Showing posts with label Politics. Show all posts
Showing posts with label Politics. Show all posts
Tuesday, February 21, 2017
Wednesday, February 15, 2017
நான் மல்லக்க படுத்து விட்டத்தை பாத்து ஓபிஎஸ்சோட நெக்ஸ்ட் மூவ் என்னவா இருக்கும்னு யோசிச்சிட்டு இருந்தா...
என் ப்ரெண்ட் போன் பண்ணி...
" அம்மா ஆத்மாவோட நெக்ஸ்ட் மூவ் என்னவா இருக்கும்னு " கேக்கறான்... அடேய்ய்ய்ய்ய்....
#மிடிலடா...!!
Wednesday, February 8, 2017
கடையில டீ சாப்பிட்டுட்டு வர்றப்ப பாத்தேன்.. ரோட்ல ஒரு வேன் நின்னு இருந்தது...
அதுல வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை போட்ட ரெண்டு பேர் ஏறப் போனாங்க....
ஆ... எம்.எல்.ஏ..!!
டக்னு ஓடிப்போயி புடிச்சிட்டேன்...
" அண்ணே... தப்பிச்சு வந்திட்டீங்களாண்ணே... எந்த தொகுதி எம்.எல்.ஏ நீங்க..?! "
" யேய்... யார்யா நீயி... நாங்க பொண்ணு பாக்க போறோம்யா.. "
" பொண்ணு பாக்கவா..?!! அவ்வ்வ்வ்...!! "
# 3 நாளா ராப்பகலா கண்ணு முழிச்சு டிவி பாத்த எபெக்டா இருக்குமோ..?!!
Tuesday, February 7, 2017
தமிழ்நாட்ல எது நடந்தாலும் மோடி ப்ளான் பண்ணிட்டாருனு சொல்றாங்க...
எங்க தெருல தண்ணி வந்து ஒரு வாரமாகுது... இதுவும் எதுனா மோடி ப்ளானா இருக்குமோ..?!
Monday, January 30, 2017
ஜல்லிக்கட்டு போராட்டம்
ஆமாம்டா... மாண்புமிகு சின்னம்மா தான் ஜல்லிக்கட்டையே கண்டுபிடிச்சாங்க... போதுமா..?!!
#ஜெயா டிவி நியூஸ்..!!
==============================================================
==============================================================
" மாணவர்கள் போராட்டத்தை கைவிடலன்னா தீ குளிப்பேனு வைகோ சொன்னாரே..? எனி அப்டேட்..?!! "
" ம்ம்.. இதுவரைக்கும் 100 லிட்டர் பெட்ரோல் சேர்ந்திருக்கு... "
Saturday, December 31, 2016
நிமிஷத்துக்கு நிமிஷம் பேச்சை மாத்தி மாத்தி பேசுற.. உனக்கென்ன மனசுல ரிசர்வ் பேங்க் கவர்னர்னு நெனப்பா..?!
#தும் தத்தா..!
ஜனவரி 1-ல பொறக்க போற இந்தியாவுக்கும் இதே பேரா.. இல்ல வேற பேரு வெப்பாங்களானு ஒருத்தன் கேக்கறான்..
# பேரு வெச்சியே.. சோறு வெச்சியா மொமெண்ட்..
Wednesday, December 7, 2016
Saturday, November 19, 2016
நடிகர் விஜயகாந்த் வீட்டில் கருப்பு பணம் உள்ளதாக வந்த செய்தியை அடுத்து விஜயகாந்த் வீட்டிற்குள் நுழைந்த சிபிஐ... கடைசியில் விஜயகாந்த் வீட்டில் உள்ள பணமும் வெள்ளை, அவர் மனசும் வெள்ளை என தெரிவித்தனர்...
😜
😜
😜
😜
" 500, 1000 செல்லாதுனு சொன்னதால என்ன நடக்கும்னு நெனக்கறீங்க..? "
" இந்தியால இருக்கற கருப்புபணம் எல்லாம் ஒழிஞ்சிடும்ல... "
" அப்ப சுவிஸ் பேங்க்ல இருக்கற கருப்பு பணமெல்லாம்...??!! "
" அதான் அடுத்த வாரம் சுவிட்சர்லாந்து பணமெல்லாம் செல்லாதுனு மோடி அறிவிக்க போறாராம்ல... "
# பாரத் மாதா கீ ஜே...
Tuesday, November 15, 2016
இப்ப நீங்க என்ன பண்றீங்க பக்தாஸ்... இந்தியாவ அலேக்கா தூக்கிட்டு போயி அமெரிக்கா பக்கத்துல வெச்சிடறீங்க...
அப்புறம் நாம தானே அடுத்த வல்லரசு....
# பாரத் மாதா கீ ஜெ...
500 ரூபா, 1000 ரூபா செல்லாதுனு சொன்னது மோடிஜியின் தனிப்பட்ட கருத்து... அதுக்கும் தமிழக பா.ஜ.க.வுக்கும் சம்மந்தமில்லை....
# சொன்னாலும் சொல்லுவாங்கோ...!!!
இந்தியாலயே... ஏன் வேர்ல்டலயே... ஓவர் நைட்ல மொத்த தாய்குலத்தோட வயித்தெரிச்சல கொட்டிக்கிட்ட கட்சின்னா.. அது நம்ம கட்சி தான்....
Sunday, November 6, 2016
Monday, May 23, 2016
கண்டிப்பா இந்த ஆராய்ச்சி பண்ணினது
ஒரு ஜினியஸா தான் இருக்கோணும்...
அப்டியே.. அமெரிக்க எலக்ஷனுக்கும்
திமுக தோத்ததுக்கும் எதாவது சம்பந்தம்
இருக்கானு கண்டுபிடிங்க பாஸ்...
கமான் பாஸ்... உங்களால முடியும் பாஸ்... கமான்...!
Friday, May 20, 2016
சொல்லிடுங்கடே... அப்டியே யார் யார்க்கு
மந்திரி பதவினும் இப்பவே சொல்லிடுங்க...
நாளைக்கு வரைக்கும் நாங்க எதுக்கு
வெயிட் பண்ணனும்...?
# நல்லா வாய்லயே வடை சுடறானுங்க..!!
Tuesday, May 17, 2016
ஓட்டு பதிவு கம்மியா போச்சுனு எல்லோரும்
ஓட்டு போடாத சென்னை மக்களை திட்றீங்களே...
நியாயமா..?!!
அவங்க மேல என்னய்யா தப்பு..?
எலக்சன் கமிஷன் தான் " உங்களில் யார் அடுத்த முதல்வர்னு "
போட்டி அறிவிச்சு..
SMS-ல ஓட்டு போட சொல்லிருக்கோணும்..
போட்டு இருப்பாங்கல்ல...!!
அத வுட்டுட்டு 50%, 60% னு பொலம்பிட்டு இருக்கீங்க...?!!
எப்பப் பாத்தாலும் மறுபடியும் ஒரு தடவை
பள்ளி செல்ல வேண்டும், அந்த மரங்களைப்
பார்க்க வேண்டும்னு ஃபேஸ்புக்ல மொக்கை
போட வேண்டியது...
எலெக்சன் அன்னிக்கு ஸ்கூல்ல வந்து வோட்டு
போடுங்கடான்னா வீட்டுல படுத்துத் தூங்கிட
வேண்டியது..
Subscribe to:
Posts (Atom)










