Showing posts with label Girls. Show all posts
Showing posts with label Girls. Show all posts

Friday, December 8, 2017

" ஆயகலைகள் அறுபத்தி நாலாம்..! "
" இருந்துட்டு போகட்டும்..! "
" உனக்கு எத்தனை கலைகள் தெரியும் வெங்கி..?! "
" என்ன ஒரு பத்து பதினஞ்சு தெரியும்.. "
" பதினஞ்சா..?! எங்கே லிஸ்ட் போடு பாக்கலாம்.. "
" ம்ம்.. கலைச்செல்வி, கலைப்ரியா., கலைவாணி.... "
கிர்ர்ர்ர்...!!!

Friday, June 30, 2017

என் தம்பி பையனுக்கு இப்ப ரெண்டே முக்கால் வயசு..
ரொம்ப குறும்பு பண்றான்.. அதனால ப்ளே ஸ்கூல்ல கொண்டு போயி விடலாம்னு வீட்ல டிஸ்கஸன்..
எங்க ஊர்ல 3 ப்ளே ஸ்கூல்ஸ் இருக்கு.. சரினு பொடியனை கூட்டிட்டு ஒரு விசிட் போனேன்...
1st School-ல வருஷத்துக்கு 10,000 கேட்டாங்க...
2-வதுல 12,000..
3-வது ஸ்கூல் போனோமா... அங்கே...
" ஐ மாலாக்கா..!! "
( ஹி., ஹி.. ஹி.. மாலாக்கா மாதிரியே ஒரு மிஸ் இருந்தாங்க.. )
ஆனா பீஸூ 25,000... யம்மோ...
என் தம்பிகிட்ட வந்து சொன்னேன்... 1st ஸ்கூல் ஓ.கேனு சொல்லிட்டான்...
1st ஸ்கூலாஆஆஆ...?!!
உடனே அவனுக்கு ஒரு ஆஃபர் குடுத்தேன்...
" 3-வது ஸ்கூல்ல சேக்கலாம்.. டெய்லி பையனை நானே கொண்டு போயி விட்டுட்டு, கூட்டிட்டு வர்றேன்.. "
அப்பவும் நோ சொல்லிட்டான்.... சே...!!!
பின்ன அதிகமா பீஸ் வாங்கற ஸ்கூல் தானே பெஸ்ட் ஸ்கூலா இருக்க முடியும்..!!
அதான் மறுபடியும் இன்னொரு ஆஃபர் குடுக்கலாமானு திங்கிங்...
என்ன ஆஃபரா..?!!
" முழு பீஸையும் நானே கட்டிட்டா...?! "
நமக்கு பையன் படிப்பு தானே முக்கியம்.. என்ன நான் சொல்றது..?!

Tuesday, May 16, 2017

" நீங்க +2-ல எல்லா சப்ஜெக்ட்லயும் 98% மார்க்கா..? "
" இல்லையே... ஏன் கேக்கறீங்க...? "
" இல்ல.. பெண்கள் முன்னேற்றத்துக்காக ஒவ்வொரு எக்ஸாம்லயும் 2 மார்க் வேணும்னே விட்டுட்டு வருவேன்னு போஸ்ட் போட்டிருந்தீங்களே அதுக்கு கேட்டேன்... "
" ஹி., ஹி., ஹி.. நீங்க சரியா புரிஞ்சிக்கல.... மீனாவுக்காக 2 மார்க், பிரியாவுக்காக 2 மார்க், சங்கீதாவுக்காக 2 மார்க்.... "
" ம்க்க்கும்...!! "
#இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புது..?!!

Saturday, May 13, 2017

இந்த கீர்த்தனா பொண்ணுக்கு தான் என் மேல எவ்ளோ பாசம்...!!
வாரம் ஒரு தடவை போன் பண்ணி.... " வெங்கட்... பணம் எதாவது வேணுமா.? னு " கேக்கும்...
எங்க அப்பா கூட என்கிட்ட இப்டி கேட்டதி்ல்ல... எனக்கு அப்டியே கண்ணு கலங்கும்....
இத்தனைக்கும் நாங்க நேர்ல மீட் பண்ணினது இல்ல....
யார் பெத்த புள்ளயோ... நல்லா இருக்கட்டும்...
ஆங் சொல்ல மறந்துட்டேனே.... நம்ம கீ்ர்த்தனா ஐசிஐசிஐ பேங்க்ல லோன் செக்சன்ல வேல செய்யுதாம்...!!

Friday, March 17, 2017

மகளிர் தின வாழ்த்தெல்லாம் பொண்ணுகளுக்கு தான் சொல்லணும்...
தேவதைகளுக்கு தேவையில்ல....!!
#எஸ்கேப் டிப்ஸ்...!!!

Saturday, December 31, 2016

பொண்ணுங்கள கேவலமா நெனக்கறதே பொண்ணுங்க தான்...
டவுட்டா இருந்தா.... ஒரு பொண்ணுகிட்ட போயி...
" நீயும் எல்லா பொண்ணுங்க மாதிரி தான்னு " சொல்லி பாருங்களேன்.....
அந்த பொண்ணுக்கு கோவம் வரும்....
#தும் தத்தா..!!

Wednesday, October 12, 2016

'நீங்க நல்லா கவிதை எழுதுவீங்களாமே'ன்னு கேட்டா.... நூத்துக்கு அம்பது பொண்ணுங்க,
'ஆமா... இதெப்படி உங்களுக்குத் தெரியும்'ன்னு கேப்பாங்க...
அதே... 'நீங்க சூப்பரா பாடுவீங்க தானே'ன்னு கேட்டுப் பாருங்க... நூத்துக்குத் தொன்னூறு பொண்ணுங்க,
'ஆமா... எப்ப கேட்டீங்க'ன்னு கேப்பாங்க...
ஆனா... தப்பித் தவறிக் கூட 'நீங்க நல்லா சமைப்பீங்களாமே'ன்னு மட்டும் கேட்டு வெக்காதீங்க...
கலாய்க்கறோம்னு கண்டுபிடிச்சிடுவாங்க...!!!

Monday, August 8, 2016

ப்ரெண்ஷிப் டே - மீம்ஸ்


" நான் மத்த பொண்ணுங்க மாதிரியில்ல.. ஐயம் டிப்பரெண்ட்..! "
" ஓ..! சரி.., புதுசா சிங்கப்பூர் டிசைன்ல மூணு சவரன்ல ஒரு நெக்லஸ் வந்திருக்கு பாக்கறியா.?!! "
" எங்கே.. எங்கே.. காட்டு.. காட்டு... "
# ஹி., ஹி., ஹி.. டிப்பரெண்ட்..!!

Wednesday, July 13, 2016

நம்ம புகழ் உலகம் முழுக்க பரவிட்டு இருக்கு போல...
இதோ.. இப்ப வெள்ளக்கார புள்ள ஒண்ணு ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் குடுத்து இருக்கு...
அக்செப்ட் பண்றதா..? வேணாமா..?!!
ஒரு தடவைக்கு 541 தடவை யோசிச்சி பாத்துட்டேன்..
எப்டி இருந்தாலும் சாட்டிங் பண்ணும் போது லாங்வேஜ் பிராப்ளம் வரும்.. நமக்கு தேவையா..?!!
அதனால தெளிவா சொல்லிட்டேன்...
" நீ போயி மொதல்ல தமிழ் கத்துட்டு வாம்மா... "
# தமிழ் வளர்ப்போம்...!!! ஹி., ஹி., ஹி..!!

Monday, July 11, 2016

இந்த லேடீஸ் க்ரூப்ல பொண்டாட்டிய சேத்து விடறதுங்கறது...
ரோட்ல ரௌடித்தனம் பண்ணிட்டு இருந்தவனை கராத்தே கிளாஸ்ல சேத்து விட்ட மாதிரி...
# இனிமே அடி டெக்னிக்கா விழும்...!!

Saturday, July 9, 2016

பொண்ணுங்ககிட்ட இருந்து ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் வந்தா.. 
நான் உடனே அக்செப்ட் பண்ண மாட்டேன்...
தப்பா நெனச்சிப்பாங்க...
ரெண்டு நிமிஷம் கழிச்சு தான் அக்செப்ட் பண்ணுவேன்...
 

Friday, June 10, 2016

பொண்ணுங்ககிட்ட மொபைல் நம்பர் வாங்க டிப்ஸ்
 
எனக்கு ஃபேஸ் ரீடிங் தெரியும்.. உங்க முகத்தைப் பாத்து 
உங்களப் பத்தி சொல்லட்டானு கேக்கணும்..

சரி சொல்லுங்கனு சொல்லிட்டா... ஆரம்பிங்க...

1. உங்களுக்கு பிடிச்ச கலர் "பிங்க்"
(பத்துக்கு எட்டு புள்ளங்களுக்கு இந்த கலர் தான் பிடிக்கும்.. 
அதனால தாராளமா அடிச்சி விடலாம்)

2. நீங்க அப்பா செல்லம்.. அம்மா ஸ்ட்ரிக்ட்டு ஆபீசர்
(இதான் உலக வழக்கம்.. மிஸ்ஸாக சான்ஸே இல்ல)

3. உங்களுக்கு டீ வெக்க கூட தெரியாது.. மேரேஜ் ஃபிக்ஸானா கத்துக்கலாம்னு இருக்கீங்க..
(இதுக்கு எந்த பொண்ணாவது இல்லனு சொல்லிச்சுனா.. 
உலகம் அன்னியோட அழிஞ்சிடும்)

4. ஓவரா மேக்கப் போட்டுக்கறது உங்களுக்கு சுத்தமா 
பிடிக்காது.. ஒன்லி லைட் மேக்கப்..
(எவ்ளோ "ஓவரா" இருந்தாலும்.. அவங்கள பொறுத்தவரை 
அது "லைட்" தான்)

5. உங்களுக்கு பிடிச்ச ஹீரோ.... விஜய்ய்ய்ய்ய்...
(அப்டினு சொல்லிட்டே அவங்க மூஞ்சை பாக்கணும்.. 
ஸ்மைல் வந்தா... விஜய்னே முடிச்சிடணும்.. மூஞ்சி மாறிச்சின்னா..... விஜய்ய்ய்ய்... இல்ல.. அஜித்னு முடிச்சிடணும்...)

6. நீங்க ரொம்ப தன்னம்பிக்கையான ஆளு.., சமுதாயத்துல 
சாதிச்சு சொந்த கால்ல நிக்கணும்கறது தான் உங்க இலட்சியம்..
(அப்டி ஒரு ஐடியாவே இல்லன்னாலும்.. ஆமானு தான் சொல்லி 
ஆகணும்.. இது பிரஸ்டீஜ் மேட்டர்..)

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்..

7. யாருக்கும் உங்க மொபைல் நம்பர் குடுக்கறது உங்களுக்கு 
பிடிக்காது.. ஆனா உங்களுக்கு ஒருத்தரை பிடிச்சி போச்சுன்னா.. 
அவங்க கேக்காமலே உங்க நம்பரை தருவீங்க..

இப்ப இவ்ளோ போதும்.. மீதிய போன்ல பேசிக்கலாம்..!!

Thursday, May 26, 2016



Airtel-ல சிக்னல் பிராப்ளம்.. Vodafone-க்கு
மாறிடலாம்னு ஆபீஸ் போயிருந்தேன்..
டோக்கன் குடுத்து உக்கார வெச்சிட்டாங்க..
ஆபீஸ்ல.. மொத்தம் 7 டெஸ்க்..
அதுல 6 பசங்க.. ஒரே ஒரு பொண்ணு...
எந்த டெஸ்க் காலியாகுதோ.. டோக்கன் வரிசைபடி போகணும்..
அதிர்ஷ்டம் இருந்தா.. அந்த பொண்ணு தான்
என்னைய கூப்பிடும்னு மனசுல நெனச்சிக்கிட்டேன்...
சொன்ன மாதிரியே அந்த பொண்ணு தான் கூப்பிட்டிச்சு..
பார்ரா... என்னா அதிர்ஷ்டம் அந்த பொண்ணுக்கு..!!!
 

Tuesday, May 10, 2016


நாலு பொண்ணுங்க க்ரூப்பா இருக்கிற போட்டோ 
பாத்ததும் உங்களுக்கு அதுல

ஒரு பொண்ணு மட்டும் அழகா இருக்கற மாதிரி 
தெரிஞ்சா... நீங்க அழகை ரசிக்கிறவர்னு அர்த்தம்..

ரெண்டு பொண்ணுங்க அழகா இருக்கற மாதிரி 
தோணினா... நீங்க அட்ஜஸ்டபிள் டைப்னு அர்த்தம்..

மூணு பொண்ணுங்க அழகா இருக்கற மாதிரி 
தோணினா.. நீங்க ரொம்ப பிராக்டிகல் பர்சன்னு அர்த்தம்...

நாலு பொண்ணுங்களுமே அழகா இருக்கற மாதிரி 
தோணினா....
.
.
.
.
.
டியர் கேர்ள்ஸ்..., நீங்க எச்சரிக்கையா இருக்க வேண்டியது 
இவன்கிட்ட தான்.. பாத்து சூதானமா இருங்க...

Friday, April 29, 2016

" எப்ப பாரு பொண்ணுகளை குறை சொல்றதுதான் 
ஆண்களின் முக்கியமான வேலையே...."

"ஓ... அப்ப இதுக்கு பேரு என்ன..? பாராட்டி பட்டம் 
குடுக்கறதா...? "

# தட் அவிங்களுக்கு வந்தா ரத்தம்..
எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி மொமெண்ட்...!!

Tuesday, April 19, 2016

யாராவது பாட்டிமா கண்ணு தெரியாம
ரோடு கிராஸ் பண்ண முடியாம நின்னுட்டு
இருந்தா.. உடனே ஓடிபோய் ரோடு கிராஸ்
பண்ண ஹெல்ப் பண்ணிடாதீங்க...
எதுக்கும் பாத்து.., நின்னு நிதானமா யார்னு
தெரி்ஞ்சிகிட்டு ஹெல்ப் பண்ணுங்க..
அப்புறம் அது எதாவது ஃபேஸ்புக் பிரபலமா இருந்து..
" என்னைய ஆன்டினு கூப்பிட்டானு " கலவரம்
பண்ண ஆரம்பிச்சிடும்க...
பாட்டிகளா ஒரு க்ரூப் சேர்ந்துகிட்டு..
" அவன் என்னை ஆன்டினு கூப்பிட்டான்
இவன் என்ன ஆன்டினு கூப்பிட்டா"-னு
கலவரம் பண்ணிட்டு இருக்குதுங்க.....
பேசாம போறீங்களா.. இல்ல கண்ணாடிய
கழட்டி காக்காவுக்கு போடவா..?!

Friday, March 11, 2016

டிராபிக்ல ஒரு ஸ்கூட்டியும், பைக்கும்
முட்டிக்கிச்சு...
அந்த பொண்ணு திட்ட..,
அந்த பையன் பதிலுக்கு கத்த..
ஒரு ரணகளமாக கூடிய சூழல்
என் கண்ணுக்கு தெரி்ஞ்சது..
( " நாட்டாமை... சீக்கிரம் பஞ்சாயத்து பண்றா.. "
- என் உள்மனசு )
எப்படியும் தப்பு அந்த பொண்ணு மேல தான் இருக்கும்...
டக்னு நான் வண்டிய விட்டு இறங்கி
அவங்க பக்கத்தில போனேன்...
போயி...
" ஏம்பா தம்பி.... பாத்து வரக்கூடாது..?! "