Showing posts with label Self. Show all posts
Showing posts with label Self. Show all posts

Friday, November 10, 2017

குமார் போன் பண்ணியிருந்தான்..
" வெங்கி.. என்ன காலைல இருந்து உன்னை வாட்ஸ்அப்ல ஆளையே காணோம்..? "
" அதென்னமோ தெரியல மச்சி.. காலைல இருந்து தூக்கம் தூக்கமா வருது.. தூங்கிட்டே இருந்தேன்.. இப்ப தான் குளிச்சுட்டு ப்ரெஷ்ஷா வர்றேன்..."
" குட்.. இப்ப என்ன பண்ண போறே..?! "
" ம்ம்ம்... ப்ரெஷ்ஷா தூங்கப் போறேன்... "

Friday, November 3, 2017

நேத்து மதியம் பைக்கை ரோடு ஓரமா நிப்பாட்டிட்டு போன் பேசிட்டு இருந்தேன்...
அப்ப என்னை கிராஸ் பண்ணி ஒரு ஸ்கூட்டி போச்சு...
ஆ...!! ஸ்ரீதிவ்யா...!
இந்த புள்ள எப்டிடா சேலம்ல...?!!
டக்னு வண்டியை ஸ்டார்ட் பண்ணி... சேஸ்ஸிங்....
சே.. தப்பா நெனக்காதீங்க... கன்பார்ம் பண்ணிக்கணும்ல...
இதெல்லாம் ஜெனரல் நாலேஜ்ட் டெவலப்மெண்ட்ல வருது...!!
சிக்னல்ல அந்த ஸ்கூட்டிக்கு பக்கத்துல போயி வண்டிய நிறுத்தி....
அந்த புள்ள முகத்தை நான் பாக்க....
அந்த புள்ள என்னைய பாக்க...
நான் கேக்கலாம்னு வாயை தொறக்கறதுக்குள்ள அந்த புள்ள பேசிடுச்சு...
" ஹலோ... சார்... நீங்க சிவகார்த்திகேயன் தானே...?!! "
என்னாது.... சிவகார்த்திகேயனா..?!
எனக்கு திக்னு இருந்தது...
பின்ன போன வாரம் துபாய் போனப்ப ப்ளைட்ல ரெண்டு ஏர்ஹோஸ்டஸ் என்னைய பாத்து...
" சார் நீங்க ஷாகித் கபூரானுல்ல " கேட்டாய்ங்க...
ஹி., ஹி., ஹி...!!!

Sunday, October 22, 2017

புதுசா ஒரு டீசர்ட் போட்டு ஒரு செல்ஃபிய வாட்ஸ் அப் க்ரூப்ல போட்டேன்..
உடனே ஒரு தம்பி வந்து...
" நெக் பட்டன் போடாதீங்கண்ணா... வயசு ஜாஸ்தியா தெரியும்.. "
" அப்டியா..? சரி இரு...!! "
நெக் பட்டன் கழட்டிட்டு ஒரு செல்ஃபி எடுத்து அவனுக்கு அனுப்பினேன்...
" இப்ப என்ன வயசு தெரியுது சொல்லு.. "
" 25ணா.!! "
" என்னாது.. 25-ஆ..? ஐ திங்க் இந்த டீசர்ட்ல எதோ ஃபால்ட் இருக்கு... நெக் பட்டன் போடலைன்னாலும் 5 வயசு அதிகமா காட்டுதே...!! "

Saturday, September 16, 2017


சேலத்துல ஒரு லேடியோட ஸ்மார்ட் ரேஷன் கார்ட்ல அவங்க போட்டோக்கு பதிலா காஜல் அகர்வால் போட்டோ போட்டுட்டாங்களாம்...
அட எனக்கு கூட இப்டிதான் ஆச்சு...
என் ஸ்மார்ட் கார்ட்ல என் போட்டோக்கு பதிலா அரவிந்த்சாமி போட்டோவ போட்டுட்டாங்க...
விடுவோமா... ஆபீஸ்ல போயி கம்ப்ளயிண்ட் பண்ணினோம்ல...
அந்த ஆபீசரு... என் மொகத்தை பாத்தான்... கார்ட்ல இருக்கற போட்டோவ பாத்தான்... இப்டியே மாத்தி மாத்தி பாத்துட்டு...
" என்ன சார் வெளயாடறீங்களா..? இது நீங்களே தான்... இது நீங்க சேவிங் பண்ணாதப்ப எடுத்த போட்டோனு சொல்லி அனுப்பிட்டான்... "
சரி... ரெண்டு பேரும் ஒரே சாயல்ல தானே இருக்கோம்னு அமைதியா வெச்சிகிட்டேன்...
ஒருவேளை... அரவிந்த்சாமி ரேஷன் கார்ட்ல என் போட்டோ போட்டிருக்குமோ..?!!
ஹி., ஹி., ஹி...!!!

Tuesday, September 12, 2017


" என்னடா போட்டோ இது..?! "
" இதான் கராத்தேஃபூ..!! "
" அப்டின்னா...?! "
" கராத்தேவையும், குங்ஃபூவையும் மிக்ஸ் பண்ணி நானே கண்டு புடிச்சேன்..... "
" ம்க்க்கும்.. இங்க இத்தனை பேச்சு பேசு.. கமெண்ட்ல பொண்ணுங்க கும்முனா மட்டும் பதில் சொல்லிடாதே.. "
" அது மச்சி... வெள்ளிக்கிழமைல பொண்ணுங்க கூட சண்டை போடக் கூடாதுனு எங்க கராத்தே மாஸ்டர் சத்தியம் வாங்கியிருக்காரு... "
" அப்ப சனிக்கிழமை அடிக்கலாம்ல... "
" நோ... அன்னிக்கு தான் எங்க குங்ஃபூ மாஸ்டர் சத்தியம் வாங்கியிருக்காரே... "
" ம்ம்ம் இன்னிக்கு சன்டே... அப்ப இன்னிக்கு அடிப்பே...?! "
" ஹி., ஹி., இன்னிக்கு எங்க யோகா மாஸ்டரு.... "
துப்பிட்டு போயிட்டான்...!!!

Tuesday, September 5, 2017

நானும் என் மச்சானும் சேலம்ல இருந்து ரிடர்ன்.. மச்சான் கேட்டாரு...
" இப்டியே நியூ பஸ்டேண்ட் வழியா போயிடலாமா..?! "
" நோ.. நோ... அது சுத்து.. பால் மார்கெட் வழியா போங்க.. "
" அதுல... டிராபிக் ஜாஸ்தி இருக்குமே... "
" இந்த டைம்க்கு அவ்வளவா டிராபிக் இருக்காது... என்னைய நம்பி போங்க மச்சான்.. "
பால் மார்கெட் வழில திரும்பி போகும் போது அங்க ஒருத்தர் என்னைய பாத்து கை ஆட்டினாரு...
யார்ரா அதுனு உத்து பாத்தேன்... தெரியல... சரினு நானும் பதிலுக்கு கை ஆட்டிட்டேன்...
" யார் மச்சான் அது..?! தெரிஞ்சவரா..? வண்டிய நிறுத்தவா..?! "
" நோ.. நோ.. யாரோ என் பேஸ்புக் ஃபேனா இருப்பாங்க..!! இதெல்லாம் அடிக்கடி நடக்கறது தான்... "
அப்டியானு ஆச்சரியமா கேட்டுட்டு அவரு காரை ஓட்டிட்டு இருந்தாரு...
நான் பேஸ்புக் பாத்துட்டு இருந்தேன்...
ரோடு ப்ரீயா இருந்தது... அதான் சொன்னோம்ல....
எப்பவும் வெங்கிய நம்பினோர் கைவிடப்படார்...
ஒரு 7 கிமீ போயிருப்போம்... காரு டக்னு நின்னுடுச்சு..
வண்டி ஏன் நின்னுடுச்சுனு நான் மச்சானை பாத்தா.... அவரு என்னைய கொலவெறில பாத்துட்டு இருந்தாரு...
ஏன் இப்டி மொறைக்கராருனு திரும்பி ரோட்டை பாத்தா....
ரோடு ப்ளாக்டு..!!
ஆஹா... இதுக்கு தான் அவன் கைய ஆட்டினானா..?! அவ்வ்வ்வ்..!!!

Wednesday, August 23, 2017

" ஏங்க கவர்மெண்ட் வேலையில சேர்றதுக்கு எதுனா வயசு Eligible இருக்கா..?!! "
" யாருக்கு வெங்கி.... உங்களுக்கா..?!! "
" யெஸ்..!! "
" இருக்கே.. 30 வயசு வரை தான் சேர முடியும்... "
" ஹி., ஹி., ஹி... நீங்க சொல்றது Maximum வயசு.., நான் கேட்டது Minimum வயசு..!! "
" ம்ம்ம்ம்... 18 வயசுன்னு நெனக்கிறேன்....!! "
" ஓ மை காட்... அப்ப நான் இன்னும் 2 வருஷம் வெயிட் பண்ணனுமா..? "

Friday, May 26, 2017


இன்னிக்கு எங்க வீட்டுக்கு பழைய பட்டுபுடவை வாங்கறவன் வந்திருந்தான்...
ரொம்ப வருஷமா தெரிஞ்சவன்.... பிஸினஸ் முடிக்கறதுல படா கில்லாடி... நைசா ஐஸ் வெச்சி பேசி பேசி... கம்மி ரேட்ல வாங்கிட்டு போயிடுவான்...
இன்னிக்கும் அப்டித்தான்... நான் போனப்ப.. " உடன்பிறப்பேனு " பாசமலர் டயலாக் எல்லாம் சொல்லிட்டு இருந்தான்...
இவங்க ஒரு பழைய பட்டு புடவைய 6000 ரூபா சொல்லி இருக்காங்க.. அவன் 4000 ரூபால கேட்டுட்டு இருந்தான்...
இதான் மேட்டரு....
ஓ... இதுக்கு தான் இப்டி சென்டிமெண்ட் பிழியறானா...?!! நம்மகிட்ட இந்த பாச்சா எல்லாம் பலிக்காதுல்ல...
நான் என்ட்ரி குடுத்தேன்... என்னை பாத்ததும்....
" அண்ணே... உங்கள இப்ப பாத்தா... அசப்புல நடிகர் சூர்யா மாதிரியே இருக்கு.. "
( சூர்யாவா..?!! எனக்கு வந்துச்சே கோவம்... )
" டேய்.. ஏன்டா இப்டி பச்சையா பொய் சொல்ற...?! சூர்யா என்ன என் ரேஞ்ச்க்கு அழகாவா இருக்காரு...?!! "
இத கேட்டு ஒரு செகண்ட் ஜெர்க் ஆகிட்டான்..
பேச்சே வரல...
அப்புறம் என்ன... புடவைய 3500 ரூபா குடுத்துட்டு வாங்கிட்டு போயிட்டான்...
ஆமா... இப்ப நீங்க எதுக்கு ஜெர்க் ஆகறீங்க..?!
அவன் சூர்யாவ விட நான் அழகா இருக்கேன்னு ஒத்துகிட்டான் அதான்..... ஹி., ஹி., ஹி....!!!

Saturday, May 13, 2017


" தல.. இந்த போட்டோல பிரபாஸுக்கு பதிலா நீங்க இருந்திருந்தா எப்டி இருக்கும்..?! "
" கேவலமா இருக்கும்..!! "
" ஏன் தல... உங்களுக்கு என்ன...? "
" அட நான் அத சொல்லல... கூட நிக்கற அனுஷ்காவ பாரு.... எனக்கு ஆன்ட்டி மாதிரியில்ல... ஹி., ஹி., ஹி...!! "
#ரொம்ப ஓவரா தான் போறோமோ..?!! போவோம்.. போவோம்...!!

Friday, April 21, 2017

நேத்து என் காலேஜ் ஜூனியர் பய ஒருத்தன வழில பாத்து பேசிட்டு இருந்தேன்... அப்ப....
" எப்டிண்ணே.. இந்த வெயில்ல கூட இவ்ளோ கலரா இருக்க..? "
" ஹி., ஹி., ஹி.. என் அழகின் ரகசியம் என்னான்னா.... "
" ஸ்டாப்.... நீ கலரா இருக்கேனு தானே சொன்னேன்... அழகா இருக்கேனு நான் சொல்லவேயில்லையே... "
#ஞே...!!!

Thursday, April 13, 2017


வித்யாசமா கூவறடா தம்பி.... Vijay Kumar
ஐ லைக் இட்...!!!

Wednesday, April 5, 2017

நேத்து என் மொபைல வாங்கி பாத்தான் என் ப்ரெண்ட் தினேஷ்...
அதுல நான் டெய்லி அலாரம் காலைல 7.55-க்கு வெச்சி இருக்கறத பாத்துட்டு என்னைய கேவலமா ஒரு லுக் விட்டான்...
நல்லவேளை அந்த அலாரம் மிஸ்ஸான இன்னொன்னு 8.35-க்கு வெச்சி இருக்கேன்... அத அவன் கவனிக்கல...
என் மானம் தப்பிச்சது...
பின்ன நாங்கல்லாம் கஸ்தூரிமான் பரம்பரையில்ல... ஹி., ஹி., ஹி....!!!

Saturday, April 1, 2017

10 வருஷம் முன்னால நான் ஒரு ஆபீஸ்ல ஜாயின் பண்ணி இருந்தேன்....
காலைல ஆபீஸ் போனதும் மொத வேலையா மொபைல் எடுத்து என் ப்ரெண்ட்ஸ்கிட்ட பேச ஆரம்பிச்சிடுவேன்...
சும்மா ஒரு அரைமணி நேரம், ஒரு மணி நேரம்னு லைட்டா பேசுவேன்.
இது அங்க இருந்த மேனேஜர்க்கு பொறுக்கல...
ஒரு நாள் என்ட்ட வந்து....
" நீ வீட்லயே இருக்க வேண்டியது தானே... எதுக்கு ஆபீஸ் வர்ற..?! "
" ஹி.,ஹி., ஹி... எங்க வீட்ல சரியாவே சிக்னல் கெடைக்க மாட்டேங்குது சார்.. இங்க தான் ஃபுல் சிக்னல் கெடைக்குது... "
அந்த டேமேஜர் ரொம்ப கோவக்காரர் போல... டக்னு என்னைய வேலை விட்டு போனு சொல்லிட்டாரு...
எனக்கு அப்டியே ஷாக் ஆகிடுச்சு...
நாம இதுவரைக்கும் என்ன வேலை பாத்தோம்... எத விட்டுட்டு போக சொல்றாரு இந்தாளுனு தான்...
ஹி., ஹி., ஹி....!!!

Thursday, March 30, 2017

ரொம்ப நாள் முன்னால என்னை திட்டி ஒருத்தர் கமெண்ட் போட்டிருந்தாப்ல.....
நானும் வழக்கம் போல பொங்கி வந்த கோவத்தை கன்ட்ரோல் பண்ணிட்டு அமைதியா இருந்தேனா...
அத பாத்துட்டு என் ப்ரெண்ட் ரவி போன் பண்ணினான்....
" ஏன் மச்சி... அவன் கேவலமா திட்றான்... உனக்கு ரோஷமே வரலியா...? "
" யாரப் பாத்து, யாரப் பாத்து... இப்டி கேட்டே..? நானெல்லாம் மானத்துல அப்டியே கஸ்தூரிமான் மாதிரி.. "
" அடேய் வெண்ணை.. அது கவரிமான்ரா.. "
" ஹி., ஹி., ஹி.. தெரியும் மச்சி... அப்புறம் கவரிமான் பேரை நான் கெடுத்துட்டேனு எவனாச்சும் கேஸ் போட்டுட்டான்னா.. அதான் சேப்பா... "
# ஆமா இவன் எதுக்கு இப்ப துப்பிட்டு போறான்..?!! கன்பியூசிங்...!!

Friday, March 17, 2017

பங்சன்ல உக்காந்துட்டு இருந்தேன்... பக்கத்துல ஒரு தாத்தா வந்து உக்காந்தாரு...
அப்டியே என்கிட்ட பேச்சு குடுத்தாரு...
" தம்பி.. நீங்க..?! "
வாட்... என்னய தெரியாம கூட இந்த உலகத்துல ஆளுங்க இருக்காங்களா..?! கிரேஸி பீப்பிள்...
என்னை இன்ட்ரோ பண்ணிட்டேன்...
" நல்லது தம்பி... அதோ அந்த மேடையில ஒரு பொண்ணு நிக்குது பாருங்க... "
" எந்த பொண்ணு...?! "
" பச்சை கலர் சுடிதார் போட்டு இருக்குல்ல... "
அங்கே காலேஜ் படிக்கிற ஒரு பொண்ணு பச்சை கலர் சுடிதார்ல நின்னுட்டு இருந்தது...
" ஆமா தாத்தா... "
" அது என் பேத்திபா.. "
ஹைய்யோ.... எங்க போனாலும் நம்மள கல்யாணம் ஆகாத சின்ன பையன்னே நெனச்சிக்கறாங்களே...
" தாத்தா... எனக்கு..... "
" தம்பி அந்த பொண்ணுகிட்ட என் BP மாத்திரை இருக்குபா... கேட்டு வாங்கிட்டு வர்றியா... "
" ஹி., ஹி., BP மாத்திரை தானே... ஓ.கே., ஓ.கே....! "
உஸ்ஸப்பா.... கொஞ்ச நேரத்துல நம்ம BP-ய ஏத்தி விட்டுடறாங்ய்க.....!!
LikeShow more reactions
Comment

Monday, February 20, 2017

" ஹெல்மெட் இல்லாம போனதுக்கு ஒரு டிராபிக் போலீஸ்கார் என்னை மடக்கி 100 ரூபா ஃபைன் போட்டாரு மச்சி.. "
" நீ என்ன பண்ணினே...?! "
நான் அவர் கண்ணை டெரர்ரா உத்து பாத்து...
" சார்... நான் யார்னு உங்களுக்கு தெரியலைனு நெனக்கிறேனு " சொன்னேன்...
" மச்சி... நிஜமாவா சொல்ற.? "
" ம்ம்ம்... அவர் கண்ணுல அப்ப லைட்டா ஒரு மிரட்சி தெரிஞ்சது..? குழப்பமா பாத்தாரு.. "
" அட... "
" நான் தான் சார் பிரபல ஃபேஸ்புக் போராளி கோகுலத்தில் சூரியன் வெங்கட்னு சொன்னேன்.. "
" அப்புறம்..? "
" அப்புறம் என்ன.. அதான் சொன்னேனே... 100 ரூபா ஃபைன் போட்டாருனு.. "
" அது நீ சொல்றதுக்கு முன்னாடி தானே போட்டாரு..?! "
" ஹி., ஹி., ஹி... சொன்னப்புறம் தான் போட்டாரு... "

Thursday, February 16, 2017

" நான் பொண்ணுங்க முன்னேற்றத்துக்காக எவ்வளவோ தியாகம் பண்ணியிருக்கேன்... "
" யாரு நீயி..? மூஞ்ச பாத்தா அப்டி தெரியலியே..?! "
" அட எக்ஸாமுக்கு போனா கூட எங்க ஃபர்ஸ்ட் மார்க் வாங்கிடுவேனோனு பயந்து எத்தினி எக்ஸாம்ஸ் கட் பண்ணியிருக்கேன் தெரியுமா.?! "
டேய்.. டேய்... நில்ரா... ஏன் ஓடிட்டான்...?!!
ஒருவேள ஆணாதிக்கவாதியா இருப்பானோ..?!!

Sunday, February 12, 2017

ஒருத்தன் எனக்கு 10,000 ரூபா தரணும்.. ரொம்ப நாளா டிமிக்கி குடுத்துட்டே இருந்தான்..
இன்னிக்கு எப்படியாச்சும் வசூல் பண்ணாம திரும்ப கூடாதுனு மனசுல கங்கனம் கட்டிட்டு அவன் வீட்டுக்கே போயிட்டேன்...
போனா... இப்ப என்னால குடுக்க முடியாது.. மெதுவா தான் குடுப்பேங்கறான்...
எனக்கு வந்துச்சே கோவம்...
நான் கத்த... அவன் கத்த...
நான் எகிற... அவன் எகிற...
பேச்சு பேச்சா இருக்கும் போதே அந்த படுபாவி பய டக்னு கீழே கெடந்த கட்டைய எடுத்துட்டான்...
பாத்துட்டு நான் மட்டும் சும்மா இருப்பேனா...
நானும் டக்னு என் பாக்கெட்ல இருந்து 500 ரூபாய எடுத்துட்டேன்...
இப்ப அவன் எனக்கு 10,500 ரூபா தரணும்..
ஹி., ஹி., ஹி...!!!

Friday, February 10, 2017


" ஏன் மச்சி ஊரே அரசியல் நெலவரம் பத்தி சீரியஸா ஸ்டேடஸ் போடுது.. நீயும் உன் கருத்தை சொல்லேன்... "
" வேணாம் மாப்ள.. இதெல்லாம் நான் சொன்னா சிரிச்சிடுவாய்ங்க... "

Monday, February 6, 2017

நேத்து ஈவினிங் என் ப்ரெண்ட் கிச்சா போன் பண்ணியிருந்தான்...
" டேய்... பஃங்ஷனுக்கு வர்றப்ப உன்னோட DSLR கேமரா எடுத்துட்டு வந்துடு... "
" DSLR-ஆ..? மேனேஜ் பண்ணிப்பியா..? "
" கொண்டு வா... பேசிக்கலாம்... "
கேமராவ கொண்டு போயி கிச்சா கையில குடுத்தேன்...
" இதுல எப்டிடா Aperture, Shutter Speed எல்லாம் மாத்தறது..? "
( என்ன என்னென்னமோ கேக்கறான்... )
" அதெல்லாம் நீ ஏன் மாத்தற...? இந்த பட்டனை அமுக்கு போட்டோ விழும்... "
" அதெல்லாம் மாத்தாம எப்டிடா போட்டோ எடுக்கறது..?! "
" எதுக்கு மாத்தணும்..?! அதான் இந்த பட்டனை அமுக்குனா போட்டோ விழுதுல்ல.. இப்டி தான் நான் ஒரு வருஷமா எடுத்துட்டு இருக்கேன்... ஹி., ஹி., ஹி... "
" த்து..!! "
நான் கையில கர்சீப் வெச்சிருந்தேன்... நல்லவேள அவன் துப்பினது கேமரா மேல விழல...!!