Showing posts with label Movie. Show all posts
Showing posts with label Movie. Show all posts

Tuesday, May 2, 2017

யானை, குதிரையை எல்லாம் கிராபிக்ஸ் பண்ணின கையோட இன்னும் பத்து பதினைஞ்சு கோடி எக்ஸ்ட்ரா செலவானாலும் பரவாயில்லைனு அப்டியே அனுஷ்காவையும் கிராபிக்ஸ்ல பண்ணியிருக்கலாம்....
இத சொன்னா நம்பள....
அனுஷ்காவ விட பின்னாடி நிக்கற தோழிகள்ல 2 பேரு அழகா இருக்காங்க....
இத சொன்னா நம்பள....

தமன்னா எங்கடா...?!!

#பாகுபலி 2 இன்டர்வெல்...


Thursday, October 13, 2016

பிரேமம் ( தெலுங்கு ) - மீம்ஸ்


புளி சோத்துல முட்டைய வெச்சி.. பிரியாணினு ஏமாத்திட்டானுவ....





நாக சைதன்யாவுக்கு பதிலா நாகர்ஜுனாவையே போட்டு இருக்கலாம்...
ஸ்ருதிஹாசனுக்கு பதில் கமல்ஹாசனையே டான்ஸ் ஆட சொல்லி இருக்கலாம்....
# கர்மம்டா...!!

Friday, October 7, 2016


" பணத்தை எப்ப மச்சி திருப்பி தருவ ..? "
" வெள்ளிக்கிழமை..! "
" எந்த வெள்ளிக்கிழமை..? "
" எந்த வெள்ளிக்கிழமைல விஜய் சேதுபதி படம் ரிலீஸ் ஆகலியோ.. அந்த வெள்ளிக்கிழமை..!! "
" அடிங் கொய்யாலே... பணத்தை திருப்பி தரமாட்டேனு சிம்பாலிக்கா சொல்றியாடா..? "
# டிஷ்யூம்.. டிஷ்யூம்..!!

Sunday, August 28, 2016


குழந்தைங்கள எப்டி வளர்க்கணும்னு டிரைனிங் குடுக்கற மாதிரி படம் எடுக்கறாய்ங்களாம்....
அடேய் வெண்ணைங்களா... உங்க படத்தை பாத்தா... புள்ள பெத்துக்கவே பயமா இருக்குடா..
# பசங்க 2 - on Jaya Tv

இந்நேரம் சிந்துவோட வாழ்க்கைய சினிமாவா எடுக்கறோம்னு ஒரு கோஷ்டி கெளம்பி இருப்பானுங்க... அட அது கூட பரவாயில்லை....
அதுல சிந்துவுக்கும், கோச்சுக்கும் ரெண்டு டூயட் வேற வெச்சி விடுவானுங்களே....
அத நெனச்சாத்தான்...

Thursday, August 11, 2016


'மார்ஷியன்' படம் பாத்துட்டு இருந்தோம்...
அப்ப என் பையன் சூர்யா...
"இது என்ன பிளானட்பா..?"
"செவ்வாய் கிரகம்..!"
"செவ்வாய் கிரகமா..?! அதுக்கு இங்கிலீஸ்ல என்னப்பா..?"
"ம்ம்ம்.. Tuesday planet..!!"
# ஹி., ஹி., ஹி. நாங்கல்லாம் இங்கிலீஸ் எக்ஸாமையே தமிழ்ல எழுதினவங்க..

Thursday, July 28, 2016

எங்க ப்ரெண்ட்ஸ் வாட்ஸ்அப் குரூப்ல கபாலி பத்தி காரசாரமா டிஸ்கஷன் ஓடிட்டு இருந்தது...
அதுல ரெண்டு பேரு இன்னும் படம் பாக்கல..
ஏன்டா இப்டி சீன் பை சீன் டிஸ்கஸ் பண்றீங்கனு ஒருத்தன் குரூப் விட்டு வெளியே போயி்ட்டான்....
இன்னொருத்தன் கோச்சிக்கிட்டான்...
நான் தான் அட்மினு... இதெல்லாம் பாத்துட்டு நான் சும்மாவா இருக்கறது...?!
உடனே அவனையும் குரூப் விட்டு தூக்கிட்டேன்...
படம் ரிலீஸாகி 3 நாள் ஆகியும் பாக்காதது உன்ர தப்புடா.... இதான்டா என்ர தீர்ப்பு...
# நீதிடா, நேர்மடா, கபாலிடா...!!!
கபாலி படத்தில் உங்களுக்கு பிடிச்ச சீன் எது..?
A.ரஜினி சார் நடந்து வர்ற சீன்..
B.ரஜினி சார் வலது கால் மேல இடது கால் போட்டு உக்காந்து இருக்குற சீன்..
C.ரஜினி சார் இடது கால் மேல வலது கால் போட்டு உக்காந்து இருக்குற சீன்..
D.ரஜினி சார் காபி சாப்பிடற சீன்..
# ஐய்யோ., என்னைய இப்டி பொலம்ப வுட்டுட்டாங்களே...!!!

படம் பாத்துட்டு இருக்கும் போது... பக்கத்துல உக்காந்திருந்த ப்ரெண்ட்கிட்ட...

" கபாலி உயிரோட தான் இருக்கார்னு நம்பற குமுதவள்ளி... 25 வருஷமா அவரை தேடி கபாலியோட ப்ரெண்ட்ஸ் யாரையும் ஏன் மீட் பண்ணலனு.? " கேட்டேன்...

நீ மூடிட்டு படத்தை மட்டும் பாருனு சொன்னான்..

டிக்கெட் 200 ரூபா...
தன்ஷிகா தன்னோட பொண்ணுனு தெரியற
அந்த சீன்ல...
அவளோட தைரியத்தை பாத்து ஆச்சரியம், சந்தோஷம், ஒரு வித மெய்சிலிர்த்த நிலைல தலைவர் நடிப்பு செம்ம...
இந்த ஒரு சீன்லயே நான் 300 ரூபா வசூல் பண்ணிட்டேன்...
வெளியே போகும்போது தியேட்டர்காரன் எக்ஸ்ட்ரா 100 ரூபா கேப்பானோ..?!!
# சிறப்பு..!!

" என்ன மச்சி எங்கே கெளம்பிட்டே..? "
" கபாலி படத்துக்கு.. "
" மச்சி.. படம் சுமார்னுல்ல சொன்னாங்க.. "
" அத நான் போயி பாத்துட்டு வந்து சொல்றேன்.. "
# அடக்குனா.. அடங்குற ஆளா நீ...!!
## மகிழ்ச்சி..!!!

கபாலி கோல்ட் பென்டென்ட்...
@ சுமங்கலி ஜூவல்லர்ஸ், சேலம்...


தலைவரு படத்தை பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ 
துபாய்ல போயி பாக்கலாம்னு ப்ளான் பண்ணினேன்....
ப்ளைட் டிக்கெட் கெடைச்சிடுச்சு..
படத்துக்கு டிக்கெட் கெடைக்கல...

Sunday, July 3, 2016



விமர்சகர்கள் சுமார் படம்னு சொன்னதால பாக்காம விட்டு 
நேத்து தான் பாத்தேன்...
சிரிச்சி சிரிச்சி... செம்ம... ரொம்ப நாள் கழிச்சி ஒரு நான் 
ஸ்டாப் காமெடி...
சாம்பிள்...
( ஸ்ரீதிவ்யா: உன்ன கல்யாணம் பண்ணிக்க எனக்கு 
இஷ்டம்ல்ல...
ஜான் விஜய்: உனக்கு நான் ரெண்டு ஆப்சன் தர்றேன்...
ஒண்ணு.. என்னை கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா 
சிரிச்சிட்டே இரு...
ரெண்டு... என்னை கல்யாணம் பண்ணிட்டு சோகமா 
அழுதுட்டே இரு... )
ஜான் விஜய் வாய்ஸ்ல யோசிச்சி பாருங்க..
காலைல இருந்து இத நெனச்சி நெனச்சி சிரிச்சிட்டே இருக்கேன்....
சூரி காமெடி ராக்ஸ்...!!
செகண்ட் டைம் பாக்க போறேன்...

Friday, June 10, 2016

"குடியோட தீமையைப் பத்தி.. இதே மாதிரி 
இன்னும் ரெண்டு படம் எடுத்தா.. 
ஆம்பளைங்க விட்டுடுவாங்க.."

"குடிக்கறதையா..?"

"இல்ல படம் பாக்கறத..!"

# இறைவி - ஆஹான்.. நெடில்