Showing posts with label Kids. Show all posts
Showing posts with label Kids. Show all posts

Wednesday, September 20, 2017

என் பையனுக்கு ஜீன்ஸ் பேன்ட் எடுக்கலாம்னு கூட்டிட்டு போயிருந்தேன்...
நான் 600 ரூபாக்கு ஒரு ஜீன்ஸ் காட்டினா.. அவன் 1000 ரூபாய் ஜீன்ஸ் வேணும்கறான்...
பாக்க ரெண்டுமே ஒரே மாதிரி கன்றாவியா தான் இருந்துச்சு...
டக்னு என் 7வது அறிவு வேலை செஞ்சது...
" சரி.. நீ ரெண்டையும் போட்டுப் பாரு... அப்புறம் டீசைட் பண்ணலாம்... "
மொதல்ல 1000 ரூபா ஜீன்ஸை போட்டு வந்தான்.. நல்லா இருந்தது... ஆனா அப்டி சொல்லக் கூடாதே...
" வ்வே... இது பிட்டிங்கே சரியில்ல... "
" இல்லப்பா கரெக்டா இருக்கு.. "
" சாயம் போன மாதிரி இருக்கு... "
என்னைய கேவலமா ஒரு லுக் விட்டான்...
" சரி சரி.. இந்தா இதையும் போட்டு பாரு.. அப்புறம் டிசைட் பண்ணிக்கலாம்... "
600 ரூபா ஜீன்ஸை எடுத்து குடுத்து விட்டேன்... போட்டுட்டு வந்தான்... இதுவும் நல்லா இருந்தது...
" ம்ம்.. இப்ப சொல்லு... எது உனக்கு வேணும்..?! "
" பர்ஸ்ட் போட்டு பாத்ததே புடிச்சிருக்கு.. "
இவன் 1000 ரூபா மொய் வெக்காம விட மாட்டான் போலயே...!!
" சூர்யா.. அத விட இது சூப்பரா இருக்குடா.. கலர் நல்லா பிரைட்டா இருக்கு... பிட்டிங் கரெக்டா இருக்கு... " இப்டி பிரைன் வாஷ் பண்ணி... பண்ணி... ஒரு வழியா ஒத்துக்கிட்டான்...
ஹப்பாடா... 400 ரூபா மிச்சம்...!!
ஆனா பில் பண்ண வந்தப்ப தான் நோட் பண்ணினேன்... இந்த ஜீன்ஸ் ரேட் 1250 ரூபா...
ஆஹா... பதட்டத்துல 600 ரூபா ஜீன்ஸ்க்கு பதிலா..... பக்கத்துல இருந்த 1250 ரூபா ஜீன்ஸை எடுத்து போட்டு பாக்க சொல்லி குடுத்துட்டோம் போலயே...!!!
அவ்வ்வ்வ்வ்.......

Wednesday, July 26, 2017

என் சின்ன பையன் கோகுல்கிட்ட..
" இன்னிக்கு என்ன எக்ஸாம்..?! "
" இங்கிலீசு..!! "
" படிச்சிட்டியா..?! "
" ம்ம்ம்.. " தலைய ஆட்டினான்..
" இங்க தலைய தலைய நல்லா ஆட்டு.. ஆனா மார்க் மட்டும் 50-ஐ தாண்டிடாதே...."
அவன் என்னைய லூச பாக்கற மாதிரி பாத்தான்... பாத்துட்டு....
" எக்ஸாமே 50 மார்க்தான்பா..!! "
#ஙே..!!!

Friday, March 17, 2017

போன வாரம்....
பாத்ரூம்ல இருந்து என் சின்னப்பையன் கோகுல் கதவை தட்டினான்..
"என்ன கோகுல்..?"
கதவை லைட்டா திறந்து,
"அப்பா இது உங்க பனியன்.. மாத்தி எடுத்துட்டு வந்துட்டேன்.."
"பாத்து எடுத்துட்டு வரமாட்டியா..?"
"அவசரத்துல.."
"எல்லாம் அவசரம்.. அதான் 85cm பெருசா எழுதி இருக்குல்ல.. எப்பவும் அலேர்ட்டா இருக்கணும் கோகுல்.."
2 நிமிஷம் அட்வைஸ் பண்ணிட்டு கீழே போயி அவன் பனியன் எடுத்துட்டு வந்து குடுத்தேன்....
அடுத்து நான் குளிக்க போனேனா.. குளிச்சிட்டு பாத்தா.... நான் எடுத்துட்டு வந்திருந்தது கோகுல் பனியன்..
ஆஹா... டைனோசர்க்கே லெக் ஸ்லிப் ஆகிடுச்சே...!!
கதவைத் தட்டி..
"நிர்மலா.. பனியன் மாறிடுச்சு... போயி என் பனியன் எடுத்துட்டு வா.. "
"வெயிட் பண்ணுங்க.."
2 நிமிஷத்துல.. கதவு தட்ற சத்தம்...
லைட்டா திறந்தா...
கையில பனியனோட நின்னுட்டு இருந்தது கோகுல்..!!
"நீ இன்னும் ஸ்கூல் போகல?"
"இன்னைக்கு சண்டே"
அதுக்கு ஏன் இப்படி பல்லக் கடிக்கறான்?

Saturday, February 11, 2017

வீட்ல பிரிண்டர் ரிப்பேர்..
அதனால என் பையன் சூர்யா எதாவது பிரிண்ட் எடுக்கணும்னா... அத எனக்கு மெயில் பண்ணிடுவான்..
நான் அத ஆபீஸ்ல பிரிண்ட் எடுத்துட்டு போயி குடுத்துடுவேன்...
மொதல்ல இவன் ப்ராஜெக்ட் மட்டும் அனுப்பினான்... பிரிண்ட் எடுத்தேன்...
அப்புறம் இவன் ப்ரெண்ட் விக்ரம், அடுத்து ஹரீஷ் நெக்ஸ்ட் சச்சின்... லிஸ்ட் அனுமார் வால் மாதிரி நீண்டுட்டே போச்சு...
நேத்து ஈவினிங் நான் ஆபீஸ்ல இருந்தப்ப போன் பண்ணினான்...
" அப்பா... என் டீம் மெம்பர்ஸ் ப்ராஜெக்ட் எல்லாம் அனுப்பி இருக்கேன்... வர்றப்ப பிரிண்ட் எடுத்துட்டு வாங்க.. "
( நான் பேஸ்புக்ல போராடுவேனா... இல்ல இவனுங்களுக்கு பிரிண்ட் எடுப்பேனா...?!! )
" ஏன்டா... உங்க க்ரூப்புக்கு என்னை ஒருத்தனை பாத்தா மட்டும் தான் இளிச்சவாய் மாதிரி தெரியுதா..?!! "
ஒரு 5 செகண்ட் சைலன்டா இருந்தான்... அப்புறம் சொன்னான்...
" இல்லப்பா... ப்ரணவோட அப்பாவும் இருக்காரே..! "
" ஆஆ....!!! "
# ஆஹா.. முடிவே பண்ணிட்டானுவளா..?!!

Monday, August 22, 2016

கண்காட்சிக்கு கெளம்பிட்டு இருந்தோம்.. அப்ப என் பசங்ககிட்ட சொன்னேன்...
"டேய்... நல்லா கேட்டுக்குங்கடா... அங்க போயி அது வேணும், இது வேணும்ன்னு ரகளை பண்ணக் கூடாது... ஆளுக்கு 20 ரூபா தர்றேன் இஷ்ஷ்ஷ்ட்டப்பட்டத வாங்கிக்குங்க.."
என் பெரிய பையன் ‍ஷாக் ஆகிட்டான்.. சின்ன பையன் சொன்னான்..
" நீங்களே வெச்சிக்கோங்க... அவ்ளோ ரூபா வெச்சிருந்தா.. எங்கள யாராவது கிட்நாப் பண்ணிட்டு போயிடுவாங்க... "
# தட் அணிலே காறித் துப்பின மொமெண்ட்..!!
" புக் எடுத்து வெச்சி படிக்கவே மாட்டேங்குறான்.. சும்மா சுத்திட்டே இருக்கான்" இதான் தினமும் என் Wife பாடற பல்லவி..
இது இன்னிக்கு நேத்தில்ல.. 5 வருஷமா நடக்குது..
இதே தான் சின்ன வயசுல எங்க அம்மாவும் என்னைய பாத்து பாடிட்டே இருப்பாங்க..
அத பாத்துட்டு ஒரு நாள் எங்க தாத்தா எனக்கு ஒரு அட்வைஸ் பண்ணினாரு..
அதுக்கு அப்புறம் எங்கம்மா திட்ற மாதிரி நான் நடந்துக்கலயே..
இப்ப அத என் பையனுக்கு சொல்ல வேண்டிய நேரம் வந்துடுச்சு..
போன வாரம் உக்கார வெச்சு சொல்லிட்டேன்..
அப்புறம் பாக்கணுமே பையன்கிட்ட மாற்றத்தை.. எப்பவும் புக்கும் கையுமாவே இருந்தான்..
இத பாத்துட்டு என் Wife-க்கு அதிர்ச்சி + ஆச்சரியம்..
"அப்டி என்ன அவனுக்கு அட்வைஸ் பண்ணுனீங்க"-னு திரும்ப திரும்ப கேட்டுட்டே இருந்தாங்க..
ஆனா நான் சொல்லலியே...
"அது பிரம்ம ரகசியம்.. வெளியே சொன்னா பலிக்காது"னு சொல்லிட்டேன்.
நேத்து ஈவினிங்.. சினிமாவுக்கு கெளம்பிட்டு இருந்தோம்..
அப்ப என் பையன் தியேட்டர் வர ரெடியா இருந்தான்.. கையில புக்... அத பாத்துட்டு என் Wife..
" என்னடா கையில..? "
" இன்டர்வெல்ல அரைமணி நேரம் கேப் கெடைக்கும்லம்மா.. அப்ப படிக்க.. "
இத கேட்டதும் என் Wife-க்கு மயக்கம் எதுவும் வந்துடுமோனு நான் அவங்க மூஞ்சையே பாக்க..
வந்தது மயக்கம் இல்ல.. டவுட்டு..!!
அவனை அப்டியே தனியா தள்ளிட்டு போயி உருட்டி மிரட்டி கேட்டதுல பய பிரம்ம ரகசியத்தை உளறிட்டான்..
" அப்பாதான்மா சொன்னாரு.. நீ படிக்கலன்னா கூட பரவாயில்ல.. படிக்கிற மாதிரி நடினு.."
# அடங் கொய்யாலே.. ஆக்ட் பண்றான்னா.. இப்டி ஓவர் ஆக்ட் பண்ணி சிக்க வெச்சிட்டானே..!!!

Thursday, January 28, 2016

என் சின்ன பையனுக்கு " Save Water " -ங்குற
தலைப்புல ஒரு புராஜெக்ட் ரெடி பண்ணிட்டு
வர சொல்லி இருக்காங்க...
ரெண்டு நாளா என்கிட்ட சொல்லிட்டே இருந்தான்...
நான் பண்ற மாதிரி தெரியலைன்னு
அவங்க அம்மாகிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிட்டான்..
" ஏங்க... அவன் தான் ப்ராஜெக்ட் கேட்டுட்டே
இருக்கான்ல... பண்ணி குடுத்துடுங்களேன்... "
" 50% ப்ராஜெக்ட் முடிஞ்சிடுச்சு.. "
" 50%-ஆ...? நீங்க இன்னும் ஆரம்பிச்ச
மாதிரியே தெரியல... "
" இதோ... இங்க பாரு... ஸ்கெட்ச் பென்சில்
வாங்கிட்டு வந்துட்டேன்... ஹி., ஹி., ஹி..."
ரெண்டு பேரும் என்னய மொறைச்சாங்க...
உடனே அவங்க அம்மா காதுல ரகசியமா
என்னமோ சொன்னான்...
என்ன சொல்றான்னு நானும் என் காதை
ஷார்ப் ஆக்கி கேட்டேன்....
" ப்ராஜெக்ட் முடிச்சப்புறம் அடிச்சிக்கோம்மா...!! "
( அடப்பாவி...!!! )
# Save Venkat...!!

Tuesday, November 17, 2015

எதுக்குப்பா இந்த மழை வேஸ்ட்டா 
சன்டேல எல்லாம் பெய்யுதுனு கேக்கறான் 
மவன்...

# அடேய்..!!!

Monday, October 5, 2015

எங்க பையன் ஸ்கூல்ல ஒரு வழக்கம்..
பசங்க தினமும் அவங்க Parents கால்ல
விழுந்து ஆசிர்வாதம் வாங்கணும்.
அப்புறம் அவங்க வலது கையில
நாங்க Sign போட்டு விடணும்..
பெரியவன் கரெக்ட்டா பண்ணிடுவான்..
சின்னவன் தன்மான சிங்கம்..
யார் கால்லயும் விழமாட்டாரு..
ஆனா நைஸ் பண்ணி அவங்க அம்மாகிட்ட
Sign மட்டும் வாங்கிட்டு போயிடுவான்..
இன்னிக்கு காலைல...
" ஆசிர்வாதம் வாங்கினாத்தான் Sign-னு.. "
நான் ஸ்டிரிக்ட்டா சொல்லிட்டேன்..
வேற வழியேயில்லாம..
அவன் என் கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்க...
நான் Sign போட...
போறப்ப என் தலையில " நங் "-னு
ஒரு கொட்டு கொட்டிட்டு போயிட்டான்..
ஏனுங்க மிஸ்...
" அப்பாவை கொட்டக் கூடாதுன்னு
எல்லாம் எதும் Sign வாங்கிட்டு வர
சொல்ல மாட்டீங்களா..?! "
அவ்வ்வ்....!!!

Monday, September 21, 2015

" குட்டி.. எக்ஸாம் எப்படிடா எழுதினே..? "
" சூப்பரா எழுதினேன்.. "
" எத்தனை மார்க் வரும்..?! "
" 52..!! "
" டேய்.. எக்ஸாமே 50 மார்க்குக்கு தானேடா.. "
" 2 மார்க் ஃபார் குட் ஹேண்ட் ரைட்டிங்..! "
# தட் " ஙே " மொமெண்ட்..!!

Saturday, September 19, 2015

நேத்து வினாயகர் சதுர்த்தி லீவ்..
என் சின்னப்பையன் கோகுல் ( 3rd Std )
காலைல இருந்து புக் எடுத்து வெச்சி
படிக்கவேயில்ல..
அடுத்த நாள் எக்ஸாம் வேற இருக்கு...
எனக்கு ஒரே டென்ஷனா இருந்தது...
நைட் 9 மணி...
" டேய் கண்ணா.. வாடா கொஞ்சமாச்சும்
படிக்கலாம் "
" சாமி ஊர்வலம் வருதுப்பா.. பாத்துட்டு
வரேன்..! "
" இன்னும் நீ படிக்கவே இல்லடா... நாளைக்கு
எக்ஸாம்ல என்னடா பண்ணுவே..!! "
" எக்ஸாம்ல ஜீரோ மார்க் எடுப்பேன்..
கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்...
ஹேப்பியா இருப்பேன்..! "
ஆங்...!!! கல்யாணம் பண்ணிக்கலன்னா..
ஹேப்பியா இருக்கலாம்னு இவனுக்கு யாரு
சொல்லி இருப்பானு யோசிச்சிட்டே...
பின்னால திரும்பினேனா...
" ஐயோ.. நிர்மலா.. நான் ஒன்னும் சொல்லல..
அவனே... "
# கதம் கதம்..!!!

Tuesday, June 30, 2015

என் பையன்கிட்ட எங்க பேமிலி டாக்டரு...
" எங்கடா.. உங்கப்பன் கொஞ்ச நாளா
ஃபேஸ்புக் வரக் காணோம்னு " கேட்டிருக்காரு...
அதுக்கு இவன்...
" எங்க அப்பவா..?! அவரு வீட்டுக்கு கூட
வராம இருப்பாரு.. ஆனா ஃபேஸ்புக் வராம
இருக்க மாட்டாரேனு " சொல்லி இருக்கான்...
# சே... ஒரு போராளியா இருந்தா...
எவ்ளோ கேவலப்பட வேண்டி இருக்கு..

Wednesday, June 24, 2015


நேத்து நான் சொன்ன பேச்சை
என் சின்ன பையன் கோகுல் கேக்கல..
அதனால அவன் கேட்ட சாக்லெட்டை
நான் வாங்கித் தரமாட்டேனு சொல்லிட்டேன்..
( வூட்லயே இவன் ஒருத்தன் தான்
என் பேச்சை கேட்டுட்டு இருந்தான்...
இப்ப இவனும் கேக்கலன்னா..
கோவம் வருமா.. வராதா.?!! )
சாக்லெட் வரலைன்னா.. சாப்பிட மாட்டேனு
அடம் பண்ணிட்டு இருந்தான்...
" மொளைச்சி மூனு எலை விடல. அதுக்குள்ள
இவ்ளோ பிடிவாதமானு..? " நானும் விடாப்பிடியா
நின்னேன்..
அப்பனும், புள்ளயும் என்னமோ பண்ணுங்கனு
என் Wife தலையில அடிச்சிகிட்டு போயிட்டாங்க..
நான் அவன்கிட்ட போயி..
" ஏன்டா உனக்கே இவ்ளோ திமிர் இருந்தா..
நான் உங்கப்பன் எனக்கு எவ்ளோ திமிரு
இருக்கும்..?!! "
நைசா என்னை திரும்பி பார்த்தான்..
பாத்துட்டு...
" அப்ப நம்ம வீட்லயே தாத்தாவுக்கு தான்
திமிர் அதிகம்னு " சொல்றியாப்பானு கேட்டுட்டு
சிரிச்சான்..
" அடப்பாவினு " மனசுல நெனச்சிகிட்டு
ஆமா எதுக்கு இப்டி சிரிக்கறானு திரும்பி பார்த்தா...
" ஐயோ.. எங்க அப்பா..!!! "

Wednesday, May 27, 2015

அப்ப என் சின்ன பையன் கோகுல்
LKG படிச்சிட்டு இருந்தான்...
ஒரு நாள் நான் அவன்கிட்ட ...
" இங்கிலீஷ்ல அப்பாவை எப்படி
கூப்பிடுவே.. "
" ஃபாதர்... "
" அப்ப தாத்தாவை.? "
" அவரையும் ஃபாதர் தான்... "
" தப்பு குட்டி., அவரு அப்பாவுக்கே
அப்பால்ல.. எப்படி கூப்பிடுவே.? "
டக்னு சொன்னான்...
" ஃபாதர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... "

Sunday, May 24, 2015

என் சின்ன பையன் கோகுல்
கிரிக்கெட் பாத்துட்டு இருந்தான்..
எனக்கு ஆச்சரியமா இருந்தது.,
இவனுக்கு கிரிக்கெட் பத்தி ஒண்ணும் 
தெரியாதே.. பின்ன எப்படி.?
டெஸ்ட்டிங்......
" கோகுல்.. இந்த Yellow Dress எந்த டீம்..? "
" சென்னை சூப்பர் கிங்ஸ்... "
" அப்ப Blue Dress...? "
" மும்பை இந்தியன்ஸ்... "
பார்ரா....!!
கொஞ்ச நேரத்துல தோனி அவுட்...
பையன் குஷியாகிட்டான்...
எனக்கு ஒண்ணும் புரியல...
" குட்டி.. உனக்கு எந்த டீம் ஜெயிக்கணும்..? "
" மும்பை இந்தியன்ஸ்... "
" ஆ... ஏன்டா..? ஏன்..? "
என்னை லூச பார்க்குற மாதிரி பாத்துட்டு
சொன்னான்...
" ஏன்னா... நாமல்லாம் இந்தியன்ஸ் தானேப்பா... "
" அவ்வ்வ் "
# CSK Vs MI

Tuesday, April 28, 2015


நேத்து நைட் டின்னர்...
அப்ப என் பையன் சூர்யா கேட்டான்...
" அப்பா .. கோழி முதல்ல வந்ததா., 
இல்ல முட்டை முதல்ல வந்ததா.? "
" முட்டை தான்..."
" எப்படிப்பா...? "
" நீ சரியா கவனிக்கலை.... அம்மா
எனக்கு பர்ஸ்ட் முட்டை வெச்சாங்களா.,
நெக்ஸ்ட் தோசை வெச்சாங்களா.,
லாஸ்ட்ல தான் சிக்கன் வெச்சாங்க...
So... முட்டை தான் பர்ஸ்ட் வந்தது.... "
அப்புறம் அவன் என்னை முறைச்சிட்டு
எந்திரிச்சி போயிட்டான்..
# நான் கரெக்டா தானே சென்னேன் மக்கழே...?

Sunday, April 19, 2015


@ காலை 7 மணி..
என் பையன் சூர்யாகிட்ட..
" இன்னிக்கு எக்ஸாம் கண்ணு.. 
எப்டி பண்ணுவே..? "
" சூப்பரா பண்ணுவேன்... "
" நேத்து பூரா புக் எடுத்து படிச்ச மாதிரி
நான் பார்க்கவே இல்ல..! "
" ஹே.. இது ஜூஜூபி மேட்டர்பா..
கலக்கிடறேன்..!! "
@ காலை 8 மணி...
என்னமோ தேடிட்டு இருந்தான்..
" என்னடா தேடற..?! "
" ஜியோமெட்ரி பாக்ஸ்பா..! "
" அதெல்லாம் நேத்தே ரெடி பண்ணி
வெச்சிக்க மாட்டியா..?!! "
" நான் இன்னிக்கு சைன்ஸ் எக்ஸாம்னு
நெனச்சிட்டேன்...! "
" என்னாது.... சைன்ஸ் எக்ஸாம்னு
நெனச்சியா..?!!! "
# கலக்கிடறேன்.. கலக்கிடறேனு சொல்லிட்டு
கடைசில இப்டி என் வயித்தை கலக்கிட்டானே..!!

Thursday, February 19, 2015

என் சின்ன பையன் கோகுல்...
" எனக்கு இந்த டியூசன் வேண்டாம்பா..,
ஜோதி மிஸ் டியூசன் சேர்த்தி விடுங்க.. "
" ஏன்டா அங்கே நல்லா சொல்லி தர்றாங்களா..?!! "
" இல்லப்பா.. அந்த டியூசன்ல நெறைய
நாள் லீவ் விடறாங்களாம்..! "
# இதெல்லாம் பெருசான என்னை
மாதிரியே தான் இருக்க போவுது..

Thursday, February 12, 2015


" அம்மா.. சீக்கிரம் வந்து இந்த Sum
சொல்லிக்குடு...!! "
" வேலையா இருக்கேன் குட்டி.. 2nd Std
வந்துட்டேல்ல.. நீயே டிரை பண்ணு..!! "
" இல்லம்மா... இந்த Sum ரொம்ப கஷ்டமா
இருக்கு... "
" உனக்கெல்லாம் என்ன கஷ்டமான Sum
இருக்க போவுது.. சரி போயி.. அப்பாவை
கேளு...!! "
" கஷ்டாமா இருக்குனு சொன்னதே
அப்பாதான்மா... !! "
# தட் " கணக்கு புக்கே காறி துப்பின "
மொமண்ட்..!!

Monday, January 26, 2015

மணி : 3 Pm 
என் சின்ன பையன் கோகுல்...
" அப்பா... அண்ணன் ஸ்பீச்க்கு எத்தனை 
லைக் வந்து இருக்கு..? "
( பார்ரா... பொடியன் எல்லாம் லைக் பத்தி
தெரிஞ்சி வெச்சிருக்கான்... )
" இப்ப தானே போட்டேன்.. 15 லைக் வந்திருக்கு.. "
சரினு போயிட்டான்..
மணி : 4.45 Pm
மறுபடியும் வந்து எத்தனை லைக்னு
கேட்டான்...
70-னு சொன்னேன்.. போயிட்டான்..
மணி : 7 Pm
இப்ப பெரியவன் வந்து....
" அப்பா.. இப்ப எத்தனை லைக்கு..? "
" 120.. ஆமா.. எதுக்குடா இதை கேட்டுட்டே
இருக்கீங்க..? "
" ஹி, ஹி, ஹி.. இல்லப்பா கோகுல் தான்
ஒரு லைக்குக்கு ஒரு ரூபானு அப்பாகிட்ட
பணம் வாங்கு.. ஆளுக்கு பாதி வெச்சிக்கலாமனு
சொன்னான்.. "
# அடங்கொன்னியா...!!!