Wednesday, April 8, 2015

இந்தாம்மா... நீ பேசு.., பேசாம போ..
அது உன் இஷ்டம்...
ஆனா.... வந்து எல்லா போஸ்ட்டுக்கும்
லைக் போட்டுட்டு போ...
# என் போஸ்ட்டுக்கு விழற ஒவ்வொரு
லைக்கும்... நானா ( கெஞ்சி ) வாங்குனதுடா...!!!!
ஹி., ஹி., ஹி..!!!

Sunday, April 5, 2015

( என் மனைவி )
" ஒரு நாள் முழுக்க English கலக்காம
உங்களால பேச முடியுமா..? "
" Oh Sure..!! "

உதயநிதியுடன் ஒரு மினி பேட்டி :
" இந்த படத்துல கதை என்ன சார்..? "
" சந்தானம் என் ப்ரெண்டு., நானும் 
ஹீரோயினும் லவ் பண்ணுவோம்.,
இண்டர்வெல்ல பிரிஞ்சிடுவோம்.,
கிளைமேக்ஸ்ல சேர்ந்துடுவோம்..! "
" போன உங்க ரெண்டு படத்துலயும்
இதே கதை தானே..? "
" அடுத்து எடுக்க போற 10 படத்துக்கும்
இதே தான் கதை.! "
# தப்பிச்சேன்டா..!!
" அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே..!!! "
" ஹலோ.., என் பர்த்டே... நேத்து..!! "
" ஹி., ஹி., ஹி.. நான் விஷ் பண்ணினது 
அடுத்த வருஷத்துக்கு..! "
# ஞே..!!
என் ப்ரெண்ட் ஜெகன் வீட்டுக்கு
போயிருந்தேன்..
புதுசா ஜெர்மன் ஷேப்பர்டு நாய்
ஒண்ணு வாங்கியிருக்காங்க...
" என்னடா பேரு..? "
" பைரவ். "
" பைரவ்னா..?!! "
" பைரவ்னா.. நாய்னு அர்த்தம்.."
" அட நாயே... அதுக்கு நீ அதை நாய்னே
கூப்பிடலாமே..!!!? "
" கிர்ர்ர்ர்ர்...!!! "
வீட்ல சாப்பிட்டுட்டு இருக்கும் போது
யாராவது சொந்தக்காரங்க வந்துட்டா..
" வாங்க கொஞ்சம் சாப்பிட்டுட்டு
போகலாம்"னு சொல்லலாம்...
அதுவே துணி துவைச்சிட்டு இருக்கும் போது
வந்துட்டா..
" வாங்க.. வந்து ரெண்டு துணி துவைச்சி
குடுத்துட்டு போங்கன்னா " சொல்ல முடியும்..?!!

Wednesday, April 1, 2015

" ஐ லவ் யூ " சொல்லலாமா.? வேண்டாமானு
ரொம்ப நாளா மனசுல போட்டு
குழப்பிட்டு இருக்கறவங்க...
இன்னிக்கு போயி தாராளமா சொல்லிடுங்க...
இதை கேட்டுட்டு அந்த புள்ள சந்தோஷப்பட்டா...
சக்சஸ்...!!!
ஒரு வேளை கோவப்பட்டா...
" யேய்.. சும்மா ஏப்ரல் ஃபூல் பண்ணினேன்பா " னு
சமாளிச்சிக்கலாம்...
எப்பூடி..?!!
பொதுநலன் கருதி வெளியிடுவோர்..
" கோகுலத்தில் சூரியன் " வெங்கட