Showing posts with label Counter. Show all posts
Showing posts with label Counter. Show all posts

Saturday, August 19, 2017

ஆனந்த் போன் பண்ணியிருந்தான்...
" எங்க மச்சி இருக்க..? "
"ஆஃபீஸ்ல தான், ஏன்..? "
" இல்ல நம்மூர்ல வரலாறு காணாத மழைன்னு FB-ல பாத்தேன், அதான்.."
" வரலாறுல எப்படா நம்மூர்ல மழை பெய்ததுன்னு எழுதுனாங்க, எல்லா மழையுமே வரலாறு காணாத மழை தான்.. "
நீயெல்லாம் சுனாமி வந்தா கூட திருந்த மாட்டேனு போனை வெச்சிட்டான்.. ஹி., ஹி., ஹி...!!!

Wednesday, May 10, 2017


" சிவகாமியாக ஸ்ரீதேவி நடித்திருந்தால் பிரபாஸ்க்கு பெயர் கிடைத்திருக்காது " - ராம் கோபால் வர்மா...
கரெக்டா சொன்னீங்க சார்.... பின்ன எவனும் படம் பாக்கவே போயிருக்க மாட்டான்... அப்புறம் பிரபாஸாவது... பெயர் வாங்கறதாவது...!!!

Tuesday, April 25, 2017

நான் பேங்க்ல இருந்து வெளியே வந்தேன்... அப்ப எதிர்ல ஆனந்த் வந்தான்...
" என்ன வெங்கி.. கேட்டா கையில பணமே இல்லங்கற... ஆனா பேங்க்லயே சுத்திட்டு இருக்க... "
" அட நீ வேற மச்சி... பேங்க் அக்கவுண்டோட ஆதார் கார்ட் ஜாயின் பண்ணனுமாம்ல.. அதுக்கு வந்தேன்... "
" என்னாது... உனக்கு ஆதார் கார்ட் இருக்கா..?! "
" ஆமா... அதுக்கு ஏன்டா இவ்ளோ ஷாக் ஆகற..?! "
" இல்ல மாடுகளுக்கெல்லாம் இனிமே தானே ஆதார் கார்ட் குடுக்க போறதா சொன்னாங்க...?? ஹி., ஹி., ஹி... "
( என்னை கலாய்ச்சிட்டாராமாம்... )
" ஆமா... நீ எங்க இங்க..?! "
" அக்கவுண்ட்ல பணம் கட்ட வந்தேன்... "
" உனக்கு இந்த பேங்க்ல அக்கவுண்ட் இருக்கா...?! "
" ஆமா... ஏன்..?! "
" இல்ல எருமைகளுக்கு எல்லாம் பேங்க அக்கவுண்ட் ஓபன் பண்றதா கவர்மெண்ட் சொல்லலியேனு பாத்தேன்... ஹி., ஹி., ஹி.... "
" கிர்ர்ர்ர்....!! "

Friday, March 17, 2017

" நீங்க எப்ப இருந்து சார் எழுதறீங்க..? "
" சின்ன வயசுல இருந்தே... சுவத்துல கிறுக்கி... "
" ஹைய்யோ.. அத கேக்கல.. இந்த போஸ்டிங் எல்லாம் எப்ப போட ஆரம்பிச்சீங்க..? "
" அது ஜனவரி 2010-ல இருந்து... "
" வாவ்.. அப்ப 7 வருஷமா எழுதறீங்க..? "
" யெஸ் யெஸ் யெஸ்.. "
" 7 வருஷமா ஒரே மாதிரி எழுதறீங்களே.. போர் அடிக்கலியா..? டிப்பரண்ட்டா எதுனா எழுதலாமே..?
( டிப்பரண்ட்டாவா..?!!!! )
" நீங்க எத்தன வருசமா டூவீலர் ஓட்டறீங்க..? "
" ஒரு 20 வருஷமா..? ஏன் கேக்கறீங்க..? "
" இல்ல 20 வருஷமா ஒரே மாதிரி ஓட்றோமேனு.. டிப்பரெண்ட்டா... ஒரு வீல்ல.., தலைகீழா இப்டி எதுன ஓட்ட டிரை பண்ணி இருக்கீங்களா..? "
" ஙே...!!! "
# ஆருகிட்ட..!!!

Wednesday, February 22, 2017

" வேணாம் என் பவர் தெரியாம என்கிட்ட விளையாடறே..?! "
" ஓஹோ.. எங்கே என் செல்போனுக்கு உன் பவரை யூஸ் பண்ணி சார்ஜ் பண்ணு பாக்கலாம்.. தெரிஞ்சிக்கறேன்... "

Monday, February 6, 2017

இந்தாப்பா.... நான் கரெக்டா பேசறேனா..?!!
:P


Tuesday, January 31, 2017

ஹி., ஹி. ஹி.. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...!!


Monday, January 30, 2017

காலைல 8 மணிக்கு ஆனந்த் போன் பண்ணியிருந்தான்..
" ஹலோ வெங்கி... "
"சொல்றா ஆனந்த்... என்ன, மாட்டுப்பொங்கல்க்கு விஷ் பண்ண கூப்பிட்டியாக்கும்..?"
"சே.. சே.. மாட்டுப்பொங்கலுக்கு நான் எருமைங்களுக்கெல்லாம் விஷ் பண்ண மாட்டேன்"
"ஹி., ஹி., ஹி... ஆனா நான் பண்ணுவேனே.... விஷ் யூ ஹேப்பி மாட்டுப்பொங்கல்ரா ஆனந்து..."

Saturday, December 31, 2016

என் ப்ரெண்ட் அருண் தம்பி கல்யாணம்... நானும் என் Wife-ம் போயிருந்தோம்...
அருணும், நானும் பேசிட்டு இருந்தோம்.. கூட எங்க ரெண்டு பேர் Wives-ம் இருந்தாங்க...
அப்ப அருண்.. கொஞ்ச தூரத்துல நின்னுட்டு இருந்த 3 பொண்ணுங்கள காட்டி...
" அவங்கல்லாம் யாருனு தெரியுதா..? "
திரும்பி பாத்தேன்... அட அருணோட அத்தை பொண்ணுங்க.. ஸ்கூல் படிச்சிட்டு இருந்தப்ப பாத்து இருக்கேன்...
" ஹேய்.. உன் அத்தை பொண்ணுங்க.. சுதா, ரேகா, சந்தியா.. "
" இதெல்லாம் கரெக்ட்டா ஞாபகம் வெச்சிக்கோ.."
" ஹி., ஹி..ஹி., எல்லாம் ஒரு ஜெனரல் நாலேட்ஜ் தான்... "
" அவங்க பக்கத்துல ரெண்டு பசங்க நிக்கறாங்கல்ல.. அது..? "
" தெரியலியே.... "
" ஒன்னு சுதாவோட தம்பி., இன்னொன்னு சந்தியாவோட தம்பி.. "
" சரி அதுக்கென்ன..? "
உடனே அந்த நாயி என் Wife-கிட்ட...
" பொண்ணுங்க பேரு மட்டும் தான் தெரிஞ்சி வெச்சி இருக்கான்.. இதுல இருந்து என்ன தெரியுது...? "
என் Wife கண்ணுல லைட்டா ஒரு டெரர் லுக்...
நான் உடனே அருண் Wife-கிட்ட...
" இவன் அந்த பொண்ணுங்கள பத்தி மட்டும் தான் என்கிட்ட பேசி இருக்கானு தெரியுதுல்ல.. "
இப்ப டெரர் லுக் ஷிப்டட் டூ அருண் Wife...
# ஆருகிட்ட...?!!

Thursday, November 24, 2016

என் ப்ரெண்ட் ரவிக்கு போன் பண்ணியிருந்தேன்....
" மச்சி.. பொங்கல் லீவ்ல எங்கயாவது டூர் போலாமா..?!! "
" நோ... அப்ப ஐயம் வெர்ர்ரி பிஸி... "
" லீவ்ல என்னடா பிஸி... "
" அப்ப அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டுக்கு என்னய கூப்பிடுவாங்கல்ல... "
" ஆ...!!! ஆச்சரியமா இருக்கே... "
" இருக்கணும்ல... "
" இல்ல ஜல்லிக்கட்டுன்னா காளை மாட்டை தான் கூப்பிடுவாங்க... இப்பல்லாம் எருமை மாட்டையுமா கூப்பிடறாங்க..?!! "
# ஆருகிட்ட..!!!

அது சரி.... எந்த ATM-ல கூட்டம் கம்மியா இருக்குனு சொல்றதுக்கு எதுனா App இருக்குங்களா...?!!
:P

Tuesday, November 15, 2016

கோவிலுக்கு போறேனு சொன்னா போதும்... உடனே " எனக்கும் சேர்த்து கும்பிட்டுட்டு வா"-னு சொல்றது....
உங்க எல்லோருக்கும் சேர்த்து நானே உண்டியல்ல காசு போட்டுட்டு வர்றேன்.. ஆளுக்கு 1000 ரூபா அக்கவுண்ட்ல போட்டு வுடுங்க....
# சம்போ... சிவசம்போ...!!!

Friday, October 7, 2016

" உங்கள பாத்தா எங்கண்ணன் மாதிரி இருக்கு... அண்ணானு கூப்பிடவா..? "
" உன்னை பாத்தா கூடத்தான் எங்க பெரியம்மா மாதிரி இருக்கு.. நானும் பெரியம்மானு கூப்பிடவா..?!! "
# ஆருகிட்ட...!!

Wednesday, October 5, 2016

ஆபீஸ்ல வெட்டியா உக்காந்து இருந்தேன்.. அப்ப மொபைல் ரிங் ஆச்சு...
" ஹலோ... "
" ஹலோ சார்... நாங்க பஜாஜ் ஃபினான்ஸ்ல இருந்து கால் பண்றோம்.. "
" சொல்லுங்க மேடம்... "
" உங்களுக்கு பிஸினஸ் லோன் வேணுங்களா..?! "
" குடுங்க மேடம்... "
" உங்க பேரு என்னானு தெரிஞ்சிக்கலாங்களா..?! "
" வெங்கட்... "
" என்ன பிஸினஸ் சார் பண்றீங்க..?! "
" நீங்க லோன் குடுத்ததுக்கு அப்புறம் தாங்க மேடம் அத முடிவு பண்ணனும்... "
( டொக்.... )
ஹலோ...ஹலோ... வெச்சிட்டாங்க.... ஹி., ஹி., ஹி...!!
" மச்சி மச்சி இங்க வாயேன்.. "
" என்ன..? "
" லேட்டஸ்ட் நியூஸ் மச்சி.. அப்பல்லோ ஆஸ்பத்திரி உள்ளே என்ன நடக்குது தெரியுமா..? "
" அது இருக்கட்டும்.. இன்னிக்கு உன் லஞ்ச் பாக்ஸ்ல என்ன சாப்பாடு இருக்கு தெரியுமா..? "
" ஹி., ஹி., ஹி.. அது தெரியாதே..!! "
# அடிங் கொய்யாலே..!