Sunday, January 4, 2015


நைட்டு 8 மணிக்கு மங்குவோட போன்..
" ஹலோ.. வெங்கி... "
" சொல்லு மங்கு.... "
" இன்னிக்கு ஆபீஸ்ல திட்டிட்டாங்கப்பா...!! "
" நீ என்ன பண்ணே..?!! "
" ஒன்னுமில்ல மச்சி.. டியூட்டி டைம்ல
லைட்டா தண்ணி அடிச்சேன்.. இது
ஒரு தப்பா..? "
" இல்லியா பின்னே..?!! "
" அப்ப ஏன் மச்சி கவர்மெண்ட்
காலைல 10 மணிக்கே கடையை
ஓபன் பண்ணி வெக்குது..?!! "
" குட் கொஸ்டின்... இருந்தாலும்
நீ பண்ணினது தப்புதேன்... "
" அப்படின்ற..? "
" ஆமா.. நான் சொன்னா நீ கேப்பியா..?
மாட்டியா..? "
" என்னா மச்சி இப்படி கேட்டுட்டே..
நீ சொன்னா நான் மாடில இருந்து கூட
குதிப்பேன்.. "
( டேய்.. போதும்டா...!!! )
" அப்படின்னா.. இனிமே வேலை நேரத்துல
தண்ணியடிக் கூடாது..!! "
" ஓ.கே.. நாளைக்கே விட்டுடுடறேன்.. "
" தண்ணியவா...?!! "
" ஹி., ஹி., ஹி... வேலையை..!!! "
" த்த்தூ..!!! "

இன்னிக்கு என் ப்ரெண்ட் கிச்சாவுக்கு 
பர்த்டே... வாழ்த்துக்கள் பாவா... 

அவனுக்கு எங்க ப்ரெண்டு வாணி 
வாட்ஸ் அப் க்ரூப்ல அனுப்பின 
வாழ்த்தும்.. அதுக்கு நம்ம உரையும்..



Thursday, January 1, 2015


கோவிலுக்கு போனா... 

சாமியை மறைச்சி நின்னுகிட்டு 
மொபைல் கேமரால போட்டோ 
பிடிச்சிட்டு இருக்கானுங்க.. 

கொஞ்சமாச்சும் அறிவு வேணாம்..??!

இடியட்ஸ்..

நகருங்கடா...

அப்புறம் நாங்கல்லாம் எப்படிடா
போட்டோ பிடிக்கறது..?!


" மச்சி.. இன்னிக்கு சாட்ல ஒரு பொண்ணு
மங்குனி அமைச்சர் பேரு என்ன..?
பேரு என்னு கேட்டுட்டே இருந்திச்சா..
நானும் சொல்ல மாட்டேன்.. 
சொல்ல மாட்டேனு சொல்லிட்டே
இருந்தேனா..
கடைசில எனக்கு மனசு கேக்கல..
சரி நம்பர் தர்றேன்.. பேசறீங்களானு
கேட்டு நம்பர் குடுத்துட்டேன்.. "
" அச்சசோ.. மங்கு திட்டுவானே.. "
" எதுக்கு திட்டுவான்..? நான் என் நம்பர்ல
குடுத்தேன்.. ஹி., ஹி., ஹி..!!! "

இனியா... புத்தாண்டு வாழ்த்துக்கள் - PS


வீட்டில் எத்தனை ஆணிகள் - PS