Showing posts with label Tour. Show all posts
Showing posts with label Tour. Show all posts

Tuesday, May 9, 2017

கொச்சி லூலூ மால்....
என்னைய தனியா விட்டுட்டு இவங்க எல்லாம் எங்கே போனாங்க தெரியலியே....?!
போன் பண்ணலாம்னா சிக்னல் வேற இல்ல...
எப்டி தேடறது..?!
கனநேரத்தில் உதிச்சது ஒரு சிந்தனை....
டக்னு போயி ஒரு இடத்துல உக்காந்துட்டேன்....
உக்காந்த இடம்.... Food Court..!!
எப்டி இருந்தாலும் இங்க வந்து தானே ஆகணும்...
ஐய்ய்ய்ம் வெய்ய்டிங்ங்...!!
#கேரளா அலப்பரைஸ் 4

Monday, May 8, 2017

கொச்சில மெரைன் டிரைவ்னு ஒரு ஹோட்டல் இருக்காம்... டின்னர்க்கு அங்க போகலாம்னு மச்சான் சொன்னாரு....
சரினு நம்பர் புடிச்சி போன் பண்ணி விசாரிச்சா..... பயங்கர காஸ்ட்லியா இருக்கும் போல....
நாங்க 20 பேரு இருக்கோமே... கட்டுப்படியாகாதே.... யோசிச்சிங்....
" அந்த ஹோட்டல் வேணாம்... "
" ஏன்...?! ஏன்...?! " ( கோரஸா கத்திங்... )
" அங்க ஒன்லி ஃபாரினர்ஸ் மட்டும் தான் அலோவ்டாம்.. "
" அப்டியா...?! "
" யெஸ்... பாக்க ஃபாரினர் மாதிரி இருக்கறதால என்னை உள்ளே விட்டுடுவாங்க... நீங்கல்லாம் என்ன பண்ணுவீங்க...?!! "
" ஓ... ஓ.... ஓ....!! " ( கோரஸா குத்திங்.... )
என்ன ஃபேமிலிடா இது...?!
#கேரளா அலப்பரைஸ் 3

Sunday, May 7, 2017

வர்கலா பீச்ல நடந்து போயி்ட்டு இருந்தப்ப ஒரு பொண்ணு என்னையவே திரும்பி திரும்பி பாத்துட்டு போச்சு...
ஒருவேள என்னய நிவின் பாலினு நெனச்சி இருக்குமோ...?!!
இருக்கும் இருக்கும்.... பிரேமம் படத்துலயே அஞ்சாறு சீன்ல நிவின் என் சாயல்ல தான் இருந்தாப்ல...
இப்ப எதுக்கு மொறைக்கறீங்க...?!!
டவுட்டா இருந்தா... " ஆலுவா " பாட்டை பாத்து க்ளியர் பண்ணிக்கோங்க... ஹி., ஹி., ஹி....
#கேரளா அலப்பரைஸ் 2

Saturday, May 6, 2017

கேரளா டூர்க்கு ரெடியா இருக்கோம்...
9 மணிக்கு வர வேண்டிய வண்டி மணி 11.15 ஆகியும் இன்னும் வரல....
வண்டி புக் பண்ணின மச்சான்கிட்ட....
" புக் பண்ணும் போது நிஜமாவே வண்டிய பாத்தீங்களா..?! "
" என்ன மச்சான் இப்டி கேட்டுடீங்க.... வண்டில ஏறி ஏசி ஓடுதா..?! டிவி ஓடுதானு எல்லாம் பாத்தோம்ல..."
" அதெல்லாம் பாத்தீங்களே.... மொதல்ல வண்டி ஓடுதானு பாத்தீங்களா...?! "
" அதான் மச்சான் பாக்கல... "
" ம்ம்க்கும்...!!! "
#கேரளா அலப்பரைஸ் 1

Sunday, October 30, 2016

" நைட் போட்டோகிராபி கத்துக்கறேனு கேமரா தூக்கிட்டு போனீங்க..? "
" கத்துக்கிட்டேன்ல... "
" என்ன கத்துகிட்டீங்க..? "
" நைட்ல போட்டோ எடுத்தா.... ஃப்ளாஷ் யூஸ் பண்ணனும்... ஹி.,ஹி.,ஹி.. "
#போட்டோகிராபி டிப்ஸ்...!!

Saturday, July 9, 2016


3 வருஷம் முன்னால ப்ரெண்ட்ஸ் 15 பேரு சேர்ந்து கோவா டூர் போயிருந்தோம்...
ஒரு நாள் நைட் ஜாலியா பீச்ல நடந்து வந்துட்டு இருந்தோம்...
அப்ப மகேஷ் ஒரு விஷயம் என்கிட்ட சொன்னான்.... நான் அப்டியே ஷாக் ஆகிட்டேன்..
" வேணாம் மகேஷ்... இது வெளையாட்டு இல்ல... உன் கூட வந்திருக்குற எங்க 14 பேரையும் இது பாதிக்கும்னு " கெஞ்சி கெஞ்சி சொல்லிப் பாத்துட்டேன்...
அப்பவும் அந்த பய அரை மனசா தான் சரினு தலையாட்டினான்...
எனக்கு அவன் மேல டவுட்டாவே இருந்துச்சு..
ஆனந்தை கூப்பிட்டு... மகேஷை தனியா விட்டுடாதே.. அவன் மேல ஒரு கண்ணு இருக்கட்டும்னு சொல்லி வெச்சேன்...
அதுக்கப்புறம் மகேஷ் காலைல இருந்து எங்க கூடவே இருந்தான்...
ஆனா... நைட் 7 மணிக்கு மேல ஆள் எஸ்கேப்...
ரூம்ல நாங்க பதட்டமா உக்காந்துட்டு இருக்கோம்.. ரெண்டு மணி நேரம் கழிச்சு தான் வந்தான்...
எது நடந்துடக்கூடாதுனு நான் பதறிட்டு இருந்தேனோ... அது இனிதே நடந்திருந்தது...
என்ன நடந்ததா...?!!
அந்த பக்கி அவன் Wife தீபா பேரை கையில பச்சை குத்திட்டு வந்திருந்தது...
ஐய்யோ... ஊருக்கு போனதும் தீபாகிட்ட இருந்து மொத போனு என் பொண்டாட்டிக்கில்ல வரும்...
# டேய்... வெட்டுங்கடா.. அவன் கைய...
நாங்க நாலு ப்ரெண்ட்ஸ் பேமிலியா குற்றாலம் வந்திருக்கோம்...
குற்றாலத்துலயே அடுத்த தாய்லாந்து டூர்க்கு அடி போட்டாச்சு...
மொதல்ல ஜென்ட்ஸ் டீம் தாய்லாந்து போய் லொகேஷன் பாத்துட்டு வர்றது..
6 மாசம் கழிச்சு பேமிலியா தாய்லாந்து போறது...
இந்த ப்ளானை கேட்டு மகளிர் டீம் எங்களை மொறைக்க... நான் லைட்டா திரும்பி என் Wife-ஐ பாத்தேன்...
அவங்க மூஞ்சில ஒரு மர்ம புன்னகை...
"ஏன் நிர்மலா அப்டி சிரிக்கற?"
"ஊருக்கு போனதும் மொத வேலையே.. உங்க பாஸ்போர்ட்டை எடுத்து ஒளிச்சி வெக்கறது தான்.."
"ஹெஹெஹேய்"
"நீங்க எதுக்கு இப்ப சிரிக்கறீங்க..?"
"நான் அல்ரெடி அத எடுத்து ஒளிச்சி வெச்சிட்டு தான் வந்திருக்கேன்.."
# ஆருகிட்ட...!!
எப்பவும் குற்றாலம் மாதிரி அருவி இருக்கற ஏரியாவுக்குப் போகும்போது கூடவே ஒரு டம்மி பீஸையும் கூட்டிட்டுப் போய்டணும்..
அப்பத்தான்.. இந்த செல்போன், வாட்ச் எல்லாம் அவங்ககிட்ட குடுத்துட்டு நாம நிம்மதியா ஃபால்ஸ்ல குளிக்கலாம்...
"டேய்.. டேய்.. இருங்கடா நானும் வர்றேன்... செல்போனை எல்லாம் என்கிட்ட குடுத்துட்டு எங்கடா போறீங்க..?! "
# அந்த கொழந்தையே நீங்க தான் சார் மொமெண்ட்...
ஜெகன்கிட்ட போன்ல பேசிட்டு இருக்கும் போது பேச்சுவாக்குல...
"நாளைக்கு குற்றாலம் போறேன்ல..."
"குற்றாலம் போறியா..? சொல்லவே இல்ல.."
"ஒரு வாரமா சொல்லி்ட்டு இருக்கேனே... உன்கி்ட்ட சொல்லலியா..?!"
"இல்லியே.."
எவன்கிட்ட சொன்னாலும் இப்டியே சொல்றீங்களேடா.. 
அப்ப நான் யார்கிட்டதான் இதெல்லாம் சொல்றேன்..?!
# ஒரே கன்பூசனா இருக்கே..!!

Wednesday, January 13, 2016


Global Village.. துபாய் கண்காட்சி..
அங்கே ஏமன் பெவிலியன்ல
வித விதமா தேன் வெச்சி இருந்தாங்க..
விலை ஒரு கிலோ 170 திர்ஹாம்ஸ்ல
ஸ்டார்ட் ஆச்சு..
ஒரு தேன் பாத்தேன்.. " Only for Married "-னு
போட்டு இருந்தது.. 400 திர்ஹாம்ஸ் / 1 Kg...
சரி ஒரு கால் கிலோ வாங்கலாம்னு போயி
கேட்டா....
எனக்கு குடுக்க மாட்டேங்குறான்..
டேய்... எனக்கு கல்யாணம் ஆகிடுச்சிடானு
சொன்னா நம்ப மாட்டேனு சொல்லிட்டான்...
தேன் போச்சேனு ஃபீலிங்க விட..
நம்மள கல்யாணம் ஆகாத சின்ன பையன்னு
நெனச்சிட்டான்னு ஒரே குஷியா இருந்தது...
உடனே என் Wife-கிட்ட வந்து...
" டிசர்ட் போட்ட உடனே 10 வயசு கொறஞ்சு
போச்சு போல... சும்மா காலேஜ் ஸ்டுடண்ட்
கணக்கா இருக்கேனாம்... கல்யாணாம் ஆகிடுச்சுனு
சொன்னா நம்ப மாட்டேங்குறான்..!! "
" அது அப்டி இல்ல மாம்ஸு... இந்த மூஞ்சிக்கெல்லாம்
எங்கே கல்யாணம் ஆகியிருக்க போவுதுனு
நெனச்சி இருப்பான்..!! "
" அவ்வ்வ்வ்வ்வ்....!!! "
# துபாய் அலப்பரைஸ் - 12



IBN BATTUTA Mall... துபாய்...
அங்கே China Court-ல ஒரு மரக்கப்பல்
நிறுத்தி வெச்சி இருக்காங்க..
அதை சுத்தி 3 அடி உசரத்துக்கு ஒரு சுவர்..
நாங்க எல்லாம் அந்த கப்பலை வேடிக்கை
பாத்துட்டு இருக்கோம்..
ஒருத்தன் அவன் கேர்ள்பிரண்ட்டை
அலேக்கா தூக்கி அந்த சுவத்துல
நிறுத்திட்டான்..
இத பாத்ததும் என் Wife...
" மாம்ஸ்.. நீங்களும் இதே மாதிரி
தூக்குவீங்களா..?!! "
" ஓ.. ஆனா.. அது கொஞ்சம் ரிஸ்க்கு..!! "
" இதுல என்ன ரிஸ்கு..?!! "
"ஹி., ஹி., ஹி., நான் போயி அந்த
பொண்ணை தூக்கினா.. அவன்
சண்டைக்கு வரமாட்டான்..?!! "
( ஐய்யோ... அம்மா... என் காலு...!!! )
# துபாய் அலப்பரைஸ் - 11
துபாய் போயிட்டு வந்திருக்கேன்..
வீட்டுக்கு வர்றவங்க எல்லாம் சாக்லெட்டை
வாங்கிட்டு அப்டியே நைசா ஓடிடறாங்க..
ஒருத்தரும் உக்காந்து கத கேக்க மாட்டேங்குறாங்க...
மச்சி நீ கேளேன்...
மச்சி நீ கேளேன்...

துபாய்ல எலக்ட்ரானிக்ஸ் வாங்கினா 
ரொம்ப சீப்பா இருக்கும்னு யாராவது 
நெனச்சிட்டு இருந்தீங்கன்னா..

அந்த எண்ணத்தை இன்னியோட குழிதோண்டி 
புதைச்சிடுங்க..

நான் துபாய்ல போயி NIKON D3300 கேமரா
வாங்கலாம்னு மொதல்ல நெனச்சிட்டு இருந்தேன்..

ஆனா அக்டோபர்ல நடந்த துபாய் எலக்ட்ரானிக்ஸ்
பெஸ்டிவல் ( GITEX Festival ) சமயத்துல அங்கே
என்ன ரேட்னு நெட்ல தேடி பாக்கும் போது
விலை எல்லாம் கொஞ்சம் ஜாஸ்தியா தெரிஞ்சது..

நார்மலா 25000 - 27000 விக்கிற அந்த
கேமரா... தீபாவளி சமயத்துல SNAPDEAL-ல
ரூ23,500-க்கு வந்தது.. வாங்கிட்டேன்..

என் கேமரா Made in Thailand..

தாய்லாந்து மேக்.. அதான் சீப்பா குடுத்துட்டான்
போல.. துபாய்ல எல்லாம் ஜப்பான் மேக்
கெடைக்குமாக்கும்னு நெனச்சிக்கிட்டேன்..

இப்ப துபாய் போனப்ப... இதே மாடல்
என்ன வெலைனு போயி பாத்தேன்..

ஜாஸ்தி எல்லாம் ஒன்னுமில்ல 2399 திர்ஹாம் தான்..
அதாவது... 44380 ரூபா.. ( 2399 x 18.5 )

சரி.. என்ன மேக்னு எடுத்து பார்த்தேன்...

Made in Thailand..!!!

மொத்தத்துல இங்கே விட்டுட்டு துபாய்ல
போயி எலக்ட்ரானிக்ஸ் வாங்கினா...

அதுக்கு பேருதான்..

" பெருமைக்கு எருமை மேய்க்கறது..!! "

டிஸ்கி : நான் பாத்த வரைக்கும் LED Tv மட்டும்
இந்தியாவ விட துபாய்ல விலை கம்மி..!!

# துபாய் அலப்பரைஸ் - 10

Tuesday, January 12, 2016


" டேய் ஜனா.... இன்னிக்கு போற வழியில 
எங்கயாவது ATM இருந்தா.. இந்த HDFC Card-ஐ 
செக் பண்ணி பாக்கணும்.. "

" சாரி ஜென்டில்மேன்.. இங்க எந்த ATM வழியில 
இருக்காது... ஓரமாத்தான் வெச்சிருப்பாங்க..
பரவாயில்லையா..?!! "

ஆஹா.... காலைலயே ஆரம்பிச்சிட்டானா...?!!

# துபாய் அலப்பரைஸ் - 9
துபாய்ல தங்கம் வாங்கினா கம்மினு சொன்னாங்க...
சரி பாத்துட்டு வரலாம்னு போனோம்...
ப்ளீஸ் நோட்... பாக்க மட்டும் தான் போனோம்....
2 நாள் முன்னாடி..
துபாய்ல 22K கிராம்.. ரூ 2190
இந்தியால 22K கிராம்.. ரூ 2370
So.. கிராம்க்கு 180 ரூபா கம்மி...
ஆஹா... கம்மினு நெனச்சிடாதீங்க...
இனிமே தான் இருக்கு உள்குத்து..
இந்தியால சேதாரம்னு சொல்லி வாங்கறத..
இவங்க மேக்கிங் சார்ஜ்னு தீட்டிடறாங்க..
25% - 30% மேக்கிங் சார்ஜ்.... கேட்டா..
இது Italian Design., இது Germany Design-னு 
சொல்றானுங்க..
நானும் ஒரு சேல்மேன்கிட்ட கேட்டேன்...
" இந்த மாதிரி நகை போட்டுட்டு சுத்தற
ஒரு இத்தாலி பொண்ணையாவது காட்டுயானு "
அதுக்கு சிரிக்கறான்..
இப்ப... நகை வாங்கினா சீப்பானு கணக்கு பாத்தோம்னா...
மொதல்லயே நாம இந்திய ரூபாயை திராம்ஸா
மாத்த 3.5% கமிஷன் குடுத்து இருக்கோம்..
அப்ப 25% மேக்கிங் சார்ஜ் உள்ள நகை வாங்கினா...
நமக்கு 25%+3.5% = 28.5% வருது...
கிராம்க்கு 180 ரூபா கம்மி... So.. அதுல நமக்கு
7.5% மிச்சமாகுது...
அப்ப Net 21% வருது...
ம்ம்ம்... நாங்க ரெகுலரா வாங்கற கடையில
இதுவரைக்கும் 13% க்கு மேல குடுத்ததே கெடையாது...
துபாய்ல நகை வாங்கணும்னு நெனச்சிட்டு இருந்த
என் Wife-ஐ கூட இந்த கணக்கு எல்லாம் சொல்லி
குழப்பி.. நகை எதுவும் வாங்காம நைசா கூட்டிட்டு
வந்துட்டேன்...
எப்பூடி...?!!
# பல ராசதந்திரங்களை கரைத்து குடித்திருக்கிறாயடா 
வெங்கி....
## துபாய் அலப்பரைஸ் - 8
துபாய்ல எல்லோரும் பணக்காரங்களா இருப்பாங்கனு
நெனச்சிட்டு இருந்தேன்....

மால்ஸ்க்கு போயி பாத்தா தான் ஏழைகளும்
இருக்காங்கனு  தெரியுது..

நிறைய பொண்ணுங்க கிழிஞ்ச பேண்ட் போட்டுட்டு
சுத்திட்டு இருக்கு...

சோ சேட்.. :(

# துபாய் அலப்பரைஸ் - 7

துபாய் மால்... ஹேண்ட்பேக் கடை...
அங்க இருந்த பிலிப்பைன்ஸ் பொண்ணுகிட்ட...
" இந்த ஹேண்ட்பேக் எவ்ளோ..?! "
" 3400 திர்ஹாம்ஸ்.. "
( 3400 x 18 = ₹61,200.... எனக்கு ஒரு செகண்ட்
மயக்கம் வர்ற மாதிரி இருந்தது.. சுதாரிச்சிட்டேன்...
டக்னு எனக்குள்ள இருந்த ஃபேஸ்புக் போராளி
முழிச்சிகிட்டான்... )
" எச்சூஸ்மீ... ஒரு போட்டோ எடுத்துக்கலாமா..?! "
" நோ.. நோ..!! "
" அட... நான் உங்கள போட்டோ எடுக்க கேக்கலைங்க... 
ஹேண்ட்பேக்கை தான்.. "
அந்த பொண்ணு சிரிச்சிட்டே...
" நீங்க என்னை கூட போட்டோ எடுத்துக்கோங்க...
ஹேண்ட்பேக்கை எடுக்காதீங்க... "
" ம்க்கும்..!!! "
( அந்த பொண்ணு லைட்டா திரும்பின சைக்கிள் கேப்பில 
க்ளிக்கிட்டோம்ல... அட ஹேண்ட்பேக்கைத் தான்... )
‪#‎இந்தியன்டா‬…… துபாய்டா..!!
## துபாய் அலப்பரைஸ் - 6

Wednesday, December 30, 2015

துபாய்ல எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்...
நாம ரோடு கிராஸ் பண்ண வந்து நின்னா..
வர்ற கார் எல்லாம் ஒரு 10 அடி முன்னாலயே
நிறுத்திக்கறாங்க., நாம கிராஸ் பண்ணினப்புறம் தான் 
அவங்க போறாங்க...
ரியலி இம்ப்ரஸ்ட்.. smile emoticon
# துபாய் அலப்பரைஸ் - 5

ஹலோ... நான் அல்ரெடி துபாய்ல தான் இருக்கேன்... tongue emoticon 

:) :) tongue emoticon

" ஹேய்.. பூஜா... "
" டேய்... அக்கானு கூப்பிடறா.. "
" நீ மொதல்ல என்னை அண்ணானு கூப்பிடு... "
" டேய்... நான் உன்னை விட 2 வருஷம் பெரியவடா.. "
" நான் என் தங்கச்சிய விட 5 வருஷம் பெரியவன்...
5 பெருசா..? 2 பெருசா..?! "
# கோகுல் ராக்ஸ்... பூஜா ஷாக்ஸ்..!
## துபாய் அலப்பரைஸ் - 4