Showing posts with label Mangu. Show all posts
Showing posts with label Mangu. Show all posts

Tuesday, July 25, 2017


ஐ ஜாலி.... ஐயம் வெரி ஹேப்பி..!!
டேய்... மனசு எதுவும் மாறி தொலைச்சிடாதேடா....


Saturday, July 1, 2017

மங்குகிட்ட....
" டேய்.. நான் எங்கயாவது பொண்ணுங்க போஸ்ட்டுக்கு கமெண்ட் போட்டா... நீயும் எதுக்குடா பின்னாடி வந்து கமெண்ட் போடறே... "
" ஹி., ஹி., ஹி.. இப்பல்லாம் பொண்ணுங்க பேர்ல நெறைய ஃபேக் ஐடி சுத்துது மச்சி.. ஆனா... நீ கமெண்ட் போட்டேன்னா அது கன்பார்மா பொண்ணா தான் இருக்கும்... வெரிபைடு... "
#ஙே...!!

Saturday, April 15, 2017

மங்குக்கு ( Shajahan S ) ஒரு கம்பெனில இன்டர்வியூ... அது என் ப்ரெண்ட் சுதா வொர்க் பண்ற கம்பெனி...
சுதாவுக்கு போன் பண்ணி சொன்னேன்... கூட்டிட்டு வா பேசிக்கலாம்னு சொல்லிச்சு...
ஆபீஸ்....
மங்கு மட்டும் உள்ளே போனான்... நான் வெளியே வெயிட்டிங்...
வேலை எப்படியும் கன்பார்ம் தான்... இதெல்லாம் சும்மா பார்மாலிட்டி...
பின்ன நம்ம சுதால்ல... சே... நம்ம ரெகமண்டேஷன்ல....
கொஞ்ச நேரத்துல சுதாகிட்ட இருந்து கால் வந்தது... உள்ளே வரச்சொல்லி....
உள்ளே போனா... சுதா டென்ஷனா இருந்தது..
ஆஹா... இந்த பக்கி என்ன பண்ணி தொலைச்சானோ தெரியலியே....?!!
" வெங்கி.. உன் ப்ரெண்ட்ட கூட்டிட்டு மொதல்ல கெளம்பு... "
" ஏன் சுதா என்ன ஆச்சு..?! "
" வந்ததுல இருந்து என் முகத்தையே உத்து பாத்துட்டு இருக்கான்... எனக்கு இவன் சரினு படல..."
" ஏன்டா ஏன்..?! "
" நீதானே மச்சி சொன்னே... "
" என்னாது நானா..?! "
" ம்ம்ம்... அந்த புள்ள என் ப்ரெண்டு.. பாத்த்து பேசுனு சொன்னேல்ல... "
அட பிக்காலி பயலே...!!!

Tuesday, March 28, 2017

மங்கு கால் பண்ணியிருந்தான்...
" மச்சி... என் ஆளு இன்னிக்கு வீடியோ கால் பேசலாம்னு சொல்லியிருக்கா... "
( இது எத்தனாவது ஆள்னு தெரியலியே...?! )
" சரி போயி பேசு... "
" அதுக்கு முன்னாடி உன்கிட்ட ஐடியா கேக்கலாம்னு வந்தேன்... "
" ஐடியாவா..?! "
" யெஸ்.. வீடியோல பாத்துமே என் அழகுல அவ மயங்கணும்.. அதுக்கு எதாவது அழகு குறிப்பு இருக்கா..? "
" சே., சே உன் ரேன்ஞ் தெரியாம நீ பேசற மச்சி.. எந்த அழகு குறிப்பும் உனக்கு தேவையேயில்ல...."
" அப்டீன்ற...? "
" ம்ம்ம்... நீ நேரா போயி உன் மூஞ்சிய வீடியோல காட்டு்.... அப்புறம் அந்த புள்ள எப்டி அலறிட்டு மயக்கம் போடுதுனு மட்டும் பாரேன்.. "

Friday, March 17, 2017

இன்னிக்கு பிரியாங்கிற பேர்ல ஒரு ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் வந்தது....
எந்த பிரியாவா இருக்கும்..?! ஒருவேளை நம்ம கூட படிச்ச பிரியாவா இருக்குமோ..?! திங்கிங்.....
உடனே அக்சப்ட் பண்ணுனா நம்பள தப்பா நெனப்பாங்க... கொஞ்சம் வெயிட் பண்ணுவோம்....
கொஞ்ச நேரம் கழிச்சு ( 2 நிமிஷம் ) அக்சப்ட் பண்ணினேன்..... ஹி., ஹி., ஹி...!!
அடுத்த 5 நிமிஷத்துல மங்கு பய கால் பண்ணினான்....
" சொல்லுடா மங்கு.. "
" ஏன்டா... பொண்ணு பேர்ல ரிக்வெஸ்ட் வந்தா கண்ணை மூடிட்டு அக்சப்ட் பண்ணிப்பியா..? "
" ஏன் மச்சி எனி ப்ராப்ளம்..?!! "
" பிரியாங்கிற பேர்ல உனக்கு ரிக்வெஸ்ட் வந்ததுல்ல... அது நான் தான்.. "
" ஆ....!!! நீயா...?!! "
" ம்ம்ம்.. ஏன்டா என் ப்ரெண்டா இருந்துட்டு இப்டி அல்பமா இருக்க... த்த்த்தூ... "
( காலக் கொடுமைடா மாதவா...!!? )
" சரி மங்கு உனக்கு தீபிகா தெரியும்ல...?! "
" எந்த தீபிகா..?! "
" அதான் நீ சாட்டிங் பண்ணிட்டு இருக்கியே.. அந்த தீபிகா.. "
" ஆங்... அதெப்படி உனக்கு...?! "
" ஹி., ஹி., ஹி... அது நான் தான் மச்சி.. "
" என்னாது... நீயா...?!! "

Tuesday, January 31, 2017

" மங்கு (Shajahan S) என் Fake Id-னு நெறைய பேரு நெனச்சிட்டு இருக்காங்க.. "
" ஆமா மச்சி எனக்கே ரொம்ப நாளா அந்த டவுட் தான்... "
" ம்ம்ம்... அதான் ஒரு ப்ளான் பண்ணியிருக்கேன்... "
" என்ன ப்ளானு...?! "
" இன்னிக்கு மங்கு கூட பயங்கரமா சண்டை போட்டுட்டேன்... "
" அப்புறம்..?! "
" அப்புறம் என்ன அந்த ஐ.டிய டீஆக்டிவேட் பண்ண வேண்டியது தான்... "
" டீஆக்டிவேட்டாஆஆஆ..?!! "
" டீஆக்டிவேட்டுன்னா சொன்னேன்..?! ( அவசரத்துல உளறிட்டோமோ..?! ) அன்ப்ரெண்ட் பண்ண போறேன்... ஹி., ஹி., ஹி...!! "

Wednesday, January 11, 2017

இன்னிக்கு காலைல மங்கு (Shajahan S)
" மச்சி.. என் லவ்வர இம்ப்ரஸ் பண்ணனும்.. ஒரு ஐடியா குடேன்... "
" உன் லவ்வருக்கு எதாவது கவிதை எழுதி குடு... "
" கவிதையா..? நானா..? நான் கவிதைனு எழுதினாலே ஸ்பெல்லிங் மிஸ்டேக் வருமே.... "
" அப்ப பாட்டாவே படிச்சிடு.. "
" அப்டீன்ற... சரி ஈஸியா ஒரு கவிதை சொல்லு.. "
" ஒரு
ஸ்வீட் ஸ்டாலே
ஸ்வீட்
சாப்பிடுகிறதே..
அடடே..!!! "
" சூப்பர் மச்சி... ஒருவேளை அவ ஸ்வீட் சாப்பிடலைன்னா.. "
" எது சாப்பிடறாங்களோ. அத வெச்சி டெவலப் பண்ணிக்கோடா.. "
" டன் மச்சி... "
இப்ப நைட் போன் பண்ணினான்...
" மச்சி... கோச்சிட்டு போயிட்டாடா... "
" ஏன்..?! என்ன ஆச்சு..?! "
" கவிதை சொன்னேன் மச்சி... கிண்டல் பண்றியானு கோச்சிட்டு போயிட்டா...!! "
" கிண்டலா...?! அப்ப அவ என்ன சாப்பிட்டுட்டு இருந்தா...?! "
" வாட்டர்மெலன் ஜூஸு..!! "
" த்த்த்தூ...!! "
#கதம் கதம்....!!

Saturday, December 31, 2016

மங்கு (Shajahan S) போன் பண்ணியிருந்தான்...
" என்னடா காலையிலயே.. "
" ஒரு பொண்ணு மச்சி... "
" ஆரம்பிச்சிட்டான்டா... "
" கேளேன்.. "
" சரி சொல்லித் தொலை.. "
" நான் அது கனவுல வந்தேனு சொல்லிச்சு மச்சி... "
" விட்றா.. விட்றா... நைட் எதாவது பேய் படம் பாத்து இருக்கும்... "
" கிர்ர்ர்ர்... "

Wednesday, December 7, 2016

இன்னிக்கு காலைல ஒரு பயங்கர கனவு... திக்னு எந்திரிச்சிட்டேன்...
8 மணி ஆகியும் அந்த கனவு நெனப்பாவே இருந்தது... உடனே மங்குவுக்கு (Shajahan S) போன் பண்ணினேன்..
" மச்சி இந்த விடியக்காலைல வர்ற கனவு எல்லாம் பலிக்குமா..? "
" அதெல்லாம் பலிக்காது.. "
" எப்டி அவ்ளோ உறுதியா சொல்றே..? "
" கனவு பலிக்கறதா இருந்தா.. இந்நேரம் நான் நயன்தாராவ கல்யாணம் பண்ணிட்டு இருக்கணுமே..!! "
" ஹி., ஹி., ஹி...!! "

Thursday, November 24, 2016



என்னா மச்சி.. இப்டி சொல்லிட்டே... 

நீ சொன்னா.... நான் இந்த பில்டிங்கல் இருந்து கூட உன்னை தள்ளி விடுவேன்டா.... 

ஹி., ஹி., ஹி...!!!!
மங்கு (Shajahan S) போன் பண்ணியிருந்தான்....
" மச்சி... ஆபீஸ்ல ஒரு பொண்ணு எல்லோரையும் அண்ணா.. அண்ணானு கூப்பிட்டு வெறுப்பேத்துது "
" அது தப்பாச்சே... இரு நான் நாளைக்கு உன் ஆபீஸ்க்கு வந்து இத டீல் பண்றேன்... "
" நீ ஆணியே புடுங்க வேணாம்.. அங்க இருந்தே ஐடியா குடு... "
" ம்ம்க்கும்... சரி ஏன் அப்டி கூப்பிடுதாம்..? "
" அதுக்கு கூடப்பொறந்த அண்ணன் யாரும் இல்லியாம்.. அதான் எல்லோரையும் அண்ணனா ஃபீல் பண்ணுதாம்... "
" நல்லா இருக்கே கதை... உனக்கு கூடத்தான் இன்னும் கல்யாணம் ஆகல... "
" ஆஹா... புரிஞ்சிடுச்சு மச்சி... தேங்க்ஸ்... "
" டேய்.. டேய்... என்னடா புரிஞ்சுது சொல்லிட்டு போடா... "
போனை கட் பண்ணிட்டான்...
ரைட்டு... நாளைக்கு இந்த நாய் செருப்படி வாங்க போறது கன்பார்ம்...!!

Tuesday, November 15, 2016

மதியம் பேங்க் பக்கம் போனப்ப அங்க மங்கு (Shajahan S) நின்னுட்டு இருந்தான்...
" என்ன மங்கு.. இங்க நிக்கிறே..?! "
" இந்த 4000 ரூபா மாத்தி வாங்க தான் மச்சி.. "
" அப்ப போயி வாங்க வேண்டியது தானே..?! "
" கூட்டம் ஓவரா இருக்கே... "
" அதுக்கு...?! "
" ஆனந்தோட இன்ஃப்லுயென்ஸ் யூஸ் பண்ணலாம்னு அவனை வர சொல்லி இருக்கேன்... "
" அந்த வெண்ணை என்ன பெரிய ரிசர்வ் பேங்க் கவர்னரா..?! "
" மச்சி.. அவனுக்கு இந்த பேங்க்ல இருக்கற மரியாதைய பத்தி உனக்கு சரியா தெரியாது... "
" ஏன் எங்களுக்கு இல்லியா மரியாதை..?! நேத்து கூட 4000 ரூபா எடுத்துட்டு மாத்தறதுக்கு மேனேஜர் ரூம்க்கே போயிட்டேன்ல... "
" நிசமாவா..?! "
" அக்காங்.... "
" மேனேஜர் என்ன சொன்னாரு..?! "
" மரியாதையா போயி க்யூல நில்லுனு சொன்னாரு... "
# த்த்தூ.....!!!!
நேத்து நைட் மங்குக்கு (Shajahan S) போன் பண்ணி..
" மங்கு... சூப்பர் மூன்... பெருசா தெரியும்னு சொன்னே.. அப்டி ஒண்ணும் தெரியலியே... "
" அத சாதாரணமா பாத்தா தெரியாது மச்சி... "
" பின்ன...?! "
" போட்டோ எடுத்து ஜூம்ம்... பண்ணி பாரு.. "
டேய் மங்கு... தொண்டை கட்டிட்டு இருக்கறதால நீ உன்ன சிங்கம்னு நெனச்சிட்டு இருக்கே...
ஒரிஜினல் வாய்ஸ்ல பேசுடா... அப்ப லொள் லொள்னு தான் கேக்கும்....
# கேட்ச் இட்...!!

Tuesday, October 25, 2016

ஒரு பொண்ணு ப்ரொஃபைல் பிக்சர்ல கண்ணு மட்டும் வெச்சி இருந்திருக்கு..
இந்த மங்கு பன்னாட போயி..
'உங்க கண்ணைப் பாத்தா நயன்தாரா கண்ணு மாதிரியே இருக்கு'ன்னு கமெண்ட் போட்டுச்சு..
அந்தப் புள்ளயும் 'அது நயன்தாரா கண்ணே தான்'னு ரிப்ளை போட்டு இருக்கு...
உடனே இந்த நாயி என்கிட்ட வந்து..
"மச்சி.. இத்தன நாளா நயன்தாரா என் ப்ரெண்ட் லிஸ்ட்ல இருந்து இருக்கு.. இன்னிக்கு தான் கண்டுபுடிச்சேன்"னு சொல்றான்...
அடேய்ய்ய்ய்...!!
# புடிச்சி ஜெயில்ல போடுங்க சார் இவனை..

Sunday, October 23, 2016

மங்குவும் நானும் பேசிட்டு இருந்தப்ப...
" நீயே சொல்லு மச்சி.. அழகா பொறந்தது என் தப்பா..?! "
" நீயெல்லாம் பொறந்ததே தப்புடா வெண்ணை..!! "

Sunday, September 25, 2016

கேட்டான் பாரு ஒரு கேள்வி.... :D

 :D

மங்குவோட லவ்வர்...
" இப்ப எதுக்கு மங்கு டியர் புது கேமரா வாங்கணும்னு சொல்றே..? "
" எல்லாம் உன்னை அழகா போட்டோ புடிக்கத் தான் டார்லிங்..! "
" அதுக்காக நாப்பதாயிரம் போட்டு கேமரா வாங்கணுமா..? "
" போட்டோ அழகா இருக்கணும்னா.. ஒன்னு கேமரா காஸ்ட்லியா இருக்கணும்னு இல்ல மூஞ்சி அழகா இருக்கணும் சொன்னாங்க டார்லிங்..!! "
# அடிங் கொய்யாலே..!!

Monday, September 19, 2016

காலைல 5 மணிக்கு என் மொபைல் ரிங் ஆச்சு.. எடுக்கறதுக்குள்ள கட் ஆகிடுச்சு...
அர்த்த ராத்திரில கூட மிஸ்டு கால் குடுக்குதுன்னா அது இந்த மங்கு (Shajahan S) பன்னாடையா தான் இருக்கும்னு நெனச்சிட்டே பாத்தேன்..
அவனே தான்... திருப்பி கூப்பிட்டேன்..
" ஹலோ....!! "
" மச்சி.. தூங்கிட்டா இருக்கே..?? "
" இல்ல.. நைட் ஒரு பேயி வாக்கிங் வந்துச்சு.. அது கூட பேசிட்டு இருக்கேன்..! "
" ஆம்பள பேயா..? பொம்பள பேயா மச்சி..? "
" த்த்தூ... மேட்டரை சொல்லுடா.. "
" என் போனுக்கு ரீசார்ஜ் பண்ணி விடேன்.. "
" அடேய்ய்ய்ய்ய்ய்...!! "
" கோச்சிக்காத மச்சி.. முக்கியமான மேட்டர்.. பேலன்ஸ் இல்லாம கட் ஆகிடுச்சு.. "
" அப்டி என்னடா முக்கியமா மேட்டர்..? "
" ஒரு கேஸு விஷயமா.. "
" கேஸா.. போலீஸ்ல எதுனா மாட்டிக்கிட்டியா..? முட்டிக்கு முட்டி தட்டினாங்களா இல்லியா..? "
" வெளையாடாதே மச்சி.. சீக்கிரம் ஒரு 30 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணி விடேன்..! "
" சரி பண்ணி விடறேன்.. அப்புறமா கேஸு என்னாச்சுனு சொல்லு..! "
" ஓ.கே மச்சி..!! "
என் மொபைல்ல இருந்து 30 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணி விட்டேன்..
அடுத்த அஞ்சாவது நிமிஷம் அந்த பக்கிகிட்ட இருந்து வந்தது..
.
.
.
.
.
"கிரிமினல் கேஸ்" கேம் ரிக்வெஸ்ட்..
அட பரதேசி நாயி..!!!

Saturday, September 10, 2016



மங்கு (Shajahan S) போன் பண்ணியிருந்தான்...
"மச்சி நேத்து தான் பிரேமம் பாத்தேன்... பாத்ததுல இருந்து மலர் டீச்சர் நெனப்பாவே இருக்குடா.."
"ஆங்.. சாய் பல்லவி"
"மலரே நின்னே காணாதிருந்நால் மிழியேகிய நிறமெல்.."
"நாயே.. பாடறத நிறுத்தித் தொலை.."
"அப்ப மறக்கறதுக்கு எதுனா ஐடியா இருந்தா குடு மச்சி.."
"விட்றா... ரெண்டு நாள்ல சரியா போயிடும்.."
"இல்ல மச்சி.. ரொம்ப ஃபீல் ஆகிட்டேன்.. எதாவது ஐடியா குடு.."
"அப்ப போய் தெலுங்கு பிரேமம் பாரு.."
"பாத்தா... மறந்துடுவேனா..?"
"ம்ஹூம்... செத்துடுவ..!!"