Friday, October 7, 2016


ஆக்சுவலி அந்த கிப்ட் பாக்ஸ்குள்ள என்ன இருந்துச்சுன்னா....
.
.
.
.
.
.
.
.
.
ம்ம்க்கும்... சொன்னாலும் நீங்கல்லாம் நம்பவா போறீங்க..?!!!
:P :P
அறிவாளியா இருக்கறதுக்காக பெருமை பட்டுக்கலாம்.. ஆனா பந்தா பண்ணிக்க கூடாது...
என்னய எல்லாம் பாருங்க.. நான் என்னிக்காச்சும் பந்தா பண்ணியிருக்கேனா..?!!
ஹி., ஹி., ஹி...!!
# நமக்கிந்த வெளம்பரம் புடிக்காதில்ல மொமெண்ட்...!!

Wednesday, October 5, 2016

ப்ரியா இருக்கும் போது கால் பண்ணு - Photo Status



ஆபீஸ்ல வெட்டியா உக்காந்து இருந்தேன்.. அப்ப மொபைல் ரிங் ஆச்சு...
" ஹலோ... "
" ஹலோ சார்... நாங்க பஜாஜ் ஃபினான்ஸ்ல இருந்து கால் பண்றோம்.. "
" சொல்லுங்க மேடம்... "
" உங்களுக்கு பிஸினஸ் லோன் வேணுங்களா..?! "
" குடுங்க மேடம்... "
" உங்க பேரு என்னானு தெரிஞ்சிக்கலாங்களா..?! "
" வெங்கட்... "
" என்ன பிஸினஸ் சார் பண்றீங்க..?! "
" நீங்க லோன் குடுத்ததுக்கு அப்புறம் தாங்க மேடம் அத முடிவு பண்ணனும்... "
( டொக்.... )
ஹலோ...ஹலோ... வெச்சிட்டாங்க.... ஹி., ஹி., ஹி...!!
என் Wife இந்த பர்த்டேக்கு Soft silk கேட்டாங்கனு நேத்து எடுக்க போயிருந்தோம்...
அங்க ஒரு Sandal கலர் சேலையும், ஒரு Fanta கலர் சேலையும் ஃபைனல்ஸ்ல நின்னது...
என் Wife-க்கு ஒரே குழப்பம்..
ஆஹா இதான் நான் கருத்து சொல்ல சரியான சமயம்...
" நிர்மலா நீ இந்த Sandal கலர் எடுத்துக்கோ... கட்டினா அசப்புல தமன்னா மாதிரியே இருப்பே.. "
" என்னாது.. தமன்னாவா...? உவ்வ்வே...!!! "
" ம்ம்க்கும்.. சரி சரி.. அந்த Fanta கலரே எடுத்துக்கோ.. "
" அந்த Sandal கலரும் நல்லா இருக்கே...? "
( ஆஹா.. ரெண்டு சேலைக்கும் பிட் போடற மாதிரி தெரியுதே... )
" இல்ல நிர்மலா.. அத விட இது உனக்கு சூப்பரா இருக்கும்... "
" அப்படீன்றீங்க..?!! "
கடைசில Fanta கலர் சேலைய பில் போட்டுட்டு வெளியே வந்தோம்..
ஆனா என் Wife மறுபடியும் கடைக்குள்ள போக டிரை பண்ணினா.. நான் கைய பிடிச்சிட்டேன்...
" என்ன நிர்மலா..? "
" இல்ல.. அந்த Sandal கலர் சேலை எவ்ளோனு பாக்கவேயில்லை... பாத்துட்டு வர்றேன்.. "
" அத நாம எடுக்கவேயில்லையே.. எதுக்கு பாத்துகிட்டுனு " சொல்லி நைசா கூட்டிட்டு வந்துட்டேன்..
எனக்கு தான் நல்லா தெரியுமே...
அந்த Sandal கலர் சேலை இத விட 1000 ரூபா அதிகம்னு... ஹி., ஹி., ஹி...!!
# அனைத்து ராசதந்திரங்களையும் கரைத்து குடித்திருக்கிறாயடா வெங்கி..!!!
" மச்சி மச்சி இங்க வாயேன்.. "
" என்ன..? "
" லேட்டஸ்ட் நியூஸ் மச்சி.. அப்பல்லோ ஆஸ்பத்திரி உள்ளே என்ன நடக்குது தெரியுமா..? "
" அது இருக்கட்டும்.. இன்னிக்கு உன் லஞ்ச் பாக்ஸ்ல என்ன சாப்பாடு இருக்கு தெரியுமா..? "
" ஹி., ஹி., ஹி.. அது தெரியாதே..!! "
# அடிங் கொய்யாலே..!
உலகத்துல இருக்கற பூரா அறிவாளிகளும் அமெரிக்காலயோ.., நாசாலயோ இருக்காங்கன்னா நெனச்சிட்டு இருக்கீங்க...?!!
அதான் இல்ல....
பூரா பயலும் வாட்ஸ் அப்ல தான் இருக்கானுங்க...
# பொழுது விடிஞ்சா இவனுங்க அக்கப்போரு இருக்கே..... மிடில...