Showing posts with label Venkoo. Show all posts
Showing posts with label Venkoo. Show all posts

Thursday, August 11, 2016

கிறீச்ச்ச்ச்
----------------
போட்ட பிரேக்கில்
தப்பியது ஓணான்..
ஐயகோ...
கொட்டி விட்டதே
வாங்கி வந்த
சிக்கன் பிரியாணி..!!
- வெங்கூ

Friday, October 30, 2015

மாறி இருப்பார்கள்
என்ற நம்பிக்கையில்
ஓட்டு போடுகிறார்கள்
அவர்கள்...!!
மறந்து விடுவார்கள்
என்ற நம்பிக்கையில்
ஊழல் செய்கிறார்கள்
இவர்கள்...!!
- வெங்கூ
 கவிதைன்னா...
இட்லி மாதிரி
அளவா இருக்கணும்.,
இட்லி மாவு மாதிரி
பொங்கக் கூடாது..!! "
- வெங்கூ

Wednesday, August 26, 2015

எனக்கு கவிதை எழுதணும்னு தோனிச்சுன்னா..
என்னை யாரும் கன்ட்ரோல் பண்ணவே முடியாது..
சும்மா எழுதி தள்ளிட்டே இருப்பேன்..
நானா மனசு வெச்சி நிறுத்தினாத்தான்
உண்டு...
உங்க நல்ல நேரம்...
எனக்கு இன்னிக்கு அப்படி எதுவும் தோனலை...
smile emoticon

Tuesday, March 10, 2015

என் பத்து மெயிலுக்கு
நீ அனுப்புவதோ
ஓரே ஒரு பதில் மெயில்....
அதிலும் எழுதியிருக்கிறாய்..
" இனிமே மெயில் அனுப்பாதே..!! "
- வெங்கூ

Wednesday, January 14, 2015


அவள் அப்படி ஒன்றும் அழகில்லை 
அவளுக்கு தங்கச்சி யாருமில்லை 
அவள் அக்கா ஒன்றும் கலரில்லை 
அதுக்கு இவளே பரவாயில்லை...


Friday, December 26, 2014


ரொம்ப நாள் கழிச்சி இன்னிக்கு
ஒரு கவிதை(?!) எழுதினேன்...
அதை என் ப்ரெண்ட்கிட்ட படிச்சி
காட்டினேன்...
" இதெல்லாம் கவிதையே இல்ல "
" ஏன்டா இதுக்கென்ன..? "
" ஒன்னும் புரியலையே...?!! "
" உனக்கு புரியலைங்கறதுக்காக இதை
கவிதை இல்லன்னு சொல்லுவியா..?
சைனீஸ்-ல பேசினாக் கூடத்தான் உனக்கு
புரியாது... அதுக்காக அதை மொழி
இல்லைனு சொல்லுவியா...?! "
டேய்.. டேய்.. நில்லுடா.. அந்த கவித
பேப்பரையாவது குடுத்துட்டு போடா..
ஓடிட்டான்டா...!!!

Monday, October 14, 2013

எழுதிக்கொண்டிருந்தான்
" குலோபல் வார்மிங் " 
பற்றிய கவிதை..,
ஓடிக்கொண்டிருந்தது 
ஏ.சி... ( அடடே...! )

- வெங்கூ

Sunday, August 18, 2013

நீ
வாய் திறந்தால 
கவிதை., 

வாய் மூடியிருந்தால்.......
Silent கவிதை..!!

- வெங்கூ
படுத்துக்கொண்டு 
மேலே பார்த்தால் 
வானம் தெரியவில்லை..
ஓ.. நான் கிரவுண்ட் ப்ளோரில் 
இருக்கிறேன்..

- வெங்கூ
கழுதைக்கு தெரியாதாம் 
கற்பூர வாசனை..
உனக்கு மட்டும் தெரியுமா 
பேப்பரின் சுவை...?

- வெங்கூ