Showing posts with label Baba Venkeesh. Show all posts
Showing posts with label Baba Venkeesh. Show all posts

Friday, August 18, 2017

தட்டிக் கொடுக்கறது தப்பில்ல.. அதுக்கு முன்னாடி கையில வெச்சிருக்கற சுத்திய கீழே வெச்சிடணும்...!!
- பாபா வெங்கீஷ்

Sunday, July 30, 2017

" கல்லானாலும் கணவன்,
புல்லானாலும் புருஷன்" னு Wife-கிட்ட பஞ்ச் டயலாக் பேசி வெக்காதீங்க...
கல்லு, புல்லு ரெண்டும் கீழே தான் கெடக்கும்... காலம் காலமா அத மிதிக்கறது தான் வழக்கம்...!!
- பாபா வெங்கீஷ்

Friday, July 28, 2017

துன்பம் வர்றப்ப சிரிக்கலாம் தப்பில்ல... ஆனா
அது அடுத்தவனுக்கு வர்றப்ப சிரிக்கக் கூடாது..!!!
- பாபா வெங்கீஷ்

Sunday, July 2, 2017

புலிய பாத்து கோடு போட்டுக்கறது தப்பில்ல... ஆனா அதுக்கப்புறம் "மியாவ்"-னு கத்தாம இருக்கணும்..!!
- பாபா வெங்கீஷ்

Wednesday, June 7, 2017


உலகத்துல தனி ஆளா நின்னு சாதிக்கணும்னு நெனப்பு வரும்போது....
பந்தியில வெக்கிற வாட்டர் பாட்டில் ஓபன் பண்ணவே பக்கத்துல இருக்கறவன் ஹெல்ப் தேவைடா வெண்ணைனு புரிய வைக்குது வாழ்க்கை..!!
- பாபா வெங்கீஷ்

Tuesday, January 31, 2017

"No Thanks Dear"னு Wife சொன்னா...
அதுக்கு...
"நீ ஆணியே புடுங்க வேணாம்னு" அர்த்தம்...
- பாபா வெங்கீஷ்

Saturday, December 31, 2016

கால்ல விழறத கேவலமா நெனச்சா தான் சங்கடமா இருக்கும்...
எக்சைஸ்னு நெனச்சி பாருங்க.. சந்தோஷமா இருக்கும்..!!
ஹி.,ஹி.,ஹி...!!

- பாபா வெங்கீஷ்

Sunday, November 6, 2016

உங்கள யாராவது கேவலமா பேசினா.... அவங்க முன்னாடி வாழ்ந்து காட்டணும்..
அத விட்டுட்டு அவங்க வீட்டு முன்னாடி போய் டான்ஸ் ஆடிட்டே இருக்கக் கூடாது..
- பாபா வெங்கீஷ்

Thursday, September 29, 2016

சொறி புடிச்சவன் கை கூட சும்மா இருக்கும்...
ஆனா... இந்த செல்போன் புடிச்சவன் கையி....
- பாபா வெங்கீஷ்

Saturday, September 10, 2016

Wife புது டிஷ் டிரை பண்ணி சமைச்சி தரும்போது அத கிண்டல் பண்றவன்.. வாழ்நாள் முழுக்க இட்லியும்., உப்புமாவுமே சாப்பிடுவான்..
- பாபா வெங்கீஷ்

Wednesday, August 24, 2016

பணக்கார வூட்ல பொறந்தா...
பணத்தோட அருமை தெரியாது...
பொண்ணா பொறந்தா...
லைக்கோட அருமை தெரியாது...
- பாபா வெங்கீஷ்

Thursday, August 11, 2016

தத்துவத்தை உளறிட்டு இருந்தா..
நீ சாதாரண மனுஷன்..
நீ உளறினதெல்லாம் தத்துவமா மாறிட்டா..
நீ பிரபலம்..
- பாபா வெங்கீஷ்

Monday, August 8, 2016

வாழ்க்கைன்னா... நாலு பேரையாவது சம்பாதிக்கணும்....
அப்பத்தான் போஸ்ட் போட்டா நாலு லைக்காவது தேத்த முடியும்..!!
- பாபா வெங்கீஷ்

Sunday, July 31, 2016

என்னதான் புருஷனும், பொண்டாட்டியும்
ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருந்தாலும்..
பாஸ்வேர்ட் வேற வேற....
- பாபா வெங்கீஷ்

Saturday, July 9, 2016

கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்.. 
செல்வம் பெருகும்..
- ஜோதிட சாஸ்திரம்..
மனைவியின் காலை கணவன் பிடித்து விட்டால்... 
வீட்டில் அமைதி நிலவும்..
- பாபா வெங்கீஷ்..

Saturday, April 30, 2016

" ஸ்டேடஸ் போடறவன் இருக்கற வரை
அதை காப்பி பேஸ்ட் பண்றவன்
இருந்துட்டு தான் இருப்பான்...!! "

- பாபா வெங்கீஷ்..

Tuesday, April 19, 2016

4வது மாடில இருந்து குதிச்சா.. கை கால்
உடைஞ்சிடு்ம்னு குதிச்சு பாத்து தான்
சொல்லணும்னு இ்ல்ல....
அடுத்தவன் உடைச்சிக்கிட்டத பாத்தும் சொல்லலாம்..!!
- பாபா வெங்கீஷ்..

Tuesday, November 17, 2015

ஒருத்தரோட திறமைக்கும்., வளர்ச்சிக்கும்
பிறந்த நேரம் தான் காரணம்னா...
இந்நேரம் நம்மகிட்ட கொறைஞ்சது
பத்தாயிரம் சூப்பர் ஸ்டார்,
இருபதாயிரம் சச்சின் டெண்டுல்கராவது
இருக்கணும்..
- பாபா வெங்கீஷ்..

Saturday, March 28, 2015

" உலகம் உருண்டை.,
பெருமாள் பெரிய ஆளு..!! "
- பாபா வெங்கீஷ்..

Wednesday, January 14, 2015

எதை வேணும்னாலும் சொல்லிட்டு...
கடைசியா ஒரு ஸ்மைலி போடுவது
பின்ஜாக்கிரதை என கொள்க..

- பாபா வெங்கீஷ்..
smile emoticon