Monday, September 19, 2016

இன்னிக்கு ரோட்ல என்னைய ஒரு கும்பல் மறிச்சது...
"உன்னை பாத்தா தமிழன் மாதிரி தெரியலியே..?"
"ஆமாங்க.. பாக்கறதுக்கு ஹாலிவுட் ஹீரோ மாதிரி இருக்கேனா.. எல்லோரும் இதே தான் சொல்றாங்க.."
அதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சுன்னா...
சரி விடுங்க...
அவனுங்களுக்கு ஹாலிவுட் ஹீரோ மேல எதோ கடுப்புன்னு நெனக்கிறேன்..
ஹி., ஹி., ஹி...
காலைல 5 மணிக்கு என் மொபைல் ரிங் ஆச்சு.. எடுக்கறதுக்குள்ள கட் ஆகிடுச்சு...
அர்த்த ராத்திரில கூட மிஸ்டு கால் குடுக்குதுன்னா அது இந்த மங்கு (Shajahan S) பன்னாடையா தான் இருக்கும்னு நெனச்சிட்டே பாத்தேன்..
அவனே தான்... திருப்பி கூப்பிட்டேன்..
" ஹலோ....!! "
" மச்சி.. தூங்கிட்டா இருக்கே..?? "
" இல்ல.. நைட் ஒரு பேயி வாக்கிங் வந்துச்சு.. அது கூட பேசிட்டு இருக்கேன்..! "
" ஆம்பள பேயா..? பொம்பள பேயா மச்சி..? "
" த்த்தூ... மேட்டரை சொல்லுடா.. "
" என் போனுக்கு ரீசார்ஜ் பண்ணி விடேன்.. "
" அடேய்ய்ய்ய்ய்ய்...!! "
" கோச்சிக்காத மச்சி.. முக்கியமான மேட்டர்.. பேலன்ஸ் இல்லாம கட் ஆகிடுச்சு.. "
" அப்டி என்னடா முக்கியமா மேட்டர்..? "
" ஒரு கேஸு விஷயமா.. "
" கேஸா.. போலீஸ்ல எதுனா மாட்டிக்கிட்டியா..? முட்டிக்கு முட்டி தட்டினாங்களா இல்லியா..? "
" வெளையாடாதே மச்சி.. சீக்கிரம் ஒரு 30 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணி விடேன்..! "
" சரி பண்ணி விடறேன்.. அப்புறமா கேஸு என்னாச்சுனு சொல்லு..! "
" ஓ.கே மச்சி..!! "
என் மொபைல்ல இருந்து 30 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணி விட்டேன்..
அடுத்த அஞ்சாவது நிமிஷம் அந்த பக்கிகிட்ட இருந்து வந்தது..
.
.
.
.
.
"கிரிமினல் கேஸ்" கேம் ரிக்வெஸ்ட்..
அட பரதேசி நாயி..!!!

Saturday, September 10, 2016



மங்கு (Shajahan S) போன் பண்ணியிருந்தான்...
"மச்சி நேத்து தான் பிரேமம் பாத்தேன்... பாத்ததுல இருந்து மலர் டீச்சர் நெனப்பாவே இருக்குடா.."
"ஆங்.. சாய் பல்லவி"
"மலரே நின்னே காணாதிருந்நால் மிழியேகிய நிறமெல்.."
"நாயே.. பாடறத நிறுத்தித் தொலை.."
"அப்ப மறக்கறதுக்கு எதுனா ஐடியா இருந்தா குடு மச்சி.."
"விட்றா... ரெண்டு நாள்ல சரியா போயிடும்.."
"இல்ல மச்சி.. ரொம்ப ஃபீல் ஆகிட்டேன்.. எதாவது ஐடியா குடு.."
"அப்ப போய் தெலுங்கு பிரேமம் பாரு.."
"பாத்தா... மறந்துடுவேனா..?"
"ம்ஹூம்... செத்துடுவ..!!"
இந்த வாட்ஸ் அப்ல கண்டதையும் ஷேர் பண்ற நாய்ங்க.. கண்டதை மட்டுமே ஷேர் பண்ணுதுங்க..
தப்பித்தவறி கூட உருப்படியானது வர மாட்டேங்குது...
# டிஷ்யூம்., டிஷ்யூம்..!!!
Wife புது டிஷ் டிரை பண்ணி சமைச்சி தரும்போது அத கிண்டல் பண்றவன்.. வாழ்நாள் முழுக்க இட்லியும்., உப்புமாவுமே சாப்பிடுவான்..
- பாபா வெங்கீஷ்

Jio - மீம்ஸ்





"நிர்மலா... பாரேன் இந்த அதிசயத்தை... "
" என்ன..?! "
" டயட் இருக்கணும்னு மனசுல நெனச்சதுக்கே.. இளைச்சிட்டேன் போல.. பேன்ட் லூசா இருக்கு.. "
" நல்ல நாளும் அதுவுமா கெட்ட வார்த்தை சொல்லி திட்டிட போறேன்.. அது உங்க அப்பாவோடது.. "
" அப்பாதா... அவ்வ்வ்வ்..!!! "
# டயட் 15-வது நாள்..!!