Showing posts with label Eating. Show all posts
Showing posts with label Eating. Show all posts

Thursday, December 21, 2017

நேத்து நைட் ஆனந்தை பாக்க போனேன்... தெரு என்டர் ஆகும் போதே.. அங்க நிக்கறான்...
அங்கயே ஓரமா நின்னு கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம்..
வீடு பக்கத்துல தான் இருக்கு.. ஏன் அங்க கூப்பிடாம இங்க நிக்க வெச்சி பேசிட்டு இருக்கான்..?! கழட்டி விட பாக்கறானோ..?!!
" வாடா ஆனந்த்... உன் வீட்டுக்கு போயி பேசலாம்.. "
" அது... வித்யா ஊருக்கு போயிருக்காடா.. "
" அதனால என்ன...?! "
" டின்னர்க்கு நாலு சப்பாத்தி தான் சுட்டு வெச்சிட்டு போயிருக்கா.. "
" அட லூசுப்பயலே.. இதுக்கா இப்டி யோசிக்கிறே.. எனக்கு நட்பு தான்டா முக்கியமனு " வீட்டுக்கு இழுத்துட்டு போயிட்டேன்...
அப்புறம் என்ன... நட்புக்காக வெறும் நாலே நாலு சப்பாத்திய நான் அட்ஜஸட் பண்ணிக்கிட்டேன்..
ஆனா நான் சாப்பிடும் போது அவனுக்கும் அரை சப்பாத்திய குடுத்தேன்..
வேணாம்னு சொல்லிட்டான்.. பசிக்கலை போலிருக்கு..
நல்லவேள... நான் போகலைன்னா நாலு சப்பாத்தி வேஸ்ட்டால்ல போயிருக்கும்... ஹி., ஹி., ஹி...
டிஸ்கி: என்னை தப்பா நெனக்காதீங்க... அப்டியெல்லாம் என் ப்ரெண்ட்டை பட்டினியா தூங்க விட்டுடுவேனா...
ஹோட்டல்க்கு வற்புறுத்தி கூட்டிட்டு போயி... அவன் ரெண்டு தோசை.. நான் நாலு தோசை சாப்பிட்டோம்ல.. ( அவன் காசுல... நான் காசு குடுக்கறேனு சொன்னா.. கோவப்படுவான்.. ) 

Sunday, October 22, 2017

பங்சுவாலிட்டினா... இந்த வெங்கி தான்...
எங்கூர்ல யாராச்சும் வாட்சுக்கு டைம் வெக்கணும்னாலே நான் போறதை பாத்து தான் வெப்பாங்கன்னா பாத்துக்கோங்க...
டீ சாப்பிட டீக்கடைக்கு போனா... மணி 11..
வடை சாப்பிட போனா.. மணி 12.
லஞ்சுக்கு வீட்டுக்கு போனா... மணி 1.
பப்ஸ் சாப்பிட போனா... மணி 4.30
டின்னர்க்கு போனா... மணி 8.
நேத்து நைட் நானும் ரவியும் ஆனந்த் வீட்டுக்கு போயிருந்தோம்...
டின்னர் அங்க தான்...
சப்பாத்தி வித் எக் மசாலா..
நானும் ரவியும் சப்பாத்தி சாப்பிட்டுட்டு இருந்தோம்...
நான் ஒவ்வொரு சப்பாத்தியா கேட்டு வாங்கி சாப்பிட்டுட்டு இருந்தேன்... அத பாத்துட்டு ரவி...
" ஏன்டா வெச்சிக்கும் போதே ரெண்டு ரெண்டா வெச்சிக்கலாம்ல... "
" ம்ம்.. நீ எத்தனை சப்பாத்தி வெச்சிட்டே...? "
" பர்ஸ்ட் 3 இப்ப 1.. மொத்தம் நாலு... "
" சரி நான் எத்தனை வெச்சிட்டேன் சொல்லு...?! "
" தெரியலியே... "
" தெரியலைல்ல.. அதுக்கு தான் இப்டி... ஹி., ஹி., ஹி...!! "

Friday, September 15, 2017

ஹோட்டல் அஸ்வா பார்க்... மேரேஜ் ரிசப்ஷன்...
டின்னர்ல எல்லாமே சூப்பர்... அதுல பர்டிகுலரா ரசமலாய் சூப்பரோ சூப்பர்...!!
என் தம்பி பொண்ணு ஹரினிய கூப்பிட்டு இன்னொரு ரசமலாய் எடுத்துட்டு வரச் சொன்னேன்...
எடுத்துட்டு வந்து குடுத்தா... சாப்பிட்டதும்..
" இன்னொன்னு எடுத்துட்டு வா... போ.. "
" போங்கப்பா... நான் மாட்டேன்... "
" ஏய்... என்ன ஒண்ணுக்கே சலிச்சிக்கிற.. கோகுல் 3 வாங்கிட்டு வந்து குடுத்தான்., வந்தனா 2 வாங்கிட்டு வந்து குடுத்தா... போ... போ.. "
" அப்பா... நீங்க 6 ரசமலாயா..?! "
" ஹேய்.. கணக்கு தப்பா சொல்லாதே..."
" 3+2+1 = 6 தானே...?! "
" ஹி., ஹி., மொதல்லயே நான் 2 சாப்பிட்டேனே அது...?! "
" ஆ...!!! "
என் வயித்துலயே குத்திட்டு போகுது...!!!
வேற யாரை புடிக்கலாம்..?!!
" ஹேய் அருண்... இங்க கொஞ்சம் வாயேன்....!! "
ஹி., ஹி., ஹி....!!!

Saturday, September 2, 2017

இப்ப திருப்பூர்ல ஒரு கல்யாணம்... கார்ல போயிட்டு இருக்கேன்...
மாப்பிள்ளையும் டாக்டர், பொண்ணும் டாக்டர்...
ஆக்சுவலி இந்த கல்யாணம் பிக்ஸ் ஆக காரணமே நானும் என் சகலையும் தான்...
பொண்ணு வீட்டு சைடுல என் சகலை.. மாப்பிள்ளை சைடுல நானு... 6 மாசம் விடாம ரெண்டு பக்கமும் பேசி ஃபிக்ஸ் பண்ணினோம்...
கனெக்டிங் பீப்பிள்...!! ஹி., ஹி., ஹி...!!
ஒருநாள் என் சகலை என்கிட்ட கேட்டாரு...
" இவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கோமே.. கல்யாணத்துல நம்மள கவனிப்பாங்களா..?! "
" கவலைப்படாதீங்க சகலை நமக்கு கல்யாணத்துல கட்அவுட் வெப்பாங்க... "
இப்ப எனக்கு முன்னாடி என் சகலை மண்டபம் போயிட்டு போன்ல கூப்பிட்டாரு....
" சகலை.. நமக்கு கட்அவுட் எதுவும் வெக்கல.. "
" என்னாது கட்அவுட் வெக்கலையா..?! "
" ஆமா சகலை... பா.சிதம்பரம் வர்றாராம்.. அவருக்கு வெச்சியிருக்காங்க.. "
( பா.சிதம்பரமா..?! அவருக்கு எதுக்கு..? ஒருவேள நம்பள விட... சே.. அவர் மினிஸ்டர்ல... )
எனக்கு வந்துச்சே கோவம்... காரை அப்டியே திருப்பலாம்னு நெனச்சேன்...
" சகலை... கெளம்பி வாங்க... இன்னும் மண்டபத்துல என்ன பண்றீங்க..?! "
" இங்க பஃப்பேல ஏகப்பட்ட வெரைட்டி சகலை.. "
அரை மைக்ரோ செகன்ட் யோசிச்சேன்..
" சரி விடுங்க பெரிய மனசு பண்ணி கல்யாண வூட்டுக்காரங்கள மன்னிச்சிட்டலாம்.... "
ஐய்ய்ம் கம்மிங்ங்... ஹி., ஹி., ஹி...!!!

Sunday, August 27, 2017

நேத்து நைட் ஒரு கல்யாண ரிசப்சன்...
அதுக்கு என் மச்சானும் வந்திருந்தாப்ல...
டைனிங் ஹால்... ரெண்டு பேரும் ஒண்ணா உக்காந்துகிட்டோம்....
நான் என் மச்சான்கிட்ட திரும்பி....
" மச்சான்... இந்த வெஜ் ஆம்லெட் நல்லா இருக்குல்ல... "
" அப்டியா... இருங்க... "
டக்னு சப்ளையர்ல ஒருத்தரை கூப்புட்டு இவர்க்கு இன்னொரு வெஜ் ஆம்லெட் கொண்டு வாப்பானு சொல்லிட்டாரு...
பாசக்கார பயபுள்ள...
எனக்கும் எக்ஸ்ட்ரா வெஜ் ஆம்லெட் வந்துடுச்சு...
" தேங்க்ஸ் மச்சான்..!! "
" அட இது என் கடமை இல்லியா..?! "
" நான் ஒண்ணு சொன்னா தப்பா நெனச்சிக்க மாட்டீங்களே...! "
" சும்மா சொல்லுங்க மச்சான்... "
" இந்த ரொமாலி ரொட்டி, ஆப்பம், பனியாரம், கட்லட் இதெல்லாம் கூட நல்லா இருக்கு..!! ஹி., ஹி., ஹி...!! "
மச்சான் மொறைச்சிங்...

Saturday, August 26, 2017

எங்க பக்கத்து வீட்ல இன்னிக்கு வஞ்சிரம் மீன் ரோஸ்ட் போல...
செம வாசனை...
( வாசனையை வெச்சே என்ன மீன்னு கண்டுபிடிப்போம்ல.. )
டக்னு ஒரு ஐடியா....
பாரதியார் புக் இருக்கான்னு கேட்டுட்டு அங்கே போலாமா...??!
பாரதியார் புக் கிடைக்குதோ இல்லையோ.. ஒரு ரோஸ்ட் பீஸ் கன்பார்ம்...
எங்க அண்ணிக்கு என்னை வெறும் கையோட அனுப்ப மனசு வராது... ஹி., ஹி., ஹி..
அண்ணன் வீட்டுக்கு போனேன்...
" அண்ணி... பாரதியார் புக் இருக்கா..? "
" இருடா... தேடி எடுத்து தர்றேன்.. "
( என்னாது இருக்கா..?!! அவ்வ்வ்... )
" அது.. அது பாரதியார் இல்ல அண்ணி.. பாரதிதாசன் புக்..!! "
அண்ணி என்னைய உத்து பாத்தாங்க....
" நெஜமாலுமே நீ புக் வாங்க தான் வந்தியா..?! "
" பின்ன... நீங்க வஞ்சிரம் மீன் செஞ்சிருக்கீங்கனு சாப்பிட வந்தேன்னு நெனச்சீங்களா..?! "
" அதான் தெரிஞ்சி போச்சே.. உக்காரு எடுத்துட்டு வர்றேன்... "
" அண்ணி எனக்கு வஞ்சிரம் மீனு பிடிக்காது.. 2 பீஸ்க்கு மேல எடுத்துட்டு வராதீங்க..!! "
அண்ணி மொறைச்சிங்..!!!
#தனிமனிதனுக்கு மீன் இல்லை எனில் பக்கத்து வீட்டில் போயாவது சாப்பிடுவோம்..

Tuesday, July 11, 2017


சேலம் சுப்பன் கடையில சாப்பிட்டுட்டு வரும்போது என் சகலை பாத்துட்டாரு...
" என்னா சகலை... காலை டிபனா..?! "
" ஆமா சகலை... "
" என்ன சாப்பிட்டீங்க..?! "
" தோசையும், சிக்கனும்.. "
" அவ்ளோதானா..?! லைட்டா முடிச்சிட்டீங்க போல...?! "
" ம்ம்ம்ம்... அதான் நான் டயட்ல இருக்கேன்ல... "
அப்புறம் கொஞ்ச நேரம் பேசிட்டு கெளம்பி போயிட்டாரு...
நல்லவேளை எத்தனை தோசைனு அவரும் கேக்கல... 11-னு நானும் சொல்லல...!!
ஹி., ஹி., ஹி...!!!

Sunday, June 4, 2017

நான் பங்ஷன் மண்டபத்துக்குள்ள நுழையும் போதே மணி 1.45...
ஏன் இவ்ளோ லேட்னு பங்ஷன் வீட்டுக்காரர் செல்லமா கோச்சிக்கிட்டாரு...
சிரிச்சு சமாளிச்சிட்டேன்....
டைனிங் ஹால்ல...
ஒரு ரசமலாய், ஒரு மைசூர் போண்டா, ஒரு ரோமாலி ரொட்டி, கொஞ்சமா காளான் பிரியாணி, கொஞ்சமா சாதம் வெச்சு (அட நிஜமாதான்...!) சாம்பார், ரசம், மோர்னு அளவா சாப்பிட்டு இருந்தேனா..
ஏன் இவ்ளோ கம்மியா சாப்பிடறீங்கனு அதுக்கும் செல்லமா கோச்சுக்கிறார்....
இதுக்கு தான் ஒரே நாள்ல ரெண்டு பங்ஷன் வெக்காதீங்கனு சொல்றது... சொன்னா.. யார் கேக்கறா... ஹி., ஹி., ஹி...!!!
#நம்ம கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கறாங்களே...!!!

Saturday, May 27, 2017

மதியத்துல இருந்து வயிறு அப்செட்...
பொறுத்து பொறுத்து பாத்துட்டு எங்க ஃபேமலி டாக்டர்க்கு போனை போட்டு விஷயத்தை சொன்னேன்...
என்ன சாப்பிட்டேனு கேட்டாரு... சொன்னேன்... செல்லிட்டு...
" டாக்டர்.. நான் சாப்பிட்டதுல எது சரியில்ல...?! "
" நீ சாப்பிட்டது எதுவுமே சரியில்ல... போயி கஞ்சி மட்டும் குடினு " போனை வெச்சிட்டாரு...
( கஞ்சியா..?!! )
மட்டன் கஞ்சியா..? சிக்கன் கஞ்சியா..?! அத சொல்லலியே... என்னவா இருக்கும்..?!!

Friday, May 12, 2017

இன்னிக்கு என் ப்ரெண்ட் கிச்சா வீட்டுக்கு எங்க காலேஜ்மேட் புனிதா வர்றாப்டி...
கிச்சா வீட்ல லஞ்சாம்...
இந்த மேட்டரை கூட அந்த பக்கி சொல்லல..
புனிதா தான் போன் பண்ணி சொன்னாப்டி...
சரி எப்டியும் நம்மளயும் லஞ்ச்க்கு வர சொல்லுவான் போலாம்னு வெயிட்டிங்....
வெயிட்டிங்... வெயிட்டிங்... வெயிட்டிங்....
மணி 2 ஆச்சு நோ போன்....
கூப்பிடாம எப்டி போறது...?!!
ஒருவேள நான்வெஜ் லஞ்ச்சா இருக்குமோ..?!
அப்ப " என் ப்ரெண்டை போல யாரு மச்சான் " சாங்... என் மைண்ட் வாய்ஸ்ல கேட்டது...
" டக்...!! "
ஹி., ஹி., ஹி... ஒண்ணுமில்ல.. என் அறிவுக்கண் தொறந்த சவுண்ட்...
ஏன் கூப்பிட்டா தான் போகணுமா..?! நானும் கிச்சாவும் அப்டியா பழகியிருக்கோம்...?!!
டேய் கிச்சா... ஐய்யம் கம்மிங்டா.....

Sunday, April 30, 2017


ஒரு ஐட்டம்..., ஒரு ஐட்டம் மிஸ்ஸான கூட நான் மனுஷனா இருக்க மாட்டேன்....
பீகேர்புல்...!!!
 

Friday, March 17, 2017

இன்னிக்கு என் ப்ரெண்ட் ஹரிக்கு ஆனிவர்சரி.... காலைல கூப்புட்டு விஷ் பண்ணிட்டேன்....
ஹரி ரொம்ப ஹேப்பி மச்சி....
" நீ ஒருத்தன் தான் மச்சி வருஷம் தவறாம கரெக்டா விஷ் பண்ற..! "
" பின்ன உன் கல்யாணம் தான் ஹிஸ்டரில நின்னுடுச்சில்ல..?! "
" ஹிஸ்டரியா.?! அது என்ன ஹிஸ்டரி மச்சி...?! "
" ஹி., ஹி., ஹி.. இதுவரைக்கும் உன் கல்யாணத்துல மட்டும் தான் நான் ரெண்டாவது பந்தியில உக்காந்து சாப்பிட்டிருக்கேன்.... "
துப்பிட்டு போயிட்டான்.... பேடு பெல்லோ..!!!


ரொம்ப நாளா ஆவலா எதிர்பாத்துட்டு இருந்த " Barbeque Nation " சேலத்துக்கு வந்துடுச்சு...
நெட்ல போன் நம்பர் பாத்து கூப்பிட்டேன்...
" எப்ப சார் ஆரம்பிச்சீங்க..?! "
" ஒரு மாசம் ஆச்சு.. "
( ஒரு மாசமா..?! எப்டி தெரியாம போச்சு..?! )
" எங்க சார் இருக்கு...? "
" சாரதா காலேஜ் ரோட்ல.. "
( ஓ... அது பொண்ணுங்க படிக்கிற காலேஜ்.. பொதுவா நான் அந்த பக்கம் போனா... கண்ணை மூடிட்டு தான் போவேன்.. அதான் கவனிக்கல போலருக்கு.. ஹி., ஹி., ஹி.. )
" ரேட் எல்லாம் எப்டி...?! "
" அன்லிமிடேட் சார்.. டேக்ஸ் சேர்த்து ஒரு ஆளுக்கு 650 வரும்.. "
" 650-ஆ..?!! கட்டுப்படியாகாதே...?! "
" இல்ல சார்.. நிறைய வெரைட்டீஸ் வெப்போம்... "
" கட்டுப்படியாகாதுனு சொன்னது எனக்கில்ல சார்... உங்களுக்கு... ஹி., ஹி., ஹி... "
# நம்ம ரேஞ்சே வேற...!!!

டைனிங்....
நான் இலைய பாத்துட்டு இருந்தேன்... அப்ப என் சகலை என்கிட்ட....
" என்ன சகலை யோசிச்சிட்டு இருக்கீங்க..? "
" இந்த ஸ்வீட் பேரு என்னவா இருக்கும்னு யோசிக்கறேன்... "
" அதெல்லாம் அடிக்கடி சாப்பிடறவங்க கவலைப்படணும்... நமக்கென்ன... "
" அப்படீன்றீங்க...!! "
சுத்தி பாத்தேன்... ஒரு சப்ளையரை கூப்பிட்டேன்....
" இந்தாப்பா தம்பி... இந்த வெள்ளை கலர் ஸ்வீட் இன்னொன்னு கொண்டு வா... "
ஹி., ஹி.,ஹி...!!!
இன்னிக்கு பங்சன் 11.30 மணிக்கு... ஆனா நாங்க என்டரானப்ப மணி 12.15...
என்ட்ரன்ஸ்லயே ஒருத்தர் என்னை பாத்துட்டு...
" லேட்டாகிடுச்சு போல.... "
" இல்லியே... கரெக்ட் டைம் தான்... "
" பங்சன் ஆரம்பிச்சுடுச்சே.... "
" ஹி., ஹி., ஹி... பந்தி இன்னும் ஆரம்பிக்கலியே.... "
# நம்ம கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்களே...!!!

Tuesday, February 14, 2017


இன்னிக்கு போன ரிசப்ஷன் டின்னர் மெனு.....
நான் டயட்ல இருக்கற காரணத்தால எல்லாமே ஒரு தடவை மட்டும் தான் சாப்பிட முடிஞ்சது....

Monday, February 6, 2017

கிச்சாகிட்ட ரொம்ப நாளா ட்ரீட் கேட்டுட்டே இருந்தேன்...
ஒரு வழியா வெள்ளிக்கிழமை ஹோட்டல்க்கு கூட்டிட்டு போனான்....
அவன் அக்கா பொண்ணுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆகியிருக்கு..
அந்த ஹோட்டல்ல... நான் எது ஆர்டர் பண்ணினாலும் அவன் இல்லிங்கறான்....
எனக்கு வந்துச்சு பாருங்க கோவம்....
உன்கி்ட்ட எது இருக்கோ... அதுல எல்லாம் 3 ப்ளேட் கொண்டு வாடானு சொல்லிட்டேன்...
( எனக்கு கோவம் வந்தா.... ஜாஸ்தி பசிக்கும்... ஹி., ஹி., ஹி... )
டின்னர் முடிஞ்சதும் கிச்சா...
" என்னடா திருப்தியா.... இனிமே ட்ரீ்ட், ட்ரீட்னு உயிரை எடுக்க மாட்டியே...?! "
" அதெப்படி... இப்ப தான் உங்க அக்கா கல்யாண ட்ரீட்டே முடிஞ்சி இருக்குது... "
" என்னாது...?!! "
ஆஹா.... மறுபடியும் மயங்கிட்டானா....?!
# ஏம்பா தம்பி..... அந்த பில்லு குடுத்தப்ப ஒரு சோடா குடுத்தியே... அத குடு....!!

Saturday, December 31, 2016

என் ப்ரெண்ட் அருண் வீட்டு கிரகபிரவேசம்...
பந்தில நானும் என் ப்ரெண்ட் சுரேஷும்...
மெனு : இட்லி, பொங்கல், வடை, பூரி, ஆனியன் தோசை..
எல்லாமே நல்லா இருந்து.. அதுல ஸ்பெஷல் ஆனியன் தோசை... செம்ம்ம....
நான் பக்கத்துல இருந்த சுரேஷ்கிட்ட...
" டேய்.. நான் ஆனியன் தோசை கேக்க போறேன். உனக்கும் வேணுமா..? "
"நோ.. நோ... நீ மட்டும் சொல்லிக்க.. "
உடனே நான் பந்திய மெய்டெய்ன் பண்ணிட்டு இருந்த அருணை கூப்பிட்டு...
" மச்சி... ரெண்டு ஆனியன் எடுத்துட்டு வாயேன்.. "
இப்ப சுரேஷு டென்ஷனாகிட்டான்....
" டேய்.. எனக்கு தான் வேணாம்னு சொல்றேன்ல... "
" ஹி., ஹி., ஹி... ரெண்டும் எனக்கு தான்... நீ அமைதியா இரு... ! "
# நம்ம கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்களே...!!!

Sunday, November 6, 2016

"ஏங்க லட்டு சாப்பிடறீங்களா..?"
"வேணாம்... எனக்கு இப்ப லட்டு பிடிக்கல.."
"இது எப்ப இருந்து..?"
"5 லட்டு சாப்பிட்டப்ப இருந்து.. ஹி.,ஹி.,ஹி.."