Showing posts with label Chat. Show all posts
Showing posts with label Chat. Show all posts

Sunday, October 22, 2017

சாட்டிங்ல ஒரு பொண்ணு...
" வெங்கி... உங்களுக்கு பிடிச்ச கிரிக்கெட் ப்ளேயர் யாரு..?! "
" ம்ம்.. மித்தாலி ராஜ்.. "
" ஐய்யே... ஆம்பள ப்ளேயர்ஸ்ல எல்லாம் புடிக்காதா..?! "
( இதென்னடா வம்பா இருக்கு..?! )
" சரி உனக்கு புடிச்ச ப்ளேயர் யாரு..?! "
" விராட் கோலி..! "
ஹி., ஹி., ஹி.. நோ கமெண்ட்ஸ்...!!
# பெண்ணாதிக்க சம்முவமே...!!

Sunday, September 17, 2017


இந்த போட்டோவ பாத்துட்டு ஒரு பொண்ணு கேட்டுச்சு...
" நிஜமாவே உங்களுக்கு கராத்தே தெரியுமா..?! "
" என்ன இப்டி கேட்டுட்டே... வீட்ல வந்து பாரு... கலர் கலரா பெல்ட் வாங்கி வெச்சி இருக்கேன்... "
" கலர் கலரா இருந்தா அதுக்கு பேரு ரிப்பன் பாஸ்... "
என்னாது... ரிப்பனாஆஆ...?!
சாம்பிள்க்கு கராத்தேல ரெண்டு அடி குடுக்கட்டுமா...?!!
ஊ... ஹூ.. ஹூ.. ஊஊ...!

Friday, August 18, 2017

இன்னிக்கு ஒரு பொண்ணு ப்ரோபைல் பிக்சர் பாத்தேன்... ப்ரோபைல் பிக்சர் சுத்தி ஒரு கட்டம் இருந்துச்சு...
" என்னாங்க அது..?! "
" அது ப்ரோபைல் பிக்சர் கார்ட் (Guard) "
" அப்டின்னா..?! "
" நம்ம ப்ரோபைல் பிக்சர் யாரும் டவுன்லோடு பண்ணவோ, ஸ்கிரீன் ஷாட் எடுக்கவோ முடியாது.. "
" அதனால என்னாகும்..?! "
" ஒரு சேப்டி தான்... நம்ம போட்டோவ யாரும் மிஸ் யூஸ் பண்ண முடியாதுல்ல.. "
" ஓ... அப்ப உங்க டைம்லைன்ல போட்டிருக்கிற மத்த செல்ஃபீஸை எல்லாம் என்ன பண்ண போறீங்க..?! "
" அது... அது வந்து.... "
#எதுக்கு இந்த பெருமைக்கு எருமை மேய்க்கிற வேலை..?!

Friday, June 23, 2017


" வெங்கி.. உங்களுக்கு அர்விந்த்சாமி புடிக்குமா..? "
" புடிக்காது..!! "
" ஏன்.. ஏன்..?! "
" ம்ம்ம்... எல்லா ஒரு ஈகோ ப்ராளம் தான்.. "
" இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியல... "
( கொஞ்சம் ஓவரா தான் போறோமோ..?! போவோம்... போவோம்...!! )
" ஒரு விஷயம் சொல்லவா.. 'தனி ஒருவன்' படத்துல மொதல்ல என்னை தான் கேட்டாங்க... "
" ம்ம்ம்.. அப்புறம்..?! "
" அப்புறம் என்ன நான் பிஸினு சொன்னதால கேரக்டர் கை மாறி போச்சு.. "
" ஓ... நீங்க வரலைனு சொன்னதால தான் தம்பி ராமையாவ புக் பண்ணினாங்களா..?! "
" தம்பி ராமையாவா..?! ஙே...!! "
#வெசம்... வெசம்.. அம்புட்டும் வெசம்...!!

Wednesday, January 11, 2017

சாட்டிங்ல ஒரு பொண்ணு...
" நீங்க சரியான ஆணாதிக்கவாதி.. "
" யாரு... நானு...?! "
" பின்ன பொண்ணுங்க தப்பு பண்ணினா புருஷன் கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கணும்னு போட்டிருக்கீங்க... "
" அது சீரியல்ல வந்தது... "
" அதே மாதிரி ஆம்பளைங்களும் தப்பு பண்ணினா.. பொண்டாட்டி கால்ல விழுந்து மன்னிப்பு கேப்பீங்களா..?!! "
" என்னாது...?!! தப்பு பண்ணினா தான் கால்ல விழணுமா..?! இது தெரியாம போச்சே...!! "
#ஙே...!!!

Saturday, December 31, 2016

இன்னிக்கு IMO-ல இருந்து ஒரு மெசேஜ்...
" Manju just joined IMO "
மஞ்சுவா...?!! யாரு...?!!.
புரோபைல் போட்டோல இருந்த புள்ளய நான் எங்கயும் பாத்ததேயில்லையே..
இந்த புள்ள நம்பர் எப்டி நம்ம போன்ல வந்துச்சு..?!!
சந்தேகம்னு வந்துட்டா உடனே க்ளியர் பண்ணிக்கணும்னு எங்க சீக்ரெட் ஏஜென்ட் டிரைனிங்ல சொல்லி இருக்காங்க...
டக்னு அந்த நம்பர்க்கு வீடியோ கால் போட்டேன்....
வீடியோ ஆன் ஆச்சு....
பாத்தா.....
" அண்ணே.... வெங்கட்ணே... எப்டிணே இருக்கே...?! "
" அடிங்கொய்யாலே... மஞ்சுநாதா... நீயாடா...?! "
# இந்த பொண்ணுங்க போட்டோவ புரோபைல் பிக்சரா வெக்கறவனை ஜெயி்ல்ல பிடிச்சு போட சட்டத்துல எடம் இருக்கா ஆபீசர்...?!

Saturday, November 19, 2016

எப்பவும் அந்த புள்ள FB புரோபைல்ல அதோட போட்டோ தான் வெச்சிருக்கும்..
இன்னிக்கு பாத்தா... பூ படம் இருக்கு...
உடனே அந்த புள்ளய சாட்டிங்ல புடிச்சி..
" ஹேய்... புரோபைல்ல உன் போட்டோவ காணோம்..?! "
" புரோபைல்ல நம்ம போட்டோ வெச்சா டேஞ்சர்னு சொன்னாங்க அதான்.... "
" ஹி., ஹி., ஹி.. யார்க்கு டேஞ்சர்னு நல்லா விசாரிச்சியா...?! "
# BLOCKED
# ஆஹா.. உளறிட்டோமே...!!

Saturday, August 20, 2016

இன்னிக்கு ஒரு பொண்ணு என் புரோபைல் போட்டோ பாத்துட்டு..
" நானும் உங்க கலர் வரணும்னா என்ன பண்ணனும்.?-னு " கேட்டுச்சு..
" நல்லதா ஒரு போட்டோ எடிட்டிங் App இன்ஸ்டால் பண்ணி யூஸ் பண்ணனும்"-னு சொல்லிட்டேன்..
# ப்ளே ஸ்டோர் இருக்க பயமேன்..!!

Wednesday, June 22, 2016

ஒரு பொண்ணு அதோட Wall-ல பழைய போஸ்ட் 
எல்லாம் படிங்கன்னு சொல்லுச்சு..
சரினு படிச்சுட்டு அந்த பொண்ணுகிட்ட...
" உன் கவிதை எல்லாம் சூப்பாரா இருக்கு..!! "
" ஹேய்.. பொய்.. பொய்..!! "
" ஐய்யோ.. அப்ப அது கவித இல்லியா..?
எனக்கு அப்பவே லேசா டவுட்டு..
ஆனா இந்த மங்கு பயதான்.. மச்சி இது
ஒரு வார்த்தைக்கு கீழ ஒரு வார்த்தை இருக்கு..
ஆச்சரிய குறி எல்லாம் வேற இருக்கு.. சத்தியமா
இது கவித தான்னு சொன்னான்..!! "
" நான் கொலைகாரி ஆகறதுக்குள்ள
ஓடி போயிடுங்க ரெண்டு பேரும்.. "
# நாம கவிதை நல்லா இருக்குனு தானே
சொன்னோம்..?! அதுக்கு ஏன் இந்த புள்ள
இவ்ளோ கோவப்படுது..?!!!

Thursday, May 26, 2016

இன்னிக்கு 'சுதா சிவம்'னு ஒரு ப்ரெண்ட் ரிக்வெஸ்ட்
வந்து இருந்தது..

ப்ரோபைல்ல ரோஜாப்பூ படம்..

ஒருவேளை Fake id-யா இருக்குமோனு யோசிச்சேன்..

சே சே இருக்காது.. Fake id-க்கு எல்லாம் ப்ரியா,
கவிதா, அனிதா, ரம்யான்னு தான் பேரு வெப்பாங்க..

சரினு அக்செப்ட் பண்ணிடேன்..

அடுத்து 2-வது நிமிஷம் 'தேங்க்ஸ் வெங்கட்'ன்னு
இன்பாக்ஸ் மெசேஜ்..!

(பார்ர்ரா...!!!!)

நானும் வெல்கம்ன்னு ரிப்ளை போட்டேன்..

"உங்க போஸ்ட் எல்லாம் சூப்பரா இருக்கு..
நீங்க சேலம் தானே..?"

"ஹி., ஹி., ஹி.. நன்றி.. ஆமா.. நீங்க..?"

"மதுரை.. டூ வீலர் மெக்கானிக்கா இருக்கேன்.."

(என்னாது.. இப்ப பொண்ணுங்க எல்லாம்
டூ வீலர் மெக்கானிக் ஆகிட்டாங்களா?
பேரை இன்னொரு தரம் படிச்சிப் பாத்தேன்...)

'சதா சிவம்'னு இருந்தது...!!

Monday, March 21, 2016

இன்னிக்கு சாட்டிங்ல ஒரு பொண்ணுக்கு
கவுன்சிலிங்..!!
" பொண்ணுங்கல்லாம்... பாரதி கண்ட
புதுமைப்பெண் மாதிரி இருக்கணும்..!! "
" இல்லன்னா... "
" இல்லன்னா என்ன.. வர்றவன் போறவன்
எல்லாம் அட்வைஸ் பண்ணுவான்...!! "
" கரெக்ட்டு..! "
" என்ன கரெக்ட்டு..?! "
" இந்தா... பண்ணிட்டீங்கல்ல..!! "
# அடிங்கொய்யாலே..!!

Wednesday, February 24, 2016

ஆபீஸ்ல வெட்டியா உக்காந்து இருந்தேன்...
அப்ப என் மொபைல் ரிங் ஆச்சு..
பாத்தா.. புது நம்பர்...
" ஹலோ... "
" ஹலோ.. நான் கவிதா பேசறேன்..."
" எந்த கவிதா..?!! "
( ஹி., ஹி., ஹி.. எனக்கு மூனு கவிதா தெரியும்ல... )
" காயத்ரி ப்ரெண்ட்.. "
" எந்த காயத்ரி..?!! "
( ஹி., ஹி., ஹி.. எனக்கு நாலு காயத்ரி தெரியும்ல.. )
" மீனாட்சி காலேஜ்.. மதுரை.. காயத்ரி.. "
" மதுரையா..?! நான் மதுரைக்கு வந்ததேயில்லையே.. "
" நீங்க ராகவ் தானே..?!! "
" நோ.. நான் வெங்கட்.. "
" அச்சச்சோ... சாரிங்க.. ராங் நம்பர் பண்ணிட்டேன்
போல இருக்கு.. "
" கூல் கவிதா... இதுக்கு எதுக்கு சாரினு பெரிய
வார்த்தை எல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க.. "
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
( 12 நிமிஷம் கழிச்சு... )
" ஓ.கே வெங்கட்.. Bye..!! "
" Bye கவிதா..!! "
# இப்ப எனக்கு நாலு கவிதா தெரியும்.. ஹி., ஹி., ஹி...!!

Thursday, February 18, 2016

நேத்து நைட் சாட்டிங்ல ஒரு பொண்ணு...

" வெங்கி... மனசொல்லாம் ஒரே குழப்பமா இருக்கு.. 
நைட் தூக்கமே வர மாட்டேங்குது.. தூக்கம் வர்றதுக்கு 
எதாவது ஐடியா குடுங்களேன்... "

நாம தான் ஐடியா குடோன் ஆச்சே.. யாராவது 
ஐடியானு கேட்டுட்டா... சும்மா அள்ளி விடுவோம்ல... 
ஏகப்பட்ட ஐடியாஸ் குடுத்தேன்..

அத கேட்டு அந்த பொண்ணு செம ஹேப்பி..

நைட் 1 மணி :
" ஐடியா வொர்க் அவுட்டாகி அந்த பொண்ணு 
தூங்கி இருக்குமா..?!! "

நைட் 2 மணி :
" ஐடியா வொர்க் அவுட்டாகி அந்த பொண்ணு 
தூங்கி இருக்குமா..?!! "

நைட் 3 மணி :
" ஐடியா வொர்க் அவுட்டாகி அந்த பொண்ணு 
தூங்கி இருக்குமா..?!! "

நைட் 4 மணி :
" ஐடியா வொர்க் அவுட்டாகி அந்த பொண்ணு 
தூங்கி இருக்குமா..?!! "

5 மணி.... என் Wife...

" நைட் தூங்காம.. அங்கே லேப்டாப்ல என்ன 
நோண்டிட்டு இருக்கீங்க...?!! "

" ஹி., ஹி., ஹி. தூக்கம் வரல...! "

# வெளங்கிடும்ல...!!!

Wednesday, February 10, 2016


இன்னிக்கு மதியம் சுதாகிட்ட சாட்டிங்..
" சுதா.. ஒரு சின்ன மேஜிக்.. "
" என்ன மேஜிக்...?! "
" உங்க மொபைல் நம்பர் சொல்லுங்க..
உங்க Date of Birth நான் சொல்றேன்.. "
" அதெப்படி..?!! "
" அதெல்லாம் கேக்கப்படாது... நம்பர்
மட்டும் சொல்லுங்க.. "
" சரி.. 897*****84.. "
" பர்ஸ்ட் நம்பர் 8.., லாஸ்ட் நமபர் 4...
கூட்டிக்கழிச்சு பார்த்தா... உங்க பர்த்டே
செப்டம்பர் 16.. கரெக்ட்டா..? "
" வாவ்... அமேசிங்... எப்படி கண்டுபிடிச்சீங்க..?!! "
( அல்ரெடி புரோபைல் பாத்து நோட் பண்ணி
வெச்சிருக்கோம்ல...!! )
" அதெல்லாம் அப்படித்தான்.... "
" வெங்கட் நீங்க ரியலி கிரேட்... இருங்க
என் ப்ரெண்ட் ஹேமா ஆன்லைன்ல இருக்கா..
அவகிட்ட இத பத்தி சொல்லிட்டு வரேன்...!! "
( ஐ.. ஹேமா நம்பரும் கெடைக்க போவுதா..?!! )
இன்பாக்ஸ் மெசேஜில் ஹேமா...
" ஹாய் வெங்கட்... "
" ஹாய்..!! "
" பெரிய மேஜிசியன் ஆகிட்டீங்களாமாம்..
சுதா சொன்னா.. "
" சே.. சே.. அப்டி எல்லாம் இல்ல..!! "
( திஸ் ஈஸ் ' தன்னடக்கம்..' ப்ளீஸ் நோட்.. )
" அவங்க அப்பா நம்பரை வெச்சே
அவ பர்த்டே கண்டுபிடிச்சிட்டீங்களாம்..!! "
" என்னாது இது அவங்க அப்பா நம்பரா..?!! "
அவ்வ்வ்வ்வ்..!!!
# என்னம்மா... இப்டி பண்றீங்களேம்மா...?!!

Tuesday, September 29, 2015

BSNL ஆபீஸ்ல ரீசார்ஜ் பண்ண போயிருந்தேன்...
அங்கே இருந்த பொண்ணு...
" புது ஆஃபர் வந்து இருக்கு சார்..
BSNL to BSNL நிமிஷத்துக்கு 10 பைசா..
பண்ணிக்கறீங்களா."-னு கேட்டுச்சு..
" எனக்கு BSNL வெச்சிருக்குற ப்ரெண்ட்ஸ்
யாரும் இல்ல.. உங்க நம்பர் வேணா குடுங்க"- னு
கேட்டேன்..
அந்த பொண்ணும் சிரிச்சிக்கிட்டே...
" என்னுது ஏர்செல்னு " சொல்லிடுச்சு..
# இந்த ஏர்செல்ல 10 பைசா ஆஃபர்
எதாவது இருக்கானு பார்க்கணும்..!!!
tongue emoticon tongue emoticon

Saturday, August 22, 2015

நேந்து ஒரு ரசிகை போன் பண்ணி
இருந்தாங்க...
பேசிட்டு இருக்கும் போது...
" சார்.. நீங்க மதுரை வந்தா.. அவசியம்
எங்க Farm House-க்கு வரணும்.. "
" அங்கே என்ன ஸ்பெஷல்....?!! "
" வயல் இருக்கு.., ஒரு அம்பது கோழி இருக்கு.,
150 புறா இருக்கு.. "
" ஹை... அப்ப நான் வந்தா அடிச்சி., போடுவீங்கனு
சொல்லுங்க.. "
" நீங்க வந்து மட்டும் பாருங்க சார்.. எப்படி
கட்டி வெச்சி அடிக்கறோம்னு.. "
" ஙே...!!! "

Tuesday, July 21, 2015


லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கலாம்னு 
ஒரு பொண்ணு கேட்டுச்சு...
tongue emoticon : )

Saturday, July 11, 2015

என் ப்ரெண்ட் ஒரு பொண்ணு
" I Hate My Life "-னு ஸ்டேடஸ்
போட்டு வெச்சி இருந்தாங்க..
அட என்னடா இப்படி போட்டு இருக்கு..?!
ஒருவேளை நம்ம ஸ்டேடஸ் எதுனா
படிச்ச பாதிப்பா இருக்குமோன்னு
எனக்கு வேற பயம்..
சரி கொஞ்சம் கவுன்சிலிங் குடுக்கலாம்னு
போனை போட்டேன்..
( இதை நாங்க ஒரு பொதுசேவையாவே
பண்ணிட்டு வர்றோம்ல.. )
போன் பண்ணி பேசினா...
நான் பேச.. அவங்க பொலம்ப..
அவங்க பொலம்ப... நான் கேக்க..
நான் கேக்க.. அவங்க பொலம்ப...
இப்படியே ஒரு அரைமணி நேரம்....
சே.. என்ன வாழ்க்கைடா இது..
# I Hate My Life..!!!

Monday, July 6, 2015

ஒரு பொண்ணு என்கிட்ட ஆர்கியூ
பண்ணிச்சு...
" நீங்க சரியான ஆணாதிக்கவாதி.. "
" எப்டி சொல்றீங்க..?! "
" உங்க பதிவுகளை படிச்சாலே தெரியுதே... "
" சரி கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..
சமையல் வேலை முடிச்சிட்டு வரேன்..
அப்புறம் சண்டை போடலாம்.. "
" ஙே...!!! "

Wednesday, April 22, 2015

இதுக்குத்தான் காலேஜ் பொண்ணுங்க கூட
எல்லாம் ப்ரெண்ஷிப் வெச்சிக்க கூடாதுனு
சொல்றது..
பொசுக்னு...
" எனக்கு ஒரு ப்ராஜெக்ட் பண்ணி தர்றீங்களா.?-னு "
கேட்டுடுச்சு..!!