Saturday, January 11, 2014

" என்னடா வர வர கொஞ்சம் கூட 
மரியாதையே இல்லாம " டி " போட்டு 
பேசற... 

இந்த வீட்ல நான் பொண்டாட்டியா..? 
இல்ல நீ பொண்டாட்டியா..?!! "

# த " ஙே " மொமண்ட்..!!

ஒரு பொண்ணோட கஷ்டம் 
இன்னொரு பொண்ணுக்கு மட்டும் தான் 
தெரியும்னு யார் சொன்னா..?! 
.
.
.
.
.
.
.
.
.
.
.
Fake Id வெச்சிருக்கறவனுக்கும் தெரியும்..!!

# உஸ்ஸ்ப்பா... முடியல..!!!!
கதை சொல்லும் பாட்டிகள் 
இப்போதெல்லாம் கதையில் மட்டுமே 
இருக்கிறார்கள்....

# மெகா சீரியல் சைடு எபெக்ட்

Saturday, January 4, 2014


நேத்து சாயந்திரம் 7 மணி.. 
சாட்ல ஒரு பொண்ணு... 

" வெங்கட் நீங்க எங்கே வொர்க் 
பண்றீங்க..?! " 

" சொந்த பிஸினஸ்...! "

" உங்களுக்கு பரவாயில்லைங்க..
நான் கவர்மெண்ட் ஜாப்..!! "

" ஐ.. ஜாலி... அப்ப வேலையே செய்யாம
சம்பளம் வாங்கலாம்..!! "

" என்னாங்க ஜாலி... பாருங்க 7 மணி
ஆகியும் நான் இன்னும் ஆபீஸ்ல தான்
உக்காந்துட்டு இருக்கேன்...!! "

" ஹி., ஹி., ஹி... அப்பவும் நீங்க
Facebook தானே பாத்துட்டு இருக்கீங்க..!? "

" கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.........!! "

Sunday, December 29, 2013


சன் டி.வி " சூப்பர் குடும்பம் " நிகழ்ச்சில 
மீனாவுக்கு குடுக்கற Payment 

பாதி நிகழ்ச்சியை ஜட்ஜ் பண்றதுக்கு.,
மீதி T.R பக்கத்துல பயப்படாம உக்காந்து 
இருக்கறதுக்கு..

இன்னிக்கு பழைய புக் ஒண்ணு 
படிக்கும் போது தான் தெரிஞ்சது...

" நடிகர் சூர்யா பிளஸ் 2 -ல எடுத்த 
மார்க் 872 தானாம்.. "

( Afterall என்னை விட _ _ _ மார்க்
தான் அதிகம். )

வெரி Bad-ங்க சூர்யா நீங்க...!! 

Wednesday, December 18, 2013

பாஜக அணியில் திமுக, அதிமுக கூடாது 
- வைகோ நிபந்தனை..

# ராகவா... நீ கராத்தே மாஸ்டர் இல்லடா, 
புரோட்டா மாஸ்டர்டா..