Friday, March 17, 2017

நான் இங்கிலீஸ் எக்ஸாமையே தமிழ்ல எழுதற ஆளு....
ஆனா பாருங்க... ரெண்டு மூணு நாளா வெள்ளக்கார புள்ளங்களா ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் குடுக்குது....
என்ன காரணமா இருக்கும்..?!!
மல்லக்க படுத்து விட்டத்தை பாத்து யோசிச்சேனா.... டக்னு உதிச்சது ஒரு சிந்தனை....
ஆஹா... ஒருவேள.... நாம பாக்கறதுக்கு அசப்புல வெள்ளைக்காரன் மாதிரியே இருக்கோமோ...?!!
ம்ம்ம்... இருக்கும் இருக்கும்...!!
அவசரத்துக்கு யாராவது உங்களுக்கு 50 ரூபாய் ரீசார்ஜ் பண்ணி ஹெல்ப் பண்ணினா...
அடுத்த நாள் நீங்களும் அவங்க நம்பர்க்கு 50 ரூபாய் ரீசார்ஜ் பண்ணி வெக்காதீங்க...
அது நட்புக்கு அழகில்ல...
.
.
.
நீங்க வேணா.... அவங்கள ஹோட்டல்க்கு கூட்டிட்டு போயி பிரியாணியும், சிக்கன் 65-ம் வாங்கி குடுங்களேன்...
வேணாம்னா சொல்ல போறேன்... சே... சொல்லப் போறாங்க... டங்க் ஸ்லிப் ஆகிடுச்சு... ஹி., ஹி., ஹி....!!!
" நீங்க எப்ப இருந்து சார் எழுதறீங்க..? "
" சின்ன வயசுல இருந்தே... சுவத்துல கிறுக்கி... "
" ஹைய்யோ.. அத கேக்கல.. இந்த போஸ்டிங் எல்லாம் எப்ப போட ஆரம்பிச்சீங்க..? "
" அது ஜனவரி 2010-ல இருந்து... "
" வாவ்.. அப்ப 7 வருஷமா எழுதறீங்க..? "
" யெஸ் யெஸ் யெஸ்.. "
" 7 வருஷமா ஒரே மாதிரி எழுதறீங்களே.. போர் அடிக்கலியா..? டிப்பரண்ட்டா எதுனா எழுதலாமே..?
( டிப்பரண்ட்டாவா..?!!!! )
" நீங்க எத்தன வருசமா டூவீலர் ஓட்டறீங்க..? "
" ஒரு 20 வருஷமா..? ஏன் கேக்கறீங்க..? "
" இல்ல 20 வருஷமா ஒரே மாதிரி ஓட்றோமேனு.. டிப்பரெண்ட்டா... ஒரு வீல்ல.., தலைகீழா இப்டி எதுன ஓட்ட டிரை பண்ணி இருக்கீங்களா..? "
" ஙே...!!! "
# ஆருகிட்ட..!!!
பங்சன்ல உக்காந்துட்டு இருந்தேன்... பக்கத்துல ஒரு தாத்தா வந்து உக்காந்தாரு...
அப்டியே என்கிட்ட பேச்சு குடுத்தாரு...
" தம்பி.. நீங்க..?! "
வாட்... என்னய தெரியாம கூட இந்த உலகத்துல ஆளுங்க இருக்காங்களா..?! கிரேஸி பீப்பிள்...
என்னை இன்ட்ரோ பண்ணிட்டேன்...
" நல்லது தம்பி... அதோ அந்த மேடையில ஒரு பொண்ணு நிக்குது பாருங்க... "
" எந்த பொண்ணு...?! "
" பச்சை கலர் சுடிதார் போட்டு இருக்குல்ல... "
அங்கே காலேஜ் படிக்கிற ஒரு பொண்ணு பச்சை கலர் சுடிதார்ல நின்னுட்டு இருந்தது...
" ஆமா தாத்தா... "
" அது என் பேத்திபா.. "
ஹைய்யோ.... எங்க போனாலும் நம்மள கல்யாணம் ஆகாத சின்ன பையன்னே நெனச்சிக்கறாங்களே...
" தாத்தா... எனக்கு..... "
" தம்பி அந்த பொண்ணுகிட்ட என் BP மாத்திரை இருக்குபா... கேட்டு வாங்கிட்டு வர்றியா... "
" ஹி., ஹி., BP மாத்திரை தானே... ஓ.கே., ஓ.கே....! "
உஸ்ஸப்பா.... கொஞ்ச நேரத்துல நம்ம BP-ய ஏத்தி விட்டுடறாங்ய்க.....!!
LikeShow more reactions
Comment

ஸ்கூல்ல என் பையன் Heritage Club-க்கு பிரசிடெண்ட்டா இருக்கான்... அதுக்கு தனியா கோட் எல்லாம் குடுத்து இருக்காங்க...
இன்னிக்கு போட்டோ ஷூட்டாம்... கோட் மறந்துட்டு போயிட்டான்...
காலைல அவங்க மிஸ்ஸூ போன்....
" சார் 9.30- க்குள்ள கோட் கொண்டு வந்து குடுங்க.. "
மணி பாத்தேன் அப்பவே 9.15.
" மேடம்.. மைக்கேல் ஷூமேக்கரால கூட இந்த டிராபிக்ல 9.30-க்கு வர முடியாது.... "
" ஹா., ஹா.. சரி முடிஞ்சளவு சீக்கிரமா வாங்க சார்... "
ஐடியா....!! இங்க இருந்து 25 கி.மீ... வண்டிய 140 கி.மீ வேகத்துல ஓட்டினா...
11 நிமிஷத்துல ஸ்கூலுக்கு ரீச் ஆகிடலாம்... என் வண்டிய (Hero Pleasure) பாத்தேன்..
ஹோ காட்... இந்த வண்டில 140 கி.மீ ஸ்பீடே இல்லியே...!!
சத்யசோதனை....!!
எப்டியோ 9.55-க்கு ஸ்கூல் ரீச் ஆகிட்டேன்....
ஆனா வாட்ச்மேன் வண்டிய வெளியே நிறுத்திட்டு உள்ளே போங்கனு சொல்லிட்டாரு..
ஹைய்யோ.... அது அரை கி.மீ நடந்து போகணுமே...
அர்ஜென்ட் மேட்டர்னு சொல்லி பாத்தேன்... ஒத்துக்கல...
ம்ம்.... வண்டிய வெளியே நிறுத்திட்டு கேட்கிட்ட போனா... அப்ப ஒரு Lady ஸ்கூட்டில வந்தாங்க...
அவங்களும் கோட் எடுத்துட்டு வந்திருப்பாங்க போல...
ஆனா வாட்ச்மேன் அந்த வண்டிய உள்ளே விட்டு்ட்டாரு...
பார்ரா....
நான் அவரை பாத்தேன்... அவர் என்கி்ட்ட எதோ சொல்ல வந்தாரு...
" வாட்ச்மேன்... நீங்க பண்ணினது ரொம்ப கரெக்ட்... தாய்குலத்துக்கு இப்டி தான் ஹெல்ப் பண்ணனும்.. ஐ லைக் இ்ட்... "
" சார்... அவங்க எங்க கரஸ்பான்டன்ட் மேடம்... "
#கரஸ்பான்டன்டா இருந்தாலும் தாய்குலம் தானே..?!! ஹி., ஹி., ஹி..
உங்களுக்கு பிடிச்ச பொண்ணு பர்த்டே என்னிக்குனு தெரிஞ்சிக்கணுமா..?
தட் ஈஸ் வெரி சிம்பிள் யூ நோ...
இன்னிக்கே அவங்கிட்ட போயி...
" ஹேப்பி பர்த்டேனு " விஷ் பண்ணுங்க...
" ஹைய்யோ.. என் பர்த்டே இன்னிக்கில்ல... அது ஆகஸ்ட் 10.. " சொல்லிடுவாங்க..
.
.
- பொதுநலன் கருதி (ரகசியத்தை) வெளியிடுவோர்..
"கோகுலத்தில் சூரியன் " வெங்கட்

Friday, February 24, 2017

டீசர்ட் எடுக்கலாம்னு கடைக்கு போனேன்....
அங்க என் ப்ரெண்ட் ஆனந்த் இருந்தான்...
" மச்சி... என்ன துணிக்கடையில சுத்திட்டு இருக்க..? "
" வர்ற புதன்கிழமை எங்க Anniversary... அன்னிக்கு மேட்சிங்கா டிரஸ் பண்ணனுமாம்ல... "
" ஓஹோ... "
" வீட்ல வித்யாகிட்ட பச்சை கலர்ல ஒரு புது சேலை இருக்கு.. அதனால எனக்கு பச்சை கலர்ல சர்ட் எடுக்க கூட்டிட்டு வந்திருக்கா... "
" பார்ரா.... நீ கலக்கு மச்சி "னு சொல்லிட்டு நான் டீசர்ட் பாக்க போயிட்டேன்....
எடுத்துட்டு பில் பண்ண வந்தா.. பில் செக்சன்ல ஆனந்தும், வித்யாவும்...
" என்னா மச்சி... பச்சை சட்டை வாங்கிட்டியா..?! "
" ம்ஹூம்.. ப்ளூ கலர் சேலை தான் வாங்கியிருக்கா.. "
நான் டக்னு வித்யாவ பாத்து கேட்டேன்....
" அப்ப மேட்சிங்கு...?!! "
வித்யா சிரிச்சிட்டே சொல்லிச்சு...
" இவர்கிட்ட வீட்ல ப்ளூ கலர்ல ஒரு புது சட்டை போடாம அப்டியே இருக்குண்ணா... "
( ஆஹா.... என்னா டிரிக்ஸா வேலை பாக்கறாங்கடா... )
ஆனந்த் என் காதுகிட்ட வந்து சொன்னான்....
" அது கேவலமா இருக்குனு தான்டா போடாம வெச்சி இருக்கேன்... "
# மேட்சிங் மேட்சிங்... ஹி., ஹி., ஹி..!!