக்கே தெரியுமே....
ம்ம்ம்.. தங்கமயிலுக்கு தான் போனோம்...
ஆனா டிசைன்ஸ் பிடிக்கல... சரினு Khazana போனோம்..
எகப்பட்ட டிசைன்ஸ்... என் Wife-க்கு கடை ரொம்ப பிடிச்சி போச்சு..
7 சவரன்ல ஒரு ஆரம் வாங்கினோம்...
" இந்த கடையில தங்கமயிலை விட டிசைன்ஸ் நல்லா இருக்கும்னு எப்படிங்க உங்களுக்கு தெரியும்...? "
" உன் மாமன் ஒரு ஜீனியஸ்மா.. ஏகப்பட்ட விஷயம் தெரியும்.. அதுல இது ஒண்ணு... "
என் Wife வேற வழி இல்லாம நம்பிட்டாங்க...
நல்லவேள Khazana விளம்பரத்துல தமன்னா வர்றதால தான் அந்த கடைக்கு கூட்டிட்டு போனேனு டவுட் எதுவும் வரல... ஹி.,ஹி.,ஹி..!!!
# மீ எஸ்கேப்...

Tuesday, May 10, 2016


" யார்ரா இவரு..? எதுக்கு இவரை
எல்லோரும் கலாய்ச்சிட்டு இருக்காங்க..!! "
" இவருதான் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர்..!! "
" சரி.. அதுக்கு என்ன..?!! "
" நீ சரவணா ஸ்டோர்ஸ் புது விளம்பரம்
பாக்கலியா..? "
" ஓ.. பத்து பதினஞ்சு தடவை பாத்துட்டேனே..
ஏன்..? "
" பத்து பதினஞ்சு தடவையா..?!! அதுல
தமன்னா கூட இவர் வர்றாரே.. நீ கவனிக்கல..?! "
" ஏன்டா.. தமன்னா வர்ற வெளம்பரத்துல
தமன்னாவை பாக்காம பக்கத்துல
இருக்கறவங்கள எல்லாமா பாப்பாங்க..
போடாங்ங்...... "

இன்னிக்கு திரிஷா பர்த்டே...!!
நான் " ஹேப்பி பர்த்டே " சொல்லல...
திரிஷா கோச்சிட்டாப்ல...
சொல்லியிருந்தா..
1. தமன்னா கோசிப்பாப்ல..
2. நயன்தாரா கோசிப்பாப்ல..
3. கீர்த்தி சுரேஷ் கோசிப்பாப்ல..
1 பெருசா..? 3 பெருசா..?!
# கூட்டி கழிச்சி பாருங்க... கணக்கு சரியா வரும்...!! 
ஹி.,ஹி.,ஹி...!!

Monday, February 29, 2016

வராத நயன்தாராவுக்கு அவார்ட் குடுப்பாங்களாம்...
வந்து.. டான்ஸ் எல்லாம் ஆடுன
தமன்னாவுக்கு குடுக்க மாட்டாங்களாம்..
என்னடா பங்ஷன் நடத்தறீங்க..?!!
நான் வெளிநடப்பு செய்கிறேன்..!!
# ஐய்யயோ... உணர்ச்சிவசப்பட்டு வீட்டுக்கு
வெளியே வந்துட்டேனே..!!!
அவ்வ்வ்வ்வ்

Saturday, January 30, 2016

வாட்சிங் " ரஜினி முருகன் " in தியேட்டர்...
பக்கத்துல உக்காந்து இருக்குற ரமேஷ்
என் கைய தட்டி...,
" ஏன் மச்சி.. இந்த புள்ள கீர்த்தி சுரேஷ்
என்ன அவ்ளோ அழகாவா இருக்கு..?!
அவங்க அம்மா மேனகா எவ்ளோ அழகு
தெரியுமா..?!! "
" அங்கிள்... கொஞ்சம் தள்ளி உக்காருங்க அங்கிள்...!! "

Tuesday, November 17, 2015


" நேத்து லக்ஷ்மி மேனன் என் கனவுல வந்தாப்ல.... "
" அப்புறம்...?! "
" அப்புறம் என்ன... எந்திரிச்சு நெத்தில 
விபூதி பூசிகி்ட்டு படுத்துட்டேன்.. "
# கிரேட் எஸ்கேப்..!


சுருதியக்கா நடிச்சா... படம் ப்ளாப் ஆகிடுதுனு
சொல்வதை வன்மையாக கண்டிக்கிறோம்..
இதுவரை எங்கள் சுருதியக்கா எந்த படத்திலும்
நடிக்கவில்லை... சும்மா வந்து போனதை எல்லாம் 
நடிப்பு என சொல்லக்கூடாது என தாழ்மையுடன்
கேட்டுக் கொள்கிறோம்...