Tuesday, November 17, 2015


போன மாசம் என் ப்ரெண்ட் அருண்
புதுசா ஒரு ஆன்ட்ராய்ட் போன் வாங்கினான்..
இந்த மாசம் நான் வாங்கினேன்...
ஆனா அந்த கருமம் புடிச்ச போனு
சார்ஜ் 6 மணி நேரம் தான் நிக்குது..
அருணுக்கு போன் பண்ணி...
" என் போன் சார்ஜ் 6 மணி நேரம் தான்டா
நிக்குதுனு " புலம்பினேன்...
" என்னாது.. உன் போன் சார்ஜ் 6 மணி நேரம்
நிக்குதானு.? " அதிர்ச்சியா கேட்டான்...
ஹப்பாடா... இப்பத்தான் மனசு நிம்மதியா
இருக்கு..!!! ஹி., ஹி., ஹி...!!!
ஒருத்தரோட திறமைக்கும்., வளர்ச்சிக்கும்
பிறந்த நேரம் தான் காரணம்னா...
இந்நேரம் நம்மகிட்ட கொறைஞ்சது
பத்தாயிரம் சூப்பர் ஸ்டார்,
இருபதாயிரம் சச்சின் டெண்டுல்கராவது
இருக்கணும்..
- பாபா வெங்கீஷ்..
" வேதாளம் " சுமாராமாம்னு சொன்னா...
" நீங்க விஜய் ரசிகரா.? "-னு கேட்டாய்ங்க..
சரி பரவாயில்ல அதுல கூட ஒரு லாஜிக் இருந்துச்சு..
இப்ப " தூங்காவனம் " நல்லா இருக்காம்னு
சொன்னாலும்..
" நீங்க விஜய் ரசிகரா.? "-னு கேக்கறாய்ங்க...
# மிடிலபா...!!!
விஜய் படம் நல்லாயில்லனு சொன்னா...
" நீ அஜித் ஃபேனானு " கேக்கறானுங்க
அஜித் படம் நல்லாயில்லனு சொன்னா..
" நீ விஜய் ஃபேனானு " கேக்கறானுங்க..
ஏன்டா.. அப்ப மத்தவங்க எல்லாம் படம்
பாத்துட்டு நல்லாயிருக்கு.. நல்லாயில்லைனு
சொல்லக்கூடாதா..?!
# என்னாது சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு..?!

Monday, November 9, 2015

" பொண்ணு மட்டும் தெரிஞ்ச கல்யாணத்துக்கு
போனா.. நேரா டைனிங் ஹால் போயிடணும்.. "
" ஹி., ஹி., ஹி...!! "
" ஏன் சிரிக்குற..?! "
" நாங்கல்லாம் யாருமே தெரியாத கல்யாணத்துக்கு
போனாலே நேரா டைனிங் ஹால் தான் போவோம்..!! "
# த்த்த்து..!
" டென்ஷனாகதம்மா..!! "
" நான் எங்கே டென்ஷனானேன்..?
நான் எங்கே டென்ஷனானேன்..? "
# ஙே..!!

Monday, November 2, 2015

Wife-கிட்ட இருந்து மெசேஜ்...
" எப்படி இருந்தாலும் வீட்டுக்குத் தானே
வந்தாகணும்... வாங்க அப்ப இருக்கு.. "
மை பதில் மெசேஜ்...
" ஹி., ஹி., ஹி... இந்த பூச்சாண்டிக்கு எல்லாம்
பயப்படற ஆள் நானில்ல...
நான் வீட்டுக்குள்ள தான் இருக்கேன்...
முடிஞ்சா கண்டுபிடி பாக்கலாம்.. "
# தேட விடலாமா..!!!!