Showing posts with label Whatsapp. Show all posts
Showing posts with label Whatsapp. Show all posts

Tuesday, January 31, 2017

" எப்டி சார் இவ்ளோ விஷயம் தெரிஞ்சி வெச்சிருக்கீங்க... ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டில எதுனா படிச்சீங்களா..?! "
" சே.. சே... வாட்ஸ்அப்ல பத்து க்ரூப்ல இருக்கேன்.. அங்கதான் ஆபரேஷன் பண்ற அளவு சொல்லித் தர்றானுவளே...!! "

Wednesday, October 5, 2016

உலகத்துல இருக்கற பூரா அறிவாளிகளும் அமெரிக்காலயோ.., நாசாலயோ இருக்காங்கன்னா நெனச்சிட்டு இருக்கீங்க...?!!
அதான் இல்ல....
பூரா பயலும் வாட்ஸ் அப்ல தான் இருக்கானுங்க...
# பொழுது விடிஞ்சா இவனுங்க அக்கப்போரு இருக்கே..... மிடில...

Saturday, September 10, 2016

இந்த வாட்ஸ் அப்ல கண்டதையும் ஷேர் பண்ற நாய்ங்க.. கண்டதை மட்டுமே ஷேர் பண்ணுதுங்க..
தப்பித்தவறி கூட உருப்படியானது வர மாட்டேங்குது...
# டிஷ்யூம்., டிஷ்யூம்..!!!

Monday, August 8, 2016

ப்ரெண்ட்ஸ் குரூப்ல என் போட்டோ ஒன்னு அப்லோடு பண்ணினேன்..
உடனே ஒருத்தன் வந்து...
" மச்சி.. பிரிஸ்மாவா..? கலக்கு மச்சினு " ரிப்ளை பண்றான்...
ஏன்டா லைட்டா மேக்கப் போட்டதெல்லாம் ஒரு குத்தமாடா..
இவிங்களோட ஒரே அக்கப்போரா இருக்கே..!!

Thursday, June 16, 2016


பல ராஜதந்திரங்களை கரைத்து குடித்திருக்கிறாயடா வெங்கி...!!! 



 

Friday, June 10, 2016


ஆன்லைன்ல டீசர்ட் வாங்கினேன்...
புது டீசர்ட் போட்டுட்டு போட்டோ எடுத்து 
என் ப்ரெண்ட்ஸ் வாட்ஸ் அப் க்ரூப்ல போட்டு...
" எப்டி இருக்கு?"னு கேட்டா ...
ஒருத்தன் " கண்றாவியா இருக்கு"னு சொல்றான்..
இன்னொருத்தன் " கேவலமா இருக்குனு " மெசேஜ் பண்றான்...
( நல்லா இல்லியா... 670 ரூபா வேஸ்ட்டா போச்சா.. போச்சா..?!! )
" சரி இருங்கடா... இன்னொரு டீசர்ட் இருக்கு அத போட்டு போட்டோ போடறேன்.. அதாவது நல்லா இருக்கானு சொல்லுங்க.. "
உடனே ஒருத்தன் மெசேஜ் பண்றான்...
" மச்சி.. இவ்ளோ நேரம் நாங்க கண்றாவியா இருக்குனு சொன்னது டீசர்ட்டைனு நெனச்சிட்டியா... ஹைய்யோ... ஹைய்யோ...! "
# பாவிகளா..!

Wednesday, May 18, 2016




Wife லீ்வுக்கு அம்மா வீட்டுக்கு போயி இருக்காங்க...
காலைல Wife-கிட்ட இருந்து போன்...
"என்னது.. வாட்ஸ்அப்ல Last seen நைட் 1:30 மணின்னு 
காட்டுது.. அவ்ளோ நேரம் தூங்காம என்ன பண்ணினீங்க?"
"நீ இல்லாம தூக்கமே வரலடா செல்லம்"ன்னு சொன்னேனா.
நம்பிட்டாங்க..!!
# பல ராசதந்திரங்களை கரைத்துக் குடித்திருக்கிறாயடா வெங்கி...!!

Saturday, May 14, 2016




இன்னிக்கு மதியம் என் சிஷ்ய பய போன் பண்ணியிருந்தான்...
" தல... உங்களுக்கு மேட்டர் தெரியுமா..?! "
" என்ன..?! "
" வாட்ஸ் அப் க்ரூப்ல யாராவது கருத்து கணிப்பு அனுப்பினா... "
" அனுப்பினா...??! "
" க்ரூப் அட்மினை 2 வருஷம் ஜெயில்ல போட்டுடுவாங்களாம்... "
( ஆஹா.. எதோ ப்ளான் பண்றான் போலயே...!! )
" சரி.. அதுக்கென்ன..?! "
" தல.. நீங்க ஜெயிலுக்கு போயிட்டா நாங்க என்ன பண்ணுவோம்..? "
( " நாங்களா..?! " அப்ப ஒரு க்ருப்பா தான் ப்ளான் பண்றாய்ங்களா..?! )
" போயிட்டா இல்லடா.. அனுப்பிட்டானு சொல்லு... "
" ஹி.,ஹி.,ஹி.. சரி தல இப்ப என்ன பண்ண போறீங்க..? "
" யூ டோன்ட் வொர்ரி... அப்டி ஒரு நெலமை வந்தா..
க்ருப்ல இருக்குற உங்க எல்லாரையும் அட்மினாக்கி விட்டுடுவேன்... "
ஹா., ஹா., ஹா.. ( வில்லன் சிரிப்பு )
# ஆருகிட்ட..!!

Friday, July 24, 2015




அறிவு ஜீவிங்க..
வாட்ஸ் அப்ல இருக்குற எல்லா க்ருப்லயும்
இது மாதிரி ரெண்டு பேராச்சும் இருப்பாய்ங்க..
இவிங்க பண்ற அக்கப்போரு இருக்கே...
முடியலடா சாமி...
இது IAS கேள்வினு... ஒன்னு அனுப்புவாய்ங்க..
அடுத்து இது இன்போசிஸ்ல இன்டர்வியூல
கேட்ட கேள்வி.. பதில் சொல்லியே ஆகணும்னு
அடம் பிடிப்பாய்ங்க...
இல்ல தெரியாமத்தான் கேக்கறேன்..
நான் என்ன இன்போசிஸ்ல வேலை வேணும்னு
க்யூல நின்னேனா...
இல்ல கலெக்டர் ஆகியே தீருவேன்னு
ஒத்தை கால்லதான் நின்னேனா..
எக்ஸாம்க்கு போற மாதிரி கனவு வந்தாலே...
நானெல்லாம் எந்திரிச்சி நெத்தில விபூதி
வெச்சிட்டு படுப்பேன்..
எனக்கு ஏன் இதையெல்லாம் அனுப்பறீங்க..?!
" பதில் தெரியல... அதான் இப்படி பொலம்பறானோ"-னு...
தப்பா நெனக்காதீங்க..
சத்தியமா சொல்றேன்...
எனக்கு அதெல்லாம் என்ன கேள்வினே தெரியல...
டாட்..!!

Tuesday, March 31, 2015

" வாட்ஸ் அப் "-ல காலிங் வசதி வந்ததுல
ஒரே பிரயோஜனம்...
.
.
.
.
நம்மகிட்டயும் இருக்குனு வெளில
சொல்லிக்கலாம்...!!!

Saturday, March 28, 2015

வேர்ல்ட் கப் யார் வின் பண்ணுவா.?
யார் எவ்ளோ ரன் அடிப்பா.?
யார் மேன் ஆப் தி மேட்ச்.?
எல்லாமே புக்கிங்க ஃபிக்ஸ் பண்ணிட்டாங்களாம்.
ஆனா.. சுத்த லூசு புக்கிகளா இருப்பானுங்க
போல....
எல்லா டீடெய்ல்சையும் வாட்ஸ் அப்ல
ஷேர் பண்ணிட்டு இருக்கானுங்க...
வேணாம்...,
வேணா.....ம்
வலிக்குது...
அழுதுடுவேன்.....


smile emoticon