Showing posts with label Friends. Show all posts
Showing posts with label Friends. Show all posts

Friday, December 8, 2017

விமல் போன் பண்ணியிருந்தான்...
" வெங்கி... சேலம்ல FM ஆரம்பிக்க போறாங்களாம்.. "
" சரி.. "
" ரேடியோ ஜாக்கி இன்டர்வியூ நடக்குதாம்.. கேள்விபட்டதும் உன் ஞாபகம் தான் வந்தது.. "
( பார்ரா...!!! )
" அதுக்கு..?! "
" உன்கிட்ட தெறமை இருக்கு... நீ அப்ளை பண்ணு.. "
" ஹி., ஹி., ஹி.. தேங்க்ஸ் மச்சி... இருந்தாலும்... "
" என்ன யோசிக்கிறே..?! "
" நாம பிஸினஸ்ல இருக்கோம்.. நமக்கு இதெல்லாம் செட் ஆகுமானு... "
" அதெல்லாம் ஆகும்... உன் தெறமைய இப்டி நாலு செவத்துக்குள்ள வெச்சி வேஸ்ட் பண்ண போறியா..? "
( நம்மகிட்ட ஏகப்பட்ட தெறமை இருக்கே.. அதுல எது இவனை ஹெவியா லைக் பண்ண வெச்சி இருக்கும்..?!! )
" மச்சி.. அது என்ன தெறமைனு நான் தெரிஞ்சிக்கலாமா..?! "
" ம்ம்ம்... மூச்சு விடாம பேசியே எங்கள எல்லாம் கொல்றேல்ல.. அதான்.. "
" கிர்ர்ர்ர்... இரு... உன்னை நேர்ல வந்து கொல்றேன்.. ராஸ்கல்... "

Sunday, September 10, 2017

விநாயகர் சதுர்த்தி அன்னிக்கு என் ப்ரெண்ட் வித்யா வீட்டுக்கு போயிருந்தேன்...
" வெங்கி கொழுகட்டை சாப்பிடறியா..?! "
( டக்னு வேண்டாம்னு சொல்லலாம்னு நெனச்சேன்.. அப்புறம் விநாயகர் கோச்சிட்டார்னா...? )
" ம்ம்... கொண்டு வா.. "
உள்ளே போயி வித்யா ஓரு கிண்ணத்துல எடுத்துட்டு வந்தாப்ல..
" ஏய்... என்னா இது..?! "
" கொழுகட்டை பொங்கல்... "
" அப்டினா..?! "
" ஹி., ஹி., தண்ணி கொஞ்சூண்டு அதிகமா போச்சா.. கொழ கொழனு வந்திருச்சு.. அதான் கொழுகட்டை பொங்கல்.. "
" நல்ல வேளை தாயி.. இன்னும் கொஞ்சம் தண்ணி ஊத்தாம போனே.. அப்புறம் நான் கொழுக்கட்டை கஞ்சி தான் குடிச்சிருக்கணும்.. "
" அதுவும் உள்ள இருக்கே... ஒரு டம்ளர் எடுத்துட்டு வரவா..?! "
" என்னாது...?!!! மீ எஸ்கேப்...!! "

Sunday, September 3, 2017

காலங்காத்தால 8 மணிக்கு சுரேஷ் போன் பண்ணியிருந்தான்...
"வெங்கி... நம்ம கூட படிச்சானே சரவணன்.. அவன் நம்பர் இருக்கா..?"
"இருக்கே... எதுக்கு..?"
"இப்ப சேலத்துல ஒரு கல்யாணத்துல பாத்தேன்.. என்னை பாத்தும் கண்டுக்காம போயிட்டான்... அடையாளம் தெரியல போல இருக்கு..!!"
"கண்டுக்காம போயிட்டானா...? இரு லெப்ட் ரைட் வாங்கிட்டு வரேன்.."
"வேணாம் விடு... நான் கெளம்பிட்டேன்.. வொர்க் இருக்கு..."
"இல்ல... நீ மண்டபத்து வாசல்லயே நில்லு அவனை வந்து உன்னை மீட் பண்ண சொல்றேன்"னு சொல்லிட்டு சரவணனுக்கு போனை போட்டேன்...
"ஹலோ வெங்கி.. சொல்லுடா.."
"கல்யாணத்துல தானே இருக்கே..?"
"ஆமா.. எப்டி தெரியும்..?"
"சுரேசை பாத்தும் பாக்காம போயிட்டியாமாம்..!!"
"ஐய்யயோ... கவனிக்கலியே.."
"சரி இப்ப அவன் மண்டபத்து வாசல்ல தான் நிக்கறான், போயி பாரு..!! "
"பந்தில உக்காந்து இருக்கேன்.. போராடி இடம் புடிச்சேன் சாப்பிட்டு போறேனே.."
"டேய் ப்ரெண்ஷிப் முன்னால சாப்பாடாடா முக்கியம்.. மொதல்ல எந்திரிச்சு போயி அவனை பார்ரா வெண்ணை.."
சரின்னு போனை வெச்சிட்டான்..
8.20.... சுரேஷ்கிட்ட இருந்து போன்..
"என்ன வெங்கி.. அவன் வர்றானா இல்லியா?"
"இன்னும் அந்த நாய் வரலியா? இரு கேக்கறேன்.."
மறுபடியும் சரவணனுக்கு போன்...
"ஏன்டா எரும அவ்ளோ சொல்லியும் திங்க உக்காந்துட்டியா..?"
"டேய் கடுப்ப கெளப்பாதே.. 20 நிமிஷமா மண்டப வாசல்ல தான் நிக்கறேன்.. சுரேஷை காணோம்.."
"சுரேஷை காணோமா..?! ஆமா.. நீ எந்த மண்டபத்துல இருக்கே..?"
"ம்ம்ம்.. KNS மண்டபம்.. பெங்களூர்"
என்னாது... பெங்களூரா..?!! அவ்வ்வ்வ்வ்..

Friday, August 18, 2017

தொண்டையில கிச் கிச்... தொண்டையில கிச் கிச்... என்ன செய்ய...?!
என் ப்ரெண்ட் சுரேஷ் மெடிக்கல்ஸ் போனேன்..
" டேய் தொண்டை கர கரனு இருக்கு.. எதுனா நல்லதா குடு.. "
" இந்தா ஸ்டெப்சில்ஸ்.. "
" ஏ.. இது வேணாம்டா.. மிட்டாய் மாதிரி இனிப்பா இருக்கு.. கொஞ்சம் காரமா எதுனா... "
" அப்ப ஹால்ஸ் வாங்கிக்கோ.. "
" ஹால்ஸ் கூட முன்ன மாதிரி காரமா இல்லியே.... "
" அப்ப விக்ஸ்ல ஜிஞ்சர் வாங்கிக்கோ.. அது காரமா இருக்கும்... "
" விக்ஸா.. அதெல்லாம் கொழந்தைங்க சாப்பிடறதுடா.. வேற எதாவது காரமா.. "
" நீ கேக்கற ரேஞ்க்கு என்கிட்ட ஒன்னு இருக்கு..!! "
" என்ன என்ன...?! "
இரு வரேன்னு போன பக்கி.. கொண்டு வந்து என்கிட்ட குடுத்தது... 

Saturday, July 29, 2017

ரொம்ப வருஷம் கழிச்சு என் ஸ்கூல்மேட் பிரசாத்தை இன்னிக்கு ரோட்ல பாத்தேன்...
அவன் என்னைய பாத்ததும் சொன்னான்....
" ஒரு மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் சென்று விட்டன. இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே.. ஏன்..? ஏன்..? ஏன்...?! "
நான் அவன் முகத்தை உத்து பாத்துட்டு சொன்னேன்....
" ஏன்னா ஆடு பேசாதுடா லூசு..!!! "
நீ இன்னும் திருந்தவேயில்லையானு கேட்டுட்டு போறான்...

Sunday, July 16, 2017

என் க்ளாஸ்மேட் ராதிகா ப்யூட்டி பார்லர் வெச்சி இருக்காப்ல... இன்னிக்கு சூப்பர் மார்கெட்ல பாத்தேன்...
" ஹாய் ராதிகா.. என் முகம் ப்ரைட்டாகணும்.. எதாவது டிப்ஸ் சொல்லேன்... "
( இப்ப நான் என்ன கேட்டுட்டேன்.. எதுக்கு இப்ப நாயை பாக்கற மாதிரி பாக்கறா..?! )
" ம்ம்ம்.. ஒரு டார்ச் வாங்கி மூஞ்சில அடிச்சிக்கோ..!! "
( டார்ச்சா..?! ஒருவேளை நம்ம அழகை பாத்து பொறாமையா இருக்குமோ..?!! )
" வெளையாடாதே... "
" சரி., சரி.. டெய்லி 2 தடவை அலோவெரா பூசு.. "
" அத நான் எங்க தேடறது..?! வேற சொல்லு.. "
" கடலை மாவு, கொஞ்சம் தயிர், எலுமிச்சை ஜூஸ்... "
" ஸ்டாப் ஸ்டாப்.. ரொம்ப கஷ்டமான வேலையா இருக்கும் போல... சிம்பிளா வேற..."
" அப்ப காலைல, சாயந்திரம் ஒரு தக்காளிய கட் பண்ணி மூஞ்சில பூசிக்கோ......"
" என்னாது தக்காளியா..?!! ஆணியே பிடுங்க வேணாம்.. நான் இப்டியே இருந்துட்டு போறேன்... "
" ஏய்.. மூஞ்சி நல்லா இருக்கும்டா.. "
" ம்ம்க்கும்.. மூஞ்சி இருக்கும்.. தக்காளில கை வெச்சா கை இருக்குமானு தெரியலயே... "

Monday, July 10, 2017

காலைல 7.30 மணிக்கு ஆனந்துக்கு போன் பண்ணி இருந்தேன்...
" என்னடா ஆனந்த்... என்ன பண்ணிட்டு இருக்கே..?! "
" வித்யா மார்கெட் போயி இருக்கா... வர்றதுக்குள்ள பாத்ரூம் க்ளின் பண்ணி வைங்கனு சொன்னா.. அதான் பண்ணிட்டு இருக்கேன்... "
" வேலை முடிஞ்சதா..?! "
" இன்னும் இல்ல.... "
" அப்ப நான் கொஞ்ச நேரம் கழிச்சு கால் பண்றேன்.. "
" வேணா வேணா நீ பேசு.. எப்டியும் வேலை முடிக்கலைனு என்னை திட்டதா போறா.. ஆனா அப்ப நீ லைன்ல இருந்தேன்னா... "
" இருந்தா... நீ எஸ்கேப் ஆகிடுவியா..?! "
" சே., சே... நீ கால் பண்ணினதால தான் நான் வேலை முடிக்கலைனு உன்னையும் சேர்த்து திட்டுவா... எனக்கு ஒரு கம்பெனிக்கு.. ஹி., ஹி., ஹி..!! "
அட பிக்காலி பயலே...!!!

Saturday, June 24, 2017

Smule App டவுன்லோடிட்டேன்...
சரி ஒரு பாட்டு பாடலாம்னு தேடினப்ப..
" காட்டுக்குயிலு மனசுக்குள்ள.... " பாட்டு கண்ணுல பட்டது...
இத SPB வாய்ஸ்ல பாடலாமா..? ஜேசுதாஸ் வாய்ஸ்ல பாடலாமானு யோசிச்சிட்டு இருந்தேன்..
அத பாத்துட்டு மங்கு...
" என்னா மச்சி பண்ணிட்டு இருக்கே...?! "
" காட்டுக்குயிலு சாங்... எந்த வாய்ஸ்ல பாடலாம்னு திங்க் பண்ணிட்டு இருக்கேன்.. "
" நீ எந்த வாய்ஸ்ல பாடினாலும் அது காட்டெரும வாய்ஸ்ல தான் கேக்க போவுது... பாடி தொலை... "
" அடேய்... என்னை பத்தி தெரியாம பேசாதே..."
" எங்கே சொல்லு.. அதையும் தெரிஞ்சிக்கறேன்... "
" என் ப்ளட் குரூப்பே ABS பாஸிடீவ் டா வெண்ணை... "
" என்னா மச்சி எதோ ABT பார்சல் சர்வீீஸ் மாதிரி சொல்றே...?! AB பாஸிடீவ் தெரியும்.. அதென்ன ABS பாஸிடீவ்.?! S-னா....?! "
" ஹி., ஹி., ஹி.. S-னா சங்கீதம்... சங்கீதம் என் ப்ளட்லயே கலந்து இருக்கு மச்சி..!! "
துப்பிட்டு போயிட்டான்... ஞான சூனியம்...!!!
#லா லா லா... லா... லா லா லா...!

Monday, June 5, 2017

வீட்ல மாட்டியிருந்த பெயிண்டிங்ஸ் பாத்துட்டு அருண் கேட்டான்....
" இதெல்லாம் எங்க வாங்கினே..?! "
" வாங்கினேனா...?! ஹே.. ஹே... என்னை பத்தி உனக்கு தெரில... நான்ல்லாம் ப்ரஷ கைல எடுத்தேன்னா.... "
" எடுத்தா... பல்லு வெளக்காம கீழ வெக்கமாட்ட அதானே...?! "
பல்லு வெளக்கற பிரஷ்ஷா..?!
ஒரு வேள நம்மள பாத்து பொறாமையா இருக்குமோ.!?
இருக்கும்.. இருக்கும்...!!

Wednesday, May 17, 2017

காலைல என் ப்ரெண்ட் குமார் வீட்டுக்கு வந்திருந்தான்..
ஹால்ல உக்காந்து அமெரிக்க பொருளாதாரத்தை பத்தி பேசிட்டு இருந்தோம்..
அப்ப என் சின்ன பையன் கோகுல் ஓடி வந்தான்..
" கோகுல் எங்கே போறே..? "
" அம்மா.. பாட்டி வீட்டுக்கு போக சொன்னாங்கப்பா.. அதான் கெளம்பிட்டேன்.. "
ஒரு ஐடியா வந்தது...
" கோகுல் இங்கே வா.. "
" என்னப்பா..? "
உடனே குமார்கிட்ட திரும்பி...
" இப்ப ஒரு டெமோ காட்றேன் பாருனு " சொல்லிட்டு கோகுல்கிட்ட..
" கோகுல்... இப்ப அம்மா உன்னை பாட்டி வீட்டுக்கு போனு சொல்றாங்க.. நான் போகக்கூடாதுனு சொல்றேன்.. நீ யார் பேச்சை கேப்பே..? "
" அம்மா பேச்சை தான்..!! "
குமார் நமுட்டு சிரிப்பு சிரிச்சான்... நான் விடலியே.. மறுபடியும்...
" சரி.. அம்மா உன்னை பாட்டி வீட்டுக்கு போகக்கூடாதுனு சொல்றாங்க... நான் போனு சொல்றேன்.. இப்ப நீ யார் பேச்சை கேப்பே..? "
" அம்மா பேச்சை தான்..!! "
சொல்லிட்டு ஓடிட்டான்...
நான் குமாரை பாத்து...
" மச்சி.. இதுல இருந்து உனக்கு என்னா தெரியுது..? "
" ம்ம்ம்.. நீ ஒரு டம்மி பீஸ்னு தெரியுது..!! "
" அடேய்.. தாய்குலம் சொல்ற பேச்சை கேட்டு நடந்துக்கணும்னு பசங்களுக்கு சொல்லி சொல்லி வளர்த்திருக்கேனு தெரியல..? "
" தெரியல.. "
" தெரியலியா..? சரி சரி விடு.. வா... நாம அமெரிக்க பொருளாதாரத்தை பத்தியே பேசுவோம்..!!! "

என்னோட டியோடரண்ட் " El Paso "
ஆனா 2016-ல துபாய் போனப்ப... என் ப்ரெண்ட் ஜனா வீட்ல " Dove Original " இருந்தது..
யூஸ் பண்ணி பாத்தேன்.. சூப்பரா இருந்தது... வர்றப்ப துபாய்ல 5 டியோ வாங்கிட்டு வந்துட்டேன்..
அது ஒரு 6 மாசம் வந்தது.. அதுக்கப்புறம் நான் எங்கே ஷாப்பிங் போனாலும் அந்த டியோவை தேடி தேடி பார்ப்பேன்.. கண்ணுலயே சிக்காது..
இப்ப கொச்சி லூலூ மால் போனோம்.. அது அப்டியே துபாய்ல இருக்கற மால் மாதிரியே இருந்தது.. ஆஹா அப்ப இங்கே இருக்கும்லனு போயி தேடினேன்.....
ஹூம்.. இங்கேயும் இல்ல...
சரினு ஜனாவுக்கு கால் பண்ணினேன்...
" ஜனா.. நீ ஊருக்கு வர்றப்ப... " Dove Original " டியோ எனக்கு 6 வாங்கிட்டு வா.. "
" ஏன் அங்கே கிடைக்கலியா..? "
" லூலூ மால்லயே தேடிப்பாத்துட்டேன்.. இங்கே இல்ல.. "
" லூலூலயே இல்லியா..? ஆமா எங்கே தேடினே..? "
" மென்ஸ் டியோ செக்சன்ல.. "
" அப்ப உமன்ஸ் செக்சன்ல போயி பாரு.. "
" உமன்ஸ்லயா...? "
" ம்ம்ம்.. நீ துபாய் வந்தப்ப யூஸ் பண்ணினது.. உன் தங்கச்சி யூஸ் பண்ற டியோடரண்ட்..!! "
" தங்கச்சிதா அவ்வ்வ்வ்வ்வ்...!!! "

Sunday, April 16, 2017

நடு ராத்திரி 6.30 மணிக்கு ஒரு மிஸ்டு கால்... நான் அத விடியகாலை 8.45-க்கு தான் பாத்தேன்...
என் ப்ரெண்ட் சசிகுமார் தான் கூப்பிட்டு இருந்தான்.. அவன் TV Ad எடுத்துட்டு இருக்கான்..
ஒரு வேள நம்மள எதுனா விளம்பரத்துல புக் பண்ண கால் பண்ணியிருப்பானோ..?!!
என்ன விளம்பரமா இருக்கும்..?
சோப்பு வெளம்பரம்.? டியோடரண்ட்.? இல்ல ரேமாண்ட்ஸ் மாதிரி எதுனா கோட்டு சூட்டு வெளம்பரம்..?
எதா இருந்தாலும் நாம தான் பர்பெக்ட்டா சூட் ஆவோமே... ம்ம்... அப்படியே கூட தம்முவவும் புக் பண்ண சொல்லிடலாம்...
அவனுக்கு கால் பண்ணினேன்..
"சொல்லு சசி... எந்த வெளம்பரத்துல நான் நடிக்கணும்..?"
"என்னாது நீ நடிக்கணுமா..?!!"
"பின்ன... வெளம்பர கம்பெனில வேல பாக்கறவன் கால் பண்ணினா.. என்ன நெனக்கிறதாம்..?"
" நான் பண்ணல... என் மொபைல் வாங்கி தங்கராஜ் தான் உனக்கு டிரை பண்ணினான்... "
"எந்த தங்கராஜ் மச்சி..?"
"அதான்டா நம்ம கூட படிச்சிட்டு இப்ப டாக்டரா இருக்கானே.. சைக்யாட்ரிஸ்ட்..!! "
" சைக்யாட்ரிஸ்ட்டா...?! அவ்வ்வ்வ்...!! "
#எதுனா மாத்திரைக்கு ஸ்பெல்லிங் கேக்கவா இருக்குமோ..?!!

Friday, April 7, 2017

ரொம்ப வருஷம் கழிச்சு இன்னிக்கு வழில என் ப்ரெண்ட் வினோத்தை பாத்தேன்...
நாங்க ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல்ல தான் படிச்சோம்... பட் செக்சன் தான் வேற வேற....
மீ 10 B... அவன் 10 A...
பேச்சு ஃபேஸ்புக் பத்தி திரும்பிச்சு....
" வினோ... நம்ம கூட படிச்ச தேன்மொழி ஃபேஸ்புக்ல இருக்கா..?! "
( தேன்மொழியும் இவனும் ஒரே ஊர்க்காரங்க... )
" தெர்ல... தேன்மொழி கூட கான்டாக்டே இல்ல... "
" ஓ மை காட்...!! "
" நீயேன்டா இவ்ளோ ஃபீல் பண்றே...?! "
" ஹி., ஹி., ஹி... நீங்க ரெண்டு பேரும் பெஸ்ட் ப்ரெண்ட்ஸாச்சே... அதான்... "
" அடங்கு.. அடிக்கடி என்னை பாக்க நீ என் கிளாஸ்க்கு வரும்போதே எனக்கு எல்லாம் தெரியும்... "
" அடப்பாவி.. இப்டிதான் தேன்மொழிகிட்ட என் இமேஜை டேமேஜ் பண்ணி வெச்சிருக்கியா...? "
" இல்லினா மட்டும் இமேஜ் கொடிகட்டி பறந்தாக்கும்... "
" ப்ளடி இடியட்... இனிமே என்கூட பேசாதே.. "
" சரி சரி அப்ப கெளம்பு... "
" இரு.... கெளம்பரத்துக்கு முன்னாடி ஒண்ணே ஒண்ணு கேட்டுட்டு போறேன்... "
" என்ன...?! "
" நம்ம கவிதா ஃபேஸ்புக்ல இருக்கா..?! ஹி., ஹி., ஹி...!!! "
" அடிங்...!! "

Tuesday, April 4, 2017

ரெண்டு நாளா தொண்டை சரியில்ல... என் வாய்ஸ் எனக்கே டிப்பரண்ட்டா இருந்தது...
சாதாரணமா பேசினா SPB மாதிரி இருக்கும்... தொண்டை கட்டினதால உதித் நாராயண் வாய்ஸா மாறிடுச்சு....
இன்னிக்கு காலைல எந்திரிச்சதும் நம்ம ஒரிஜினல் வாய்ஸ் வந்திடுச்சானு கன்பார்ம் பண்ணிக்க என் ப்ரெண்ட் ஆனந்த போயி பாத்தேன்.....
" மச்சி... என் வாய்ஸ் SPB மாதிரி இருக்கா...?! "
" SPB- ஆ...?! இதெல்லாம் உனக்கே ஓவராயில்ல...?! "
" நான் பேசறதால உனக்கு தெரியலைனு நெனக்கிறேன்.. இரு மண்ணில் இந்த காதல் அன்றி பாட்டு பாடறேன்... "
" என்னாது.... பாட்டு பாட போறியா..?! "
" ம்ம்.. அதுவும் மூச்சு விடாம பாட போறேன்... "
" மூச்சு விடாமயா... வேணாம் மச்சி... ரிஸ்க்கு... மூச்சு நின்னுட போவுது.. "
" அதெல்லாம் ஒண்ணும் ஆகாது... நெறைய தடவ ப்ராக்டீஸ் பண்ணியிருக்கேன்... "
" அடேய்ய் எரும.. மூச்சு நின்னுட போவுதுனு சொன்னது உனக்கில்ல.., எனக்கு.... "
சே... சுத்த ஞான சூனியமா இருப்பானோ..!!!

Tuesday, March 28, 2017

காலைல ஆஸ்திரேலியால இருந்து என் ப்ரெண்ட் தீபக் கால் பண்ணியிருந்தான்...
" வெங்கி.. வாட்ஸ்அப்ல வீடியோ கால் வா... "
" இப்ப வேணாம் மச்சி.. நான் கேவலமா இருக்கேன்.. "
" நீ அழகா இருக்கும்போது தான் பேசணும்னா... நான் உன்கிட்ட எப்பவுமே பேச முடியாதே மச்சி.. ஹி., ஹி... "
#ஙே..!!
" மச்சி நீ Wife-க்கு பயப்படுவேனு சொன்னாங்க..?! "
( இத எல்லாம் எவன் சொல்றான்...?! சரி சரி சமாளிப்போம்... )
" சே... சே.... "
" ஹி., ஹி., ஹி.. நம்பிட்டேன்... "
" மச்சி... இப்ப ஒரு உதாரணம் சொல்றேன் கேளேன்... "
" சொல்லு.... "
" அம்மாம் பெரிய யானை தம்மாதூண்டு பாகன் சொல்றபடி கேக்குதுன்னா.. அதுக்கு பயம் காரணமில்ல, அன்புக்கு கட்டுப்படறது....!! "
" உதாரணம் மேட்ச் ஆகலியே.... "
" ஆகலியா..? "
" ம்ம்ம்... நீ வேணா இந்த கொரங்கு., கொரங்காட்டினு சொல்லிக்கோயேன்... "
என்னாது கொரங்கா..?! அடிங் கொய்யாலே...!

Friday, February 24, 2017

டீசர்ட் எடுக்கலாம்னு கடைக்கு போனேன்....
அங்க என் ப்ரெண்ட் ஆனந்த் இருந்தான்...
" மச்சி... என்ன துணிக்கடையில சுத்திட்டு இருக்க..? "
" வர்ற புதன்கிழமை எங்க Anniversary... அன்னிக்கு மேட்சிங்கா டிரஸ் பண்ணனுமாம்ல... "
" ஓஹோ... "
" வீட்ல வித்யாகிட்ட பச்சை கலர்ல ஒரு புது சேலை இருக்கு.. அதனால எனக்கு பச்சை கலர்ல சர்ட் எடுக்க கூட்டிட்டு வந்திருக்கா... "
" பார்ரா.... நீ கலக்கு மச்சி "னு சொல்லிட்டு நான் டீசர்ட் பாக்க போயிட்டேன்....
எடுத்துட்டு பில் பண்ண வந்தா.. பில் செக்சன்ல ஆனந்தும், வித்யாவும்...
" என்னா மச்சி... பச்சை சட்டை வாங்கிட்டியா..?! "
" ம்ஹூம்.. ப்ளூ கலர் சேலை தான் வாங்கியிருக்கா.. "
நான் டக்னு வித்யாவ பாத்து கேட்டேன்....
" அப்ப மேட்சிங்கு...?!! "
வித்யா சிரிச்சிட்டே சொல்லிச்சு...
" இவர்கிட்ட வீட்ல ப்ளூ கலர்ல ஒரு புது சட்டை போடாம அப்டியே இருக்குண்ணா... "
( ஆஹா.... என்னா டிரிக்ஸா வேலை பாக்கறாங்கடா... )
ஆனந்த் என் காதுகிட்ட வந்து சொன்னான்....
" அது கேவலமா இருக்குனு தான்டா போடாம வெச்சி இருக்கேன்... "
# மேட்சிங் மேட்சிங்... ஹி., ஹி., ஹி..!!

Friday, February 3, 2017

ரெண்டு நாள் முன்னால என் ப்ரண்ட் ஜெகன் வீட்டுக்கு போயிருந்தேன்..
அப்ப ஜெகன் அம்மா.. அவங்க தோட்டத்துல வெளைஞ்சதுனு சொல்லி ஒரு வாழைப்பழ தார் குடுத்தாங்க...
அது இன்னிக்கு தான் பழுத்தது.. செம்ம டேஸ்ட்டு..
உடனே ஜெகனுக்கு போனை போட்டேன்..
"டேய்.. உங்க தோட்டத்து வாழைப்பழம் சூப்பர் டேஸ்ட்டா.."
"தேங்க்ஸ்டா.."
"நான் சொன்னத மறக்காம அம்மாகிட்ட சொல்லிடு.. அப்பதான் இன்னொரு நாள் வாழைப்பழம் தருவாங்க.."
"சொல்லலைன்னாலும் தருவாங்கடா..."
"அப்டியா..?"
"ஆமா.. அம்மா எப்ப கொரங்கு பாத்தாலும் வாழைப்பழம், பொரின்னு எதாவது குடுத்துட்டே தான் இருப்பாங்க.."
# க்ர்ர்ர்ர்.. க்ர்ர்ர்ர்..

Wednesday, January 11, 2017

தினேஷ்கிட்ட பேசிட்டு இருக்கும்போது சொன்னான்...
" நானெல்லாம் எந்த பொண்ணுக்கும் பயப்பட மாட்டேன்.. "
" மச்சி.. அப்ப உன் Wife-க்கு...?!! "
" அவ எல்லாம் பொண்ணா மச்சி..?!! "
# ரொம்ப பாதிக்கப்பட்டு இருப்பானோ..?!!

Saturday, December 31, 2016

என் ப்ரெண்ட் ஜெகன் பெங்களூர்ல இருந்து வந்து இருக்கான்..
அவனை பாக்க போனப்பவே நைட் 9 மணி..
பேசிட்டு இருந்தோம்.. மணி 9.45.. அப்ப ஜெகன்...
" டைம் ஆகலியா..? வீட்ல தேட மாட்டாங்களா..? "
" போன் வரும்டா... அப்ப போலாம்... "
மணி 10.30...
" டேய் 10.30 டா... உனக்கு ஒன்னும் பிரச்னை இல்லியா...? "
" நிர்மலா போன் பண்ணினப்புறம் போனா போதும்டா... "
( ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்றாங்க.. ஃப்ரீயா பேசிட்டு வரட்டும்னு நெனக்கிறா போல... )
கொஞ்ச நேரம் கழிச்சு..
" டேய்... இப்ப மணி என்னடா..? "
" 11.15... "
" 11.15-ஆ.. ஏன் இன்னும் நிர்மலா போனே பண்ணல...? "
" எதுக்கும் மொபைல் எடுத்து பாருடா... மிஸ்டு கால் இருக்க போவுது..? "
அப்டி இருக்க சான்ஸ் இல்லியேனு சொல்லிட்டு என் மொபைல் எடுத்து பாத்தேன்....
ஷாக் ஆகிட்டேன்....
" என்னடா... மிஸ்டு காலா..? "
" இல்ல... மொபைல் சுவிட்ச் ஆஃப் ஆகியிருக்குடா... அவ்வ்வ்வ்....!! "
# ஆஃப்... ஆப்பு..