Tuesday, June 20, 2017

பழைய போன் ஸ்லோவா இருக்குன்னு புது போன் வாங்க வேண்டியது...
அதுல பழைய போன்ல இருக்குற எல்லா Apps -ம் இன்ஸ்டால் பண்ணிட்டு...
ஐய்யோ... புது போனும் ஸ்லோவா இருக்கேனு பொலம்ப வேண்டியது...
திருந்துங்கடா டேய்....
#புது போன் அலப்பரைஸ்...

Monday, June 19, 2017

இன்னிக்கு என் காலேஜ்மேட் ரேணுகாவுக்கு பர்த்டே.. நோட்டிபிகேசன் வந்தது...
பாத்ததும் திக்னு ஆகிடுச்சு....
32 Years old-னு போட்டு இருக்கு...
அடப்பாவி...!!!
உடனே போன்ல கூப்பிட்டு...
" என்னாதிது.. ஃபேஸ்புக்ல வயசு 32-னு காட்டுது.. "
" ஹி., ஹி., ஹி... "
" சிரிக்காதே...! "
" சரி.. அதுல உனக்கென்ன பிரச்னை..?! "
" பின்ன.. நீ என் காலேஜ்மேட்னு இங்க பல பேருக்கு தெரியும்ல... "
" அதுக்கு..?! "
" நீ இப்டி உன் வயசு 32-னு போட்டா.. அப்புறம் என் உண்மையான வயசு.. 26-ஐ சொன்னா.. எவன் நம்புவான்..?! "
" 26-ஆ...?! அடிங்ங்ங்... "

Sunday, June 18, 2017


ஒரு தடவை நானும் ஆனந்தும் சங்கீதாவ பத்தி.. சே... சங்கீதத்தை பத்தி பேசிட்டு இருந்தோம்... அப்ப ஆனந்த் கேட்டான்...
" வெங்கி... உனக்கு பிடிச்ச சிங்கர் யாரு..?! "
" ஸ்ரேயா கோஷல்... "
" ஸ்ரேயா கோஷலா..?! என்ன காரணம்..?! "
" ஹேய்... ஸ்ரேயா பாட்டு பாடி நீ பாத்ததில்லையா..?! "
" எரும... ஸ்ரேயா பாட்டு பாடி கேட்டதில்லையானு கேக்கணும்...?! "
" நான் கரெக்டா தான் சொன்னேன்.. உனக்கு புரியல... ஹி., ஹி., ஹி..!!! "

Wednesday, June 7, 2017


உலகத்துல தனி ஆளா நின்னு சாதிக்கணும்னு நெனப்பு வரும்போது....
பந்தியில வெக்கிற வாட்டர் பாட்டில் ஓபன் பண்ணவே பக்கத்துல இருக்கறவன் ஹெல்ப் தேவைடா வெண்ணைனு புரிய வைக்குது வாழ்க்கை..!!
- பாபா வெங்கீஷ்

Monday, June 5, 2017

வீட்ல மாட்டியிருந்த பெயிண்டிங்ஸ் பாத்துட்டு அருண் கேட்டான்....
" இதெல்லாம் எங்க வாங்கினே..?! "
" வாங்கினேனா...?! ஹே.. ஹே... என்னை பத்தி உனக்கு தெரில... நான்ல்லாம் ப்ரஷ கைல எடுத்தேன்னா.... "
" எடுத்தா... பல்லு வெளக்காம கீழ வெக்கமாட்ட அதானே...?! "
பல்லு வெளக்கற பிரஷ்ஷா..?!
ஒரு வேள நம்மள பாத்து பொறாமையா இருக்குமோ.!?
இருக்கும்.. இருக்கும்...!!

Sunday, June 4, 2017

நான் பங்ஷன் மண்டபத்துக்குள்ள நுழையும் போதே மணி 1.45...
ஏன் இவ்ளோ லேட்னு பங்ஷன் வீட்டுக்காரர் செல்லமா கோச்சிக்கிட்டாரு...
சிரிச்சு சமாளிச்சிட்டேன்....
டைனிங் ஹால்ல...
ஒரு ரசமலாய், ஒரு மைசூர் போண்டா, ஒரு ரோமாலி ரொட்டி, கொஞ்சமா காளான் பிரியாணி, கொஞ்சமா சாதம் வெச்சு (அட நிஜமாதான்...!) சாம்பார், ரசம், மோர்னு அளவா சாப்பிட்டு இருந்தேனா..
ஏன் இவ்ளோ கம்மியா சாப்பிடறீங்கனு அதுக்கும் செல்லமா கோச்சுக்கிறார்....
இதுக்கு தான் ஒரே நாள்ல ரெண்டு பங்ஷன் வெக்காதீங்கனு சொல்றது... சொன்னா.. யார் கேக்கறா... ஹி., ஹி., ஹி...!!!
#நம்ம கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கறாங்களே...!!!

Saturday, June 3, 2017

10th CBSE ரிசல்ட் வந்துடுச்சு... என் சிஸ்டர் பொண்ணு 10...
வீட்ல கொண்டாடிட்டு இருக்காங்க...
என்னடா இது... 10 மார்க் எடுத்ததுக்கே இப்டியா...?!
அப்ப நான் எடுத்த மார்க் சொன்னா எப்டி கொண்டாடுவாங்கனு போயி சொன்னேன்...
துப்பிட்டு போயிட்டாங்க...
ஏம்பா... 10 விட 37 பெருசு தானே...?!