Friday, March 11, 2016

டிராபிக்ல ஒரு ஸ்கூட்டியும், பைக்கும்
முட்டிக்கிச்சு...
அந்த பொண்ணு திட்ட..,
அந்த பையன் பதிலுக்கு கத்த..
ஒரு ரணகளமாக கூடிய சூழல்
என் கண்ணுக்கு தெரி்ஞ்சது..
( " நாட்டாமை... சீக்கிரம் பஞ்சாயத்து பண்றா.. "
- என் உள்மனசு )
எப்படியும் தப்பு அந்த பொண்ணு மேல தான் இருக்கும்...
டக்னு நான் வண்டிய விட்டு இறங்கி
அவங்க பக்கத்தில போனேன்...
போயி...
" ஏம்பா தம்பி.... பாத்து வரக்கூடாது..?! "
மாமனார் வீட்டு கல்யாணம்...
நான் உண்டு.. என் மொபைல் உண்டுனு
ஓரமா உக்காந்து இருந்தேன்..
அப்பத்தான் அவன் மண்டபத்துல என்ட்ரி ஆனான்...
ஐயோ இவனா..!! சிக்கினா... 
பேசியே சின்னாபின்னமாக்கிடுவானே...!!
அவனை பாத்தும் பாக்காத மாதிரி தலைய
குனிஞ்சிக்கிட்டேன்..
ஒரு 5 செகண்ட் கழிச்சி... போயிட்டானானு
லேசா தலைய தூக்கி பாத்தேன்..
இப்ப என்னை பாத்துட்டான்..
டக்னு ஒரு செகண்ட் ஷாக் ஆனவன்...
அப்டியே பாக்காத மாதிரி போயிட்டான்...
# அடேய்ய்ய்ய்ய்ய்.....

கோர்ட் : விஜய் மல்லய்யா எங்கே..?!
கவர்மெண்ட் : அவர் இந்தியாலயே இல்ல...
கோர்ட் : அதெப்படி தேடிப்பாக்காமயே சொல்றீங்க..?!
கவர்மெண்ட் : அனுப்பி வெச்சதே நாங்க தானே...!!

Tuesday, March 8, 2016

காலைல 11 மணி... டீ பிரேக்..
ஹப்பாடா கொஞ்சம் நேரம் ரிலாக்ஸா
இருக்கலாம்..
அப்ப இவ்ளோ நேரம் என்ன பண்ணிட்டு
இருந்தேன்னு கேக்கக் கூடாது..
11 மணி எப்ப ஆகும்னு வெய்ட் பண்ணிட்டு
இருந்தேன்.. ஹி., ஹி., ஹி...
சரி சரி.. மேட்டர்க்கு வருவோம்..
ரிலாக்ஸா ஃபேஸ்புக்கை ஓபன் பண்ணினேனா..
சுத்தி சுத்தி.. " Women's Day " வாழ்த்து தான்..
ஒவ்வொண்ணா படிக்க படிக்க...
அப்டியே என் கண்ணு கலங்கி.,
கை கால் எல்லாம் நடுங்கி..
சே புல்லரிச்சி போச்சு..
பெண்கள் நாட்டின் கண்கள்..!!
சக்தி இல்லையேல் சிவமில்லை..!!
அடடா.. இந்த பொண்ணுங்க அருமை பெருமை
தெரியாம இத்தன நாளா கலாய்ச்சிட்டு வந்து
இருக்கோமே..
நீ வெங்கி இல்லடா.. மங்கி..!!
பளார்.., பளார்.., பளார்..!!
( என்னை நானே அடிச்சிட்டேன்..!! )
இன்னிக்கு பொண்ணுகளுக்கு எல்லாம்
வாழ்த்து சொல்லணும்..
சரி மொதல்ல நம்ம வீட்ல இருந்து
ஆரம்பிப்போம்னு முடிவு பண்ணினேன்..
லஞ்ச்க்கு வீட்டு வந்தேன்..
என் Wife ஹால்ல உக்காந்து டிவி பாத்துட்டு
இருந்தாங்க..
மெதுவா அவ பக்கத்துல போயி..
அவ கையை பிடிச்சி..
" Happy Women's Day நிர்மலா..!! "
என்னை ஒரு மாதிரி லூச பாக்கற
மாதிரி பாத்தா..
பாத்துட்டு...
டக்னு டிவி ரிமோட்டை எடுத்து ஒளிச்சி
வெச்சிகிட்டா..
# ஏம்மா... ·.இப்டி பண்றீங்களேம்மா...!!!

மகளிர் தின வாழ்த்து ( ஜனா ) - PS



கால் பண்ணினப்ப... " ஒரு 10 நிமிஷம் கழிச்சு
நானே கூப்பிடறேனு " போனை கட் பண்ணிட்டான்..
இன்னியோட 3 வாரம் ஆகுது.. அந்த 10 நிமிஷமும்
இன்னும் வரல... போனும் வரல..
இனிமே அந்த நாயி போன் பண்ணினா பேசக்கூடாது..
கட் பண்ணிடனும்னு முடிவோட இருக்கேன்..
அது சரி.. அவன்தான் நம்மள கூப்பிடற மாதிரியே
தெரியலியே.. அப்புறம் எப்டி கட் பண்றது யோசிச்சேன்..
உடனே ஒரு சூப்பர் ஐடியா தோணுச்சு..
மொதல்ல நாம அவனுக்கு போன் பண்ணி..
" எனக்கு கால் பண்ணு"-னு சொல்லலாம்.....
அப்புறம் அவன் கால் பண்ணுவான்ல...
அப்ப கட் பண்ணலாம்னு முடிவோட போனை போட்டேன்....
" மச்சி... எனக்கு கால் பண்றா.. "
" நீ போனை கட் பண்ணு மச்சி.. 10 நிமிஷத்துல கூப்பிடறேன்... "
" என்னாது.... 10 நிமிஷமா..?!!! "
# ஆஹா... மறுபடியும் மொதல்ல இருந்தா..?!!

Monday, February 29, 2016

வராத நயன்தாராவுக்கு அவார்ட் குடுப்பாங்களாம்...
வந்து.. டான்ஸ் எல்லாம் ஆடுன
தமன்னாவுக்கு குடுக்க மாட்டாங்களாம்..
என்னடா பங்ஷன் நடத்தறீங்க..?!!
நான் வெளிநடப்பு செய்கிறேன்..!!
# ஐய்யயோ... உணர்ச்சிவசப்பட்டு வீட்டுக்கு
வெளியே வந்துட்டேனே..!!!
அவ்வ்வ்வ்வ்