Tuesday, November 5, 2013

தமிழர்களின் உணவுப்பழக்க முறையில் 
சங்ககாலத்திலேயே பூரி இருந்து இருக்கிறது 
என்பதை இன்று கண்டுபிடித்தேன்... 

# சோழா பூரி.
நான் எப்ப என் Wife-க்கு சேலை எடுக்க 
போனாலும் 

" இருக்கறதுலயே காஸ்ட்லி சேலை 
எது காட்டுங்கன்னு..? " கேப்பேன் 

அவங்களும் கூட்டிட்டு போயி காட்டுவாங்க.... 

உடனே நானும் அதை டக்னு எடுத்துட்டு 
வந்துடுவேன்.. 
:
:
:
:
( ஹி., ஹி., ஹி.., நான் போட்டோவை
சொன்னேன்... )
" கந்தன் கருணை " படத்துல பேசாம 
சிவாஜியே முருகனா நடிச்சி இருக்கலாம்.. 
எல்லா டைலாக்கையும் அவரே பேசிடறாரு...

பாவம் சிவக்குமாரு...!!!!

Monday, October 14, 2013



புலியை பாத்து பூனை எதுக்கு சூடு
போட்டுக்கணும்..?!!

எந்த புலியாலயும் எலி புடிக்க முடியாது
தெரியும்ல...

- பாபா வெங்கீஷ்..


எழுதிக்கொண்டிருந்தான்
" குலோபல் வார்மிங் " 
பற்றிய கவிதை..,
ஓடிக்கொண்டிருந்தது 
ஏ.சி... ( அடடே...! )

- வெங்கூ

Saturday, October 5, 2013



இப்பல்லாம் சோறு வெச்சி கூப்பிட்டா 
ஒரு காக்கா கூட வர மாட்டேங்குது....

டேய்.. இதெல்லாம் உங்க வேலை தானா..?!!

அப்படியே ராஜேஷ்குமார் கணக்கா ஒரு 
மர்ம நாவல் எழுதணும்னு முடிவு 
பண்ணினேன்..

பேப்பரை எடுத்தேன்., 
பேனாவையும் எடுத்தேன்...

டக்னு எழுத ஆரம்பிச்சேன்..

சும்மா சொல்லக்கூடாது.. நாவல் பயங்கர
மர்மமா இருக்கு...

பின்ன.. 20 பக்கம் ஓடிடுச்சு... இன்னும்
இதுல என்ன கதைனு எனக்கே தெரியாம
மர்மமா இருக்கு...!!


:)