Thursday, February 18, 2016


நேத்து சாயந்திரம் வீட்ல தூங்கிட்டு இருந்தேன்...
என் ப்ரெண்ட் அருண் வந்து எழுப்பினான்..
" மச்சி.. ஒரு சின்ன ஹெல்ப்டா.. "
" என்ன..? "
" என் பையன் ஸ்கூல்ல இருந்து சேரீஸ்
எடுக்க மிஸ்ஸூங்க வர்றாங்களாம்.. "
" அதுக்கு..?!! "
" உன் ப்ரெண்ட் ராஜேஷ் கடைக்கு கூட்டிட்டு
போகணும்..!! "
" கூட்டிட்டு போ.. "
" எனக்கு ராஜேஷ் அவ்ளோ பழக்கம் இல்லயே மச்சி
நீயும் கூட வா.. "
( என்னடா இது.. தூங்கிட்டு இருக்கறவனை
எழுப்பி இம்சை பண்றானேன்னு கடுப்பா
இருந்தது..
சரி என்ன பண்றது.. இவனுக்காக இல்லன்னாலும்..
அந்த மிஸ்ஸூங்களுக்காக.. சே... ராஜேஷ்க்காக
வர ஒத்துக்கிட்டேன்..!! )
கெளம்பும்போது அருண்...
" மச்சி.. அங்கே வந்து நீ எதுவும் பெர்பாமென்ஸ்
பண்ணக்கூடாது..!! "
" என்னாது பெர்பாமென்ஸா...? நான் என்ன 
கரகாட்ட கோஷ்டியாடா வெச்சி இருக்கேன் "

" ஹி., ஹி., ஹி.. அதான் மச்சி.. இந்த ஜோக் அடிக்கறது..
என்னை கலாய்க்கறது இதெல்லாம் பண்ணக்கூடாது..!! "
" ம்ம்.. வெளங்கிடுச்சு... இந்த சீன்ல நீங்க ஹீரோ...
நாங்க ஹீரோவுக்கு ப்ரெண்டு... "
" அதே.. அதே..!! "
" சரி போயி தொலை...!! "
நாங்க பைக்ல போயி பஸ் ஸ்டேண்ட்ல வெயிட்
பண்ணிட்டு இருந்தோம்..
கொஞ்சம் நேரத்துல ரெண்டு மிஸ்ஸுங்க
ஸ்கூட்டில வந்தாங்க..
ஸ்கூட்டிய பாத்ததும் இவன் அலேர்ட் ஆகிட்டான்..
" மச்சி அதோ வர்றாங்க... அடக்கி வாசி..! "
" சரி நாயே.. நீ வேலைய பாரு..! "
வந்தாங்க... Intro பண்ணிட்டாங்க... அப்புறம்
ராஜேஷ் கடைக்கு கூட்டிட்டு போனோம்..
அவங்களுக்கு அங்க டிசைன்ஸ் பிடிச்சது..
ஆளுக்கு 3 சேலை எடுத்துகிட்டாங்க..
நான் முன்னமே ராஜேஷ்கிட்ட டிஸ்கவுண்ட் குடுனு
சொல்லி வெச்சிட்டேன்..
இப்ப நம்மாளு மிஸ்ஸூங்க முன்னால
ராஜேஷ்கிட்ட பேசி டிஸ்கவுண்ட் வாங்கி தர்ற
மாதிரி சீன் போட்டான்..
ராஜேஷும் 20% டிஸ்கவுண்ட் குடுத்தான்..
மிஸ்ஸூங்க செம ஹேப்பி...
போறப்ப அந்த மிஸ்ஸுங்க நம்ம ஆள பாத்து..
" ரொம்ப தேங்க்ஸ் அங்கிள் "-னு சொல்லிட்டு
போனாங்க...
எனக்கு சிரிப்பு பொத்துட்டு வந்தது...
லைட்டா அந்த பக்கம் திரும்பிட்டேன்...
அவங்க போனதும் அருண் எங்கிட்ட..
" ஏன் மச்சி... அங்கிள்னா... தமிழ்ல மாமானு தானே
அர்த்தம்..?!! "
# த்த்த்த்தூ...!!!
நேத்து நைட் சாட்டிங்ல ஒரு பொண்ணு...

" வெங்கி... மனசொல்லாம் ஒரே குழப்பமா இருக்கு.. 
நைட் தூக்கமே வர மாட்டேங்குது.. தூக்கம் வர்றதுக்கு 
எதாவது ஐடியா குடுங்களேன்... "

நாம தான் ஐடியா குடோன் ஆச்சே.. யாராவது 
ஐடியானு கேட்டுட்டா... சும்மா அள்ளி விடுவோம்ல... 
ஏகப்பட்ட ஐடியாஸ் குடுத்தேன்..

அத கேட்டு அந்த பொண்ணு செம ஹேப்பி..

நைட் 1 மணி :
" ஐடியா வொர்க் அவுட்டாகி அந்த பொண்ணு 
தூங்கி இருக்குமா..?!! "

நைட் 2 மணி :
" ஐடியா வொர்க் அவுட்டாகி அந்த பொண்ணு 
தூங்கி இருக்குமா..?!! "

நைட் 3 மணி :
" ஐடியா வொர்க் அவுட்டாகி அந்த பொண்ணு 
தூங்கி இருக்குமா..?!! "

நைட் 4 மணி :
" ஐடியா வொர்க் அவுட்டாகி அந்த பொண்ணு 
தூங்கி இருக்குமா..?!! "

5 மணி.... என் Wife...

" நைட் தூங்காம.. அங்கே லேப்டாப்ல என்ன 
நோண்டிட்டு இருக்கீங்க...?!! "

" ஹி., ஹி., ஹி. தூக்கம் வரல...! "

# வெளங்கிடும்ல...!!!

Wednesday, February 17, 2016

சேலத்துல ஒரு ப்யூட்டி என்னான்னா...

நீங்க எங்க போயி நின்னாலும் அங்கே 
ஒரு ஹோட்டல் இருக்கும்...

அப்டியே கண்ணை மூடிட்டு எதோ ஒரு பக்கம் 
15 அடி நடந்தீங்கன்னா... நீங்க போயி நிக்கறதும் 
ஒரு ஹோட்டலா தான் இருக்கும்...

அப்ப இந்த ரெண்டு ஹோட்டலுக்கும் நடுவுல 
என்ன இருக்கும்னு கேக்கறீங்களா...?!

அதுவும் ஹோட்டல்தேன்...!!

# சேலம்டா...!!!

Sunday, February 14, 2016


என் ப்ரெண்ட் ஜெகன் போன் பண்ணியிருந்தான்..
பேச்சு அப்டியே போட்டோகிராபி பத்தி திரும்பிச்சு..
" ஏன்டா வெங்கி.. நீ ஏன் எங்கே போனாலும்
SLR தூக்கிட்டு போறே.. மொபைல்லயே எடுக்கலாமே..!! "
( ஒரு போட்டோகிராப்பரை பாத்து கேக்கற
கேள்வியாடா இது..?!! )
" ஹேய்.. இப்ப எல்லோரும் மொபைல்ல தான்டா
போட்டோ எடுக்கறாங்க... நாம கொஞ்சம் டிப்பரண்ட்னு
காட்டணும்ல...!! "
" ம்ம்க்கும்.. இப்ப மட்டும் என்ன சொல்லுவாங்கனு
நெனக்கிறே,,? "
" என்ன சொல்லுவாங்க..?!! "
" கண்ட நாயெல்லாம் SLR வெச்சி இருக்கு பாரேனு
தான் சொல்லுவாங்க...!! "
# ஞே..!!!

Thursday, February 11, 2016


இந்த நாடகத்துல எல்லோருமே சுமாராத்தான் இருக்காங்க..
அப்புறம் என்னாத்துக்குடா " அழகி " னு பேரு வெச்சீங்க..?!!

Wednesday, February 10, 2016


இன்னிக்கு மதியம் சுதாகிட்ட சாட்டிங்..
" சுதா.. ஒரு சின்ன மேஜிக்.. "
" என்ன மேஜிக்...?! "
" உங்க மொபைல் நம்பர் சொல்லுங்க..
உங்க Date of Birth நான் சொல்றேன்.. "
" அதெப்படி..?!! "
" அதெல்லாம் கேக்கப்படாது... நம்பர்
மட்டும் சொல்லுங்க.. "
" சரி.. 897*****84.. "
" பர்ஸ்ட் நம்பர் 8.., லாஸ்ட் நமபர் 4...
கூட்டிக்கழிச்சு பார்த்தா... உங்க பர்த்டே
செப்டம்பர் 16.. கரெக்ட்டா..? "
" வாவ்... அமேசிங்... எப்படி கண்டுபிடிச்சீங்க..?!! "
( அல்ரெடி புரோபைல் பாத்து நோட் பண்ணி
வெச்சிருக்கோம்ல...!! )
" அதெல்லாம் அப்படித்தான்.... "
" வெங்கட் நீங்க ரியலி கிரேட்... இருங்க
என் ப்ரெண்ட் ஹேமா ஆன்லைன்ல இருக்கா..
அவகிட்ட இத பத்தி சொல்லிட்டு வரேன்...!! "
( ஐ.. ஹேமா நம்பரும் கெடைக்க போவுதா..?!! )
இன்பாக்ஸ் மெசேஜில் ஹேமா...
" ஹாய் வெங்கட்... "
" ஹாய்..!! "
" பெரிய மேஜிசியன் ஆகிட்டீங்களாமாம்..
சுதா சொன்னா.. "
" சே.. சே.. அப்டி எல்லாம் இல்ல..!! "
( திஸ் ஈஸ் ' தன்னடக்கம்..' ப்ளீஸ் நோட்.. )
" அவங்க அப்பா நம்பரை வெச்சே
அவ பர்த்டே கண்டுபிடிச்சிட்டீங்களாம்..!! "
" என்னாது இது அவங்க அப்பா நம்பரா..?!! "
அவ்வ்வ்வ்வ்..!!!
# என்னம்மா... இப்டி பண்றீங்களேம்மா...?!!

Wednesday, February 3, 2016


" முயற்சி பண்ணினா முடியாதது
எதுவும் இல்ல"-னு சொல்றாங்க..
நான் சும்மா ஒரு பேச்சுக்கு கேக்கறேன்...
எவ்ளோ தான் முயற்சி பண்ணினாலும்
நானும் காத்ரீனாவும் ஒரு படத்துல ஜோடியா
நடிக்க முடியுமா..?!!
ஐ மீன்... காத்ரீனா எவ்ளோ தான் முயற்சி பண்ணினாலும்...
ஹி., ஹி., ஹி...!!!