Showing posts with label FB. Show all posts
Showing posts with label FB. Show all posts

Monday, July 31, 2017

ஒரு பொண்ணு அதோட ப்ரெண்ட் லிஸ்ட்ல இருந்து 100 பசங்கள தூக்கிட்டேனு ஸ்டேடஸ் போட்டு இருந்தது..
அத பாத்ததும் தினேஷ் செம காண்டாகிட்டான்...
( ஒரு வேள இந்த பன்னாடையும் லிஸ்ட்ல இருந்திருக்குமோ..?! )
" இந்த பொண்ணுகளுக்கு எவ்ளோ திமிர் பாத்தியா... "
" விடு மச்சி...."
" அதெல்லாம் விட மாட்டேன்.. பழிக்கு பழி வாங்கியே தீருவேன்... "
" என்ன பண்ண போறே..?! "
" நாங்களும் ப்ரெண்ட் லிஸ்ட்ல இருந்து 100 பொண்ணுங்கள தூக்கிட்டு ஸ்டேடஸ் போடுவோம்ல... "
சொல்லிட்டு கெளம்பிட்டான்...
இப்டி ஒரு மானஸ்தன் நமக்கு ப்ரெண்டா இருக்கானேனு புல்லரிச்சு போச்சு...
கொஞ்ச நேரத்துல வந்தான்...
" என்னா... நிஜமாவே 100 பொண்ணுங்கள தூக்கிட்டியா..?!! "
" இல்ல மச்சி... எண்ணி பாத்தேன்... 64 பேர் தான் வந்தது... "
" அதுக்கு...?! "
" இன்னும் 36 பேர்க்கு ரிக்வெஸ்ட் குடுத்து இருக்கேன்.. அக்செப்ட் மட்டும் பண்ணட்டும்.. அப்புறம் பாரேன்... "

Thursday, July 27, 2017

என் ப்ரெண்ட் ஆனந்த் போன் பண்ணியிருந்தான்....
" மச்சி... என்ன விசயம்னே தெர்ல... இந்த வாரம் மட்டும் புதுசா 2 பொண்ணுங்க என்கிட்ட சாட்டிங் பண்ணியிருக்காங்க... "
" யாரு மச்சி... வெலாசம்..?! "
" உன்னை பாத்தா அவ்ளோ நல்லவனா தெரியலியே... "
" அப்ப தரமாட்டே..?! "
" எக்ஸாட்லி... "
" சரி விடு... நானே கண்டுபிடிக்கறேன்.. "
" முடிஞ்சா கண்டுபிடிச்சிக்கோ.. "
" ம்ம்ம்.!! "
அவன்கிட்ட பேசிட்டு வந்து நான் தீவிரமா யோசிக்க ஆரம்பிச்சேன்...
.
.
.
.
ஆமா... நம்ம 3-வது புது ஃபேக் ஐடிக்கு என்ன பேரு வெக்கலாம்..?!
#சாவுடா ஸ்டேடஸ்...!!!

Tuesday, July 4, 2017

" எப்ப பாரு ஃபேஸ்புக்லயே இருக்கீங்களே.. வேற வேலை இல்லியா..?! "
( ஒரு ஃபேஸ்புக் போராளிய பாத்து கேக்கற கேள்வியா இது..?! )
" குட் கொஸ்டின்.. இருங்க நான் பேங்க்கு போயிட்டு வந்துடறேன்.. "
" பேங்க்கா..? இன்னிக்கு செகண்ட் சாட்டர்டே, பேங்க் லீவாயிருக்குமே.... "
" பாத்தீங்களா... நான் வேலை செய்யலாம்னு நெனக்கும் போது பேங்க் லீவ் விட்டுடறாங்க... இப்டி இருந்தா எப்டி இந்தியா வல்லரசாகும்..?!! "
" ம்க்க்க்கும்..! "
# எப்டில்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு..!!!

Monday, June 19, 2017

இன்னிக்கு என் காலேஜ்மேட் ரேணுகாவுக்கு பர்த்டே.. நோட்டிபிகேசன் வந்தது...
பாத்ததும் திக்னு ஆகிடுச்சு....
32 Years old-னு போட்டு இருக்கு...
அடப்பாவி...!!!
உடனே போன்ல கூப்பிட்டு...
" என்னாதிது.. ஃபேஸ்புக்ல வயசு 32-னு காட்டுது.. "
" ஹி., ஹி., ஹி... "
" சிரிக்காதே...! "
" சரி.. அதுல உனக்கென்ன பிரச்னை..?! "
" பின்ன.. நீ என் காலேஜ்மேட்னு இங்க பல பேருக்கு தெரியும்ல... "
" அதுக்கு..?! "
" நீ இப்டி உன் வயசு 32-னு போட்டா.. அப்புறம் என் உண்மையான வயசு.. 26-ஐ சொன்னா.. எவன் நம்புவான்..?! "
" 26-ஆ...?! அடிங்ங்ங்... "

Friday, March 17, 2017

நான் இங்கிலீஸ் எக்ஸாமையே தமிழ்ல எழுதற ஆளு....
ஆனா பாருங்க... ரெண்டு மூணு நாளா வெள்ளக்கார புள்ளங்களா ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் குடுக்குது....
என்ன காரணமா இருக்கும்..?!!
மல்லக்க படுத்து விட்டத்தை பாத்து யோசிச்சேனா.... டக்னு உதிச்சது ஒரு சிந்தனை....
ஆஹா... ஒருவேள.... நாம பாக்கறதுக்கு அசப்புல வெள்ளைக்காரன் மாதிரியே இருக்கோமோ...?!!
ம்ம்ம்... இருக்கும் இருக்கும்...!!

Friday, February 10, 2017

நா, நீ, என் ஃபேக் ஐடி, உன் ஃபேக் ஐடி, நம்ம ஃபேக் ஐடி... எல்லாம் ஒண்ணா சேர்ந்தா...
.
.
.
.
.
.
இதா 5 லைக்ஸ் வந்திடுச்சில்ல..!!!

Tuesday, February 7, 2017

இந்த உள்ளுக்குள்ள தூங்கிட்டு இருக்கற போராளி வேற அப்பப்ப முழிச்சிக்கிறான்...
அவனுக்கு ரெண்டு இட்லி கொடுத்து., தட்டி குடுத்து தூங்க வெக்கறது இருக்கே.... ஒரே குஷ்டமப்பா.... சே... கஷ்டமப்பா...

Friday, February 3, 2017

ஒவ்வொரு ப்ரெண்ட்ஸ் டே வீடியோவா போயி... நம்ம போட்டோ வருதானு பாத்துட்டு இருக்கறது...
இதெல்லாம் ஒரு பொழப்பு...??
போ போ.. போயி வேலைய பாரு...
#நான் என்னை சொன்னேன்...!!

Saturday, December 31, 2016


வி்ட்டா சுடுதண்ணி கண்டுபிடிச்சதுக்காக நோபல் பரிசு குடுக்கணும்னு ரெகமண்ட் பண்ணுவானுங்க போல....

Tuesday, November 15, 2016


நான் பாக்கறதெல்லாம் ஷேர் பண்ற சாதாரண FB யூசர் இல்ல..
பிரச்னை வந்தா மட்டும் போராடுற போராளி...
இப்ப கொலவெறில இருக்கேன்...
எந்த பிரச்னை கெடைச்சாலும் போராடணுங்கற வெறில இருக்கேன்....
எதிர்ல எவன் வந்தாலும் மீம்ஸ் போட்டு கலாய்ச்சிட்டு போயிட்டே இருப்பேன்....
# ஃபேஸ்புக் சங்கம் 3

Wednesday, October 26, 2016

இப்பல்லாம் என்கிட்ட வந்து பேசற என் ஃபிரண்ட்ஸ்... கெளம்பறப்ப,
'உன் கைய காலா நெனச்சிக் கெஞ்சிக் கேக்கறேன்... நாம பேசினத ஃபேஸ்புக்ல போட்டு என் மானத்தை வாங்கிடாதே'ன்னு சொல்லிட்டுப் போறானுங்க...
எல்லோரும் இப்டியே சொன்னா... அப்புறம் எப்டிதான்டா நான் தொழில் பண்றது...?!!
# ஒரே குஷ்டமப்பா...!!!

Saturday, October 15, 2016

முன்னெல்லாம் புருஷன் கூட சண்டைன்னா... அம்மாவுக்கு போனை போடுவாங்க...
இப்ப ஃபேஸ்புக்ல ஸ்டேடசா போடறாங்க...
# டெக்னாலஜி இச் இம்ப்ரூவ்டு சோ மச்ச்ச்ச்ச்....!!!

Tuesday, October 11, 2016

" ஏங்க.. கேட்டா பிரபலம்னு சொல்லிக்கறீங்க.. அப்பலோ டாக்டர்ல ஒருத்தர் கூடவா உங்க ப்ரெண்ட் லிஸ்ட்ல இல்ல.. "
" அத ஏம்மா கேக்கறே.. எவனை கேட்டாலும் அப்பலோ டாக்டர் ரேஞ்ச்க்கு தாம்மா பேசறாய்ங்க... "
# மிடிலடா...!!!

Monday, October 10, 2016

" மச்சி.. ஒரு மணி நேரத்துல 1000 லைக்ஸ் வரணும்.. ஒரு ஐடியா சொல்லேன்... "
" நீ ஃபேஸ்புக் விட்டு போறேனு ஒரு ஸ்டேடஸ் போடு.. வரும் பாரேன்.... "
# அடேய்ய்ய்ய்ய்.....

Sunday, September 25, 2016

நீங்க சிங்கப்பூர் வந்தா சொல்லுங்க... நான் ஏர்போர்ட்க்கே வந்து உங்ககிட்ட ஆட்டோகிராப் வாங்குவேன்னு ரெண்டு வருஷம் முன்னால ஒரு பொண்ணு சொல்லிச்சு...
ஆட்டோகிராப் வாங்கறதெல்லாம் அப்புறம் இருக்கட்டும்.. மொதல்ல வந்து ஸ்டேடஸ்க்கு லைக் போடுமா...
# ஒவ்வொருத்தரையா இழுத்துட்டு வந்து..... உஸ்ஸப்பா....

Monday, August 8, 2016


உங்கள ஃபாலோ பண்ற 1000 பேரும் ஆம்பளங்களாவே இருக்காங்களே.. ஏன்னு ஒருத்தர் கேட்டாரு..
பொம்பள புள்ளங்க என்னை ஃபாலோ பண்ணினா எனக்கு சுத்தமா பிடிக்காது சார்னு சொன்னேன்..
நம்பிட்டு போயிட்டாரு...!!!

Thursday, June 16, 2016

போன வருஷம் இதே தேதில ஒரு போஸ்ட் போட்டு இருக்கேன்..
அதுக்கு 96 பேர் லைக் போட்டு இருக்காங்க..
இப்ப நான் போடற போஸ்ட்டுக்கும் இவங்களே தான் 
லைக் போடறாங்க..
அப்ப இந்த ஒரு வருஷத்துல நான் ப்ரெண்ட்டா சேர்த்த 
அந்த 970 பேர் என்ன தான் பண்றாங்க..?!
# டவுட்டு..!!
Fake Id ஒண்ணு ஆரம்பிச்சு.. அதுல சினிமா நடிகை 
ஒருத்தவங்க போட்டோவ புரோபைல் பிக்சரா வெச்சா...

இன்பாக்ஸ்ல ஒருத்தன் வந்து...
" நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.. உங்க 
மொபைல் நம்பர் குடுங்க.. சினிமால நடிக்க 
சான்ஸ் வாங்கி தர்றேனு " சொல்றான்...
# அடேய்.....