Monday, October 5, 2015

எங்க பையன் ஸ்கூல்ல ஒரு வழக்கம்..
பசங்க தினமும் அவங்க Parents கால்ல
விழுந்து ஆசிர்வாதம் வாங்கணும்.
அப்புறம் அவங்க வலது கையில
நாங்க Sign போட்டு விடணும்..
பெரியவன் கரெக்ட்டா பண்ணிடுவான்..
சின்னவன் தன்மான சிங்கம்..
யார் கால்லயும் விழமாட்டாரு..
ஆனா நைஸ் பண்ணி அவங்க அம்மாகிட்ட
Sign மட்டும் வாங்கிட்டு போயிடுவான்..
இன்னிக்கு காலைல...
" ஆசிர்வாதம் வாங்கினாத்தான் Sign-னு.. "
நான் ஸ்டிரிக்ட்டா சொல்லிட்டேன்..
வேற வழியேயில்லாம..
அவன் என் கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்க...
நான் Sign போட...
போறப்ப என் தலையில " நங் "-னு
ஒரு கொட்டு கொட்டிட்டு போயிட்டான்..
ஏனுங்க மிஸ்...
" அப்பாவை கொட்டக் கூடாதுன்னு
எல்லாம் எதும் Sign வாங்கிட்டு வர
சொல்ல மாட்டீங்களா..?! "
அவ்வ்வ்....!!!

கோபி Vs டி.டி - PS


மாமனார் வீட்டுக்கு விருந்துக்கு போனா...
Wife-ஐ கூப்பிட்டு பக்கத்துல உக்கார வெச்சிக்கணும்...
.
.
.
.
.
.
.
அப்பதான் மாமியார் பரிமாறுவாங்க
ரெண்டு பீஸ் எக்ஸ்ட்ரா கெடைக்கும்..!!
# டிப்ஸூ..!!

புலி படத்தை பத்தி ரெண்டு மீம்ஸ்
என் தங்கச்சிக்கு பார்வேர்ட் பண்ணினேன்...
கொஞ்ச நேரத்துல என் தங்கச்சி பொண்ணு ( 5th Std )
போன் பண்ணி...
" விஜய் படத்தை கிண்டல் பண்ணி எதுவும்
அனுப்பாதிங்க மாம்ஸ்னு " அழுவுது..
# அணில் அண்ணாவின் ரசிகர் படையை
கண்டு அசந்த தினம் இன்று...!!
tongue emoticon tongue emoticon
மொக்கை போஸ்டிங் போடாதடானு திட்றான்
என் ப்ரெண்ட் ஜனா...
இதுக்கு நீ " பேஸ்புக் அக்கவுண்ட்டை
க்ளோஸ் பண்ணிடு"-னு நேரடியாவே 
சொல்லியிருக்கலாம்டா...
smile emoticon smile emoticon

Thursday, October 1, 2015

இன்னிக்கு என் ப்ரெண்ட் சிவாவோட FB Wall-ஐ பாத்துட்டு இருந்தேன்.. அப்ப தான் நோட் பண்ணினேன்.. எங்க பக்கத்து கிளாஸ்ல படிச்ச வித்யா அவனுக்கு ப்ரெண்டா இருந்துச்சு.. அவன் மட்டுமில்ல.. கணேஷ், அருண்,
பிரகாஷ்னு என் ப்ரெண்ட்ஸ் நாலு பேர்
வித்யாவுக்கு ப்ரெண்டா இருந்தானுங்க.. அடப்பாவிகளா..!! ஒருத்தன் கூட எங்கிட்ட
சொல்லியே..! சரினு வித்யாவுக்கு ஒரு ப்ரெண்ட் ரிக்வெஸ்ட்டை தட்டிட்டு... சிவாவுக்கு போனை போட்டேன்.. " டேய்.. வித்யா உன் ப்ரெண்ட் லிஸ்ட்ல இருக்குல்ல.. " " ஆமா.. அதுக்கென்ன..? " " ஏன்டா எனக்கு சொல்லல..?!! " " சரி.., ஜெயக்குமார் உன் ப்ரெண்ட் லிஸ்ட்ல இருக்கானா..? " " ஜெயக்குமாரா..? யார்ரா அது..??! " " த்த்தூ... அவன் நம்ம கிளாஸ்ல படிச்சவன்..!! " # ஓ மை காட்..!!