Showing posts with label Thought. Show all posts
Showing posts with label Thought. Show all posts

Wednesday, April 12, 2017

டியர் லேடீஸ்....
நீங்க எப்ப லீவ்க்கு அம்மா வீட்டுக்கு போனாலும் நாலே நாள்ல உங்க வூட்டுக்காரரு போன் பண்ணி...
" எப்ப வர்ற..? எப்ப வர்றனு..? " கேக்கறார்னா.. உடனே அத லவ்னு நெனச்சி பூரிச்சி போயிடாதீங்க...
ஹோட்டல்ல சாப்பிட்டு வயிறு பேஜாராகிடுச்சினு அர்த்தம்...!!!
#தூம் தத்த்தா...!!!

Friday, February 3, 2017

க்யூட் ஈஸ் எ வேர்ட்..
லட்டு ஈஸ் an எமோஷன்..
:) :)

Saturday, December 31, 2016

ஒரு பிரியாணிய ஒன் பை டூ (1/2) ஷேர் பண்ணும் போது... என் ப்ளேட்டை விட அங்கிட்டு அதிகமா போன மாதிரி தோன்றது எனக்கு மட்டும் தானா..?!!
#வொய் ஐ ஹேட் ஷேரிங்...!!

Thursday, August 11, 2016

"இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் " என்பது தான் இப்போது ஃபேஸ்புக்கில் டிரெண்டிங்...
இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்...?!
‪#‎சாவுங்கடே‬ ஸ்டேட்டஸ்
ப்ளாக் & ஒயிட் படத்தை கலர் டிவில பாத்தாலும்.... 
அது ப்ளாக் & ஒயிட்டில தான் தெரியும்..
இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்...?!
‪#‎சாவுங்கடே‬ ஸ்டேட்டஸ்

Thursday, July 28, 2016

எது புதுசா டிரை பண்ணி நல்லா வரலைன்னாலும் அதுக்கு உப்புமானு பேரு வெச்சிடறாங்க..
# ரவா உப்புமா., கோதுமை உப்புமா, அவல் உப்புமா..

Saturday, July 23, 2016

அப்பல்லாம் வேற பேர்ல எழுதினா...
புனை பெயர்னு சொன்னாங்க...
இப்ப ஃபேக் ஐடினு சொல்றாங்க...
# ம்ம்ம்...

Thursday, June 30, 2016



நமக்கு ஒரு பொருள் பிடிச்சி இருக்கு.. 
ஆனா பட்ஜெட் இடிக்குது...

அப்ப என்ன பண்ணனும்னா... 

நமக்கு அது ரொம்ப பிடிச்சிருக்குனு அடிக்கடி சொல்லி 

Wife மனசுல ஆழமா பதிய வெக்கணும்...

பர்த்டே கிப்டா கிடைக்கறதுக்கு சான்ஸ் இருக்கு... 

ஹி., ஹி.,ஹி...!!!

# சர்ப்பிரைஸ்...!!!

Thursday, June 23, 2016

" நானும் உங்கள மாதிரி டெய்லி 100 லைக்ஸ் வாங்கணும்.. 
எதாவது ஐடியா குடுங்க ஜி..!! "
" டெய்லி என் போஸ்ட்டை ஷேர் பண்ணுங்க ஜி... "
# நாங்கல்லாம் ஊருக்குள்ள பல பேருக்கு ஐடியா குடுக்கறவங்க..  

Sunday, June 12, 2016



" என்ன இது.. பூரா வெத்து பேப்பரா இருக்கு..
ஒண்ணுமே எழுதல.. "
" கடைசி பக்கத்துல பாரு.....
.
.
.
.
.
.
.
.
.
.
நல்லதா ஒரு கால்குலேட்டர் வாங்கிக்கங்கனு
எழுதி இருக்கேன்.. ஹி., ஹி., ஹி..!! "

Friday, June 10, 2016

வெங்கி.. நம்ம படத்தை எல்லோரும் "சூப்பர்"-னு 
சொல்லணும்.. அதுக்கு ஒரு ஐடியா குடேன்....
படத்துக்கு "சூப்பர்"-னு பேரு வை.... அப்ப 
சொல்லித்தானே ஆகணும்..!!
# ஐடியா குடோன்..!!

Sunday, March 20, 2016

பொண்டாட்டிக்கு ஐஸ் பாடம் 1 to 5

" ரொம்ப நேரமா ட்ரை பண்றேன்... உங்க
மொபைல் பிஸி., பிஸின்னே வருது..
அப்படி யார்கிட்ட பேசிட்டு இருந்தீங்கன்னு..? "
பொண்டாட்டி எப்ப கேட்டாலும்....
டக்னு யோசிக்காம சொல்லணும்...
" அட இவ்ளோ நேரம் உனக்குத்தாம்மா
ட்ரை பண்ணிட்டு இருந்தேன்...."
# பொண்டாட்டிக்கு ஐஸ் பாடம் 1

=======================================

ரொம்ப நேரமாச்சு நீங்க Wife கிட்ட பேசி..
வெறுத்து போய் அவங்களே உங்கள
கூப்பிடுறாங்க...
அப்போ என்ன பண்ணுவிங்க??
ரொம்ப simple ..
" 100 வயசுடா செல்லம்.. இப்பத்தான் உனக்கு
கால் பண்ண நான் போனை எடுத்தேன்...
நீயே correcta கால் பண்ணிட்டே... "
ஹி., ஹி., ஹி....!!
# பொண்டாட்டிக்கு ஐஸ் பாடம் - 2

=======================================

Wife வெள்ளி கொலுசு கேக்கறாங்க..
பட்ஜெட் கொஞ்சம் டைட்டு..
யோசிக்காம டக்னு எடுத்து விடணும்....
" தங்கசிலைக்கு எதுக்குடா செல்லம்
வெள்ளி கொலுசு..?!! "
# பொண்டாட்டிக்கு ஐஸ் பாடம் - 3

=======================================

" ஏங்க நைட்டுக்கு உப்புமா செய்யவா..? "
" மத்தவங்க செஞ்சாத்தான் அதுக்கு பேரு உப்புமா..
உன் கைப்பட்டா அதுக்கு பேரு அமிர்தம்டா தங்கம்.. "
# பொண்டாட்டிக்கு ஐஸ் பாடம் - 4

========================================

" ஏங்க இந்த பச்சை கலர் புடவைல
நான் அழகா இருக்கேனா..? "
" நீ கட்டிட்டு இருக்கறதால அந்த
பச்சை கலர் புடவைதான் செல்லம் 
அழகா இருக்கு..! "
# பொண்டாட்டிக்கு ஐஸ் பாடம் - 5

Wednesday, February 3, 2016


" முயற்சி பண்ணினா முடியாதது
எதுவும் இல்ல"-னு சொல்றாங்க..
நான் சும்மா ஒரு பேச்சுக்கு கேக்கறேன்...
எவ்ளோ தான் முயற்சி பண்ணினாலும்
நானும் காத்ரீனாவும் ஒரு படத்துல ஜோடியா
நடிக்க முடியுமா..?!!
ஐ மீன்... காத்ரீனா எவ்ளோ தான் முயற்சி பண்ணினாலும்...
ஹி., ஹி., ஹி...!!!

Wednesday, September 30, 2015

பலாப்பழம் சாப்பிட்டுட்டு கோகோ- கோலா
குடிச்சா.. அது 5 பாம்பு விஷத்துக்கு சமமாம்..
அப்ப.. பாம்பு விஷத்துல இருந்து தயாரிக்கற
மருந்தை இனிமே இதுல இருந்து தயாரிங்கடே...
# ஷேர் ஆட்டோல போறதுன்னா கூட
யோசிக்கறானுங்க.. இந்த மாதிரி
கண்ட கருமத்தை ஷேர் பண்றப்ப மட்டும்
யோசிக்கவே மாட்டேங்கறானுங்க..
( ஹைய்யா... ரைமிங்..!! )

Saturday, July 11, 2015

" என்னங்க பண்ணிட்டு இருக்கீங்க..? "
" குருபெயர்ச்சி பலன்கள்.. படிச்சிட்டு
இருக்கேன்... "
" ஆச்சரியமா இருக்கு... இதெல்லாம் நீங்க
படிக்க மாட்டீங்களே...!?! "
" இது போன குருபெயர்ச்சி பலன்...
இதுல சொன்ன மாதிரி எதுனா நடந்து
இருக்கான்னு செக் பண்ணிட்டு இருக்கேன்... "
# நாங்கல்லாம் யாரு..!!!

Sunday, June 7, 2015


பொண்டாட்டிக்கு மொபைல் வாங்கி தந்தா..
நம்மள விட காஸ்ட்லியான மொபைலா
வாங்கி தந்திடணும்..
.
.
.
.
.
.
.
.
அப்ப தான் நம்ம மொபைல நோண்டாம
இருப்பாங்க...
# சேப்டி டிப்ஸ்... tongue emoticon

Tuesday, May 26, 2015

எல்லோரும் " மாஸ்டர் ஃபிளான்..,
மாஸ்டர் ஃபிளான்" -னு சொல்றாங்களே...
யார்ரா அந்த மாஸ்டர்..?
# ஃபீலிங் கன்பியூஸ்ட்

Sunday, May 24, 2015

கூட்டமா இருக்குற எடத்துல
ஒருத்தன் மட்டும் தனியா இருக்கான்னா....
.
.
.
.
.
.
.
.
அவன் ஃபேஸ்புக்ல ஸ்டேடஸ் அப்டேட்
பண்ணிட்டு இருக்கானு அர்த்தம்..
# ஃபேஸ்புக் போராளி அப்டேட்ஸ்
100 லைக் வந்துடுச்சின்னு ஓவரா குதிக்காதே..
உன் ப்ரெண்ட் லிஸ்ட்ல மொத்தம் 1750 பேரு..
அப்ப 1650 பேருக்கு பிடிக்கலைன்னு அர்த்தம்டா
வெண்ணை...!!
# தட் ஙே மொமெண்ட்..!!