Saturday, December 31, 2016


என் பையன் ஸ்கூல்ல சைன்ஸ் எக்ஸிபிசனாம்..
இவன் குப்பையில இருந்து கரெண்ட் எடு்க்கற மிஷின் கண்டுபிடிக்க போறானாம்...
அது சம்பந்தமா என்கிட்ட ஐடியா கேட்ட போது க்ளிக்கியது...
என் ப்ரெண்ட் அருண் வீட்டு கிரகபிரவேசம்...
பந்தில நானும் என் ப்ரெண்ட் சுரேஷும்...
மெனு : இட்லி, பொங்கல், வடை, பூரி, ஆனியன் தோசை..
எல்லாமே நல்லா இருந்து.. அதுல ஸ்பெஷல் ஆனியன் தோசை... செம்ம்ம....
நான் பக்கத்துல இருந்த சுரேஷ்கிட்ட...
" டேய்.. நான் ஆனியன் தோசை கேக்க போறேன். உனக்கும் வேணுமா..? "
"நோ.. நோ... நீ மட்டும் சொல்லிக்க.. "
உடனே நான் பந்திய மெய்டெய்ன் பண்ணிட்டு இருந்த அருணை கூப்பிட்டு...
" மச்சி... ரெண்டு ஆனியன் எடுத்துட்டு வாயேன்.. "
இப்ப சுரேஷு டென்ஷனாகிட்டான்....
" டேய்.. எனக்கு தான் வேணாம்னு சொல்றேன்ல... "
" ஹி., ஹி., ஹி... ரெண்டும் எனக்கு தான்... நீ அமைதியா இரு... ! "
# நம்ம கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்களே...!!!
இன்னிக்கு IMO-ல இருந்து ஒரு மெசேஜ்...
" Manju just joined IMO "
மஞ்சுவா...?!! யாரு...?!!.
புரோபைல் போட்டோல இருந்த புள்ளய நான் எங்கயும் பாத்ததேயில்லையே..
இந்த புள்ள நம்பர் எப்டி நம்ம போன்ல வந்துச்சு..?!!
சந்தேகம்னு வந்துட்டா உடனே க்ளியர் பண்ணிக்கணும்னு எங்க சீக்ரெட் ஏஜென்ட் டிரைனிங்ல சொல்லி இருக்காங்க...
டக்னு அந்த நம்பர்க்கு வீடியோ கால் போட்டேன்....
வீடியோ ஆன் ஆச்சு....
பாத்தா.....
" அண்ணே.... வெங்கட்ணே... எப்டிணே இருக்கே...?! "
" அடிங்கொய்யாலே... மஞ்சுநாதா... நீயாடா...?! "
# இந்த பொண்ணுங்க போட்டோவ புரோபைல் பிக்சரா வெக்கறவனை ஜெயி்ல்ல பிடிச்சு போட சட்டத்துல எடம் இருக்கா ஆபீசர்...?!

Wednesday, December 7, 2016

இன்னிக்கு காலைல ஒரு பயங்கர கனவு... திக்னு எந்திரிச்சிட்டேன்...
8 மணி ஆகியும் அந்த கனவு நெனப்பாவே இருந்தது... உடனே மங்குவுக்கு (Shajahan S) போன் பண்ணினேன்..
" மச்சி இந்த விடியக்காலைல வர்ற கனவு எல்லாம் பலிக்குமா..? "
" அதெல்லாம் பலிக்காது.. "
" எப்டி அவ்ளோ உறுதியா சொல்றே..? "
" கனவு பலிக்கறதா இருந்தா.. இந்நேரம் நான் நயன்தாராவ கல்யாணம் பண்ணிட்டு இருக்கணுமே..!! "
" ஹி., ஹி., ஹி...!! "

செல்பி வாட்ஸ்அப் - ஜெகன் கமெண்ட்


கருப்பு பணம் ஒழியாது - மீம்ஸ்


என் ப்ரெண்ட் ரமேஷ்க்கு போன் பண்ணியிருந்தேன்..
" ஹலோ..!! "
" ஹேப்பி ஆனிவர்சரி மச்சி.. "
" ஐய்யயோ... எனக்கு இன்னிக்கு ஆனிவர்சரியா..?! "
( அதிர்ச்சியாகிட்டான்..!! )
" என்ன ஆச்சி மச்சி...? "
" ஆனிவர்சரினு சுத்தமா மறந்துட்டேன்... நீ போனை வை.... நான் என் Wife கிட்ட பேசி்ட்டு அப்புறமா கூப்பிடறேன்.... "
" சரி சரி....!! "
கொஞ்ச நேரத்துல போன் பண்ணினான்... எடுத்தா... கெட்ட கெட்ட வார்த்தையிலயே திட்றான்..
ஆக்சுவலி... S.ரமேஷ்க்கு ஆனிவர்சரி... நான் R.ரமேஷ்க்கு விஷ் பண்ணிட்டேன்...
இதெல்லாம் ஒரு தப்பா மக்கழே...!!!