Showing posts with label School. Show all posts
Showing posts with label School. Show all posts

Wednesday, January 24, 2018

ஒரு 10 வருஷத்துக்கு முன்னாடி....
அப்ப எனக்கு 10th ரிசல்ட் வந்திருந்தது...
எங்கப்பா என்னை வேற ஸ்கூல்ல சேர்க்கறது பத்தி அவர் ப்ரெண்ட்கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டிருந்தாரு...
" ஏன் இதே நல்ல ஸ்கூல் தானே..?! "
( அதானே..?! இங்க தான் மிஸ் எல்லாம் நல்லா அழகா... சே... நல்லா சொல்லிக்குடுப்பாங்க.. )
" நான் எதிர்பார்த்த மார்க் வரலியே.. "
( இவரை யாரு 250 மார்க் எதிர்பார்க்க சொன்னது..?! )
" வேற பசங்க நல்லா தானே மார்க் வாங்கியிருக்காங்க.. இவன் சரியா படிக்கலை.. அதுக்கு ஸ்கூலை மாத்துவியா..?! "
" என்ன பண்றது..? பையன மாத்த முடியாதே.. அட்லீஸ்ட் ஸ்கூலையாச்சும் மாத்துவோம்... "
உடனே நான்....
" அங்கிள் அங்கிள்... ஸ்கூல் மாத்த வேணாம் சொல்லுங்க... இந்த தடவை கண்டிப்பா 250 எடுக்கறேன்... "
உடனே எங்க டாடி...
" பாத்தியா... ப்ள்ஸ் டூ எக்ஸாம் 1200 மார்க்குனு கூட தெரியாம பேசிட்டு இருக்கு... "
" ஓஹோ... அப்ப ஒரு 300-ஆ எடுத்திடறேன்.. "
எங்கப்பாரு தலைல அடிச்சிட்டு போயிட்டாரு...
இது எனக்கு பெரிய அவமானமா போச்சு...
அப்புறம் எனக்கு அதுவே வெறியா மாறி..
ராப்பகலா கண்ணு முழிச்சு படிச்சு...
ப்ளஸ் டூல... நானுத்தி... சரி சரி.. இப்ப எதுக்கு அதெல்லாம்... விடுங்க விடுங்க...
ஹி., ஹி., ஹி..!!

Friday, July 14, 2017

நான் படிச்சதென்னவோ கோ-எஜுகேஷன் ஸ்கூல்ல தான்... அப்பல்லாம் கூட படிக்கிற பொண்ணுங்ககிட்ட பேசினதேயில்ல...
பேசிக்கலி ஐயம் வெரி Shy type. அதுவுமில்லாம அந்த பொண்ணுங்க என்னைய மதிக்காது வேற...
எல்லாம் என்னைய விட 50 மார்க் ஜாஸ்தியா எடுக்கற திமிரு.. ( ஒவ்வொரு சப்ஜெக்ட்லயும் )
ஹி., ஹி., ஹி...!!!

Saturday, June 3, 2017

10th CBSE ரிசல்ட் வந்துடுச்சு... என் சிஸ்டர் பொண்ணு 10...
வீட்ல கொண்டாடிட்டு இருக்காங்க...
என்னடா இது... 10 மார்க் எடுத்ததுக்கே இப்டியா...?!
அப்ப நான் எடுத்த மார்க் சொன்னா எப்டி கொண்டாடுவாங்கனு போயி சொன்னேன்...
துப்பிட்டு போயிட்டாங்க...
ஏம்பா... 10 விட 37 பெருசு தானே...?!

Sunday, April 2, 2017

" ஊர்ல நாத்திகம் பேசி்ட்டு திரிஞ்ச பல பேர் என்னால தான் கோவிலுக்கே போக ஆரம்பிச்சாய்ங்க.... "
" நிசமாவா..?! அப்டி நீ என்ன பண்ணினே...?! "
" ஹி., ஹி., ஹி... நான் ப்ளஸ் டூ பாஸானப்புறம் தான் கடவுள் இருக்கறார்ங்கறதையே அவங்க நம்ப ஆரம்பிச்சாய்ங்க.... "

Tuesday, January 31, 2017


" Save Trees...
Say No to Paper.. "
இத தான் நாங்க ஸ்கூல்ல படிக்கறப்பவே ஃபாலோ பண்ணிட்டு இருந்தோம்..
எக்ஸாம்ல அடிஷன் ஷீட் வாங்கறதேயில்லனு அதுக்கு வேற புடிச்சி அடிச்சீங்க..!!

Saturday, December 31, 2016

அன்னிக்கு கெமிஸ்டரி மன்த்லி எக்ஸாம்..
எனக்கு கெமிஸ்டரி சம்பந்தமா ஒண்ணும் ஞாபகத்துல இல்ல... ( படிச்சா தானே..?!! )
இப்டியே போனா... வெத்து பேப்பரை தான் குடுக்க வேண்டி இருக்கும்... என்ன பண்ணலாம்...?!
டைம் பாத்தேன்... எக்ஸாம் ஆரம்பிக்க இன்னும் 45 நிமிஷம் இருந்தது..
சரி இந்த கேப்ல 3 கேள்விக்கு பதிலை மனப்பாடம் பண்றோம்.. எந்த கேள்வி வந்தாலும் இதயே ஆன்ஸர் சீட்ல எழுதறோம்னு முடிவு பண்ணினேன்..
ஒரு அரைமணி நேரம் படிச்சிட்டு இருந்து இருப்பேன்... அப்ப அங்க வந்த என் ப்ரெண்ட் மணி என்னைய பாத்து ஷாக் ஆகிட்டான்...
பின்ன.. இந்த மாதிரி அரிய காட்சிய அவன் பாத்ததேயில்லைல...
" என்னடா பண்றே..? "
" இன்னிக்கு எக்ஸாம்க்கு படிக்கறேன்... பாத்தா தெரியல..?! "
" அது சரி.. நாம 9th தானே படிக்கறோம்.. நீ ஏன் 10th புக் படிக்கறே..? "
( என்னாது.. இது 10th புக்கா...? ஐய்யோ.. எங்க அண்ணன் புக்கு... )
சே.. கர்மம்... மொதல்ல நம்ம புக்கு என்ன கலர்ல இருக்குனு பாத்து வெச்சிக்கணும்..!!

Monday, November 7, 2016

எனக்கு ஸ்கூல்ல பிரகாஷ்னு ஒரு ப்ரெண்ட் இருந்தான்..
பிரகாஷ் 10-A, நான் 10-B..
நான் லஞ்ச் பிரேக்ல அங்க போயி அவன்கிட்ட பேசிட்டு இருப்பேன்..
வழக்கம் போல ஒரு நாள் நான் போனப்ப...
அந்த கிளாஸ்ல சுதா பொண்ணு பக்கத்துல இருந்த சங்கீதாகிட்ட என்னைய காட்டி...
" ஹேய்.. இவன பாத்தா... கமலஹாசன் மாதிரியே இருக்கான்டி " னு சொல்லுச்சு..
அத கேட்டு எனக்கு கோவம் கோவமா வந்துச்சு,,,
ஆனா பிரின்சிபால் கையில இருக்கற குச்சிக்கு மரியாதை குடுத்து வந்த கோவத்தை கன்ட்ரோல் பண்ணிகிட்டேன்....
எதுக்கு கோவம் வந்துச்சாவா..?
அப்ப தான் " குணா " படம் ரிலீஸ் ஆகியிருந்துச்சு..!!

Monday, June 27, 2016

நானெல்லாம் பர்ஸ்ட் பெஞ்ச் ஸ்டுடண்ட்னு சொன்னா யாரும் நம்ப மாட்டேங்குறாங்க..
நம்புங்க.. எங்க ரேவதி மிஸ் மேல சத்தியமா!
ஹைட் கம்மியா இருக்கேனு இழுத்துப் பிடிச்சு அவங்க தான் உக்கார வெச்சாங்க...

Saturday, June 25, 2016

காலைல என் ப்ரெண்ட் ஆனந்தை வழில பாத்தேன்..
" ஏன்டா இப்டி 30 மார்க் எடுத்தது, 40 மார்க் எடுத்ததை எல்லாம் ஃபேஸ்புக்ல போட்டா.. உன்னய பத்தி என்ன நெனப்பாங்க..?! "
" என்ன நெனப்பாங்க..?! "
" நீ ஈஸியா பேப்பர் சேஸ் பண்ணி பாஸ் பண்ணிட்டேனு நெனைக்க மாட்டாங்க..?! "
இத கேட்டதும் எனக்கு வந்துச்சு பாருங்க
கோவம்....
" யாரா பாத்துடா ஈஸியா பேப்பர் சேஸ் பண்ணேனு சொன்னே...?!! ராஸ்கல்...
அது எவ்ளோ கஷ்டம் தெரியுமா..?! "

Thursday, May 26, 2016

அட பக்கிகளா... ஜஸ்ட் 2 மார்க்ல டாக்டர் சீட் 
மிஸ் பண்ணினவன்டா நானு... 
.
.
.
.
.
.
.
.
.
.
( ஒண்ணுமே எழுதாத பேப்பர்ல 2 மார்க் எதுல 

இருந்து வந்துச்சினு தான் இப்ப வரைக்கும் 
யோசிச்சிட்டு இருக்கேன் )

Thursday, May 12, 2016

+1 Annual Exam ரிசல்ட் நாள்..
நானும்., என் ப்ரெண்ட் ஆனந்தும்
பயங்கர டென்ஷனோட வெயிட்
பண்ணிட்டு இருந்தோம்..
ரிசல்ட் வந்ததும்.. மார்க்கை பாத்தா...
Maths-ல பார்டர் பாஸ் ஆயிருந்தோம்...
எங்களுக்கு ஒரே ஷாக்..!
இருக்காதா பின்ன., எழுதினதே 30 மார்க்குக்கு தானே..!

Thursday, April 21, 2016

+2 பிராக்டிகல் எக்ஸாம் முடிஞ்சதும்
என் ப்ரெண்ட் விக்னேஷ் என்னை கேட்டான்...
" நீ பிராக்டிகல்ல வித்யாகிட்ட பேப்பரை
காட்ட சொல்லி கேட்டேல்ல.. "
" ஆ... இதெப்படிடா உனக்கு தெரியும்..?! "
" நான் பாத்துட்டேன்... "
" ஆமா.. அந்த புள்ள காட்ட மாட்டேனு
ஓவரா பந்தா பண்ணிகிச்சு.. "
" டேய்... அதுக்கு வேற எக்ஸ்பிரிமென்ட்..
உனக்கு வேற எக்ஸ்பிரிமென்ட்ரா.. "
" எந்த எக்ஸ்பிரிமெண்டா இருந்தா என்ன.?
சும்மா பேப்பர மடிச்சு குடுக்கறதுக்கு, ஏதாவது
எழுதி குடுக்கலாம்ன்னு பார்த்தேன். ஹி.,ஹி.,ஹி... "

Wednesday, December 30, 2015

/// பரீட்சையில் பெயிலானதால் பெற்றோர் உட்பட 
கண்ணில் பட்ட பலரை வாளால் வெட்டிய வாலிபர் 
- செய்தி... //

இப்ப பசங்க ஏன் இப்டி இருக்காங்க...?!
இன்னிக்கு நான் இம்புட்டு பெரிய அறிவாளியா(?) 
இருக்கேன்னா... அதுக்கு காரணமே ஒவ்வொரு 
கிளாஸ்லயும் ரெண்டு வருஷம் ரிசர்ச் பண்ணி.. 
ரிசர்ச் பண்ணி படிச்ச படிப்பு தான் காரணம்...
tongue emoticon tongue emoticon

Saturday, July 4, 2015

நாங்கல்லாம் ஸ்கூலை கோயிலாகவும்.,
சொல்லிக்குடுக்குற மிஸ்சை தெய்வமா
மதிச்சவங்க....
ஸ்கூலுக்கு போறப்ப தேங்கா, பழம்., கற்பூரம் 
ஊதுபத்தி எல்லாம் எடுத்துட்டு போவோம்னா
பாத்துக்கோங்களேன்..
# அம்புட்டு குருபக்தி..!!

Thursday, June 18, 2015


நானும் என் Wife-ம் மார்கெட் போயிருந்தோம்...
அவங்க பர்சேஸ் பண்ணிட்டு இருந்தாங்க..
நான் பராக்கு பாத்துட்டு நின்னுட்டு 
இருந்தேன்...
அப்ப ஒரு லேடி என்னை பாத்து
வந்தாங்க..... வந்து...
" நீங்க வெங்கட் தானே..?! "
( யார்ரா இது..? ஒருவேளை நம்ம
ஃபேஸ்புக் ரசிகையா இருக்குமோ..?! )
" ஆமா.. நீங்க..? "
" என்னை தெரியல...?! நான் வித்யா.. "
" எந்த வித்யா..?! "
( ஹி., ஹி.., ஹி.. எனக்கு நாலு வித்யா
தெரியும்ல.. )
" ம்ம்.. +2 பிசிக்ஸ் பிராக்டிகல்ஸ்ல என்
பேப்பரை காட்ட சொல்லி கேட்டியல்ல..
அந்த வித்யா.. "
( ரெண்டு வருஷம் ஒண்ணா படிச்சி இருக்கோம்...
இதை விட்டா வேற இன்சிடென்ட் கிடைக்கலையா..?!!
அவ்வ்வ்..!! )
" ஆமா.. நீ கூட காட்ட மாட்டேனு மறைச்சி
மறைச்சி எழுதி பந்தா காட்னியே.. "
" டேய்.. எனக்கு வேற எக்ஸ்பிரிமெண்ட்.,
உனக்கு வேற எக்ஸ்பிரிமெண்ட்ரா.. "
" ஓ... அதை நான் கவனிக்கவே இல்லையே...!!!
ஹி., ஹி., ஹி..!! "

Sunday, December 21, 2014

ஒரு தடவை ஸ்கூல்ல எங்க மிஸ்ஸு
கேட்டாங்க...
" நமக்கு ரொம்ப முக்கியமானது எது...? "
" சாப்பாடு மிஸ்...!! "
" டேய்... படிப்புனு சொல்லணும்டா...!! "
" படிக்காம ஒரு வாரம் கூட இருக்கலாம்
மிஸ்... ஆனா சாப்பிடாம ஒரு நாள் இருக்க
முடியுமா..?!! "
எங்க மிஸ்ஸு.... அப்படியே ஷாக் ஆகிட்டாங்க...

Tuesday, November 25, 2014



எனக்கு மேத்ஸ்னா அலர்ஜி...

என் ப்ரெண்ட் ஆனந்துக்கு..
அலர்ஜி + அலர்ஜி + அலர்ஜி..

அன்னிக்கு எங்க மேத்ஸ் மாஸ்டர்
பிரபாகரன் சார்து தான் ஃபர்ஸ்ட் பீரியட்..

நானும் ஆனந்தும் பேசிக்கிட்டோம்..

" வாடா.. நான் பாகிஸ்தானுக்கு ஓடி போயிடலாம் "

" டெரரிஸ்ட் கிட்ட மாட்டிபோமேடா.?!! "

" அது பரவாயில்ல.. அவங்க கொஞ்சம்
கம்மியா கொடுமை பண்ணுவாங்க.. "

" அப்படீன்ற...?!!! "

# எத்தனை எத்தனை பார்முலா..
இருக்க விட்டாய்ங்களா எங்களை நார்மலா.!!

Sunday, March 23, 2014


ஒரு தடவை எக்ஸாம் டைம்ல நான்
கிரிக்கெட் விளையாடிட்டு இருந்தேன்...

அப்ப அந்த வழியா வந்த எங்க அப்பாவோட 
ப்ரெண்டு...

" ஏண்டா எக்ஸாம் வெச்சிக்கிட்டு விளையாடிட்டா
இருக்கே.. போடா.. போயி படிச்சி பாஸாகற
வழிய பாரு.. "

" என்னை போய் எப்படி அங்கிள் எங்க
ஸ்கூல்ல பெயில் ஆக்குவாங்க..? "

" அவ்ளோ நல்லா படிப்பியாடா நீயி..? "

" ஹி., ஹி., அதில்ல அங்கிள்... ஸ்கூல்லயே
எங்கப்பா தான் கரெக்டா சொன்ன தேதிக்கு
பீஸ் கட்டுவாரு.. "

# நாங்கல்லாம் அப்பவே அப்புடி..!!!