Showing posts with label Fun. Show all posts
Showing posts with label Fun. Show all posts

Wednesday, December 20, 2017

போன வாரம் என் ப்ரெண்ட் தினேஷை பாக்க ஊருக்கு போயிருந்தேன்... ரெண்டு நாளா அவன் ரூம்ல தான் தங்கினேன்...
ரெண்டாவது நாள் தினேஷ் குளிக்க போயிருந்தான்.. அப்ப அவன் போன் ரிங் ஆச்சு... நான் தான் எடுத்தேன்...
" ஹலோ... தினேஷ் இருக்காங்களா..?! "
( இந்த பன்னாடைய யாரு இவ்ளோ மரியாதையா கூப்பிடறது..?!! )
" நீ யாரும்மா..?! "
" நான் அவங்க ஆபீஸ்ல வொர்க் பண்றேன்... கிரிஜா.. "
( ஓ... கிரிஜா... சரி சரி.. )
" நீங்க தானே அவனுக்கு கண்ணம்மா கண்ணம்மா பாட்டு பாடி அனுப்பினது..?! "
" ஆமா... அதெப்படி உங்களுக்கு தெரியும்..?! "
" நாங்க தான் டெய்லி அத கேக்கறோமே..!! "
" ஓ... டெய்லி நைட் என் பாட்டு கேட்டுட்டே தான் தூங்கறேனு சொன்னாரு.. அது நிஜம் தானா..? "
" அப்டியா சொன்னான்..?! "
" ம்ம்ம்ம்... "
" ஆனா அந்த பன்னாடை.. நீ பாடினதை அலாரம் ரிங்டோனால்ல வெச்சி இருக்கு... டெய்லி காலைல அலாரம் அடிச்சதும் அலறி அடிச்சிட்டுல எந்திரிக்கறான்...!! "
" என்னாது... அலாரம் ரிங்டோனா..?!!
கிர்ர்ர்ர்... "
அந்த புள்ள ஒண்ணும் பேசாம கால் கட் பண்ணிச்சு... என்னவா இருக்கும்..?!!
#தும் தத்த்தா...!!! ஹி., ஹி., ஹி...

Tuesday, November 7, 2017

சின்ன வயசுல நான் டாக்டர்க்கு படிக்கணும்னு ரொம்ப ரொம்ப ஆசைப்பட்டேன்...
அதுக்கு என்ட்ரன்ஸ் டெஸ்ட் பாஸ் பண்ணனும்னு சொன்னாங்க...
என்ட்ரன்ஸ்னா... பெரிய பெரிய கேட் இருக்கும்.. அதுல ஏறி இறங்க சொல்லுவாங்கனு நெனக்கிறேன்.. அதுல தான் நாம ஈஸியா பாஸ் பண்ணிடுவோமேனு போனேன்..
+2 முடிச்சிட்டு வானு சொன்னானுங்க..
சரினு +2 ஜாயின் பண்ண போனா..
+1 முடிச்சி இருந்தா தான் +2-ல சேர்த்துக்குவாங்களாம்..
சரினு +1 போனா...
நீ இன்னும் 10th பாஸ் பண்ணலியானு கேக்கறாங்க...
சே.. ஒரு டாக்டராகற அழகும், அறிவும், திறமையும் இருந்தும் இந்த சம்முவம் என்ன டாக்டராக விடல...
#சிஸ்டமே சரியில்ல..!!

Saturday, August 19, 2017

நான் தான் எங்க ஊர்ல பல பேருக்கு நல்வழி காட்டிட்டு இருக்கேன்..
சந்தேகமா இருந்தா சாயந்திரம் 6 மணிக்கு மேல மெயின் ரோடு வந்து பாக்கவும்...
" அண்ணே.. இந்த பக்கம் போங்க.. அந்த பக்கம் குழி வெட்டி வெச்சி இருக்காங்க... " ( நல்வழி காட்றதுக்கு சாம்பிள்) 

Friday, August 18, 2017


நேத்து என் ப்ரெண்ட் Janarthanan Kasiviswanathan வீட்டுக்கு போயிருந்தேன்... அப்ப அவனோட பெரிய அத்தை...
" வெங்கிட்டு போன்ல என்ன படம்டா வெச்சி இருக்கே..? "
" ஜெமினி கணேசனும், சுருளிராஜனும்.. "
" சரி என் போன்ல ஏத்தி குடு.. "
ஷேரிட்ல ஷேர் பண்ணிட்டு மொபைல குடுத்தேன்.. அத பாத்துட்டு...
" என்னடா ஒரு படம் தான் ஏத்தியிருக்கே... இன்னொன்னு எங்க..? "
" ஒண்ணு தான் அத்தை..!! "
" டேய்.. ஜெமினிகணேசன் ஒரு படம்... சுருளிராஜன் ஒரு படம்னு ரெண்டு சொன்னியேடா.. "
" ஐய்யோ அத்தை... அது ஒரே படம் தான்.. "
" ஒரு படத்துக்கு ஏன்டா ரெண்டு பேரு வெக்கறாங்க..?! "
நான் ஜனா பக்கம் திரும்பி...
" எப்டிடா முடியல..!! "
" திஸ் ஈஸ் ஓபனிங்... யூ சீ என்டிங்... "
" என்னடா சொல்ற..?! "
" ம்ம்ம்... படம் பாத்துட்டு எங்கடா ஜெமினி கணேசனையும் கணோம், சுருளி ராஜனையும் காணோம்னு கேக்க போறாங்களே.. அப்ப என்ன பண்ணுவே..?! "
" என்னாது...!!! மீ எஸ்கேப்..!! "

Tuesday, May 23, 2017


மீட்டிங் முடிஞ்சி பிரேக் ஃபாஸ்ட் ஹால்...
இட்லி வெச்சிக்கலாம்னு போனா.... அங்க எழுதியிருந்ததை பாத்து டென்ஷனாகிட்டேன்....
அட பாவிகளா... 5 ஸ்டார் ஓட்டல்னு சொல்லிட்டு இப்டி அநியாயம் பண்றீங்களேனு மனசுக்குள்ள திட்டிட்டே மறுபடியும் எழுத்து கூட்டி படிச்சேன்...
கா...ஞ்...சி...பு...ர...ம் இட்லி....
ஓ.... காஞ்சிபுரம் இட்லியா...?!!
சாரி ஓட்டல்கார்.... மன்னிச்சு....
நான் காஞ்சிபோன இட்லினு படிச்சிட்டேன்... ஹி., ஹி., ஹி...!!!

Monday, April 24, 2017

நேத்து எனக்கு பனியன் எடுக்கலாம்னு கடைக்கு போயி இருந்தேன்...
" 85 சைஸ்ல Poomex பனியன் குடு... "
அவன் அங்க இங்க தேடிட்டு....
" அண்ணே... 80 சைஸ் தான் இருக்கு... குடுக்கவா..?! "
" இது எப்டிடா பத்தும்...? "
" தண்ணில போட்டா விரிஞ்சிடும்ணே... "
" வேணாம் நீ 85 பாரு.... "
அவன் மறுபடியும் தேடிட்டு....
" அண்ணே... 90 சைஸ் இருக்கு... தரவா..?! "
" டேய்... இது பெருசா இருக்கும்டா... "
" தண்ணில போட்டா சுருங்கிடும்ணே.... "
" அடேய்ய்ய்ய்ய்ய்....!!! "
#கத்துகிட்ட மொத்த வித்தையும் காட்ற மொமெண்ட்...!!

Monday, April 10, 2017

நன்றி ஆனந்த விகடன்....
இந்த வாரம் ஆனந்த விகடன் அட்டைப்படத்தில் என் போட்டோ.....
.
.
.
.
.
.
.
.
எதுவும் வரல....
ஏன் போட்டோ வந்தா தான் நன்றி சொல்லணுமா என்ன...?!!

Monday, January 30, 2017

நல்லவேள போன வருஷமே திரிஷாவோட ப்ரெண்ட் ரிக்வெஸ்ட்டை ரிஜெக்ட் பண்ணினேன்...
இல்லன்னா... இந்நேரம் உன் ப்ரெண்ட் தானேனு எல்லோரும் என் கூட சண்டைக்கு வந்திருப்பாங்க..
#ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு...!!

Thursday, September 29, 2016


போட்டோகிராபியில் அப்பாடக்கர் ஆவது எப்படி..?!!

மொபைல்ல என்ன தான் சூப்பரா போட்டோ புடிச்சாலும் யாரும் உங்கள போட்டோகிராப்பர்னு ஒத்துக்க மாட்டாங்க.. அதனால மொத வேலையா.. ஒரு DSLR வாங்குங்க... 

அப்புறம்.....

நெ.1 :

நீங்க ரோட்ல நடந்து போறப்ப... பஸ் ஸ்டேண்ட்ல ஒரு அழகான பொண்ணு நின்னுட்டு இருந்தா... உடனே அத போட்டோ எடுக்க கூடாது...

பக்கத்துல யாராவது பாட்டி இருந்துச்சின்னா... வளைச்சி வளைச்சி பாட்டியை மட்டும் போட்டோ புடிச்சி FB-ல போடணும். மறக்காம அத B&W-ல மாத்தி போடணும்...

நெ.2 :

எல்லோரும் வித விதமா பூவை போட்டோ எடுத்தாங்கன்னா.. நீங்க அது மாதிரி எல்லாம் பண்ணக்கூடாது...

அந்த செடில சிலந்தி வலை, ஏறும்பு இப்படி எதுனா இருக்கும்ல அதை க்ளோசப்ல படம் புடிங்க..

நெ.3 :

அப்புறம் இந்த எருமை மாடு, நாயின்னு எது ரோட்ல படுத்து இருந்தாலும் விட்றக்கூடாது... டக்னு கிளிக்கிடணும்..

நெ.4 :

கொஞ்சமா வெளிச்சம் இருக்குற இடத்துல போட்டோ எடுக்கணும்னா.. மொதல்ல வெளிச்சம் எந்த வழியா வருதுன்னு பாத்து அத்தனையும் க்ளோஸ் பண்ணிட்டு... போட்டோ எடுங்க..

அந்த போட்டோல கண்ணு, காது , மூக்கு இதுல எதோ ஒன்னு தெரிஞ்சா போதும்.. தெரியலைன்னாலும் பரவாயில்லை..

நெ.5 :

இப்ப ஒரு குட்டி பாப்பா அழகா சிரிச்சிட்டு இருக்குனு வைங்க.. உடனே டக்னு க்ளிக்கிடக்கூடாது... அது கையில மிட்டாய், பிஸ்கட் எதுனா இருக்கானு பாத்து... அத நைசா புடிங்கிடணும்..

இப்ப அந்த பாப்பா அழும்ல... அப்பத்தான் க்ளிக்...

நெ.6 :

போட்டோ எடுக்கும்போது கலைக்கண்ணோட எடுக்கணும்.. அது என்னானா...

அதாவது கேமராவ நேர வச்சி எடுத்தா... அது ஃபோட்டோ... அதே கேமராவ 45 degree சாய்ச்சா மாதிரி எடுத்தா... அதான் Photography.

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்....

நெ,7 :

போட்டோல எல்லாம் " Venki Photography ".. இது மாதிரி உங்க பேரை போட்டுடுங்க.. அம்புட்டுத்தேன்,

Saturday, August 20, 2016

புடவை கடைக்கு போனா.. அமைதியா இருக்கக் கூடாது...
உங்க Wife ஒரு புடவையை காட்டி எப்டி இருக்குனு கேட்டா..
அந்த புடவை உங்களுக்கு புடிக்கலைன்னா.. நல்லா இல்லனு தைரியமா சொல்லணும்..
ஏன்னா அது உங்க கருத்து...
அப்புறம்... உங்க Wife... ஏங்க நல்லா பாத்து சொல்லுங்கனு சொன்னா..
ஹி., ஹி., ஹி.. இத தனியா பாத்தா நல்லா இல்ல.. ஆனா நீ கட்டினா சூப்பரா இருக்கும்னு தோனுதுனு கூச்சமே படாம பல்டி அடிக்கணும்..
ஏன்னா.. உங்கள கருத்து கேக்க கூட்டிட்டு போல... பில் கட்ட தான் கூட்டிட்டு போயிருக்காங்க... மைண்ட் இட்..!!
# கருத்து முக்கியமா..?! சோறு முக்கியமா..?!!

Thursday, July 28, 2016


டியர் லேடீஸ்...,
என் ஹஸ்பென்ட் ஃபேஸ்புக் பாஸ்வேர்டே எனக்கு தெரியும்னு ஓவரா அலட்டிக்காதீங்க...
அவருக்கு இன்னொரு FB அக்கவுண்ட் இருக்கறது உங்களுக்கு தெரியுமா..?!!
# ச்சும்மா கொளுத்தி போடுவோம்..!!

Saturday, July 23, 2016

ஒரு கன்னத்தில் அறைஞ்சா மறு கன்னத்தை காட்டுணு சொன்னாரு...
நானும் பக்கத்துல இருந்த என் ப்ரெண்ட் கன்னத்தை காட்டினேன்...
ஸ்டுபிட் பெல்லோ.. அவனும் சேர்ந்து அடிக்க வர்றான்...
 

Saturday, July 9, 2016


ஒரு பெரிய விளம்பர படம் எடுக்கற கம்பெனில இருந்து நேத்து ஒருத்தர் பாக்க வந்தாரு....
" சார்.. எங்க அடுத்த விளம்பரத்துல நீங்க நடிக்கறீங்க... "
" என்ன விளம்பரம்..?! "
" Dove சோப்பு.. "
" என்ன வெளயாடறீங்களா..?! நாங்க எல்லாம் சுமார் மூஞ்சி குமாரு.. "
" கான்செப்டே அதானே.. "
" அப்டியா.. எங்கே சொல்லுங்க.. "
" மொதல் நாள் நீங்க ஒரு தெருவுல நடந்து போறீங்க அங்க நிறைய பொண்ணுங்க நின்னுட்டு இருக்காங்க.. "
" சரி..! "
" ஆனா ஒருத்தர் கூட உங்கள திரும்பி பாக்கல.. "
" ம்ம்.. அடுத்து நான் Dove யூஸ் பண்றேன்... அந்த பொண்ணுங்க எல்லாம் என் பின்னாடி ஓடி வர்றாங்க.. ரைட்டா.. "
" அதான் இல்ல... அப்பவும் உங்கள யாரும் திரும்பி பாக்கல.. "
" ஆங்... என்ன கான்செப்ட் இது.. இத எப்டி விளம்பரமா எடுப்பீங்க..?!! "
" கான்செப்ட் எல்லாம் OK ஆகி.. பர்ஸ்ட் பேமெண்ட் வந்திடுச்சு.... "
" இந்த கருமாந்திரம் பிடிச்ச கான்செப்டுக்கு எப்டி Dove கம்பெனிக்காரன் காசு குடுத்தான்..?!! "
" ஹி., ஹி., ஹி.. காசு குடுத்தது Dove கம்பெனிக்காரன் இல்ல பாஸ்.. Yardley கம்பெனிக்காரன்.. "
# ஸ்கெட்ச் உனக்கில்ல வெங்கி... Dove-க்கு....!!!

Sunday, July 3, 2016


இப்பல்லாம் நகைல அடிக்கடி டிசைன்ஸ் மாறிட்டே இருக்கு...
அதனால வருஷம் ஒரு தடவை என் Wife-ஐ நகை கடைக்கு கூட்டிட்டு போயிடுவேன்...
போயி...
வந்திருக்கிற எல்லா லேட்டஸட் டிசைன்ஸையும் காட்டிட்டு கூட்டிட்டு வருவேன்..
அப்டேட்டா இருக்கோணும்ல....

Thursday, June 23, 2016



நான் போனப்ப குமார் போன்ல ரொம்ப பவ்யமா பேசிட்டு இருந்தான்..
பக்கத்துல செந்தில்கிட்ட கேட்டேன்..
"யார்ரா லைன்ல..?"
"பேங்க்ல இருந்து மச்சி.. இன்னும் இந்த மாச
ஜூவல் லோன் வட்டி கட்டலையாம்.. அதான் கேக்கறாங்க."
"வட்டி தானே கட்டல.. அதுக்கு ஏன்டா இப்டி நடுங்கறான்...?"
அதுக்குள்ள லைன் கட் ஆகிடுச்சி.. ரெண்டு நிமிஷத்துல மறுபடியும் ரிங்....
"டேய் குமார், போனை இப்டி குடு.. நான் பேசறேன்..!"
"வெங்கி.. வேணாம்டா.."
"அட குடுடா.. எப்டி கொக்கி பிடி போடறேன்னு மட்டும் பாரு..!"
போன் கைமாறிச்சு..!!
"நான் குமாரோட ப்ரெண்ட் பேசறேன்.. சொல்லுங்க.. "
"இன்னிக்கு ஈவினிங்குள்ள உங்க ப்ரெண்டை இன்ட்ரஸ்ட் கட்ட சொல்லுங்க.."
"இதே மாதிரி விஜய் மல்லயாவை எல்லாம் பணம் கட்ட சொல்லி கேட்டீங்களா..? இவனை மட்டும் கேக்கறீங்க..?!"
"நாங்க ஏன் சார் அவரை பணம் கட்ட சொல்லணும்..? நகை உங்க ப்ரெண்டுது.."
"ஹி., ஹி.. ஹி... சோக்கு... உங்களுக்கு Jewel Loans act 46 clause C தெரியுமா? "
" தெரியாது...! "
( தெரியாதா..!! அப்ப அடிச்சி விட்றா வெங்கி... )
" அந்த 46 Clause C படி கிரிஸிஸ் டைம்ல பணம் கட்ட சொல்லி கம்பெல் பண்ண முடியாது தெரியுமா? "
"ஸாரி சார்.. இருங்க மேனேஜர்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடறேன்.."
"ம்ம்.."
2 நிமிஷம் கழிச்சு...
"மேனேஜர்கிட்ட சொல்லிட்டேன் சார்.. அவரு ஓகே, பணம் கட்ட வேண்டாம்ன்னு சொல்லிட்டார்"
( அப்டி வாங்க வழிக்கு..!! யாருகிட்ட.. )
"ம்ம் அப்புறம் என்னா சொன்னாரு..?"
"நகைய ஏலத்துல விடுங்கனு சொல்லிட்டாரு.."
(ஏலமா...?!!! ஓ மை காட்..!! )
‪#‎மாப்பு‬..வெச்சிட்டான்டா ஆப்பு...

Friday, June 3, 2016

"ரெண்டு நாளா உன் கூட பேசாம, உன் குரலை 
கேக்காம சோறே சாப்பிடல தெரியுமா..?!"
"நம்பற மாதிரி இல்லியே..."
"சத்தியமா... ஒன்லி கொத்து பரோட்டா, 
முட்டை தோசை, சில்லி இட்லி...."

Thursday, June 2, 2016

"நம்ம ஊர்ல ரிலையன்ஸ் Jio வந்துடுச்சாடா..?"
" சீக்கிரம் வந்துடும்.."
"எப்டி சொல்ற..?"
"Shankar Ji-க்கே கெடைச்சிடுச்சாம். அவருக்கு 
கெடைச்சா கடைக்கோடி தமிழனுக்கே கெடைச்ச மாதிரி.."
"ரைட்டேய்.."

Saturday, May 28, 2016

பக்கத்துத் தெரு பையனுக்கு ஏகப்பட்ட 
எக்ஸாம் டிப்ஸ் குடுத்து விட்டேன்..
ஆளையே காணோம்...
ஒருவேளை 500க்கு 500 எடுத்துட்டு 
தலைகனத்துல திரியறானோ என்னவோ..?!