Friday, June 10, 2016

பொண்ணுங்ககிட்ட மொபைல் நம்பர் வாங்க டிப்ஸ்
 
எனக்கு ஃபேஸ் ரீடிங் தெரியும்.. உங்க முகத்தைப் பாத்து 
உங்களப் பத்தி சொல்லட்டானு கேக்கணும்..

சரி சொல்லுங்கனு சொல்லிட்டா... ஆரம்பிங்க...

1. உங்களுக்கு பிடிச்ச கலர் "பிங்க்"
(பத்துக்கு எட்டு புள்ளங்களுக்கு இந்த கலர் தான் பிடிக்கும்.. 
அதனால தாராளமா அடிச்சி விடலாம்)

2. நீங்க அப்பா செல்லம்.. அம்மா ஸ்ட்ரிக்ட்டு ஆபீசர்
(இதான் உலக வழக்கம்.. மிஸ்ஸாக சான்ஸே இல்ல)

3. உங்களுக்கு டீ வெக்க கூட தெரியாது.. மேரேஜ் ஃபிக்ஸானா கத்துக்கலாம்னு இருக்கீங்க..
(இதுக்கு எந்த பொண்ணாவது இல்லனு சொல்லிச்சுனா.. 
உலகம் அன்னியோட அழிஞ்சிடும்)

4. ஓவரா மேக்கப் போட்டுக்கறது உங்களுக்கு சுத்தமா 
பிடிக்காது.. ஒன்லி லைட் மேக்கப்..
(எவ்ளோ "ஓவரா" இருந்தாலும்.. அவங்கள பொறுத்தவரை 
அது "லைட்" தான்)

5. உங்களுக்கு பிடிச்ச ஹீரோ.... விஜய்ய்ய்ய்ய்...
(அப்டினு சொல்லிட்டே அவங்க மூஞ்சை பாக்கணும்.. 
ஸ்மைல் வந்தா... விஜய்னே முடிச்சிடணும்.. மூஞ்சி மாறிச்சின்னா..... விஜய்ய்ய்ய்... இல்ல.. அஜித்னு முடிச்சிடணும்...)

6. நீங்க ரொம்ப தன்னம்பிக்கையான ஆளு.., சமுதாயத்துல 
சாதிச்சு சொந்த கால்ல நிக்கணும்கறது தான் உங்க இலட்சியம்..
(அப்டி ஒரு ஐடியாவே இல்லன்னாலும்.. ஆமானு தான் சொல்லி 
ஆகணும்.. இது பிரஸ்டீஜ் மேட்டர்..)

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்..

7. யாருக்கும் உங்க மொபைல் நம்பர் குடுக்கறது உங்களுக்கு 
பிடிக்காது.. ஆனா உங்களுக்கு ஒருத்தரை பிடிச்சி போச்சுன்னா.. 
அவங்க கேக்காமலே உங்க நம்பரை தருவீங்க..

இப்ப இவ்ளோ போதும்.. மீதிய போன்ல பேசிக்கலாம்..!!

Friday, June 3, 2016

"ரெண்டு நாளா உன் கூட பேசாம, உன் குரலை 
கேக்காம சோறே சாப்பிடல தெரியுமா..?!"
"நம்பற மாதிரி இல்லியே..."
"சத்தியமா... ஒன்லி கொத்து பரோட்டா, 
முட்டை தோசை, சில்லி இட்லி...."

Thursday, June 2, 2016

ஒரு போராளிக்கு இன்னொரு போராளி லைக் - மீம்ஸ்


டிஸ்கவரி சேனல்ல காட்றானுங்க...
என்னமோ இமயமலைல ஏறிட்டோம்.,
அமேசான் ஆற்றை நீந்தி்ட்டோம்.,
நயாகரால இருந்து குதிச்சி்ட்டோம்.. 
சாகசம் பண்ணிட்டோம்னு ஓவரா சீன் போடறானுங்க...
எங்க தில் இருந்தா வந்து... 

சேலம்-திருச்சி மெய்ன் ரோட்டை இந்த பக்கம் 
இருந்து அந்த பக்கம் கிராஸ் பண்ணி காட்டுங்கடா பாப்போம்....

# நாங்கல்லாம் தினம் தினம் சாகசம் பண்ணிட்டு இருக்கோம்டா...!!!


கடந்த ஒரு வருட காலமாக நான் ஒரு சஸ்பென்ஸ் கிரைம் நாவல் எழுதி வருவது அனைவரும் அறிந்ததே...
அந்த நாவல் சென்னையில் நடைபெறும் 39-வது புத்தகக் கண்காட்சியில்.......
ஸ்டால் No.1-ல் இருந்து ஸ்டால் நமபர் 777- வரை எதிலுமே கிடைக்காது...
சஸ்பென்ஸ் வெளியே தெரிந்துவிடும் என்ற காரணத்தால் நாவலை எங்க வீட்டு பீரோவில் பத்திரமாக பூட்டி வைத்துள்ளேன் என்பதை இங்கே அனைவருக்கும் தெரியப்படுத்திக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
ஊர்ல மழை பேஞ்சு மொபைல் நெட்வொர்க்
எல்லாம் மக்கர் பண்ணிட்டு இருந்தது..
செக் பண்றதுக்காக என் ப்ரெண்ட் ஆனந்த்க்கு
போன் பண்ணினேன்..
" வெங்கி.. நீ பேசறது தெளிவா கேக்கலை.. "
சரினு BSNL-ஐ கட் பண்ணிட்டு... Vodafone-ல கூப்பிட்டேன்...
" இப்ப கேக்குதா..?! "
" இப்பவும் கர கரனு தான் கேக்குது.. "
"சரி இரு.."
என் Wife ஏர்செல்ல இருந்து கூப்பிட்டேன்...
" மச்சி.. இப்ப..? "
" ம்ஹும்.. இதுவும் க்ளியரா இல்ல... எதுக்கும்
சிக்னல் செக் பண்ணு...."
கால் கட் பண்ணிட்டு நேரா அவன் வீட்டுக்கு
போயி அவன் முன்னாடி நின்னேன்...
" இப்ப நான் பேசறது கேக்குதா? "
" சுமாரா கேக்குது.. ஹி., ஹி., ஹி..!! "
பளார்..!!
" மொதல்ல போயி காதை செக் பண்றா நாயே...!!"
"நம்ம ஊர்ல ரிலையன்ஸ் Jio வந்துடுச்சாடா..?"
" சீக்கிரம் வந்துடும்.."
"எப்டி சொல்ற..?"
"Shankar Ji-க்கே கெடைச்சிடுச்சாம். அவருக்கு 
கெடைச்சா கடைக்கோடி தமிழனுக்கே கெடைச்ச மாதிரி.."
"ரைட்டேய்.."