Wednesday, January 11, 2017

தினேஷ்கிட்ட பேசிட்டு இருக்கும்போது சொன்னான்...
" நானெல்லாம் எந்த பொண்ணுக்கும் பயப்பட மாட்டேன்.. "
" மச்சி.. அப்ப உன் Wife-க்கு...?!! "
" அவ எல்லாம் பொண்ணா மச்சி..?!! "
# ரொம்ப பாதிக்கப்பட்டு இருப்பானோ..?!!
சாட்டிங்ல ஒரு பொண்ணு...
" நீங்க சரியான ஆணாதிக்கவாதி.. "
" யாரு... நானு...?! "
" பின்ன பொண்ணுங்க தப்பு பண்ணினா புருஷன் கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கணும்னு போட்டிருக்கீங்க... "
" அது சீரியல்ல வந்தது... "
" அதே மாதிரி ஆம்பளைங்களும் தப்பு பண்ணினா.. பொண்டாட்டி கால்ல விழுந்து மன்னிப்பு கேப்பீங்களா..?!! "
" என்னாது...?!! தப்பு பண்ணினா தான் கால்ல விழணுமா..?! இது தெரியாம போச்சே...!! "
#ஙே...!!!
நான் லஞ்ச்க்கு வீட்டுக்கு போனப்ப என் Wife எதோ சீரியல் பாத்துட்டு இருந்தாப்ல..
அதுல ஒரு பொண்ணு அவ புருஷன் கால்ல விழுந்து நான் பண்ணினது தப்பு.. என்னை மன்னிச்சிடுங்கனு கெஞ்சிட்டு இருந்தது...
நான் அப்டியே லைட்டா திரும்பி என் Wife-ஐ பாத்தேன்...
" ஏன் அப்டி பாக்கறீங்க..? "
" இல்ல இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு..?!! "
" இது கனவு சீன்ங்க.. "
" அதானே பாத்தேன்...!! "
இன்னிக்கு காலைல மங்கு (Shajahan S)
" மச்சி.. என் லவ்வர இம்ப்ரஸ் பண்ணனும்.. ஒரு ஐடியா குடேன்... "
" உன் லவ்வருக்கு எதாவது கவிதை எழுதி குடு... "
" கவிதையா..? நானா..? நான் கவிதைனு எழுதினாலே ஸ்பெல்லிங் மிஸ்டேக் வருமே.... "
" அப்ப பாட்டாவே படிச்சிடு.. "
" அப்டீன்ற... சரி ஈஸியா ஒரு கவிதை சொல்லு.. "
" ஒரு
ஸ்வீட் ஸ்டாலே
ஸ்வீட்
சாப்பிடுகிறதே..
அடடே..!!! "
" சூப்பர் மச்சி... ஒருவேளை அவ ஸ்வீட் சாப்பிடலைன்னா.. "
" எது சாப்பிடறாங்களோ. அத வெச்சி டெவலப் பண்ணிக்கோடா.. "
" டன் மச்சி... "
இப்ப நைட் போன் பண்ணினான்...
" மச்சி... கோச்சிட்டு போயிட்டாடா... "
" ஏன்..?! என்ன ஆச்சு..?! "
" கவிதை சொன்னேன் மச்சி... கிண்டல் பண்றியானு கோச்சிட்டு போயிட்டா...!! "
" கிண்டலா...?! அப்ப அவ என்ன சாப்பிட்டுட்டு இருந்தா...?! "
" வாட்டர்மெலன் ஜூஸு..!! "
" த்த்த்தூ...!! "
#கதம் கதம்....!!
நைட் 12 மணியிருக்கும்... தூக்கம் வரல... பெட்ல எந்திரிச்சு உக்காந்திருந்தேன்...
டக்னு முழிச்சு பாத்த என் Wife நிர்மலா..
" ஏன்.. இப்டி ஆந்தை மாதிரி கொட்ட கொட்ட முழிச்சிட்டு இருக்கீங்க..?! "
( ஆந்தை இவ்ளோ அழகாவா முழிக்கும்..?!! )
" ஹேங்... தூக்கம் வரல.. "
" நான் வேணா ஒரு டிப்ஸ் குடுக்கவா..?! "
" ம்ம்.. "
" பீரோல என் சேரீஸ் எல்லாம் கன்னாபின்னானு கெடக்கு... அத போயி நீட்டா அடுக்கி வெச்சிட்டு வாங்க... "
என்னாது சேரீஸ அடுக்கணுமா..?!
கைப்புள்ள... இன்னும் ஏன்டா முழிச்சிட்டு இருக்கே... தூங்குங்ர்ர்ர்ர்ர்..!!!

2016 இந்தியா vs 2017 இந்தியா - மீம்ஸ்


நியூ இயர் கடவுள் வரம் - மீம்ஸ்