Showing posts with label Idea. Show all posts
Showing posts with label Idea. Show all posts

Wednesday, November 1, 2017

" நானெல்லாம் ஒரு குழப்பமான சிட்சுவேஷன்னா... எப்பவும் பூவா தலையா போட்டு பாத்துட்டு... பூ விழுந்தா தான் செய்வேன்... "
" அப்டியா..? "
" ம்ம்.. நேத்து ஈவினிங் கூட டின்னர்க்கு வெளியே ஹோட்டல் போயி சிக்கன் சாப்பிடலாமா வேணாமானு ஒரே குழப்பமா இருந்தது... "
" ம்ம்.. அப்புறம்..?! "
" அப்புறம் என்ன.. பூவா தலையா தான்.. "
" என்ன விழுந்திச்சு..?! "
" தலை.... "
" அப்ப டின்னர்க்கு ஹோட்டல் போலயா..?! "
" சே.. சே.. அப்புறம் 25 தடவை சுண்டினதுல 13 பூ, 12 தலை.. சோ மெஜாரிட்டினு கெளம்பிட்டேன்ல... "

Monday, October 23, 2017

காலைல ராகவ் வந்தான்....
" மச்சி என் ஆபீஸ்ல கூட வொர்க் பண்ற பொண்ணுகிட்ட லவ் சொல்லலாம்னு இருக்கேன்... எதாவது ஐடியா குடேன்... "
" ஐடியா தானே... குடுத்திட்டா போச்சு... "
( ஹி., ஹி., ஹி... ஐடியா குடுக்கறத நாங்க ஒரு பொதுசேவையா செஞ்சிட்டு இருக்கோம்ல...! )
" சரி.... ஐடியா குடு.. "
" கவிதை எழுதி குடு மச்சி.. அதான் பெஸ்ட்டு.. "
" ஐய்யோ.. எனக்கு கவிதை எழுத வராதே..!! "
( இதுக்கு ஏன் இப்டி பதர்றான்...? நானெல்லாம் என்னிக்காச்சும் இப்டி ஃபீல் பண்ணியிருப்பேனா..?! )
" சரி டோன்ட் வொர்ரி.. நானே எழுதி தர்றேன்.. "
சொல்லிட்டு கவிஞர் வெங்கூவை தட்டி எழுப்பினேன்...
கவிதை அருவி மாதிரி கொட்டிச்சு... டக்னு அத பேப்பர்ல புடிச்சிட்டேன்...
" கண்ணே...
நீயே என் ஆதார் கார்ட்,
வாங்கிக்கலாமா
நமக்கொரு ரேசன் கார்ட்..!! "
வாங்கிட்டு போயி 6 மணி நேரமாச்சு.... இதுவரைக்கும் ஒரு போன் கால் கூட இல்ல...
ஒருவேள லவ் ஓகே ஆகி... சினிமா, பார்க்னு போயிட்டானோ..?!

Friday, August 18, 2017

எங்க அத்தை எப்ப பிரியாணி பண்ணினாலும் எனக்கும் குடுத்து விட்டுடுவாங்க..
போன வாரம் பிரியாணி வந்தது... நல்லா இருந்தது...
ஆனா நான் அத்தைக்கு போன் பண்ணி...
" அத்தை... நீங்க சூப்பரா பிரியாணி செய்வீங்களே.. இன்னிக்கி ஏன் சுமாரா இருக்குனு " கேட்டு வெச்சிட்டேன்...
ரிசல்ட்.....
இன்னிக்கும் பிரியாணி வந்திருக்கு...!!
#அனைத்து ராசதந்திரங்களையும் கரைத்து குடித்திருக்கிறாயடா வெங்கி..!! ஹி., ஹி., ஹி...!!

Monday, May 1, 2017

ஊர்ல இருந்து லீவ்க்கு என் ப்ரெண்ட் ஜெகன் வந்திருக்கான்...
நேத்து நைட் நானும் அவனும் மீட் பண்ணிட்டோம்..
அப்டியே டின்னர் பக்கத்துல இருந்த ஹோட்டல்க்கு டின்னர்க்கு போனோம்...
ஆளுக்கு ஒரு ப்ளேட் சப்பாத்தி, ஒரு ஆணியன் ஊத்தப்பம் சாப்டோம்...
பில் 112 ரூபா வந்தது...
ஜெகன் பர்ஸ் எடுக்கறதுக்குள்ள டக்னு நான் என் பர்ஸ்ல இருந்து பணம் எடுத்து குடுத்துட்டேன்...
" ஏன்டா... நான் குடுத்திருப்பேன்ல... "
" விட்றா இதுல என்ன இருக்கு... இன்னிக்கு நான் குடுத்தா.. நாளைக்கு நீ குடு... "
உடனே... " என் ப்ரெண்ட்ட போல யாரு மச்சான்னு " அவன் மைண்ட்ல ஓடினது என் காதுல தெளிவா கேட்டுச்சு..
ஆனா பாருங்க... நான் இன்னிக்கு மதியம் சிக்கன் பிரியாணியும், சிக்கன் சுக்காவும் ஐடியா வெச்சி இருந்தது அவனுக்கு தெரியாது பாவம்...

Wednesday, April 26, 2017

" கொஞ்சம் வந்து சப்பாத்தி தேச்சி தாங்கனு " Wife சொன்னா...
முடியாதுனு டக்னு சொல்லக்கூடாது... அப்புறம் டொக்னு மண்டையிலயே விழும்...
இந்த சிட்சுவேசன எப்டி ஹேண்டல் பண்ணனும்னா....
" நீ தேச்சு குடுமா... நான் சுடறேனு " சொல்லணும்..
அப்புறம் அங்க போயி கத்துகிட்ட மொத்த வித்தையையும் காட்டி சப்பாத்திய சுட்டு வெக்க கூடாது...
லாக் ஆகிடுவீங்க...
அதனால அந்த சப்பாத்தியை எவ்ளோ கேவலமா.., எவ்ளோ கருக்கலா சுட முடியுமோ... அப்டி சுட்டு எடுத்து போடணும்...
அத பாத்ததும் அவங்களே " நீங்க ஆணியே பிடுங்க வேணாம்னு " நம்மள கிச்சன்ல இருந்து தொரத்திடுவாங்க...
எப்பூடி...??!!!
என்ன ஒண்ணு... நாம சுட்ட அந்த கருக்கலான சப்பாத்தி நம்ம ப்ளேட்ல தான் விழும்...
அத மட்டும் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணி சாப்பிட பழகிட்டா போதும்... இந்த நாள் மட்டுமல்ல எல்லா நாளும் இனிய நாளே....
ஹி., ஹி.,ஹி....!!!

Friday, March 17, 2017

அவசரத்துக்கு யாராவது உங்களுக்கு 50 ரூபாய் ரீசார்ஜ் பண்ணி ஹெல்ப் பண்ணினா...
அடுத்த நாள் நீங்களும் அவங்க நம்பர்க்கு 50 ரூபாய் ரீசார்ஜ் பண்ணி வெக்காதீங்க...
அது நட்புக்கு அழகில்ல...
.
.
.
நீங்க வேணா.... அவங்கள ஹோட்டல்க்கு கூட்டிட்டு போயி பிரியாணியும், சிக்கன் 65-ம் வாங்கி குடுங்களேன்...
வேணாம்னா சொல்ல போறேன்... சே... சொல்லப் போறாங்க... டங்க் ஸ்லிப் ஆகிடுச்சு... ஹி., ஹி., ஹி....!!!
உங்களுக்கு பிடிச்ச பொண்ணு பர்த்டே என்னிக்குனு தெரிஞ்சிக்கணுமா..?
தட் ஈஸ் வெரி சிம்பிள் யூ நோ...
இன்னிக்கே அவங்கிட்ட போயி...
" ஹேப்பி பர்த்டேனு " விஷ் பண்ணுங்க...
" ஹைய்யோ.. என் பர்த்டே இன்னிக்கில்ல... அது ஆகஸ்ட் 10.. " சொல்லிடுவாங்க..
.
.
- பொதுநலன் கருதி (ரகசியத்தை) வெளியிடுவோர்..
"கோகுலத்தில் சூரியன் " வெங்கட்

Sunday, November 6, 2016

7 ஐஸ்கிரீம் சாப்பிட்டா உடம்பு வெயிட் போடுமா..?!!
திங்கிங்....
போட்டா போடட்டுமே....
ஐஸ்கிரீமை வெயில்ல வெச்சா என்ன ஆகும்..?
உருகிடும்....
அப்ப நாளைக்கு காலைல அரைமணி நேரம் வெயில்ல நின்னா போச்சு.. தானா உருகிட போவுது.. சே.. கொறைஞ்சிட போவுது...
# நானே கண்டுபிடிச்சேன்..

Friday, October 21, 2016

" மச்சி க்ரீன் டீ குடிச்சா உடம்பு கம்மியாகும்னு சொன்னாங்க... ஆனா ஆகலியே... "
" நீ எப்ப குடிச்சே..? "
" ஒரு மாசமா குடிக்கிறேனே... "
" எப்டி குடிச்சே...? "
" டெய்லி ரெண்டு.. காலைல 7 மணி, அப்புறம் 5 மணி.. "
" தப்பு பண்ணிட்டியே மச்சி... க்ரீன் டீ எப்பவும் டிபன் , சாப்பாடு சாப்பிட்டதும் குடிக்கணும்.. "
" அப்டியா..? அப்டி குடிச்சா என்ன ஆகும்..?! "
" நீ சாப்பிட்டதெல்லாம் வாந்தி எடுத்துடுவே... அப்ப ஆட்டோமேடிக்கா உடம்பு கம்மியாகி தானே ஆகணும்... ஹி, ஹி, ஹி... "
# க்ரீன் டீ சீக்ரெட்...!

Friday, October 14, 2016

B.Com முடிச்சதும்.. நெக்ஸ்ட் என்ன பண்ணலாம்னு யோசிச்சப்ப எனக்கு இருந்தது ரெண்டு சாய்ஸ்..
ஒன்னு C.A ., இன்னொன்னு M.C.A
நான் MCA எடுத்தேன்.. ( ஏன்னா.. இதானே மூனு எழுத்து.. ஹி., ஹி., ஹி..!! )
நேத்து நானும் என் Wife-ம் பேசிட்டு இருக்கும் போது..
" நீங்க C.A எடுத்து படிச்சி ஆடிட்டர் ஆக இருக்கலாம்னு "
" ஆடிட்டரா..? எதுக்கு..? "
" பின்ன.. நானும் ஆடிட்டர் Wife-னு பெருமையா சொல்லிக்குவேன்ல.. "
" அவ்ளோ தானே கவலைய விடு... "
" என்ன.. இனிமே படிச்சி ஆடிட்டர் ஆக போறீங்களாக்கும்..? "
" ஹி., ஹி., ஹி.. இல்ல.. என் பேரை "ஆடிட்டர்"னு மாத்தி வெச்சிக்க போறேன்... "
# Mr.ஆடிட்டர் MCA... எப்பூடி...?!

Sunday, August 28, 2016

டெய்லி காலைல 6 மணிக்கு எந்திரிச்சு 5 கிலோ மீட்டர் போயிட்டு வந்தா வெயிட் கொறையும்னு சிவா சொன்னான்..
நானும் நாலு நாளா போயிட்டு தான் இருக்கேன்..
பெட்ரோல் தான் ஒரு லிட்டர் கொறைஞ்சி இருக்கு...
( ஒருவேளை வண்டிய மாத்தணுமோ..?!!! )
# டயட் 7வது நாள்
என் டயட் மாஸ்டர் சிவா போன் பண்ணியிருந்தான்...
" என்ன மச்சி வெயிட் கொறைஞ்சி இருக்கா..?!! "
" இல்லயே... "
" டயட் எல்லாம் கரெக்டா ஃபாலோ பண்றியா இல்லியா..?! "
" எல்லாம் நீ சொன்ன மாதிரி அப்டியே(?!).. "
" ம்ம்.. குட்.. உனக்கு டயட் மட்டும் பத்தாது நீ நாளைல இருந்து வாக்கிங் ஆரம்பி. "
" ரோடுலயா..?! "
" மொட்டை மாடி இருக்குல்ல.. "
" ம்ம்ம்... அது ஓ.கே..! "
" ரோடுனா ஸ்ரெய்ட்... மொட்டை மாடின்னா.. "
" என்ன மச்சி யோசிக்கிறே..?!! "
" ம்ம்.. மொட்டை மாடின்னா ரவுண்ட் போட கூடாது மயக்கம் வந்துடும்.... "
" பின்ன..?! "
" எட்டு போடணும்.. 25 போடு.. "
"ஓ.கே டன்..!! அப்புறம் ஒரு டவுட்..."
"நான் சொன்னதை மட்டும் பண்ணு... நாளைக்கு பேசலாம்"
போனை வெச்சிட்டான்..
இந்த எட்டு உக்காந்துட்டு போடணுமா.. படுத்துட்டு போடணுமான்னு சொல்லாமலே வெச்சிட்டானே...
# டயட் 4வது நாள்..!!

Wednesday, August 24, 2016


3 மாசம் முன்னால என் Wife அம்மா வீட்டுக்கு 10 நாள் லீவ்க்கு போனாங்க..
போன மொத நாளே அங்க இருந்து போன்..
" என்ன பண்ணுவீங்களோ தெரியாது.. இந்த 10 நாள்ல 5 கிலோ கொறைச்சி காட்றீங்க"னு சொல்லிட்டாங்க..
என் Wife பேச்சை என்னிக்கு நான் தட்டியிருக்கேன்.. சரினு சொல்லிட்டேன்..
மொத நாள் வெயிட் செக் பண்ணினேன்.. 73 கிலோ காட்டிச்சு..
அதை போட்டோ எடுத்து என் Wife-க்கு வாட்ஸ் அப்-ல அனுப்பி வெச்சிட்டேன்..
அப்புறம் 10-வது நாள்.. என் Wife வீட்டுக்கு வந்ததும்..
மொத வேலையா வெயிட் செக் பண்ணனும் கூட்டிட்டு போயி.. இல்லல்ல.. இழுத்துட்டு போயி மிஷின்ல நிக்க வெச்சாங்க..
அப்ப 68 காட்டிச்சு.. என் Wife செம ஹேப்பி...
என்ன பண்ணி 5 கிலோ கொறைச்சீங்கனு கேட்டாங்க.. ரகசியம்னு சொல்லிட்டேன்..
ஏன்னா இந்த 10 நாள்ல நான் தான் எதுவுமே பண்ணலயே..
பின்ன எப்டி 5 கிலோ..?! அதானே உங்க டவுட்டு...
ஹி., ஹி., ஹி.. மொத நாள் வெயிட் போடும்போது 5 கிலோ கல்லை கையில வெச்சிட்டு மிஷின்ல ஏறி நின்னேன்ல..!
டிஸ்கி : பின்ன எதுக்கு எக்ஸர்சைஸ் பண்ற மாதிரி போட்டோ போட்டேனு கேப்பீங்களே.. தெரியும்..!!
இந்த மாதிரி எக்ஸர்சைஸ் பண்ணலாமானு மனசுல யோசிச்சிட்டு இருந்தேன்...,ஹி., ஹி., ஹி..!!

Monday, August 8, 2016

டியர் பேச்சிலர் பாய்ஸ்..,
உங்கள விட வயசுல பெரிய பொண்ணா பாத்து கட்டிக்கோங்க..
எப்படியும் கல்யாணத்துக்கு அப்புறம் பொண்டாட்டி சொல்ற மாதிரி தான் கேட்டு நடக்க போறோம்...
அப்பல்லாம் வயசுல பெரியவங்க சொல்படி நடக்கறோம்னு மனச தேத்திக்கலாம்..!!
# தூம் தத்தா..!!

போன மாசம் என் ப்ரெண்ட் ஆனந்த்கிட்ட பேசிட்டு இருக்கும் போது பொலம்பினான்...
" மச்சி.. என் Wife வீட்டு செலவுக்கு எவ்ளோ குடுத்தாலும் 1000 பத்தல, 2000 பத்தலனு சொல்லிட்டே இருக்காடா.. "
" அப்டி என்னாடா செலவு..? "
" தெரியலியே..! "
" த்த்து.. நீ ஒரு அக்கவுண்ட்ஸ் ஸ்டூடெண்ட்டா இருந்துட்டு இப்டி சொல்றியே.. வெக்கமா இல்ல.. "
" சரி இத எப்டி கரெக்ட் பண்றது..?!! "
" இனிமே பணம் குடுக்கும் போது.. இதுல செலவு பண்றதுக்கு கணக்கு எழுதி வெச்சி எனக்கு காட்டுனு சொல்லு.. "
" அப்டி சொன்னா...?!! "
" அநாவசிய செலவெல்லாம் தானா கட்டாகிடும்ல... "
" செம்ம ஐடியா மச்சி.. "
இந்த மாசம் ஆன்ந்த்க்கு போன்...
" என்னா மச்சி.. உன் Wife செலவு கணக்கெல்லாம் எழுதறாப்டியா..?!! "
" ஓ... இந்த மாசம் 10,000 குடுத்து செலவு கணக்கு எழுதுனு சொன்னேன்... எழுதி வெச்சு இருக்கா...!! "
" வாவ் சூப்பரு... "
" ம்ம்க்கும்.... அத கூட்டினா 15,000 வருது..."
# ஓ மை காட்...!!

Thursday, July 28, 2016

" ஏன் மச்சி சோகமா இருக்கே..?! "
" எனக்கும் என் Wife-க்கும் சண்டை.. "
" அடி பலமா..?!! "
" சே.. சே.. யார்கிட்ட... ஓடிவந்துட்டேன்ல.. "
" ஹி., ஹி., ஹி.. உன்னை என் ப்ரெண்டுனு சொல்லிக்கவே பெருமையா இருக்கு மச்சி... ஆமா அப்புறம் எதுக்கு ஃபீல் பண்றே..?!! "
" இப்ப வீட்டுக்கு போகணும்ல... "
" நான் தான் உனக்கு ஏற்கனவே ஐடியா குடுத்து இருக்கேனே.. உன் Wife கோவமா இருந்தா.. அவங்களுக்கு பிடிச்ச பாட்டை பாடுனு.. "
" சண்டையே பிடிச்ச பாட்டை பாடினதுனால தான்டா வெண்ணை....!!! "
# ஓ மை காட்...!!

Thursday, June 16, 2016

பேங்க்ல என் ப்ரெண்ட் ஆனந்தை பாத்தேன்..
"மச்சி ஏன்டா சோகமா இருக்கே..?"
"Wife ஊருக்கு போயிருக்கா..!"
"இது ஓவர் ஆக்டிங்கால்ல இருக்கு..!!"
"அதில்ல மச்சி.. சின்ன சண்டை.. ரெண்டு நாளா 
போன் பண்றேன்.. எடுக்க மாட்டேங்குறா...."
"சார்ஜ்ல போட்டுருப்பாங்க.."
"இல்ல மச்சி.. ஒரு நாளைக்கு 50 தடவைக்கு மேல பண்ணினேன்.."
"ஓ.. மேட்டர் கொஞ்சம் சீரிய்ஸ் தான்.. சரி இப்ப 
ஒரு தடவை கால் பண்ணு..!! "
"இப்பவா..? நெக்ஸ்ட் டோக்கன் நான் தான்..!!"
"எப்படியும் எடுக்க போறதில்ல.. கணக்கு காட்ட 
யூஸ் ஆகும்.. பண்ணு..!! "
"அப்படின்ற..? சரி..."
டயல் பண்னான்... டக்னு கால் அட்டெண்ட் ஆச்சு..
"ஹலோ.." (அவன் Wife குரல்)
இந்த பக்கி டென்ஷன் ஆகிட்டான்..!!
"ஐயோ.. வித்யா அட்டெண்ட் பண்ணிட்டியா..? 
நீ அடெண்ட் பண்ண மாட்டேனு நெனச்சில்ல 
கால் பண்ணினேன்..!!"
( டொக்..!! )
# செத்தான்டா ஆனந்த்..!!

Tuesday, May 10, 2016

" சே.. வருஷா வருஷம் வெயில் ஓவரா
அடிக்குதுனு பொலம்பறாங்க.. ஒருத்தனும்
அதை சரிபண்ண என்ன பண்ணனும்னு
யோசிக்கறதில்ல.. "
" சரி.. நீ என்ன பண்ணினே..?! "
" ஹி., ஹி., ஹி.. ஏசில ரெண்டு பாயிண்ட்
கொறைச்சி வெச்சேன் மச்சி..!! "
# எட்ரா அந்த அருவாள..!!!

Sunday, April 17, 2016

என் ப்ரெண்ட் ஆனந்த்கிட்ட...
"ஒரே நாள்ல 5000 ரூபா சம்பாதிக்கிற டெக்னிக்
எனக்கு தெரியும்.."
"எனக்கும் சொல்லிக்குடேன்.."
"5000 ரூபா குடு.. சொல்லிக்குடுக்கறேன்..!!"
"ஓ.கே புரிஞ்சிடுச்சு... அப்டியே ஓடி போயிடு நாயே..!!"
# ஹி., ஹி., ஹி.. நம்ம கூட சேர்ந்து எல்லா பயலும்
உஷாரா இருக்கானுங்கப்பா..!!!

Wednesday, August 26, 2015

இன்னிக்கு ஒரு கல்யாணத்துல என்னை
பாத்த என் ப்ரெண்ட் மணி...
" ஹேய் வெங்கி.. என்னடா இளைச்ச
மாதிரி இருக்கே..?! "
இதை கேட்டதும் என் Wife அப்படியே
ஷாக் ஆகிட்டாங்க...!!
( இப்ப ஒரு சின்ன ப்ளாஷ்பேக்... )
10 நிமிஷம் முன்னாடி...
மணி கார்ல இருந்து இறங்கி வர்றான்...
என்னை பாத்துட்டு சிரிச்சிகிட்டே
என்கிட்ட வர்றான்...
" ஹே மணி... என்னடா இளைச்ச மாதிரி
இருக்கே..?! "
" நிஜமாவா.?! "
" யெஸ்...!! "
" அப்ப இதை மேனகா ( அவன் Wife)
என் கூட இருக்கும் போதும் சொல்றியா..?! "
" ஓ.... இதே மாதிரி நீயும் நிர்மலா
என் கூட இருக்கும் போது சொல்றியா..?! "
" ஓ.கே.. டீல்..!! "
# இப்படித்தான் ஒரு ஜென்டில்மேன் அக்ரிமெண்ட்
கையெழுத்தாச்சு...!!