Sunday, June 7, 2015


பொண்டாட்டிக்கு மொபைல் வாங்கி தந்தா..
நம்மள விட காஸ்ட்லியான மொபைலா
வாங்கி தந்திடணும்..
.
.
.
.
.
.
.
.
அப்ப தான் நம்ம மொபைல நோண்டாம
இருப்பாங்க...
# சேப்டி டிப்ஸ்... tongue emoticon
MCA படிச்சப்ப ஒரு செமஸ்டர்ல
ஒரு கொஸ்டின் பேப்பர் அவுட் ஆகிடுச்சு...
" யாருக்கும் குடுக்காதே"-னு சொல்லி 
இன்னொரு காலேஜ்ல படிக்கிற என் ப்ரெண்ட்
குடுத்தான்...
ஆனா என் ப்ரெண்ட்ஸ்கிட்ட மறைக்க
மனசு கேக்கல..
( இங்கே தான் நீங்க என் நல்ல மனசை
நல்லா நோட் பண்ணனும்..!! )
என் சொந்த காசுல ஆளுக்கு ஒரு ஜெராக்ஸ்
எடுத்து கொடுத்தேன்....
( நண்பேன்டா..!! )
.
.
.
.
.
அப்புறம்....
எக்ஸாம்ல கொஸ்டின் பேப்பர் மாத்திட்டாங்க..
கிளாஸே... கூண்டோட கைலாசம்..!!
ஹி., ஹி., ஹி..!!!
இங்கிட்டு போனா....
டிபன் போடுவாய்ங்களா...
இல்ல...
" நீங்களே மாவு ஆட்டி., தோசை சுட்டு
சாப்பிட்டுட்டு கெளம்புனு சொல்லுவாய்களா...?!!! "

" Maggi " - இது என் ப்ரெண்ட் ஒருத்தரோட
Nick Name...
இப்ப Maggi கூட சம்பந்தப்பட்டவங்க
மேல எல்லாம் கேஸ் போடறாங்களாம்..
So.. இனிமே அவங்கள.. " ஹார்லிக்ஸ் "
அல்லது " பூஸ்ட் " னு கூப்பிடலாமானு
யோசிச்சிட்டு இருக்கேன்...
smile emoticon

காலைல 7.00 மணி..
நான் பேப்பர் படிச்சிட்டு இருந்தேன்.
அப்ப என் Wife எனக்கு காபி கொண்டு வந்து
வெச்சாங்க...
பேப்பர் படிக்கற சுவாரசியத்துல காபியை
எடுத்தேனா.....
காபி கொட்டி போச்சு...
அச்சசோ...!!!
டக்னு என் Wife-ஐ பாத்து...
" சாரி நிர்மலா...!! "
" அட., எனக்கெதுக்கு மாம்ஸ் சாரி சொல்றீங்க..?!
துடைக்க போறது நீங்க தானே..! "
# தட் ஞே மார்னிங் மொமெண்ட்

Tuesday, June 2, 2015

வெளம்பரத்துல ஆயிரம் சொல்லுவாய்க....
நாம தான் பாத்து சூதானமா இருக்கோணும்..
சிகரெட் வந்த புதுசுல டாக்டர்ங்க ரெகமண்ட் 
பண்ற மாதிரி தான் வெளம்பரம் பண்ணினாங்க.....
# உஷாரப்பு... உஷாரு...!!
# அந்த டாக்டர்க்கும் அந்த சிகரெட்க்கும் சம்பந்தமில்லயாம்...
நல்லா விசாரிச்சு குடிச்சிக்கறதாம்..!!






Thursday, May 28, 2015


கல்யாண மண்டபம்.
நைட் Buffet டின்னர் ..
நான் சாப்பிட்டு முடிச்சிட்டு 
கை கழுவும் போது தான் இந்த
மெனுவை கவனிச்சேன்...
( ஆஹா ரவா தோசை மிஸ் ஆகிடுச்சே.. )
என் Wife நிர்மலாகிட்ட சொன்னேன்...
" நிர்மலா... என்னைய ஏமாத்திட்டங்க..
எனக்கு ரவா தோசை வரல "
" அட விடுங்க... "
" நோ.. பழி வாங்கியே தீருவேன்..
நீ என்னா பண்றேன்னா... ஒரு ப்ளேட்
எடுக்கற.. "
" போயி ரவா தோசை வாங்கிட்டு வரணுமா.? "
" என்னை அவ்ளோ சீப்பா நெனச்சியா..? "
"பின்னே..? "
" போயி பர்ஸ்ட்ல இருந்து எல்லா
ஐட்டமும் வாங்கிட்டு வா "
# பழி வாங்குவோம்ல..