Showing posts with label Kids School. Show all posts
Showing posts with label Kids School. Show all posts

Tuesday, September 26, 2017

இன்னிக்கு என் பையனோட ஸ்கூல்ல மீட்டிங்னு வர சொல்லி இருக்காங்க...
போன வாரமே இந்த மீட்டிங் வெச்சாங்க.. ஆனா பாதி பேர் கூட வரலியாம்... (ஹி., ஹி,. ஹி.. நான் கூட போகல)
So.. இந்த மீட்டிங் கம்பல்சரினு சொல்லிட்டாங்க...
இப்ப மீட்டிங் நடந்துட்டு இருக்கு...
ஆனா பாத்தீங்கன்னா... மீட்டிங்ல பாதி பேரன்ட்ஸ் தூங்கிட்டு இருக்காங்க..
அடப்பாவிகளா... இவ்ளோ கஷ்டப்பட்டு மீட்டிங் வெச்சி... மிரட்டி அட்டென்ட் பண்ண வெச்சா இங்க வந்து இப்படியா தூங்குவீங்க..?!
இதுக்கு பேசாம என்னைய மாதிரி மொபைல்ல சினிமாவாச்சும் பாக்கலாம்ல....
# வாட்சிங் " கூட்டத்தில் ஒருத்தன்..!! "
ஹி., ஹி., ஹி...!!!

Friday, March 17, 2017


ஸ்கூல்ல என் பையன் Heritage Club-க்கு பிரசிடெண்ட்டா இருக்கான்... அதுக்கு தனியா கோட் எல்லாம் குடுத்து இருக்காங்க...
இன்னிக்கு போட்டோ ஷூட்டாம்... கோட் மறந்துட்டு போயிட்டான்...
காலைல அவங்க மிஸ்ஸூ போன்....
" சார் 9.30- க்குள்ள கோட் கொண்டு வந்து குடுங்க.. "
மணி பாத்தேன் அப்பவே 9.15.
" மேடம்.. மைக்கேல் ஷூமேக்கரால கூட இந்த டிராபிக்ல 9.30-க்கு வர முடியாது.... "
" ஹா., ஹா.. சரி முடிஞ்சளவு சீக்கிரமா வாங்க சார்... "
ஐடியா....!! இங்க இருந்து 25 கி.மீ... வண்டிய 140 கி.மீ வேகத்துல ஓட்டினா...
11 நிமிஷத்துல ஸ்கூலுக்கு ரீச் ஆகிடலாம்... என் வண்டிய (Hero Pleasure) பாத்தேன்..
ஹோ காட்... இந்த வண்டில 140 கி.மீ ஸ்பீடே இல்லியே...!!
சத்யசோதனை....!!
எப்டியோ 9.55-க்கு ஸ்கூல் ரீச் ஆகிட்டேன்....
ஆனா வாட்ச்மேன் வண்டிய வெளியே நிறுத்திட்டு உள்ளே போங்கனு சொல்லிட்டாரு..
ஹைய்யோ.... அது அரை கி.மீ நடந்து போகணுமே...
அர்ஜென்ட் மேட்டர்னு சொல்லி பாத்தேன்... ஒத்துக்கல...
ம்ம்.... வண்டிய வெளியே நிறுத்திட்டு கேட்கிட்ட போனா... அப்ப ஒரு Lady ஸ்கூட்டில வந்தாங்க...
அவங்களும் கோட் எடுத்துட்டு வந்திருப்பாங்க போல...
ஆனா வாட்ச்மேன் அந்த வண்டிய உள்ளே விட்டு்ட்டாரு...
பார்ரா....
நான் அவரை பாத்தேன்... அவர் என்கி்ட்ட எதோ சொல்ல வந்தாரு...
" வாட்ச்மேன்... நீங்க பண்ணினது ரொம்ப கரெக்ட்... தாய்குலத்துக்கு இப்டி தான் ஹெல்ப் பண்ணனும்.. ஐ லைக் இ்ட்... "
" சார்... அவங்க எங்க கரஸ்பான்டன்ட் மேடம்... "
#கரஸ்பான்டன்டா இருந்தாலும் தாய்குலம் தானே..?!! ஹி., ஹி., ஹி..

Saturday, December 31, 2016


என் பையன் ஸ்கூல்ல சைன்ஸ் எக்ஸிபிசனாம்..
இவன் குப்பையில இருந்து கரெண்ட் எடு்க்கற மிஷின் கண்டுபிடிக்க போறானாம்...
அது சம்பந்தமா என்கிட்ட ஐடியா கேட்ட போது க்ளிக்கியது...

Wednesday, November 30, 2016

இன்னிக்கு மதியம் என் பையன் ஸ்கூல்ல இருந்து போன் வந்தது...
" ஹலோ நாங்க ஸ்கூல்ல இருந்து பேசறோம்.. "
" சொல்லுங்க மேடம்.. "
" சூர்யாவோட ஃபாதரா..? "
" ஆமா.. "
" நான் சூர்யாவோட கிளாஸ் மிஸ் பேசறேன்.. "
( என்னாது மிஸ்ஸா..!!! )
" மிஸ்., மிஸ் அவன் வேணும்னே பண்ணியிருக்க மாட்டான்.. கொஞ்சம் துருதுருனு இருப்பான்.. அவ்ளோ தான்.. "
" சார்.. சொல்றதை கேளுங்க.. "
" நீங்க ஒண்ணும் சொல்லவே வேணாம் மிஸ்.. இந்த ஒரு தடவை மட்டும் எக்ஸ்யூஸ் பண்ணிக்குங்க.. நான் அவனை கண்டிச்சு வெக்கிறேன்.. "
" அப்டி எல்லாம்... "
" இல்ல மிஸ்... நீங்க முடியாதுனு சொல்லக்கூடாது.. பெரிய மனசு பண்ணி மன்னிச்சி விட்டுடுங்க.. "
" சார்... நீங்க கொஞ்சம் பெரிய மனசு பண்ணி நான் சொல்றதை கேக்கறீங்களா..? "
" சரி சரி சொல்லுங்க... "
" நாளைக்கு சூர்யாவை காலைல 7 மணிக்கு ஸ்கூல்ல கொண்டு வந்து விடணும்.. ஃபீல்ட் டிரிப் போறோம்.. "
( அவ்ளோ தானா..?! )
" ஓ.கே., மிஸ்..!! "
இதுக்கெல்லாமா ஸ்கூல்ல போன் பண்ணுவாங்க....?!!
நானல்லாம் படிக்கிற காலத்துல எங்க மிஸ் எங்கப்பாவுக்கு போன் பண்ணினா...
சரி சரி.. அதெல்லாம் இப்ப எதுக்கு...?!! லூஸ்ல விடுங்க...

Saturday, November 19, 2016

" ரூபாய் நோட்டுகளில் கையெழுத்திடுவேன் " - விராட் கோலி
ஹி., ஹி., ஹி...இதெல்லாம் நாங்க 7வது படிக்கும் போதே பண்ணிட்டோம்..!!!
அதுல ஒரு நோட்டு பிரின்சிபால் கையில சிக்கி என்னை தனியா கூப்பிட்டு பாராட்டினது தனி கதை..
:)

Tuesday, November 15, 2016

என் பையன் ஸ்கூல்ல சில்ட்ரன்ஸ் டே ஃபங்சன்... பாக்க போயி இருந்தேன்..
ஆடிடோரியம்ல ஃபங்சன்...
அங்க போனா... ஸ்டுடண்ட்ஸ் மட்டும் தான் கீழே.. பேரன்ட்ஸ்க்கு பால்கனில இடம் அலாட் பண்ணியிருக்குனு சொன்னாங்க...
மாடி ஏற போனா... ஒரு மிஸ்ஸு நின்னுட்டு இருந்தாங்க...
" ஹலோ... பால்கனி பேரன்ட்ஸ் மட்டும் தான்.. "
( ஹய்யோ.. ஹய்யோ... இந்த மிஸ்ஸு என்னய ஸ்டூடண்ட்னு நெனச்சிட்டாங்க போல... )
" மிஸ்... நானும் பேரன்ட் தான்.. டீசர்ட் போட்டு இருக்கறதால ஸ்டூடண்ட்னு நெனச்சிட்டீங்களாக்கும்...?!! "
" ஹி., ஹி., ஹி... சாரி சார்.. கேமரா வெச்சி இருக்கறதால கேமராமேன்னு நெனச்சிட்டேன்..."
# தூம் தத்தா...!!!

Monday, September 19, 2016

என் பையன் டைரில அவன் மிஸ் என்னமோ இங்கிலீஸ்ல எழுதி இருந்தாங்க..
படிச்சி பாத்தேன்.. புரியல..
ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டில படிச்ச எனக்கே புரியலைன்னா.. பசங்களுக்கு எப்டி புரியும்..?!
( ஐ திங்க்.. திஸ் ஈஸ் அமெரிக்கன் இங்கிலீஷ்.. )
உடனே பேனா எடுத்து டைரில எழுதினேன்..
'ஒரு மொழிங்கறது மத்தவங்கிட்ட நம்ம கருத்தை சொல்ல ஒரு கருவி தான்.. அது ஒண்ணும் அறிவு இல்ல... உங்க திறமைய டைரில எல்லாம் காட்டாதீங்க'ன்னு எழுதினேன்... அதுவும் இங்கிலீஷ்ல.. ஹி, ஹி, ஹி..
சாயந்திரம் பையன் வந்ததும் டைரிய எடுத்து பாத்தேன்..
அவங்க மிஸ் ரிப்ளை பண்ணியிருந்தாங்க.. தமிழ்ல...
.
.
.
.
.
.
'என்ன சார் எழுதியிருக்கீங்க? ஒண்ணுமே புரியல...'
# ஹி., ஹி., ஹி... ஆக்ஸ்போர்ட்லே...!!

Monday, August 8, 2016

" என் பசங்க ஸ்கூல்ல இம்சை பண்றாங்க மச்சி.. "
" என்னா பண்றாங்க..?!! "
" பசங்கள படிக்க வைங்கடான்னா.. இவங்க தினமும் பிராஜெக்ட் குடுத்து வெக்கிறாங்க.. "
" இது நல்லது விஷயம் தானே..?!! "
" ம்ம்க்கும்..., நானும் என் பொண்டாட்டியும்ல படிச்சிட்டு பிராஜெக்ட் பண்ணிட்டு இருக்கோம்.. "
" உஷ்.. சத்தம் போட்டு சொல்லாதே மச்சி.. ஒருத்தர்க்கு ஃபீஸ் கட்டிட்டு மூனு பேர் படிக்கறீங்களானு ஃபீஸை ஜாஸ்தி பண்ணிட போறாங்க.."
" அட.. ஆமா.. ஆமா...!! "
# உஷ்...!!!

Sunday, July 3, 2016

நேத்து என் பையன் ஸ்கூல்ல ஐ.ஐ.டி கோச்சிங் சம்பந்தமா 
ஒரு மீட்டிங்..
ஸ்டேஜ்ல ஒருத்தர் மைக்கைப் புடிச்சி...
எங்க டிரெய்னிங்ல படிச்ச ஸ்டுடெண்ட்ஸை ஐ.ஐ.டில 
கூப்பிட்டாக, இஸ்ரோல கூப்பி்ட்டாக, நாசால கூப்பிட்டாகனு 
ஸ்லைடு போட்டு பேசிட்டிருந்தாரு...
முப்பதாவது ஸ்லைடுக்கு மேல எனக்கு தூக்கம் சொக்கிச்சு.. 
லைட்டா தூங்கிட்டேன்..
பக்கத்துல இருந்த என் Wife...
"உஸ்.. என்னங்க தூங்கிட்டு இருக்கீங்க.. எந்திரிங்க.. 
இது நம்ம பையன் படிப்பு மேட்டர்.."
"நம்ம பையன் முன்னாடி உக்காந்து கேட்டுட்டு தானே 
இருக்கான்.. அவன் எதுல சேரணும்னு ஆசைப்படறானோ.. 
அதுல சேத்தி விடறேன்.."
"ம்ம்க்கும்..!!"
அவரு பேச்சை கண்டினியூ பண்ண... நான் தூக்கத்தை 
கண்டினியூ பண்ண.. அரைமணி நேரத்துக்கு அப்புறம் 
மைக்ல ப்ரின்சிபால் குரல்....
" டியர் பேரன்ட்ஸ்.. இந்த மீட்டிங்ல என்ன தெரிஞ்சிக்கிட்டீங்க..?"
(ம்ம்ம்.. ஃபீஸ்ல 25000 சேத்த போறீங்கன்னு தெரிஞ்சிக்கிட்டோம்..)
மீட்டிங் முடிஞ்சி பையனைக் கூட்டிட்டு வெளியே வந்தோம்..
அப்ப என் Wife பையன்கிட்ட..
"சூர்யா... நீ எந்த கோச்சிங்ல சேரலாம்னு இருக்கே..?"
"போம்மா.. மீட்டிங் செம்ம போரு... நான் தூங்கிட்டேன்.."
# மயக்குறு ஃபாதர்.. மயக்குறு சன்... ஹி., ஹி., ஹி..

Thursday, June 16, 2016



இந்த அட்டை போடற பழக்கத்த விட்டா தான் 
இந்தியா வல்லரசு ஆகும்.

# மிடிலடா...!!!

Sunday, December 13, 2015


எங்க பசங்க ஸ்கூல் பஸ் 8 மணிக்கு
டான்னு வந்துடும்..
ஸ்டாப்பிங்ல மொத்தம் 20 பசங்க..
அவங்கல்லாம் கரெக்ட்டா பஸ் வர்றதுக்கு
முன்னாலயே ஸ்டாப்பிங்ல வந்து நிப்பாங்க.
ஆனா எங்க பசங்க மட்டும்.. பஸ் வந்து
ஹாரன் அடிச்சிட்டே நிக்கும்...8.05-க்கு தான்
ஓடுவானுங்க..
" ஒரு 5 நிமிஷம் முன்னால ரெடி ஆகி
ஸ்டாப்பிங் போங்கடா"னு நாம சத்தம் போட்டா...
" படிக்கறப்ப நீ என்னிக்காச்சும் 5 நிமிஷம்
முன்னால ஸ்டாப்பிங் போயி நின்னு
இருக்கியா?"-னு அம்மா என்னை திட்றாங்க..
( ஓ.. லைக் ஃபாதர்... லைக் சன்ஸ்..!!
இது Manufacturing Defect..!! )
சரி.. இத வேற விதமாதான் ஹேண்டில்
பண்ணலாம்னு.....
தீபாவளி சமயத்துல பஸ் டிரைவர் கையில
500 ரூபாவை தீபாவளி போனஸா வெச்சிக்கோங்கனு
குடுத்து..
" ஏன்ணே.. 9.30 மணிக்கு தானே பிரேயர்..
இப்டி 8 மணிக்கே வந்தா... அடிச்சி பிடிச்சி
ஓடிவர வேண்டி இருக்குண்ணே.. ஒரு 10 நிமிஷம்
லேட்டா வந்தா.. பசங்க கொஞ்சம் ப்ரீயா ரெடி
ஆவாங்க"-னு அவர் காதை கடிச்சேன்...
டிரைவர் ரொம்ப நல்லவரு... இப்பல்லாம்
8.10-க்கு தான் எங்க ஸ்டாப்பிங் வர்றாரு...
ஆனா... இவனுங்க தான் 8.15-க்கு ஓடறானுங்க..
டிரைவர் முறைச்சிங்..!
# அண்ணே வணக்கம்னே..!!

Saturday, October 10, 2015

ஸ்கூல்ல பேரண்ட்ஸ் மீட்டிங்...
" மிஸ்.. எங்க பையன் எப்டி பண்றான்..?! "
" அவனுக்கென்ன சார்.. அவன் Out Standing ஸ்டுடண்ட்.. "
" அப்படியா..?!! "
" ஆமா.. சேட்டை ஓவரா பண்றான்னு நேத்து கூட
வெளியே நிக்க வெச்சேனே..! "
அவ்வ்வ்வ்..!!!
# லைக் ஃபாதர், லைக் சன்..!!

Sunday, July 26, 2015


என் பசங்க ஸ்கூல்ல வருஷா வருஷம்
ஃபீஸ் ஜாஸ்தி பண்ணிட்டே போறாங்க..
கேக்கறதுக்கு யாருமே இல்லங்கற
தைரியம்...
மீ ஹியர்... பீ கேர்புல்...
( போராளினா சும்மாவா..?! )
ஸ்கூலுக்கு போனதும்.. ஆபீஸ்ல போயி
ஃபீஸ் கட்டணும்னு சொன்னேன்...
கையில ஒரு டோக்கனை குடுத்து
" போயி வெயிட் பண்ணுங்க சார்னு "
உக்கார வெச்சிட்டாங்க...
பக்கத்துல பாத்தா...
ஒருத்தர் முகத்துல கூட போராளிக்கான
அடையாளமே இல்ல...
எல்லோரும் கையில கட்டு கட்டா பணம்
வெச்சிட்டு உக்காந்து இருந்தாங்க..
கடைசில நானும் போயி அமைதியா
பணத்தை கட்டிட்டு வந்துட்டேன்..
என்னடா... " போராளி.. போராளி "னு சொன்னே...
இப்படி டம்மி பீஸா இருக்கியேனு கேப்பீங்களே..
தெரியும்...!!
இந்தா... போட்டுடோம்ல ஸ்டேடஸு...
# ஒரு ஃபேஸ்புக் போராளிகிட்ட இதுக்கு மேல
என்ன எதிர் பார்க்கறீங்க..?!!
ஹி., ஹி., ஹி..!!!

Thursday, January 29, 2015


என் பையன் ஸ்கூல்ல ராமாயணம் நாடகம்
போடணுமாம்..
தசரதன், கைகேயி, ராமன், சீதா, லட்சுமணன்,
பரதன்னு 6 கேரக்டர்ஸ் வரணுமாம்.. 
எழுதி குடுக்க சொன்னான்..
சரினு எழுதி குடுத்தேன்...
ஸ்கூலுக்கு போயிட்டு வந்து..
" அப்பா.. டைலாக்ஸ் எல்லாம் தூய தமிழ்ல
இருக்கணுமாம்..!! "
( எடிட்டிங்.. # அம்மா ==> அன்னையே )
அடுத்த நாள்..
" ரொம்ப பெருசா இருக்காம்பா.. கம்மி
பண்ண சொல்லி மிஸ் சொன்னாங்க.. "
( எடிட்டிங்... # 8 பக்கம் ==> 4 பக்கம் )
அடுத்த நாள்...
" என்னப்பா இதுல கைகேயி, பரதனே
வரலியாமே.. நான் தான் 6 கேரக்டர்ஸ்
வரணும்னு சொல்லியிருக்கேன்ல..!!! "
" உஸ்ஸப்பா... சரி அந்த பேப்பரை இங்கே குடு.. "
பேப்பரை வாங்கி... மேலே எழுதினேன்..
.
.
.
.
.
.
" அரண்மையில் தசரதன், கைகேயி, ராமன்,
சீதா, லட்சுமணன், பரதன் அனைவரும்
அமர்ந்து இருந்தனர்... "
# ஆறு என்ன அறுநூறு கேரக்டர்ஸ் ஒரே சீன்ல
கொண்டு வருவோமாக்கும்..

Saturday, December 13, 2014

எச்சூஸ் மீ டீச்சர்ஸ்....,
நாங்க என்ன சக்திமானா..?!
கொஞ்சம் விட்டா " சைன்ஸ் எக்ஸிபிஷனுக்கு " 
சஞ்சீவி மலையையே கொண்டு
வர சொல்லுவீங்க போல...!!!
மிடில... வுட்டுடுங்க....

Tuesday, December 9, 2014

" நாம் இருவர்.. நமக்கு ஒருவர் "-னு
கவர்மெண்ட் சொன்னப்ப எல்லாம்
கேக்காத நம்ம பய...
இன்னிக்கு...
" ஒண்ணே போதும்டா சாமி "-ங்கிற
முடிவுக்கு வந்துட்டான்னா.. அதுக்கு
காரணம்...
.
.
.
.
.
.
ஸ்கூல்ல குடுக்குற ப்ராஜெக்ட்ஸ் தான்.
# அப்பா இந்த ப்ராஜெக்ட் பண்ணி குடேன்...

Monday, November 10, 2014


என் பையனுக்கு தமிழ் பேச்சுப்போட்டி..
வழக்கம் போல நானும் எழுதி குடுத்துட்டேன்..
அதுல " கூகுள் இருக்க பயமேன் " னு 
ஒரு லைன் வரும்...
நேத்து ஸ்கூல் விட்டு வந்ததும் என் பையன்
என்கிட்ட வந்து.......
" அந்த லைன் வேணாம்னு எங்க மிஸ்ஸூ
சொல்லிட்டாங்கப்பா... "
" ஏன்..? "
" தமிழ் பேச்சுபோட்டில இங்கிலீஷ் வார்த்தை
கலந்து பேசக்கூடாதாம்.. "
" ஙே...!!!! "
# ஃபேஸ்புக்கை " முகநூல்"-னு மொழிபேத்த
தமிழ் அறிஞர்களே... உங்களுக்கு மறுக்கா
வேலை வந்துடுச்சு...
அப்பாலிக்கா ஃபீரியா இருந்தீங்கன்னா..
இந்த கூகுளையும் கொஞ்சம் பேத்து குடுத்துட்டு
போங்க அய்ய்யா.....

Sunday, March 30, 2014

இன்னொரு குழந்தை வேண்டுமா.?



எங்க பசங்க ஸ்கூல்ல " Suggestion Box "
வெச்சி இருக்காங்க....

நானும் ஒரு Suggestion எழுதி போட்டுட்டு வந்தேன்.....

" Suggestion Box- ல சொல்ற Suggestions-ஐ 
கொஞ்சம் படிச்சி பாத்து Consider பண்ணுங்க...!! "