Showing posts with label Wife. Show all posts
Showing posts with label Wife. Show all posts

Wednesday, May 3, 2017

" இன்னிக்கு நைட் டின்னர்க்கு என்ன பண்ண போறே..?! "
" இட்லி..!! "
" இ்ட்லி வேணாம்... பூரி பண்ணு... "
" முடியாது... இட்லி தான்... "
( டக்னு என் 7வது அறிவு ஒரு ப்ளான் போட்டது.... )
" டின்னர்க்கு இ்ட்லி பண்ணு... இதுவே என் கட்டளை.. என் கட்டளையே சாசனம்... "
( ஹி., ஹி., ஹி.. பூரியா இருந்தா.. எஞ்சாய் பண்ணிக்கலாம்.. இல்ல இட்லிதான்னா... நம்ம கட்டளைக்கு கட்டுப்பட்டாங்கனு சந்தோஷப்பட்டுக்கலாம்... எப்பூடி..?!
பல ராசதந்திரங்களை கரைத்து குடித்திருக்கிறாயடா வெங்கி....!! )
டின்னர்க்கு போனேன்....
டைனிங் டேபிள்ல இருந்தது...
.
.
.
.
.
உப்புமாஆஆஆஆ....!!!
( நாம வாயை வெச்சிட்டு கம்னு இருந்திருக்கலாமோ..?!! )

Thursday, February 23, 2017

எங்க பசங்க சீல்டு, கப்கள் வெச்சி இருக்கற ஷெல்ப்ல நான் வாங்கின 3 கப்பும் இருக்கு...
பின்ன காலேஜ்ல ஐய்யா பெரிய பேச்சாளர்ல....
ஒரு நாள் என் சின்ன பையன் கோகுல் அவங்க அம்மாகி்ட்ட கேட்டான்...
" அந்த 3 கப் யார் வாங்கினதும்மா...?! "
" உங்க அப்பா வாங்கினது... "
" காசு குடுத்து வாங்கினாரா..?! "
" சே... சே.. அவர் காலேஜ்ல பெரிய ஸ்பீக்கராம்... "
" நிஜமாவா மா..?! "
" இதுல என்னடா டவுட்டு... இப்பவும் அவரு டெய்லி எப்டி கத்தராரு பாத்தேல்ல.. "
# என்னாது..... ஸ்பீக்கர்னா... கத்தறதா..?! அவ்வ்வ்வ்...!!!

Tuesday, February 21, 2017

டின்னர் டைம்....
என் Wife சிக்கன் குழம்பு, சாதம், மிளகு ரசம் செஞ்சிருந்தாங்க...
சாப்பிட ஒக்கந்தோம்...
அப்ப என் Wife...
" குழம்புல உப்பு இருக்கான்னு பாருங்க மாமா.. "
நான் எட்டி பார்த்துட்டு....
" இருக்கற மாறி தெரியலியே... "
( ஹி., ஹி., காமெடி காமெடி... )
" அட சரியா பார்த்துட்டு சொல்லுங்க... "
ஆஹா என்னடா இது தமிழனுக்கு வந்த சோதனைனு என் கண்ணாடி எடுத்து போட்டுக்கிட்டு நல்ல எட்டி பார்த்துட்டு மறுபடியும் சொன்னேன்....
" உப்பு இருக்கற மாறி தெரியல நிர்மலா..... "
கொஞ்ச நேரத்துல சுட சுட சாதம்., கோழி குழம்பும் வந்துச்சு...
நீ கலக்கு வெங்கினு நெனச்சிட்டு சாப்பாட்டை வாயில வச்சா....
உவ்வே.... உப்பே உப்பு...
ஊ.... ஊ.... ஊத்திக்கிச்சா...?!!
# சிக்கன் குழம்புல எல்லாம் காமெடி பண்ணக்கூடாதுனு தெரிஞ்சிக்கிட்ட நாள் இன்று....!!!

Monday, February 13, 2017

சூப்பர் சிங்கர் ப்ரோகிராம் பாக்கறப்ப எல்லாம் நான் அப்டியே சங்கீதத்துல லயிச்சு கை ஆட்டிட்டே தான் பார்ப்பேன்....
எங்க பேமிலிலயே எனக்கு தான் சங்கீத ஞானம் ஜாஸ்தி....
இது என் பையனுக்கு ரொம்ப நாளா டவுட்டு... இன்னிக்கு அவங்க அம்மாகிட்ட கேட்டுட்டான்....
" ஏம்மா... அப்பாவுக்கு நிஜமாவே மியூசிக் தெரியுமா..?! "
" ஏன் கேக்கற..? "
" இல்ல ப்ரோகிராம் பாக்கறப்ப கை ஆட்டிட்டே பாக்கறாரே... "
" அது சும்மாடா.. கொசு ஓட்றாரு... "
" என்னாது.... கொசு ஓட்ரேனா...?!! "
# ம்ஹூம்.... தமிழ்நாட்டுக்கு இன்னொரு SPB ஏன் கெடைக்கலனு இப்பவாச்சும் தெரிஞ்சுதா..?!!

Tuesday, February 7, 2017

Wife-கிட்ட பஞ்ச் டயலாக்...
" நான் ஒரு தடவ முடிவு பண்ணிட்டேன்னா... என் பேச்சை நானே கேக்க மாட்டேன்... "
" என்னா சொன்னீங்க...?! "
" ஹி., ஹி., ஹி.. உன் பேச்சை மட்டும் தான் கேப்பேனு சொல்ல வந்தேம்மா... "
# உஸ்ஸப்பா...!!

Monday, February 6, 2017

எதாவது விசேஷத்துக்கு கெளம்பறப்ப... நான் எந்த சர்ட் போட்டுட்டு வந்தாலும் என் Wife...
" ஐய்யே... இத ஒரு சட்டைனு எடுத்து மாட்டிட்டு வர்றீங்களானு " சொல்லி வேற சர்ட் எடுத்து கொடுப்பாப்ல...
இதுல எதுனா உள்குத்து இருக்குமோ..?!! இது ரொம்ப நாளவே டவுட்டு...
சரி கண்டுபிடிப்போம்...
நேத்து நைட் ஒரு ரிசப்ஷனுக்கு போக வேண்டி இருந்தது...
அதுக்கு என்கிட்ட இருந்ததுலயே... கேவலமான... மிக மிக கேவலமான ஒரு பச்சை சர்ட்டை எடுத்து போட்டுட்டு என் Wife முன்னால போயி நின்னேன்...
என்னை மேலயும் கீழயும் பாத்துட்டு...
" ஓ.. நீங்க ரெடியா... இதோ 5 நிமிஷத்துல நானும் ரெடி.. "
எனக்கு பக்னு இருந்தது...
" நிர்மலா... இந்த சர்ட் இருக்கட்டுமா..? வேற மாத்திக்கட்டுமா..?! "
" இல்லல்ல.. இதே ஓ.கே.. "
( இது ஓ.கேவா..?!! )
" நிஜமா சொல்லு.. இந்த சர்ட் நல்லாவா இருக்கு..? "
" நான் என்னிக்கும் சர்ட் நல்லா இருக்கானுல்லாம் பாக்க மாட்டேன்.. எனக்கு மேட்சிங்கா இருக்கானு மட்டும் தான் பார்ப்பேன்... "
( அடிப்பாவி...!! )
" சரி நான் போட்டு இருக்கறது பச்சை சர்ட்... நீ கட்டியிருக்கறது ரெட் சேரி.. இதுல என்ன மேட்சிங்கு..?!! "
" தோ.. பார்டர்ல ஒரு பச்சை லைன் வர்ல.? "
" கரெக்ட்டு கரெக்ட்டு.. "
# வாழ்க்கைங்கறது ஒரு மெல்லிசான பச்சை கோடு.. அவ்வ்வ்வ்.....

Monday, January 30, 2017

மதியம் ஐஸ்கிரீம் சாப்பிடும் போதே என் Wife...
" ஐஸ்கிரீம் சாப்பிடாதீங்க... உங்களுக்கு ஒத்துக்காது.. "
" டெய்லி ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட்டா ஹார்ட்டுக்கு நல்லதாம்.. அமெரிக்கா சயின்டிஸ்ட் சொல்றாங்க.. "
" ம்க்கும்.. "
இப்ப நைட் இருமல்....
" நான் அப்பவே சொன்னேன்.. கேட்டா தானே... இப்ப பாருங்க இருமலு... "
" ஆக்சுவலி இருமல், சளி, காய்ச்சல் எல்லாம் நல்லதாம்.. "
" இது யாரு சொன்னது..?! "
" கனகராஜ்.. "
" யாரு அது..?! "
" மெடிக்கல் ஸ்டோர் கனகராஜ்.. இருமல் மருந்து வாங்கும் போது சொன்னான்... "

Wednesday, January 11, 2017

என் Wife அவங்க ப்ரெண்ட்கிட்ட போன்ல பேசிட்டு இருந்தாங்க.. எனக்கும் லைட்டா கேட்டுச்சு...
( நான் ஒட்டுக்கேக்கல.. அதுவா காதுல விழுந்தது... ஹி., ஹி., ஹி.. )
" ஆக்சுவலி இவரு தூரத்துல பாக்க தான் காமெடி பீஸ் மாதிரி இருப்பாரு.. பக்கத்துல பாத்தா டெரர்ர்ர்ரா இருப்பாரு டெர்ர்ர்ரா...! "
( யாரு நானு..?!! )
" நிஜமாவா சொல்றே..?! "
" ஆமா... இவர பாத்தா தான் எங்க வீடே பயப்படும்.. "
" ஆங்... நம்ப முடியலியே...! "
" அட நிசம்தான்.... இவர கண்ணாடில பாத்தா இவரே பயப்படுவார்னா பாத்துக்கோயேன்... "
# இந்த தடவை பக்கத்துல சுவரு இல்ல... கட்டில் தான் இருந்தது...
லஞ்ச்ல ப்ளேட்ல சாப்பாட்டை விட வெண்டக்காய் பொரியல் அதிகமா இருந்தது....
" என்ன நிர்மலா இது... இவ்ளோ பொரியல் வெச்சி இருக்கே... "
" வெண்டக்காய் அதிகமா சாப்பிட்டா மூளை வளரும்னு சொல்வாங்க கேள்விட்டு இருக்கீங்கல்ல.. "
" ஓ... புரிஞ்சிடுச்சு... உன் மாமனை ஒரு மிகப்பெரிய ஜீனியஸாக்கி இந்த உலகத்துக்கு காட்ட போற.. ரைட்..?! "
" சே.. சே.. அதெல்லாம் பொய்னு இந்த உலகத்துக்கு காட்டப் போறேன்... "
# டங்... டங்... டங்....
( ஒண்ணுமில்ல சுவரு வந்து என் தலைல இடிச்சிடுச்சு...!! )
நான் லஞ்ச்க்கு வீட்டுக்கு போனப்ப என் Wife எதோ சீரியல் பாத்துட்டு இருந்தாப்ல..
அதுல ஒரு பொண்ணு அவ புருஷன் கால்ல விழுந்து நான் பண்ணினது தப்பு.. என்னை மன்னிச்சிடுங்கனு கெஞ்சிட்டு இருந்தது...
நான் அப்டியே லைட்டா திரும்பி என் Wife-ஐ பாத்தேன்...
" ஏன் அப்டி பாக்கறீங்க..? "
" இல்ல இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு..?!! "
" இது கனவு சீன்ங்க.. "
" அதானே பாத்தேன்...!! "
நைட் 12 மணியிருக்கும்... தூக்கம் வரல... பெட்ல எந்திரிச்சு உக்காந்திருந்தேன்...
டக்னு முழிச்சு பாத்த என் Wife நிர்மலா..
" ஏன்.. இப்டி ஆந்தை மாதிரி கொட்ட கொட்ட முழிச்சிட்டு இருக்கீங்க..?! "
( ஆந்தை இவ்ளோ அழகாவா முழிக்கும்..?!! )
" ஹேங்... தூக்கம் வரல.. "
" நான் வேணா ஒரு டிப்ஸ் குடுக்கவா..?! "
" ம்ம்.. "
" பீரோல என் சேரீஸ் எல்லாம் கன்னாபின்னானு கெடக்கு... அத போயி நீட்டா அடுக்கி வெச்சிட்டு வாங்க... "
என்னாது சேரீஸ அடுக்கணுமா..?!
கைப்புள்ள... இன்னும் ஏன்டா முழிச்சிட்டு இருக்கே... தூங்குங்ர்ர்ர்ர்ர்..!!!

Saturday, November 19, 2016


"நிர்மலா.. இங்க வாயேன்.."
"இருங்க இந்த டிஷ் மட்டும் எப்டி பண்றார்னு பாத்துட்டு வரேன்.."
"தலை வலிக்குது எனக்கு டீ குடேன்"
"கொஞ்ச நேரம் பொறுக்க முடியாதா? எல்லைல ராணுவ வீரர்கள் எல்லாம்..."
"வேண்டாம் வேண்டாம் எனக்கு தலைவலி சரியா போச்சு.."

Sunday, November 6, 2016

என் வண்டி சாவி எங்க வெச்சேன்...?!!
2 நிமிஷத்துக்கு அப்புறம்...
ஆங்... கெடைச்சிடுச்சு...
என் பர்ஸூ..?
1 நிமிஷத்துக்கு அப்புறம்.. அதையும் எடுத்துக்கிட்டேன்...
என் கண்ணாடி..?!!
அத தேடிட்டு இருக்கும் போது என் Wife....
" எதையும் ஒரு எடத்துல வெக்கிறதில்ல.. அப்புறம் காலைல அரக்க பறக்க தேடறது.. "
" ஹி.,ஹி.,ஹி.. வாழ்க்கைன்னா ஒரு தேடல் இருக்கணும்னு என் குருநாதர் சொல்லி இருக்காரு... "
" தேடல் இருக்கலாம். ஆனா இப்டி சதா தேடிட்டே இருக்க கூடாது... "

Monday, October 31, 2016

வீணா ஸ்ரீவாணி வீணை வாசிக்கறது பாத்துட்டு என் Wife கி்ட்ட...
" நிர்மலா.. இந்த மாதிரி எதாவது இன்ஸ்ட்ரூமெண்ட் வாசிக்கணும்னு சின்ன வயசுல இருந்தே எனக்கு ரொம்ப ஆசை..! "
" ஆஹான்...?!! "
" நான் வேணா.... வீணை கத்துக்கட்டுமா..?! "
" வேணாம்ங்க... நீங்க அமெரிக்க ஜனாதிபதி ஆகிடுங்க... "
" அமெரிக்க ஜனாதிபதியா..?! என்ன உளர்ற..?! "
" இல்ல... நீங்க வீணை கத்துக்கறத விட இது ஈஸியா இருக்கும்னு தோணுது...!! "
# கிர்ர்ர்ர்ர்....!!

Sunday, October 16, 2016

என் Wife கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சதே அவங்களோட தன்னடக்கம் தான்...
ஒரு பெரிய எழுத்தாளரோட Wife-ங்கற கர்வம் அவங்ககிட்ட துளி கூட கெடையாது... ஹி.,ஹி.,ஹி...!!
ஹேப்பி பர்த் டே நிர்மலா..

Wednesday, October 5, 2016

என் Wife இந்த பர்த்டேக்கு Soft silk கேட்டாங்கனு நேத்து எடுக்க போயிருந்தோம்...
அங்க ஒரு Sandal கலர் சேலையும், ஒரு Fanta கலர் சேலையும் ஃபைனல்ஸ்ல நின்னது...
என் Wife-க்கு ஒரே குழப்பம்..
ஆஹா இதான் நான் கருத்து சொல்ல சரியான சமயம்...
" நிர்மலா நீ இந்த Sandal கலர் எடுத்துக்கோ... கட்டினா அசப்புல தமன்னா மாதிரியே இருப்பே.. "
" என்னாது.. தமன்னாவா...? உவ்வ்வே...!!! "
" ம்ம்க்கும்.. சரி சரி.. அந்த Fanta கலரே எடுத்துக்கோ.. "
" அந்த Sandal கலரும் நல்லா இருக்கே...? "
( ஆஹா.. ரெண்டு சேலைக்கும் பிட் போடற மாதிரி தெரியுதே... )
" இல்ல நிர்மலா.. அத விட இது உனக்கு சூப்பரா இருக்கும்... "
" அப்படீன்றீங்க..?!! "
கடைசில Fanta கலர் சேலைய பில் போட்டுட்டு வெளியே வந்தோம்..
ஆனா என் Wife மறுபடியும் கடைக்குள்ள போக டிரை பண்ணினா.. நான் கைய பிடிச்சிட்டேன்...
" என்ன நிர்மலா..? "
" இல்ல.. அந்த Sandal கலர் சேலை எவ்ளோனு பாக்கவேயில்லை... பாத்துட்டு வர்றேன்.. "
" அத நாம எடுக்கவேயில்லையே.. எதுக்கு பாத்துகிட்டுனு " சொல்லி நைசா கூட்டிட்டு வந்துட்டேன்..
எனக்கு தான் நல்லா தெரியுமே...
அந்த Sandal கலர் சேலை இத விட 1000 ரூபா அதிகம்னு... ஹி., ஹி., ஹி...!!
# அனைத்து ராசதந்திரங்களையும் கரைத்து குடித்திருக்கிறாயடா வெங்கி..!!!

Monday, September 19, 2016

என் பசங்க ஸ்கூல்ல என்னைய பாக்கணும்னு ஆசைப்பட்டாங்கனு போயிருந்தேன்...
மீட்டிங் முடிஞ்சி வெளியே வரும் போது என் Wife...
" ஏங்க... ரிலையன்ஸ் மால் போகணும்... "
( எனக்கு திக்னு இருந்தது... அது அம்பானி அவன் பொண்டாட்டி ஷாப்பிங் பண்றதுக்காக கட்டி வெச்சதாச்சே...!!! )
" எதுக்கு அங்க..? "
" ஆப்பிள் சைடர் வினிகர் வாங்கணும்.. இங்க தான் கெடைக்கும்... "
" ரொம்ப காஸ்ட்லியா இருக்குமா...? "
" சே., சே... நூறு ரூபாய்க்குள்ள தான் வரும்... "
" அப்ப சரி.... "
ரிலையன்ஸ் மால் போனோம்... உள்ளே என்டரி குடுக்கும் போது எனக்கு ஒரு போன் வந்தது...
" நிர்மலா.. நீ போயி வாங்கி்... பில் பண்ணிட்டு இரு.... வரேன்... "
நான் போனை கன்டினியூ பண்ண... என் Wife உள்ளே போயிட்டாங்க...
நானும் பேசி முடிச்சிட்டு உள்ளே போனா.... என் Wife @ பில்லிங்...
" என்ன நிர்மலா... முடிஞ்சதா..?!! "
" ம்ம்ம்... "
" பில் அமொவ்ன்ட் எவ்ளோ...? "
" 940 ரூபாங்க... "
" என்னாது.... ஒரு வினிகர் 940 ரூபாயா...? "
" சே, சே... அதான் ஸ்டாக் இல்லைனு சொல்லிட்டாங்களே... "
" என்னாது.... ஸ்டாக் இல்லியா...?!!! "
# கேம் ஓவர்...!!

Saturday, September 10, 2016

"நிர்மலா... பாரேன் இந்த அதிசயத்தை... "
" என்ன..?! "
" டயட் இருக்கணும்னு மனசுல நெனச்சதுக்கே.. இளைச்சிட்டேன் போல.. பேன்ட் லூசா இருக்கு.. "
" நல்ல நாளும் அதுவுமா கெட்ட வார்த்தை சொல்லி திட்டிட போறேன்.. அது உங்க அப்பாவோடது.. "
" அப்பாதா... அவ்வ்வ்வ்..!!! "
# டயட் 15-வது நாள்..!!

Tuesday, August 30, 2016

ஆசை ஆசையா ஒரு டீசர்ட் வாங்கினேன்...
என் கெட்ட நேரம் எனக்கு அது டைட்டா இருந்தது..
சரி.. டயட்ல இருந்து.. உடம்பை கொறைச்சிட்டு போடலாம்னு பத்திரமா வெச்சி இருக்கேன்....
5 வருஷமா...
இன்னிக்கு அத என் பீரோல இருந்து எடுத்த என் Wife...
" இந்த டீசர்ட்டை வேற யாருக்காச்சும் குடுத்துடவா...? "
" நோாா..... நான் அத கண்டிப்பா ஒருநாள் போடுவேன்... "
" அப்ப அதுக்கு ஒரே வழி தான் இருக்கு.. "
" என்ன..?! "
" ம்ம்ம்... அத தூக்கி குப்பையில போடுங்க.. "
( சே.. என்ன ஒரு வில்லத்தனம்..! இந்த கருமம் புடிச்ச டீசர்ட் வேற வளர மாட்டேங்குது...)
# டயட் 9-வது நாள்..

Saturday, August 20, 2016

ஒலிம்பிக் மேட்ச் பாத்துட்டு இருந்தோம்...
அப்ப என் Wife...
" இந்தியாவுக்கு ரெண்டு மெடல் வாங்கி குடுத்ததும் பொண்ணுங்க தான் தெரியும்ல.. "
" அவங்களுக்கு டிரைனிங் குடுத்தது ஆம்பளைங்க தான் தெரியும்ல.. "
" டின்னர் சாப்பிடற ஐடியா இருக்கா.? இல்லியா..?! "
" ஹி, ஹி, ஹி... சக்தி இல்லையேல் சிவமில்லை.., சோறு இல்லையேல் சக்தியில்லை..!!! "