Tuesday, April 25, 2017

நான் பேங்க்ல இருந்து வெளியே வந்தேன்... அப்ப எதிர்ல ஆனந்த் வந்தான்...
" என்ன வெங்கி.. கேட்டா கையில பணமே இல்லங்கற... ஆனா பேங்க்லயே சுத்திட்டு இருக்க... "
" அட நீ வேற மச்சி... பேங்க் அக்கவுண்டோட ஆதார் கார்ட் ஜாயின் பண்ணனுமாம்ல.. அதுக்கு வந்தேன்... "
" என்னாது... உனக்கு ஆதார் கார்ட் இருக்கா..?! "
" ஆமா... அதுக்கு ஏன்டா இவ்ளோ ஷாக் ஆகற..?! "
" இல்ல மாடுகளுக்கெல்லாம் இனிமே தானே ஆதார் கார்ட் குடுக்க போறதா சொன்னாங்க...?? ஹி., ஹி., ஹி... "
( என்னை கலாய்ச்சிட்டாராமாம்... )
" ஆமா... நீ எங்க இங்க..?! "
" அக்கவுண்ட்ல பணம் கட்ட வந்தேன்... "
" உனக்கு இந்த பேங்க்ல அக்கவுண்ட் இருக்கா...?! "
" ஆமா... ஏன்..?! "
" இல்ல எருமைகளுக்கு எல்லாம் பேங்க அக்கவுண்ட் ஓபன் பண்றதா கவர்மெண்ட் சொல்லலியேனு பாத்தேன்... ஹி., ஹி., ஹி.... "
" கிர்ர்ர்ர்....!! "

No comments:

Post a Comment