Monday, October 14, 2013



புலியை பாத்து பூனை எதுக்கு சூடு
போட்டுக்கணும்..?!!

எந்த புலியாலயும் எலி புடிக்க முடியாது
தெரியும்ல...

- பாபா வெங்கீஷ்..


எழுதிக்கொண்டிருந்தான்
" குலோபல் வார்மிங் " 
பற்றிய கவிதை..,
ஓடிக்கொண்டிருந்தது 
ஏ.சி... ( அடடே...! )

- வெங்கூ

Saturday, October 5, 2013



இப்பல்லாம் சோறு வெச்சி கூப்பிட்டா 
ஒரு காக்கா கூட வர மாட்டேங்குது....

டேய்.. இதெல்லாம் உங்க வேலை தானா..?!!

அப்படியே ராஜேஷ்குமார் கணக்கா ஒரு 
மர்ம நாவல் எழுதணும்னு முடிவு 
பண்ணினேன்..

பேப்பரை எடுத்தேன்., 
பேனாவையும் எடுத்தேன்...

டக்னு எழுத ஆரம்பிச்சேன்..

சும்மா சொல்லக்கூடாது.. நாவல் பயங்கர
மர்மமா இருக்கு...

பின்ன.. 20 பக்கம் ஓடிடுச்சு... இன்னும்
இதுல என்ன கதைனு எனக்கே தெரியாம
மர்மமா இருக்கு...!!


:)

Monday, September 23, 2013

" யார் யாருக்கோ குடுக்கறாங்க.. உங்களுக்கு 
ஏன் இன்னும் நோபல் பரிசு குடுக்கல " னு 
ஒரு நண்பர் கேட்டாரு.....

( " சிரியா கூட சண்டை வேணாம்" னு 
ஓபாமா கூட போன்ல பேசினதை பாத்து 
இருப்பாருன்னு நெனக்கிறேன்.. )

அதுக்கு என் தன்னடக்கமான பதில்..

" நான் தான் வேணாம்னு சொல்லிட்டேன் ப்ரோ. "

" ஏன்...?!!! "

" போன வாரம் தான் 12 நேஷனல் அவார்டு, 
6 கோல்டன் குளோப் அவார்டு, 8 ஆஸ்கார் அவார்டு, 
அப்புறம் கலைமாமணி, பத்மஸ்ரீ, இன்னும் இது மாதிரி 
200 அவார்ட்டை ரூமை அடைச்சிட்டு இருக்கேன்னு 
பழைய இரும்பு கடைக்காரனுக்கு போட்டேன்.. "

" ?!?!!?!?? "

Wednesday, September 18, 2013

இன்னிக்கு காலையில என் சிஸ்டத்துக்கு
பின்னாடி இருக்குற சுவர்ல என் Wife
போட்டோ மாட்டி இருந்துச்சு..

என்னடா இது திடீர்னு.. இந்த போட்டோ
இங்கே எதுக்கு வந்துச்சின்னு யோசிச்சிட்டே
என் Wife-ஐ கூப்பிட்டேன்..

" நிர்மலா.. இங்கே வாம்மா ( அன்பு ).. "

" என்னங்க...? "

" ஆமா இங்கே எதுக்கு உன் போட்டோவை
மாட்டி வெச்சி இருக்க..? "

" வர வர நீங்க பொண்ணுங்களை ஜாஸ்தி
வம்புக்கு இழுக்கறீங்கல்ல.. "

" அதுக்கு..??!! "

" போஸ்டிங் போடும்போது என் போட்டோவ
பாத்துட்டே எழுதினா ஒரு பயம் இருக்கும்..
வீண் வம்புக்கு போக மாட்டீங்க...!! "

" ஹே., ஹே., ஹே.. இத பார்ரா..!! "

டிஸ்கி : இப்ப கண்ணை மூடிகிட்டே டைப்
பண்றது எப்படின்னு டிரைனிங் எடுத்துட்டு
இருக்கேன்.

ஹே யாருகிட்ட... ஹி., ஹி., ஹி...!!


சூர்யாகிட்ட தப்பி தவறி எவனாவது 
லிப்ட் கேட்டான்னா.. அவனை கூட 
நேரா " மலபார் கோல்ட் " கடையில தான் 
போயி எறக்கி விடுவாரு போல இருக்கு..!

:)