Showing posts with label College. Show all posts
Showing posts with label College. Show all posts

Tuesday, September 19, 2017


B.Com 2nd Year..
அன்னிக்கு ஆஸ்திரேலியா Vs இந்தியா மேட்ச்... நான் கமெண்டரி கேக்க டிரான்சிஸ்டர் எடுத்துட்டு போயிட்டேன்..
அப்ப எங்களுக்கு புதுசா ஒரு சார் வந்திருந்தாரு.. பேரு லோகநாதன்...
அன்னிக்கு அவர் நடத்தின எதுவும் எனக்கு புரியல...
( பொதுவாவே எனக்கு யார் பாடம் நடத்தினாலும் புரியாது.. அது வேற விஷயம்... ஹி., ஹி., ஹி.. )
சரி கொஞ்ச நேரம் கமெண்டரியாச்சும் கேப்போம்னு... குனிஞ்சி நிமிந்து கேட்டுட்டு இருந்தேன்..
கிளாஸே மந்திரிச்சி விட்ட மாதிரி இருக்கறப்ப ஒருத்தன் மட்டும் யோகா பண்ணிட்டு இருந்தா சந்தேகம் வராதா..? வந்துச்சே...
என் பக்கத்துல வந்தவரு டிரான்சிஸ்டரை பாத்துட்டு... புடிங்கிட்டு... இரு உன்னை பத்தி கம்ப்ளயின்ட் பண்றேனு கெளம்பினாரு...
உடனே நானு....
" சார்.. சார்... வேணா சார்... HOD கிட்ட கம்ப்ளயின்ட் பண்ணிடாதீங்க சார்னு... " கெஞ்சினேன்...
லெப்ட்ல பிரின்சிபால் ரூம்.. ரைட்ல HOD ரூம்... லோகு டக்னு ரைட்ல திரும்பி HOD-கிட்ட போயிட்டாரு...
ஆஹா.... HOD ரொம்ப வில்லங்கமானவாராச்சே..?!!
கொஞ்ச நேரத்துல HOD கூப்பிடறார்னு ஆள் வந்துச்சு...
பம்மிட்டே போனேன்....
அவர் கையில என் டிரான்சிஸ்டர்...
" சார்ர்ர்ர்ர்....!! "
தலைய தூக்கி பாத்து கேட்டார் பாருங்க ஒரு கேள்வி...
.
.
.
.
" ஆமா... இதுல எந்த ஸ்டேஷன்லடா கமெண்டரி வருது.? "
ஹி., ஹி., ஹி...!! நான் சொல்லல... எங்க HOD ரொம்ப வில்லங்கமானவர்னு...

Sunday, May 21, 2017

இன்னிக்கு ஒரு பிஸினஸ் மீட்டிங்.. அங்க ஒருத்தரு என்னையே உத்து பாத்துட்டு இருந்தாரு...
ஒருவேள நம்ம ஃபேஸ்புக் ஃபேனா இருப்பாரோ..?!!
கொஞ்ச நேரத்துல என்கிட்ட வந்து....
" நீங்க செளடேஸ்வரி காலேஜ்ல MCA படிச்சீங்க தானே..?! "
" ஆமா...!! "
" அண்ணே என்னை தெரியுதா.?! "
" தெரியலியே..?! "
" நான் உங்க சப்ஜூனியர் பிரகாஷ்.. "
" பிரகாஷா..?!! " ( யோசிச்சிங் )
" யுவராஜ் பேட்ச்... "
" எந்த யுவராஜ்..?! "
" ஜெயக்குமார் ஞாபகம் வருதா..? "
" ஜெயக்குமாரா..?! "
" சரண்யா ஞாபகம் இருக்கா..?! "
" ஆங்... சரண்யா... சொல்லு சொல்லு...!! "
" கிர்ர்ர்ர்..!! "
இப்ப என்னாத்துக்கு இவன் என்னைய மொறைக்கறான்...?!!
தெரியுமானு கேட்டதுக்கு... தெரியும்னு சொன்னதெல்லாம் ஒரு குத்தமா..?!!

Monday, November 7, 2016

நான் சொல்ற எதையுமே நம்பாத ஒரு மனுஷன் இருந்தார்னா... அது எங்க காலேஜ் பிரின்சிபால் தான்...
அம்புட்டு நம்பிக்கை என் மேல..!!
கட்ட கடேசில... ஃபேர்வெல் டேல...
" நீங்க ரொம்ப நல்லவர் சார்னு " மேடையில வெச்சே சொல்லிட்டேன்...
அதையும் அந்த மனுஷன் நம்பல...!!!
:P :P

Thursday, September 29, 2016

காலேஜ்ல ஒரு நாள் என் ப்ரெண்ட் ரமேஷ் என்கிட்ட...
"மச்சான் படத்துக்குப் போலாமா"ன்னு கேட்டான்..
எக்கனாமிக்ஸ் கிளாஸ் இருக்கே...
கிளாஸா..? சினிமாவா..? எனக்கு ஒரே குழப்பமா இருந்தது..
நான் குழப்பமா இருக்கறத பாத்துட்டு என் ஞானக்கண்ணைத் திறக்கற மாதிரி ஒரு கேள்வி கேட்டான் பாருங்க ரமேஷூ....
.
.
.
.
.
.
"மச்சி... கிளாஸுக்குப் போனா மட்டும் நமக்கு புரியவா போகுது..?"
# ஆஹா.... தெய்வ மச்சான்...!!!

Sunday, May 29, 2016

MCA 3rd Year...
மைக்ரோபிராசசர் பிராக்டிகல்ஸ்...
மைக்ரோபிராசசரை பொருத்த வரை எல்லா 
Coding-ம் எனக்கு தலைகீழா தெரியும்..
( அப்ப நேரா தெரியாதானு அபத்தமா
கேக்க கூடாது...!! அப்புறம் நான் உண்மைய
உளறிடுவேன்... )
அன்னிக்கு பிராக்டிகல்ஸ் ஒரு சின்ன மோட்டாரை
Clockwise-ல சுத்த வெக்கணும்.
முதல்ல பேப்பர்ல Coding-ஐ எழுதணும்.
அப்புறம் அதை அந்த Micro Processor Kid-ல
இன்புட் பண்ணினா.. மோட்டர் சுத்தும்..
நானும் கோடிங் எழுதி., Input பண்ணி பார்க்குறேன்..
அந்த கருமாந்திரம் புடிச்ச மோட்டர் கடைசி வரை சுத்தவே இல்ல..
பக்கத்துல பாத்தா... என் பிரண்டு விமல்
மோட்டர் சுத்திட்டு இருந்தது...
எனக்கு தலை சுத்த ஆரம்பிச்சிடுச்சு..
( " ஓ.. மை காட்..! இவன் பாஸ் ஆகிடுவான்
போல இருக்கே..?! " )
" டேய்.. விமல்.. என் மோட்டர் சுத்தலைடா..
Coding-ல எதாவது மிஸ்டேக் இருக்கான்னு
செக் பண்றானு.. " என் பேப்பரை லைட்டா
அவனுக்கு காட்டினேன்..
அவனும் பாத்துட்டு...
" 17வது லைனும்., 18வது லைனும் இடம் மாறி
இருக்கு.. மாத்தி எழுதி, Input பண்ணுனு.." சொன்னான்...
ஓஹோ.. டக்னு மாத்தி Input செஞ்சேன்..
வாவ்.. மோட்டர் சுத்திடிச்சி...!!
உடனே அத HOD-கிட்ட காட்டி.. ஓ.கே வாங்கிட்டேன்..
இப்ப பேப்பர்ல Coding-ஐ திருத்தி எழுதணும்..
ஒரு அடித்தல் திருத்தல் இல்லாம எழுதி
இருக்கோம்.. இதை., திருத்தி பேப்பர் அழகை
கெடுக்கணுமானு யோசிச்சேன்..
அப்ப தான் எனக்கு கனநேரத்தில் உதிச்சது
ஒரு சிந்தனை ...
( இந்த கோடிங்கை எழுதறதே இவ்ளோ
கஷ்டமா இருக்கே..
அப்ப இது கரெக்ட்டானு செக் பண்றது
எவ்ளோ கஷ்டமா இருக்கும்..?!! )
பேப்பரை அப்படியே கட்டி குடுத்துட்டு வந்துட்டேன்..
ரிசல்ட வந்தது...
எங்க க்ளாஸ்லயே நான் மட்டும் தான் சென்டம்..
ஹி., ஹி., ஹி...!!!
இதை கேட்டதும் விமல் ஷாக் ஆகிட்டான்...
" டேய்... எங்க எல்லோர் மோட்டரும் தானே
சுத்திச்சு.. நீ மட்டும் எப்டிடா சென்டம்..? "
" ஹி., ஹி., ஹி... நீங்கல்லாம் மோட்டரை மட்டும்
தான்டா சுத்துனீங்க.. நான் எக்ஸ்ட்ராவா HOD காதுல 
பூவும்ல சுத்தினேன்..!! "

டிஸ்கி : எல்லா பக்கிங்களும் பேப்பர்ல கோடிங்க் 
அடிச்சி, திருத்தி எழுதி இருந்தானுங்களாம்..!!

Sunday, April 24, 2016

எங்க காலேஜ்ல 1600 பேர் படிச்சாலும்
எங்க பிரின்சிபால்க்கு என்னை கண்டா
கொல்ல(?!) பிரியம்..
ரெண்டு நாளைக்கு ஒரு தரம் ஆபீஸ் ரூம்க்கு 
வரவெச்சி பல பல அட்வைஸ்கள்(?!) குடுப்பாரு...
அது மட்டுமா... மாசம் ஒரு தடவை எங்க அப்பாகிட்ட
என்னை எப்டி வளர்க்கணும்னு(?!) ஒரு மணி நேரம்
டிஸ்கஸ் பண்ணுவாரு...
அப்பப்ப.. ஒண்ணு ரெண்டு நாள் லீவ்(?!) குடுத்து..
"போயி ரெஸ்ட் எடுப்பா"னு அனுப்பிடுவாரு..
இப்படிப்பட்ட அன்பு தெய்வமான(?!)
எங்க பிரின்சிபால்க்கு எதாவது செய்யணும்னு
ரொம்ப நாளா நெனச்சிட்டு இருந்தேன்...
அதுக்கு இப்ப தான் வேளை வந்து இருக்கு...
அவருக்கு ஃபேஸ்புக்ல ப்ரெண்ட் ரிக்வெஸ்ட்
குடுத்து இருக்கேன்...
அக்சப்ட் பண்ணட்டும்...
# செஞ்சிருவோம்...!! ஹி.,ஹி.,ஹி..!!

Monday, December 28, 2015

" MCA-ல ப்ராஜெக்ட் பண்றது அவ்ளோ கஷ்டமா.?! "
" இல்லியா பின்னே... செம கஷ்டம்..!! "
" ஆனா.. நீ காசு குடுத்துல்ல வாங்கினே..?! "
" ஹி., ஹி.,ஹி.. ப்ராஜெட் கூட செஞ்சிடலாம் மச்சி..
ஆனா செஞ்ச ப்ராஜெக்ட்டை காசு குடுத்து வாங்கறது
எவ்ளோ கஷ்டம் தெரியுமா..?!! "
# த்த்தூ..!!

Sunday, June 7, 2015

MCA படிச்சப்ப ஒரு செமஸ்டர்ல
ஒரு கொஸ்டின் பேப்பர் அவுட் ஆகிடுச்சு...
" யாருக்கும் குடுக்காதே"-னு சொல்லி 
இன்னொரு காலேஜ்ல படிக்கிற என் ப்ரெண்ட்
குடுத்தான்...
ஆனா என் ப்ரெண்ட்ஸ்கிட்ட மறைக்க
மனசு கேக்கல..
( இங்கே தான் நீங்க என் நல்ல மனசை
நல்லா நோட் பண்ணனும்..!! )
என் சொந்த காசுல ஆளுக்கு ஒரு ஜெராக்ஸ்
எடுத்து கொடுத்தேன்....
( நண்பேன்டா..!! )
.
.
.
.
.
அப்புறம்....
எக்ஸாம்ல கொஸ்டின் பேப்பர் மாத்திட்டாங்க..
கிளாஸே... கூண்டோட கைலாசம்..!!
ஹி., ஹி., ஹி..!!!

Thursday, February 19, 2015


காலேஜ்ல எனக்கு கண்மணினு
ஒரு ப்ரெண்டு
பேச்சுப்போட்டி, கவிதைபோட்டினு
எது நடந்தாலும் நாங்க ரெண்டு பேரும் 
கலந்துக்குவோம்..
( பரிசு என்னமோ அவங்களுக்கு தான்
கெடைக்கும்.. அது வேற விஷயம்..!!
ஹி., ஹி., )
ஒரு நாள் கண்மணி ஒரு டைரி
வெச்சிருந்தாப்ல... எடுத்து படிச்சா...
டைரி முழுக்க... கவிதை..!!!
அட நம்ம கூட இருக்குற புள்ளக்கு
இவ்ளோ தெறமையான்னு புல்லரிச்சு
போச்சு...
" கண்மணி... இதை நீயா எழுதினே..? "
" ஆமாம்.. எதுக்கு கேக்கற..? "
" வாவ் சூப்பர்... சூப்பர்... வைரமுத்து மாதிரியே
எழுதறியே... "
" ஏய்.. நெசமா சொல்லு... நீ வைரமுத்து கவிதை
படிச்சி இருக்கே...?!! "
" என்ன இப்படி கேட்டுட்டே.. ஒரு புக் விடாம
படிச்சி இருக்கேன்.. ஆமா ஏன் அப்படி டவுட்டா
கேக்கறே..? "
" ஏன்னா.. இதெல்லாமே அவரோட கவிதை
தான்..!!! அதான் கேட்டேன்... "
டொய்ங்....
# ஓவரா ஃபிலிம் காட்டிட்டோமோ..?!!

Sunday, March 30, 2014


MCA படிச்சப்ப நானும் என் ப்ரெண்ட்ஸ் 
ரெண்டு பேரும் ஒரு கம்பியூட்டர் சென்டர்ல 
போயி ஜாவா கோர்ஸ் சேர்ந்தோம்..

மாசம் 4 ஓடிட்டதே தவிர நாங்க ஜாவா 
கத்துகிட்டபாடில்ல..

ஏன் 4 மாசத்துல ஜாவா ஓரளவாவது
கத்துக்கலமேன்னு நீங்க கேக்க வர்றது
எனக்கு தெரியுது.

But அதுக்கு என்ன காரணம்னா..

வாரத்துல நாங்க 2 நாள் லீவ் போடுவோம்..,

எங்களுக்கு ஜாவா சொல்லிகுடுக்கற சார்
2 நாள் லீவ் போடுவாரு..

அப்ப வாரத்துல 3 நாள் தான் Class-க்கு
போனீங்களான்னு கேட்ககூடாது..

சனி, ஞாயிறு கம்பியூட்டர் சென்டர்
லீவுல்ல..

ஹி., ஹி., ஹி...!!!