Showing posts with label General. Show all posts
Showing posts with label General. Show all posts

Wednesday, October 25, 2017

எங்க ஊர்ல இருக்கற சூப்பர் மார்கெட்ல போய் வாங்க சோம்பேறித்தனம் பட்டு ஆன்லைன்ல ஆர்டர் போட்டா...
டெலிவரி மேன் போன் பண்ணி....
" சார் உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு.. இங்க சூப்பர் மார்கெட் பக்கத்துல நிக்கறோம்... வந்து வாங்கிக்கோங்கனு " சொல்றான்...

Wednesday, July 12, 2017

பிக் பாஸ் 1 முடிஞ்சதும்...
Shajahan S -க்கு ஜூலியையும்,
Maram R-க்கு ஓவியாவையும் பேசி முடிக்கறோம்..
எத்தனை பிரச்னை வந்தாலும்.. Ramesh Subburaj-ஐ பலி குடுத்தாவது இந்த கல்யாணத்தை நடத்தி காட்டுறோம்...
இது டெரர் கும்மி மீது ஆணை...!!!

Sunday, June 25, 2017

இந்த கன்றாவி " பிக் பாஸ் " பாக்க பிடிக்கலைன்னா டிவியை ஆஃப் பண்ணி வெச்சா மட்டும் போதாது...
கூடவே ஃபேஸ்புக் அக்கவுண்டையும் டீஆக்டிவேட் பண்ணி வெச்சிடணும்....
முடியலடா.... விட்டுடுங்கடா...
#BigBoss அலப்பரைஸ்...!!

Tuesday, June 20, 2017

பழைய போன் ஸ்லோவா இருக்குன்னு புது போன் வாங்க வேண்டியது...
அதுல பழைய போன்ல இருக்குற எல்லா Apps -ம் இன்ஸ்டால் பண்ணிட்டு...
ஐய்யோ... புது போனும் ஸ்லோவா இருக்கேனு பொலம்ப வேண்டியது...
திருந்துங்கடா டேய்....
#புது போன் அலப்பரைஸ்...

Saturday, May 27, 2017

ஓ... பிரியா பிரியா....
இந்த வீடியோல பர்ஸ்ட் ஹாப் மனோ பாடினது (தமிழ்), செகண்ட் ஹாப் SPB (தெலுங்கு)..
எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.. இந்த படம் நான் ஸ்கூல்ல படிச்சிட்டு இருந்தப்ப வந்தது..
அப்ப நான் LKG படிச்சிட்டு இருந்தேன்... சரி., சரி.. UKG படிச்சிட்டு இருந்தேன் போதுமா..
இந்த பாட்டை யார் நல்லா பாடியிருக்காங்கனு நான் கேக்க மாட்டேன்...
ஏன்னா... நான் பாடி நீங்கல்லாம் இன்னும் கேட்டதேயில்லையே... ஹி., ஹி., ஹி...
கூல் டவுன்... கூல் டவுன்.. பொறுமை எருமைய விட பெருசில்லையா...?!!
என் டவுட்டே வேற....
நானும் இந்த படத்தை ரிவைண்ட் பண்ணி, பார்வேட் பண்ணி எல்லாம் பாத்துட்டேன்...
எனக்கு ஒன்னே ஒன்னு தான் தெரியணும்...
யார்ரா அந்த பிரியா..?!

Tuesday, January 31, 2017

ஒரு ஆஸ்பத்ரியில பொறந்த தமிழனா இருந்தா.... 
அர்த்தம் சொல்லிட்டு போ.....


Monday, January 30, 2017


இப்டி ஒரு Facility இங்க இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்னு Jayanthi Shekhar ரொம்ப ஃபீல் பண்ணினாப்ல..
இருக்கே... அல்ரெடி இங்க இருக்கே...
இங்க அதுக்கு பேரு.... 
.
.
.
" டாஸ்மாக் "
:P

Saturday, November 19, 2016


இது மிகவும் நல்ல சிறப்பான முடிவு...
மிகவும் நல்ல சிறப்பான முடிவு...
நல்ல சிறப்பான முடிவு...
சிறப்பான முடிவு...
முடிவு..!!
!!
#கதம் கதம்...

Tuesday, November 15, 2016

கருப்பா இருக்கறதெல்லாம் கருப்பு பணம்னு பேசிட்டு இருந்தவனெல்லாம் இன்னிக்கு பொருளாதார மேதை ரேஞ்ச்க்கு பேசறான்...
2000 ரூபா நோட்டாமாம்...
சாட்லைட் கனெக்ஷனாமாம்...
பதுக்கி வெச்சா அதுவே இன்கம் டேக்ஸ் ஆபீஸ்க்கு போன் பண்ணுமாமாம்...
# சத்தியமா முடியலடா...!!!
அமெரிக்கத் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி...
# ஏ அமெரிக்க ஆணாதிக்க ஏகாதிபத்தியமே....
500, 1000 ரூபா..
இல்லியேனு ஃபீல் பண்ணினவன் இப்ப ஹேப்பியா இருக்கான்...
இருக்குனு ஹேப்பியா இருந்தவன் இப்ப ஃபீல் பண்ணிட்டு இருக்கான்..
இத தான் " வாழ்க்கை ஒரு வட்டம்னு " அன்னிக்கே எங்க விஜய் அண்ணா சொன்னாரு...

Saturday, August 20, 2016


" JIO வேற... ரிலையன்ஸ் 4G வேற,,, "
" அப்படியா..? "
" ஆமா.. ஜியோ அண்ணன்து ( முகேஷ் ) ,
ரிலையன்ஸ் 4G தம்பிது ( அனில் ) "
" சரி ரெண்டுக்கும் என்ன வித்யாசம்..? "
" சிம்பிளா சொல்லணும்னா...
ஜியோ 4G.., ரிலையன்ஸ் ஃபோர்ஜரி..! "
# கதம் கதம்..!!

ரிலையன்ஸ் கோல்மால்
------------------------------------------

நான் ரிலையன்ஸ் 3G-ல 40 GB ப்ளான்ல கனெக்ஷன் எடுத்தேன்.. மாசம் பில் 1150 ரூபா வரும்.
கனெக்ஷனும் ஒன்னும் மோசமில்ல.. 4 மாசமா நல்லா தான் போயிட்டு இருந்தது..
திடீர்னு 4G-க்கு மாறப்போறோம்.. எக்கசக்க ஸ்பீடு வரும்.. நீங்க அதே ப்ளான்ல கண்டினியூ பண்ணலாம்னு போன் பண்ணினாங்க..
3200 ரூபா டிவைச 900 ரூபாய்க்கு உங்களுக்கு குடுக்கறோம்.. நீங்க எங்களுக்கு முக்கியமான கஸ்டமர்னு சொன்னாய்ங்க.. நம்பி வாங்கிட்டேன்..
போன வாரம் 4G சர்வீஸ் ஓபன் ஆகிடுச்சு.. என்ஜாய்னு மெசேஜ் வந்தது..
நானும் புது டிவைச ஆக்டிவேட் பண்ணி யூஸ் பண்ணினேன்.. ஸ்பீடு ஒரே மாதிரி இல்ல..
7 Mbps-ம் வந்தது 1 Mbps-ம் வந்தது..
சரி போக போக சரியா போயிடும்னு யூஸ் பண்ணிட்டு இருந்தேன்..
இன்னிக்கு பில் வந்து இருக்கு.. 1800 ரூபா..
அதாவது நான் 3G-ல 22 GB தான் யூஸ் பண்ணி இருக்கேன்.. அதுலயே 18 GB மிச்சம் இருக்கு..
ஆனா அதுக்கு 1150 ரூபா எப்பவும் போல..
4G-ல 3.5 GB (4 நாள்ல) யூஸ் பண்ணியிருக்கேன்.. அதுக்கு 650 ரூபா (With Tax)
என்னடா இது கோல்மாலா இருக்குனு கஸ்டமர்கேர்க்கு போனை போட்டா..
உங்க ப்ளானை மாத்திட்டோம்னு சொல்றாய்ங்க.. வந்துச்சே கோபம்..
1. அதே ப்ளான்ல கண்டினியூ ஆகலாம்னு ஏன் பொய் சொல்லி டிவைஸ் வித்தீங்க..?
2. ப்ளான் சேஞ்ச் பண்ண போறோம்னு ஏன் எங்கிட்ட தகவல் குடுக்கல..
3. கஸ்டமர் என்ன உங்க அடிமையா.. நீங்களா இஷ்டத்துக்கு அந்த ப்ளான்., இந்த ப்ளான்னு மாத்தறதுக்கு..?
4. இந்த 650 ரூபாய்க்கு நீங்க எனக்கு பதில் சொல்லியே ஆகணும்.. இல்லன்னா ஃபேஸ்புக்ல இத போஸ்ட்டா போடுவேன்.. எனக்கு 5000 ஃபாலோயர்ஸ் இருக்காங்கனு மிரட்டி பாத்தேன்..
எங்க மேல் அதிகாரிக்கு கனெக்ட் பண்றோம்னு சொன்னாங்க.. ஆனா ஒரு ரெஸ்பான்ஸூம் இல்ல..
இவங்கள என்னால என்ன பண்ண முடியும்னு தெரியல.. ஆனா எதாச்சும் பண்ணனும்..
அட்லீஸ்ட் இத பாத்து நாலு பேராவது ரிலையன்ஸ்ல மாட்டாம தப்பிச்சா போதும்..

Thursday, August 11, 2016

மதியம் ரிலையன்ஸ் ஆபீஸ்க்கு போன் பண்ணினேன்.. 
அங்கிருந்த பொண்ணு பேசிச்சு...
" சொல்லுங்க சார்... "
" நெட் ஸ்பீடாவே இல்லங்க.. "
" 15-ம் தேதி வரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கோங்க சார்.. "
" அப்புறம் சரியாகிடுமா..?!! "
" ஹி., ஹி., ஹி.. இல்ல பழகிடும் சார்..!! "
# அடிங் கொய்யாலே..

Thursday, July 28, 2016

" அங்கே என்ன அவ்ளோ கூட்டம்..? கபாலி படத்துக்கா,,? "
" இல்ல.. அங்கே ஒருத்தன் எனக்கு உப்புமானா ரொம்ப பிடிக்கும்னு சொன்னான்.. அவனை பாக்க தான் கூட்டம் கூடிட்டாய்ங்க.. "
# இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்..!!

Tuesday, June 21, 2016


" புதுசா இன்டெக்ஷன் வாங்கி குடுத்திருக்கார்....
சர்ப்ரைஸ் கிப்ட்.... இப்போ நான் அவருக்கு
சர்ப்ரைஸ் குடுக்கணும்.... உப்புமா செய்யலாமானு
யோசிச்சிங்.... "
" உப்புமாவா..?!! அவ்வ்வ்...!! உன் வூட்டுக்காரர்
கேட்டாரா..? "
" இல்ல.. அவரு பொங்கல் தான் கேட்டாரு.."
" அப்ப உனக்கு உப்புமானா ரொம்ப பிடிக்குமா..? "
" உவ்வ்வே...!!! "
" உவ்வேவா..?!! உன் வூட்டுக்காரர் பொங்கல்
தானே கேட்டாரு.. நீ எதுக்கு உப்புமா
செய்யறேனு ஒத்த கால்ல நிக்கறே..?! "
" நானும் ஏர் பிரையர் தானே கேட்டேன்... அவரு
எதுக்கு எனக்கு இன்டெக்ஷன் வாங்கி குடுத்தாரு..? "
# உப்புமாடா... ஓடிடுடா..!!

டேய்... கேள்வி கேக்கறேன்... பரிசு கொடுக்கறேனு 
சிவக்குமார் ஃபேமிலில பிரச்னைய கிளப்பி விட்டுடாதீங்கடா...

Thursday, June 2, 2016

டிஸ்கவரி சேனல்ல காட்றானுங்க...
என்னமோ இமயமலைல ஏறிட்டோம்.,
அமேசான் ஆற்றை நீந்தி்ட்டோம்.,
நயாகரால இருந்து குதிச்சி்ட்டோம்.. 
சாகசம் பண்ணிட்டோம்னு ஓவரா சீன் போடறானுங்க...
எங்க தில் இருந்தா வந்து... 

சேலம்-திருச்சி மெய்ன் ரோட்டை இந்த பக்கம் 
இருந்து அந்த பக்கம் கிராஸ் பண்ணி காட்டுங்கடா பாப்போம்....

# நாங்கல்லாம் தினம் தினம் சாகசம் பண்ணிட்டு இருக்கோம்டா...!!!