Showing posts with label Tv. Show all posts
Showing posts with label Tv. Show all posts

Saturday, July 15, 2017

" இந்த விஜய் டிவி ' சூப்பர் சிங்கர் '-ல எல்லாம் ஏகப்பட்ட பாலிடிக்ஸ் இருக்குபா.. "
" தெரியுமே... அதனால தான் நான் கலந்துக்கறது இல்ல...! "
" ஙே...!! "

Thursday, February 9, 2017

டேய் டேய்.. இந்த ப்ரேக்கிங் நியூஸ் எல்லாம் நைட் 11 மணிக்கு முன்னாடியே போட்டுடுங்கடா...
தப்பி தவறி சேனலை மாத்திட்டா... இந்த டாக்டருங்க தொல்லை தாங்கலடா..

Wednesday, November 30, 2016

ஆக்சுவலி ரெண்டு வருஷம் முன்னால "நீயா நானா"ல கலந்துக்க வர சொல்லி போன் வந்தது...
" ஏன் கோபி வேலைய விட்டு போயிட்டாரானு " கேட்டேன்.
போனை டக்னு வெச்சிட்டாங்க...
நாம கலந்துகிட்டதுக்கப்புறம் கோபி வேலைய விட்டு போயிட்டா.. பழி நம்ம மேல வந்துடுமேனு ஒரு சேப்டிக்கு கேட்டா....
அதுக்கு போயி..... ஹி., ஹி., ஹி...!!!
விஜய் டிவிக்கும்., நீயா நானா டீம்க்கும் என் நன்றி...!!
.
.
.
" நீயா நானால " கலந்துக்க வரச்சொல்லி எனக்கு போன் எதுவும் வரல....
ஏன் போன் வந்தா தான் நன்றி சொல்லணுமா என்ன...?!

Wednesday, June 29, 2016

ரெண்டு மாசம் முன்னாடி ஒரு மெகா சீரியல்ல
அண்ணி கேரக்டர் செத்து போயிடுச்சு...
நேத்து எதேச்சையா அந்த சீரியல் பாத்தேன்...
அண்ணி செத்து போச்சுனு அழுதுட்டு இருந்தானுவ...
# டேய்.... இன்னுமாடா...?!!

Wednesday, May 18, 2016

" டைரக்டர் சார்... இன்னிக்கு என்ன சார் சீன்..?! "
" ஹீரோவோட தங்கச்சியை காணாம போக 
சொல்லு.. இவங்க எல்லாம் தேடட்டும்.. "
" அவங்க போன வாரம் காணாம போயி.. 
நேத்து தான் சார் கெடைச்சாங்க.. "
" ஆமால்ல... சரி.. இன்னிக்கு ஹீரோவோட 
தம்பிய காணாம போக சொல்லு.. இவங்க தேடட்டும்.. "
" ரைட் சார்..!! "
# மெகா சீரியல் அலப்பரைஸ்...!!!

Sunday, April 17, 2016

நடிகர் / நடிகைகள் கலந்துக்கிற ப்ரோகிராம்
எவ்ளோ கேவலமா இருந்தாலும் எங்க வீட்ல
அத தான் பார்ப்பாங்க...
மதியம் லஞ்ச்க்கு போகும்போது பயந்துட்டே 
போனேன்...
எப்படியும் "நட்சத்திர கிரிக்கெட்" தான் ஓடிட்டு
இருக்க போவுதுனு...
போயி பாத்தா...
டிவி ஆஃப் பண்ணி வெச்சி இருந்தது...!!!
# தட் கரடியே காறி துப்பின மொமெண்ட்..!!!

Thursday, March 24, 2016

ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கேமரூன்
" நாளைய இயக்குனர்ல " கலந்துக்க வந்தாலும்
சேர்த்துக் கொள்வோம்... ரூல்ஸ் அலோவ் பண்ணுது,,
- " நாளைய இயக்குனர் " ஹெட்

சூப்பர் சிங்கர் ப்ராடு மீம்ஸ்..





Saturday, March 19, 2016

நேத்து நைட், விஜய் சூப்பர் சிங்கர் ரிசல்ட் அறிவிச்சவுடனே...
"த்த்த்தூ..!!"
"இப்ப எதுக்குங்க துப்புனீங்க..?!"
"நான் ஒரு ஃபேஸ்புக் போராளி.. எங்க அநியாயம்
நடந்தாலும் என் கண்டனத்தை பதிவு பண்ணுவேன்.."
"அதுக்கெதுக்கு நம்ம டிவி மேல துப்புனீங்க..??"
"ஓ மை காட்.. இது நம்ம டிவில்ல.."
# ஓடிர்றா கைப்புள்ள
" நிர்மலா.. அடுத்த வருஷம் சூப்பர் சிங்கர்ல
நானும் கலந்துக்கலாம்னு இருக்கேன்.. "
" என்ன மாமு சொல்றீங்க..? உங்களுக்கு
பாட்டெல்லாம் பாட தெரியுமா..?!! "
" சுமாரா பாடுவேன்.. "
" அப்புறம் எந்த தைரியத்துல சூப்பர் சிங்கர்ல
கலந்துக்கறேனு சொல்றீங்க..?! "
" அட அங்க சுமாரா பாடுறவங்களுக்கு தான்மா
அவார்ட் குடுப்பாய்ங்க.. "
# விசய் டிவி ராக்ஸ்.. த்த்த்தூ..!

Thursday, February 11, 2016


இந்த நாடகத்துல எல்லோருமே சுமாராத்தான் இருக்காங்க..
அப்புறம் என்னாத்துக்குடா " அழகி " னு பேரு வெச்சீங்க..?!!

Thursday, October 22, 2015



இதுக்கு " அழகி "-னு பேரு வெச்சதுக்கு பதிலா
" அழுவாச்சி "-னு வெச்சிருக்கலாம்...
# மிடில...!!

Monday, October 5, 2015

நேத்து " சரவணன் - மீனாட்சி " - PS




நேத்து " சரவணன் - மீனாட்சி " சீரியல்ல ஒரு டலயாக்..

சரவணன் ஆடியன்ஸை பாத்து.. 

" இந்த பொம்பளைங்கள புரிஞ்சிக்கவே முடியலையே..
தப்பெல்லாம் அவங்க பண்ணிட்டு நம்மள திட்றாங்க.., 
அப்புறம் நம்மளையே மன்னிப்பு கேக்க வெச்சிடறாங்க.." 

இதை கேட்டு நான் நமுட்டு சிரிப்பு எதாவது 
சிரிக்கிறேனான்னு என் Wife என்னை உத்து பாத்தாங்க.. 
ஆனா நான் சிரிக்கலையே..

அடக்கிக்கிட்டேன்.. 


கோபி Vs டி.டி - PS


Saturday, September 19, 2015

" நம்ம படம் சூப்பர் ஹிட்டாக ஒரு ஐடியா
சொல்லுங்க.. "
" டிவி ரைட்ஸ்சை சன் டிவிக்கு குடுத்துடுங்க... "
# திரைக்கு வந்து சில வாரங்களேயான
" சூப்பர் ஹிட் " திரைப்படம்.. உங்கள் சன் டிவியில்...
இந்த " டோலக்பூர் " இந்தியால தானே
இருக்கு..?!!
அப்ப பாகிஸ்தான் கூட War வந்தாக்கூட
கவலைப்பட தேவையில்ல..
சோட்டா பீம் பாத்துப்பான்..!!

Saturday, August 29, 2015



ஐய்யயோ... இது விஜய் டிவிக்காரன் கண்ணுல 
சிக்குனா.. மெகா சீரியலா எடுத்து கொலையா கொல்லுவானே...

Saturday, July 11, 2015

கிரிக்கெட்டை கூட நிம்மதியா பார்க்க
விடாமா இப்டி திருட்டுத்தனமா பார்க்க
வெச்சிட்டீங்களேடா....
ஓவருக்கு ஓவர் ஜிம் வெளம்பரம்..
# இதெல்லாம் ரொம்ப ஓவரு...!!!